Lankamuslim.org

One World One Ummah

மேற்கும் அதன் ஜனநாயகத்தின் பறிக்கப்பட முடியாத கருத்துச் சுதந்திர உரிமையும்

with one comment

அஷ்ஷெய்க் எஸ்.எம். மஸாஹிம் (இஸ்லாஹி)
OurUmmah: பிரான்ஸில்  கிண்டல், நையாண்டி ஆகியவற்றைக் கொண்டு பிழைப்பு நடத்தும் சஞ்சிகையான ‘ஷார்லி எப்தோ’ Charlie Hebdo என்ற பிரான்ஸ் மொழி பத்திரிகை மனிதர்களுக்கான இறுதித் தூதர் முஹமத் (ஸல்) அவர்களை மீண்டும் நையாண்டி செய்து தனது சஞ்சிகையின் முகப்பு பக்கதில் காட்டூன் மற்றும் செய்திகளை வெளியிட்டு வன்முறையை தூண்டியுள்ளது. இதனால் கோபம் கொண்ட இனம் தெரியாதவர்களினால் அந்த பத்திரிகை அலுவலகம் பெட்ரோல் கொண்டு மூலம் தாக்கப்பட்டுள்ளது.

வன்முறையை தூண்டும் விதமாக செய்திகளையும் படங்களையும் வெளிட்ட பத்திரிகையை வழமைபோன்று கண்டிக்காத பிரான்ஸ் அரசாங்கம்.  அந்த பத்திரிகை அலுவலகம் பெட்ரோல் கொண்டு மூலம் தாக்கப்பட்தை வன்மையாக கண்டித்துள்ளது.

பிரான்ஸ் பிரதமர் பிரான்ஸுவா பியோன்- கருத்துச் சுதந்திரம் என்பது பிரான்ஸ் ஜனநாயகத்தில் பறிக்கப்பட முடியாத உரிமை இவ்வாறான வன்முறைகளை ஒருபோதும்  நியாயப்படுத்த முடியாது Freedom of expression is an inalienable right in our democracy and all attacks on the freedom of the press must be condemned with the greatest firmness என்று கூறி ,நடத்தப்பட்ட தாக்குதலை மட்டும் கண்டித்துள்ளார்.

கருத்துச் சுதந்திரம் என்பது  ஜனநாயகத்தில் பறிக்கப்பட முடியாத உரிமை என்று தெரிவிக்கும் பிரான்ஸும் ஏனைய பல மேற்கு நாடுகளும் யூதர்களுக்கு ஹிட்லர் செய்ததாக  கூறப்படும் அதிகளவில் மிகைப்படுத்தப்பட்ட ஹோலோகுஸ்ட் -Holocaust- தாக்குதல்கள படுகொலைகள் தொடர்பான தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவ்வாறான தகவல்கள் பெரும்பாலும்  புணையப்பட்ட   கதைகள்தான் என்று பேசினால் , எழுதினால் போதும் அவர்கள் கிரிமினல் குற்றவாளிகள் ஆகிவிடுவார்கள் அவர்களுக்கு சிறையும் , அபராதமும்தான் அவர்களின் ஜனநாயகம் வழங்கும் பரிசு . இதுதான் அவர்கள் கூறும்   ஜனநாயகத்தில் பறிக்கப்பட முடியாத கருத்துச் சுதந்திர உரிமை.இது முழுமையான இரட்டை வேடம் என்பது ஆழமாக நோக்கும் எல்லோருக்கும் தெரியும்.

ஹோலோகுஸ்ட் தொடர்பாக எழுதுவதையும் பேசுவதையும் கருத்துச் சுதந்திரமாக  அவர்கள் கூறும் ஜனநாயகத்தால் பார்க்க முடிவதில்லை. யூதர்களுக்கு ஹிட்லர் செய்ததாக தெரிவிக்கப்படும் அதீத இனம்படுகொலை சம்பவகளை யாராவது பொய் என்று கூறினால் அவர்களை  பல ஆண்டுகள் சிறையில் அடைக்கும் சட்டம் கருத்து சுதந்திரம் பற்றி பேசும் நாடுகளில் நடைமுறையில் உண்டு. இந்த சட்டம் மேற்கு நாடுகள் உள்ளிட்ட 17 நாடுகளில் சட்டமாக உள்ளது. குறித்த கருத்து சுதந்திரதுக்கு எதிரான சட்டம் இல்லாத மேற்கு  நாடுகளிலும் இந்த சட்டம் மறைமுகமாக நடைமுறையில் உள்ளது. என்று சட்ட ஆய்வளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இஸ்லாத்தையும் அதன்  கோட்பாடுகளையும் அதன் மனிதர்களையும் எவரும் எப்படியும் எழுதலாம் பேசலாம் ஏன் இஸ்லாத்தின் கோட்பாடு நூலை    எரிக்கலாம் , அழிக்கலாம் அதெல்லாம் அவர்களின் கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமை, யாரும் கேள்வி  கேட்க முடியாது.

ஆனால் இஸ்ரேல் உட்பட  மேற்கு நாடுகளில் யாராவது யூதர்களுக்கு நிகழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் பாதிப்புக்கள் முழுவதையும் ஆய்வுபூர்வமாக நிரூபிக்க முடியாது என்று கூறினால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவர் . கடந்த 2006 ஆம் ஆண்டு பிரான்ஸ் நீதிமன்றம் பல்கலை கழக பேராசிரியர் ரொபேர்ட் Robert Faurisson என்பவரை  சிறையில் தள்ளியது.    இவர்   யூதர்களுக்கு ஹிட்லர் செய்ததாக கூறப்படும் தகவல்கள் பலவற்றை மறுத்து பேசியதற்காகவும் , எழுதியதற்காகவும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் 7500 ஈரோ அபராதமும் என்ற தீர்ப்பை  பிரான்ஸ் நீதிமன்றம் வழங்கியது. இவரின் பேச்சும் எழுத்தும் யூதர்கள் பட்ட வதைகளை மறுப்பதாக கூறி இவரின் பல்கலை கழக பேராசிரியர் என்ற பதவியும் பரிக்கப்பட்டுள்ளது இதுதான் மேற்கு போதிக்கும் கருத்து சுதந்திரம் .

அதேபோன்று எர்னஸ்ட்  ஜுந்டேல் -Ernst Zündel- என்ற ஜெர்மன் எழுத்தாளர் 2005 ஆம் ஆண்டு ஐந்து ஆண்டுகள்  ஜெர்மனிய சிறையில் அடைக்கப்பட்டார்.  இவர் செய்த குற்றம் சுதந்திரமாக கருத்துகளை வெளியிட்டமைதான். இவர் பல நூல்களை எழுதியுள்ளார் இவரின் எழுத்துக்கள் பெரும்பாலும் பெரும்தொகையாக யூதர்கள் கொல்லப்பட்டது திட்டமிட்டு உருவாகப்பட்ட பொய் என்று கூறி அவற்றை மறுத்தது.

இதை தொடர்ந்து இவர்    நாசி ஆதரவாளர்.  யூத கொலைகளை மறுப்பவர், கொல்பட்டவர்களை அவமதிக்கிறார் என்று கூறிய கனடா, ஜெர்மன் , அமெரிக்கா ஆகிய நாடுகள் இவர் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் வழக்குகளை தொடுத்தது. இவர் அமெரிக்காவில் இருந்த போது கைது செய்யப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்,  கனடாவில்  நாப்பது ஆண்டுகள் இருந்த போதும் இவரின்  குடியுரிமையை அந்தஸ்து மறுக்கப்பட்டு கனடா இவரை ஜெர்மனிக்கு நாடு கடத்தியது. இவர் ஏற்கனவே எழுதிய நூல்களுக்காக ஜெர்மனி இவரை கடந்த 2005 ஆம் ஆண்டு கைது செய்து  ஐந்து ஆண்டுகள சிறையில் அடைத்தது. இவர்மீதான பிரதான குற்றச்சாட்டு  இவர் எழுதிய நூல்களில் ஹிட்லர் மேற்கொண்ட யூத படுகொலைகளை மறுக்கிறார் என்பதாகும்.

இவர் தான் சுதந்திரமாக தெரிவித்த கருத்துகளுக்காகத்தான்  கனடா, அமெரிக்கா,  ஜெர்மன் ஆகிய ஜனநாயக நாடுகளினால் நாடுகடத்தவும், சிறையிடவும்  பட்டுள்ளார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டுதான் விடுதலை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று கடந்த வருடம் ஜனநாயக பிரிட்டன்     டாக்டர் ஸாகிர் நாயிக் நாட்டுக்குள் நுழையக் கூடாது என்று நுழைவுத் தடை வித்துள்ளது. அவர் வெளியிடும் கருத்துக்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று தெரிவித்தத.  ஆனால் டாக்டர் ஸாகிர் நாயிக் தெரிவிக்கும் கருத்துக்கள் எப்படியானது என்பது உலகிற்கு தெரிந்த விடயம்.

இவற்றை விட பயங்கர நிலைதான் டாக்டர் அன்வர் அல் அவ்லாகி என்ற அமெரிக்க இமாமுக்கு ஏற்பட்டுள்ளது அமெரிக்காவில் பிறந்தவரான அவ்லாகி அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் சிலவற்றிலும் தொடர்புபட்டுள்ளதாக தெரிவித்து எந்த குற்றங்களும் நிரூபிக்காத நிலையில் அமெரிக்கா இவரை கண்ட இடத்தில் கொலை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது. இவர் முன்வைத்த கருத்துக்கள் முஸ்லிம்களை மட்டும் கவரவில்லை அமெரிக்காவின் பொது மனிதர்கள் பலரையும் கவர்ந்தது

அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளில் அராஜக ஆக்கிரமிப்புகளை மிகவும் துணிவுடன் பேசியும் எழுதியும் வந்த இவரின் பேச்சும் எழுத்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களுக்கு இஸ்லாம் முறையான மார்க்க நெறியாக மாறியது. மேற்கு மேலாதிக்க அரசியலுக்கு எதிரான மனோபாவமும் அதனைத் துணிச்சலுடன் ஒளிவு மறைவின்றிப் பேசும் நேர்மையும் கொண்டிருந்த இவரின் எழுச்சியை கண்டு அச்சம் கொண்ட மேற்கு உளவு அமைப்புகள் எந்த குற்றமும் நிரூபிக்கமுடியாத நிலையிலும் இவரின் ஜெமன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்தது.

அதன் இருவாரங்களின் பின்னர் டாக்டர் அன்வர் அல் அவ்லாகியின் மகன் 16 வயதுடைய சிறுவனையும் குறிவைத்து ஏவப்பட் விமான குண்டின் மூலம் படு கொலை செய்யதுள்ளது. தமக்கு எதிரானவர்கள் என்றால் எந்த பெருமாங்களையும் கருத்தில் கொள்ளாது செயல்படுவதுதான் மேற்கு நாடுகளில் வழக்கம் . இஸ்லாத்துக்கு எதிரான எந்த சக்திகளையும் கருத்து சுதந்திரத்தின் பெயரால் தட்டிக் கொடுப்பார்கள் என்பதுதான் மேற்கு கூறும் ஜனநாயக கருத்து சுதந்திர உரிமை.

ஆனால் மனிதர்களுக்கான இறுதித் தூதர் முஹமத் ( ஸல் ) அவர்களை ‘ஷார்லி எப்தோ’ பத்திரிகையாசிரியராக சித்தரித்து கிண்டல், நையாண்டி செய்து 150 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தி வன்முறையை தூண்டும் கருத்துக்கள் பிரான்ஸ் ஜனநாயகத்தின் பறிக்கப்பட முடியாத உரிமையாம்.

சிறிய பெட்ரோல் குண்டை வீசி பத்திரிகை அலுவலகதிற்கு சிறிய சேதத்தை ஏற்படுத்தியதற்கு பிரான்ஸ் பிரதமர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை தெளிவாக காட்டுவதாகவுள்ளது.

இஸ்லாமிய ஷரியா சட்டத்தையும் துனிஷியா தேர்தலில் வெற்றி பெற்ற இஸ்லாமிய கட்சி அன்நஹ்ழா மற்றும் லிபியாவில் இஸ்லாமிய ஷரியா சட்டம் தொடர்பான லிபிய இடைக்கால நிர்வாகத்தின் அறிக்கை ஆகியவற்றை

பிரான்சின் நையாண்டி  பத்திரிகை கிண்டலும் நையாண்டியும் செய்து  தனது சிறப்பு பதிப்பை  வெளியிட்டுள்ளது “100 lashes if you are not dying of laughter”. “நீங்கள் சிரிப்பால் மரணமாகவிட்டால் 100 கசையடிகள்” என்று மனிதர்களுக்கான அல்லாஹ்வின் இறுதித் தூதர்   கூறுவது போன்று காட்டூனுடன் செய்தியும் சஞ்சிகையில் அச்சிட்டப்பட்டுள்ளது. இது வன்முறையை தூண்டுகின்றது ஆனால் மேற்கின் தலைவர்களுக்கு இது ஜனநாயகத்தின் பிரிக்கமுடியாத கருத்து சுதந்திரம். ஆளுக்கொரு நீதி என்ற காட்டுச்  சட்டத்தினால்  மேற்கு ஆளப்படுகின்றது என்பதைத்தான் இவைகள  எடுத்துக்  காட்டுகின்றது .

பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கு நாடுகளில் ஐந்து கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் ஆனால் இஸ்லாம் அங்கு குறிவைத்து தொடராக தாக்கப்பட்டு வருகின்றது. இந்த குறித்த பத்திரிகையும் இதற்கு முன்பிருந்து பல தடைவைகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் விதமாக செய்திகையும் காட்டூன்களையும் வெளியிட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஷார்லி எப்தோ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எங்களுக்கு பிரான்சில் எதையம் நையாண்டி செய்யமுடியுமாக இருந்தால், நாங்கள் இஸ்லாத்தையும், இஸ்லாமிய மயப்படுத்தளையும் விட்டுவிட்டுத்தான் எதைபற்றியும் பேசமுடியும் என்பது எரிச்சலை ஏற்படுத்தக் கூடியது என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பு : ஹிட்லர் மேற்கொண்டதாக நம்பப்படும் ஹோலோகுஸ்ட் -Holocaust- யூத படுகொலைகளையும், அதனால் யூதர்களுக்கு ஏற்பட்ட அகதி வாழ்கையும் மையமாக வைத்தே இஸ்ரேல் என்ற நாட்டை மேற்கு நாடுகள் பலஸ்தீன பூமி மீது சட்டவிரோதமாக இஸ்தாபித்துள்ளது, Holocaust- தொடர்பான மீள் ஆய்வுகளின் ஊடாக அதன் உண்மை தன்மை வெளிவருமாக இருந்தால் இஸ்ரேல் என்ற நாட்டின் அஸ்திவாரம் ஆட்டம் காணும் என்பது வெளிப்படையானது. மேற்கு ஜனநாயகம் இஸ்ரேல் நாடு என்ற தமது சட்டவிரோத நடவடிக்கை வெளியில் கசியாமல் பாதுகாக்கும் நடவடிக்கையாக அதை பற்றி பேசுபவர்களையும் எழுதுபவர்களையும் சிறைப்படுத்துகின்றது.

மேற்கில் பெரும்பாலான ஊடகங்கள் யூத சியோனிசவாதிகளால் நிர்வகிக்கப்படுகின்றது என்பது மேற்கில் இஸ்லாத்துக்கு எதிரானவும், இஸ்ரேலுக்கு சார்பானவும் மக்கள் அபிப்பிராயங்களை தோற்றுவிக்க இலகுவானதாக இருக்கின்றது. பொருள்முதல் வாதத்தை மையமாக கொண்ட இரண்டு சக்திகளும் மேற்கு மக்களின் சிந்தனையில் இஸ்லாத்தை வெறுக்கும் மனோபாவத்தை உருவாக்க கடுமையாக உழைத்து வருகின்றது என்பதன் வெளிப்பாடுகள்தான் இவை.

இந்த கட்டுரை கூறும் நபர்களின் படங்களுடன் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் OurUmmah.org

About these ads

Written by lankamuslim

November 4, 2011 at 8:51 am

One Response

Subscribe to comments with RSS.

  1. Assalamualikkum My dear Brother, if you can please translate to English and repose it its on this wall also on Facebook also send all media

    Sri Lankan

    September 14, 2012 at 10:06 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,826 other followers

%d bloggers like this: