Archive for November 10th, 2011
நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் கறுப்பு நாள்
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் கறுப்பு நாள் நேற்று (9.11.2011) புதன்கிழமையாகும். ட்டக்களப்பு கல்லியன் காடு முஸ்லிம் கொலணியில் பல ஆண்டு காலமாக இருந்து வந்த அல்லாஹ்வை ஸுஜுது செய்யும் பள்ளிவாயல் உடைக்கப்பட்டு பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையம் கட்டப்பட்டு நேற்று (9.11.2011) புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. Read the rest of this entry »
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் நிபுணர் குழு அறிக்கை
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு The Law & Society Trust (LST) அமைப்பு இன்னும் மூன்று அமைப்புக்களுடன் இணைந்து ஏற்படுத்திய Citizen’s Commission பிரஜைகள் ஆணைக்குழுவின் 230 பக்கங்கள் அடங்கிய அறிக்கை நூல்வடிவில் கடந்த மூன்றாம் திகதி வெளியிடப்பட்டுள்ளது . “The Quest for Redemption: The Story of the Northern Muslims” எனும் தலைப்பில் இந்த அறிக்கை தயாராகியுள்ளது ஒன்பதுபேர் கொண்ட நிபுணர் குழு இதனை தயாரித்துள்ளது. Read the rest of this entry »
சார்க் உச்சிமாநாடு இன்று ஆரம்பம்
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான அமைப்பின் சார்க் 17 வது உச்சி மாநாடு இன்று 10ம் திகதி மாலை ஆரம்பமாகின்றது.சார்க் அமைப்பின் தலைமை பொறுப்பை தற்போது வகிக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று மாலைதீவுக்குச் சென்றடைந்தார். Read the rest of this entry »
எருக்கலம்பிட்டி ஹஜ் பெருநாள் விளையாட்டு விழா
மொஹம்மத் அஸ்ரப்: மன்னார் மாவட்டத்தில் மீள் குடியேறியுள்ள மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம்கள கடந்த வருடம் போன்று இந்த வருடமும் ஹஜ் பெருநாளை ஒட்டி விளையாட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விளையாட்டு விழாவை பிரதேசத்தின் வாலிபர்கள் ஏற்பாடு செய்துள்ளனர் இந்த விளையாட்டு விழா இன்று வியாழக்கிழமை முதல் 12ஆம் திகதி சனிக்கிழமை வரை Read the rest of this entry »
புத்தளம் நகர் பகுதியில் இன்று காலை சோதனை
புத்தளம் நகர் பகுதியின் குறித்த சில பகுதிகளில் இன்று காலை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது வேட்டையாடப்பட்ட மிருகங்கள், மற்றும் அவற்றின் உறுப்புகள் ரி-56 ரக துப்பாக்கி ஒன்று, வேட்டை துப்பாக்கி அவற்றுக்கு பயன்படும் ரவைகள் என்பனவும் கைப்பற்றபட்டுள்ளது. இந்த சோதனைகள் வான்வீதி , மன்னார் வீதி , மற்றும் மலேரியா வீதி ஆகிய வீதிகளின் குறித்த சில வீடுகளிலும் அதனை சூழவுள்ள வீடுகளிலும் Read the rest of this entry »
பாடசாலை நேர அதிகப்பு யோசனைக்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு
கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் பாடசாலை நேர அதிகப்பு யோசனைக்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்புத் தெவித்துள்ளன. இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், மற்றும் இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் என்பனவே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய கல்வியமைப்பில் அதிபர், ஆசிரியர்கள் பாரிய வேலைப்பளுவுடன் சேவையாற்றி வரும் அதேவேளை Read the rest of this entry »
சிங்கள வர்த்தகர்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் !!
தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களை முடக்கிய அரசாங்கம், சிங்கள வர்த்தகர்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் இன்று இறங்கியுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆவணசட்ட முல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெவித்துள்ளார். Read the rest of this entry »







