Lankamuslim.org

One World One Ummah

Archive for November 2011

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப் பட்டுள்ளது

leave a comment »

2012 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மேலதிக 91 வாக்குகளால் இன்று மாலை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் பெறப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசிய முன்னணி ஆகியன எதிராக வாக்களித்துள்ளன.

Written by lankamuslim

November 30, 2011 at 6:49 pm

தெஹிவளை கல்வல வீதி மதரஸாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

with 2 comments

இணைப்பு-2: தெஹிவளை பிரதேசத்தில் கல்வல வீதியில் அமைந்துள்ள சிறுவர் மதரஸா ஒன்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தெஹிவளை பிரதேசத்தின்  கல்வல வீதி மிருகக்காட்சி சாலைக்கு பின்புறம் அமைந்துள்ள சிறுவர் மதரஸாவாகவும் , மஸ்ஜித்தாகவும் இயங்கிவந்த கட்டடத்திற்கு எதிராகவே அந்த ஆர்ப்பாட்டம் பெளத்த பிக்குகள் தலைமையில் இடம்பெற்றுள்ளது . Read the rest of this entry »

Written by lankamuslim

November 30, 2011 at 6:33 pm

மோசமான காலநிலை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

leave a comment »

நாட்டின் பல பிரதேசங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது என்று இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 39 பேர் காயமடைந்துள்ளதாகவும், 15 பேர் வரையில் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் நாடு முழுவதும் 13 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 74 ஆயிரம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் Read the rest of this entry »

Written by lankamuslim

November 30, 2011 at 5:29 pm

ஜனாதிபதியின் பலஸ்தீன ஒருமைப்பாட்டு தின வாழ்த்து

leave a comment »

பலஸ்தீன மக்களுக்கான சர்வதேச ஒருமைப்பாட்டு தினமான நேற்று 29 எனது அரசாங்கத்தினதும் இலங்கை மக்களினதும் சார்பில் பலஸ்தீன மக்களின் நியாயமான போராட்டத்துக்கும் அவர்களது சுதந்திரத்துக்கான உரிமை உள்ளிட்ட மறுக்கப்பட முடியாத உரிமைகளை வெற்றி கொள்வதற்கும் ஆதரவு தெரி விக்கிறோம். Read the rest of this entry »

Written by lankamuslim

November 30, 2011 at 8:48 am

முன்னால் அமைச்சர் வபாத்தானார்

with one comment

எம் .சி .ஜிப்ரி: முன்னால் அமைச்சர் எம் .ஏ.அப்துல் மஜீத் நேற்று மாலை வபாத்தானார்.  சம்மாந்துறை பிரதேசத்தில் சம்மாந்துறை பிரதேச மக்களின் நீண்ட கால அரசியல் பிரதிநிதியாக செயல்பட்ட இவர்சுகயீனமுற்றிருந்த நிலையில் சம்பாந்துறை அன்வார் இஸ்மாயில் Read the rest of this entry »

Written by lankamuslim

November 30, 2011 at 8:24 am

ஐக்கிய தேசிய கட்சியினர் ஆர்பாட்டம்

leave a comment »

ஐக்கிய தேசிய கட்சியினர் நேற்று அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ஆர்பாட்டம் நடத்தினர். எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, விக்ரமபாகு கருணாரட்ன, குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Written by lankamuslim

November 30, 2011 at 8:07 am

மன்னிப்பு மட்டும் போதாது :பாகிஸ்தான் இராணுவம்

leave a comment »

பாகிஸ்தானில் “நேட்டோ படை தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்காக, மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. இவ்விவகாரம் மேலும் பல மோசமான விளைவுகளை உருவாக்கும்’ என பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் தரப்பில் இருந்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டது என வெளியான தகவல்களையும் இராணுவம் மறுத்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

November 29, 2011 at 6:07 pm

காத்தான்குடி குட்வின்சந்தி கடைகள் சர்ச்சை நீடிக்கின்றது

with one comment

F.M.பர்ஹான்: காத்தான்குடி குட்வின்சந்தி மத்திய வீதியிலுள்ள 09 கடைகளையும் உடைக்கவோ அவ்விடத்தில் நிர்மாணம் செய்யவோ முடியாது என காத்தான்குடி நகரசபைக்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை நேற்று பிரப்பித்ததையடுத்து இன்று காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பள்ளி நிர்வாகத்தினர் உடைக்கப்பட்ட கடைகளை Read the rest of this entry »

Written by lankamuslim

November 29, 2011 at 4:50 pm

தமிழருக்கு விரைவில் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும்: சிரேஷ்ட அமைச்சர்

leave a comment »

பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து தமிழருக்கு விரைவில் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும்: இனப் பிரச்சினைத் தீர்வுக்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவை உடனடியாக அமைத்து தமிழ் மக்களுக்கு விரைவாக அதிகாரப் பரவலாக்கலைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண Read the rest of this entry »

Written by lankamuslim

November 29, 2011 at 9:24 am

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெள்ளிவிழா

leave a comment »

1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி கொழும்பு பாஷாவிலாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 25 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு வெள்ளி விழாவை நடத்துகின்றது . இந்த வெள்ளி விழாவை கொழும்பில் கொழும்பில் நடைபெரும் இவ்விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ Read the rest of this entry »

Written by lankamuslim

November 29, 2011 at 8:37 am

அநுராதபுரம் சிறை: பிரதம நீதியரசரிடம் முறையிட முடிவு

leave a comment »

அநுராதபுரம் சிறையில் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படும் அநுராதபுரம் சிறையில் உள்ள கைதிகளை பார்வையிடச் சென்ற தாம் உள்ளிட்ட சட்டத்தரணிகளுக்கு உற்செல்ல அனுமதி மறுக்கப்படாமை தொடர்பாக பிரதம நீதியரசரிடமும் சட்டத்தரணிகள் சங்கத்திடமும் முறையிடவுள்ளதாக ‘நாம் இலங்கையர்’ அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

November 28, 2011 at 11:44 pm

எல்லை மீள் நிர்ணய ஆணைக்குழு அம்பாறையில்

leave a comment »

பிரதேச எல்லைகளை நிர்ணயம் செய்தல் தொடர்பாக ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழு இன்று திங்கட்கிழமை அம்பாறைக்கு விஜயம் செய்து மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கூட்டமொன்றினை நடத்தியுள்ளது . இதில் அம்பாறை மாவட்டத்தின் புதிய பிரதேச பிரிவுகள் மற்றும் கிராம சேவையாளர் பிரிவுகளை தாபிப்பதற்காகவும், தற்போது இருக்கின்ற பிரிவுகளை Read the rest of this entry »

Written by lankamuslim

November 28, 2011 at 10:51 pm

எகிப்து பாராளுமன்ற தேர்தல் முறை ஒரு சிறு பார்வை

leave a comment »

அஷ்ஷெய்க் எஸ்.எம். மஸாஹிம் (இஸ்லாஹி)
OurUmmah:எகிப்தில் பாராளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது வெற்றி யாருக்கு?: எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் சர்வாதிகார ஆட்சி மக்கள் எழுச்சி மூலம் அகற்றப்பட்டது. தற்போது இராணுவ அதிகாரத்தின் கீழ் இடைக்கால நிர்வாகம் நிர்வாகத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில் ஐந்து கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் 50 க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் ஆயிரத்துக்கும் அதிகமான  தமது  வேட்பாளர்களை   களம் இறக்கியுள்ளனர். அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சிக்கு பின்னர் பிராந்தியம் காணும் மூன்றாவது தேர்தல் இதுவாகும். துனூசியாவிலும் , மொரோகோவிலும்  விரிவாக ..

Written by lankamuslim

November 28, 2011 at 10:38 pm

மழை மற்றும் மோசமான காலநிலை காரணமாக உயிரிழப்பு 20ஆக உயர்வு

leave a comment »

நாட்டின் சில பகுதிகளில் நிலவிய கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. அதில் 15 மீனவர்களும் அடங்குவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். காணமற்போயுள்ள மேலும் 20 மீனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் Read the rest of this entry »

Written by lankamuslim

November 28, 2011 at 5:57 pm

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய போரம் பிரிட்டன் அமைப்பின் ஸ்தாபகருடனான நேர்காணல்

with 3 comments

இலங்கை முஸ்லிம்களால் இலங்கைக்கு வெளியில் உருவாக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட பலமான அமைப்பாக ஐக்கிய ராஜ்யத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய போரம் பிரிட்டன் Sri Lanka Islamic Forum UK -SLIF UK- என்ற அமைப்பு கருதப்படுகின்றது. இந்த அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளாக இலங்கை முஸ்லிம்களின் சமூக, சமய, பண்பாட்டு, கலாசார மற்றும் சமூக, அரசியல் தளங்களில் ஒரு பறந்து பட்டதும் சமமானதுமான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வரும் ஒரே அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது . Read the rest of this entry »

Written by lankamuslim

November 28, 2011 at 11:02 am

உமா ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு 450 மில்லியன் அமெக்க டொலர்

leave a comment »

உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஈரான் 450 மில்லியன் அமெக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது என்று நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. இது ஈரான் இலகு கடன் உதவித் திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

November 28, 2011 at 11:01 am

மன்னார் பியர் பிரதேச மீள் குடியேறிய மக்களுக்கு தீர்வு

leave a comment »

மன்னார் மாவட்டம் பியர் பிரதேசத்தில் தமது காணிகளில் மீள் முடியேற முற்பட்ட முஸ்லிம் , தமிழ் குடும்பங்கள் காணி சீர்திருத்த ஆணைக்குழு தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அவற்றை தடுத்து நிறுத்தியுள்ளனர் . இதை தொடர்ந்து அமைச்சர் றிசாத் பதியுதீன் அந்த பிரதேச மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று அங்கு 500 குடும்பங்களுக்கு Read the rest of this entry »

Written by lankamuslim

November 28, 2011 at 10:10 am

பயணம் சுருங்கும் போது எல்லைகள் என்பதற்கே இடமில்லை

leave a comment »

கொம்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் பூர்த்தியடைந்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று கரந்தெனியவில் தெரிவித்துள்ளார். இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதும் மூன்று, நான்கு மணித்தியாலங்களில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்குமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

November 28, 2011 at 9:15 am

காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண குழுவொன்றை அமைக்க கொள்கையளவில் இணக்கம்

leave a comment »

வடக்கு கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம் , தமிழ் மக்கள் எதிர்நோக்கும் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்பதற்கு காணி அமைச்சர் , சுற்றாடல் அமைச்சர் மற்றும் வடக்கு கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அமைச்சர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

November 28, 2011 at 9:11 am

யசூசி அகாசி எல்லாதரப்புடனும் பேசுவார்

leave a comment »

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி வெளிவிவகார அமைச்சர், ஆளும், மற்றும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியோருடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். யசூசி அகாசிக்கும், முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலான சந்திப்பு நாளை முற்பகல் 9.30 மணிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூவ் ஹக்கீமின் கொழும்பு வாசஸ்தலத்தில் இடம்பெற வுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

November 28, 2011 at 8:10 am

இஸ்லாமிய புத்தாண்டில் இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை திறப்பு

leave a comment »

இலங்கையின் போக்குவரத்துக்கு துறையில் வரலாற்று திருப்பு முனையை ஏற்படுத்தப் போகும் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார். கொழும்பையும் காலியையும் இணைக்கும் இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை இதுவாகும் இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்  மக்களின் பாவனைக்காக இன்று திறந்து வைத்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

November 27, 2011 at 1:44 pm

1433 ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துக்கள்

leave a comment »

உங்கள் அனைவருக்கும் எமது ஹிஜ்ரி 1433 புத்தாண்டு வாழ்த்துக்கள். முஹர்ரம் 1433 புத்தாண்டு பிறந்துள்ளது . முஸ்லிம் உம்மாவின்  ஹிஜ்ரி ஆண்டின் முஹர்ரம் முதல் மாதம் ஆரம்பித்துள்ளது.  இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாம் உயர்வு பெற்று வளர காரணமாக இருந்த ஹிஜ்ரத்தை ‘தியாக பயணம்’ அடிப்படையாகக் கொண்டு  ஆண்டின் ஆரம்பம் அமைக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

November 27, 2011 at 12:06 am

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்வு

leave a comment »

செய்தித் தொகுப்பு : நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், நாட்டின் பல பாகங்களிலும் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதோடு 18 பேர் காயமடைந்துள்ளதுடன் 33 பேர் காணாமல் Read the rest of this entry »

Written by lankamuslim

November 26, 2011 at 5:32 pm

சாய்ந்தமருது கடலில் மூழ்கி ஒருவர் வபாத்

leave a comment »

சாய்ந்தமருது  பிரதேச கடலில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் இன்று காலை நீரில் மூழ்கி வபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். கடல் கொந்தளிப்பாக இருந்த வேளையில் நண்பர்களுடன் சாய்ந்தமருது பௌஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்த வேளையில் Read the rest of this entry »

Written by lankamuslim

November 26, 2011 at 5:30 pm

மொரோகோவிலும் இஸ்லாமிய அரசியல் கட்சி வெற்றி

leave a comment »

இணைப்பு-2: OurUmmah: மொரோகோவில் நேற்று பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்றது. இந்த தேர்தலில்  நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி The Justice and Development Party -PJD- என்ற இஸ்லாமிய கட்சி கூடிய ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. என்றாலும் முறிவுகள் உத்தியோக பூர்வமாக வெளியாகவில்லை. இந்த தேர்தலில் 45 வீதமான வாக்காளர்கள் தமது வாக்குகளை பயன்படுத்தியுள்ளனர். விரிவாக

Written by lankamuslim

November 26, 2011 at 4:23 pm

நேட்டோ தாக்குதல் 24 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு , விநியோகப் பாதை மூடப்பட்டது

leave a comment »

பாகிஸ்தான் வடமேல் மாகாண இராணுவ காவலரண் ஒன்றின்மீது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். இதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு பாகிஸ்தான் ஊடாக செல்லும் இராணுவ உதவி விநியோகத்தை நிறுத்தியுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

November 26, 2011 at 3:35 pm

சதாம் ஹூஸைன் கிராமம் ஈராக் கிராமம் என பெயர்மாற்றம்

with one comment

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை காலமும் ‘சதாம் ஹூஸைன்” கிராமம் என அழைக்கப்படும் பிரதேசம் ஈராக் கிராமம் என பெயர்மாற்றம் செய்வதற்கான தீர்மானம் ஏறாவூர்ப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

November 26, 2011 at 9:47 am

நிறைவேற்று ஜானதிபதியின் ஆணையும் நீர்த்துப்போன கள்ளியங்காட்டு முஸ்லிம்களின் பிரச்சினையும்

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
“சுவாமி விபு லாநந்தர் யாழிசைநூ லோலிக்கும் மஞ்சாரும் பொழில்மட்டு மாநாட்டில் நிலைக்கும் வாழ்வுடையோர்க் கவர்மனம்போல் மனவளமும் இனிதே”–புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை-

மட்டக்களப்பு கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனியில் முஸ்லிம் மக்களின் வழிபாட்டுத்தலமான பிர்தௌசியா பள்ளிவாயல் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக அங்கு ஒரு ஹிந்து தியான மண்டபம் பிரம குமாரிகள் ராஜ யோக நிலையம் என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டு இரு வாரங்கள் ஓடிவிட்டன. Read the rest of this entry »

Written by lankamuslim

November 26, 2011 at 9:36 am

வடக்கு மாணவர்களின் உடலில் உள்ள குண்டுச்சன்னங்களை அகற்ற சிகிச்சை

leave a comment »

விபரங்களைத் திரட்டித் தந்தால் உடன் நடவடிக்கை: பிரதியமைச்சர் லலித் திசாநாயக்க அறிவிப்பு:வடபகுதியில் இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உடம்பில் தோட்டாக்கள், ஷெல் துண்டுகள் காணப்படும் மாணவர்களுக்கு சிகிச்சை அளித்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகப் பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

November 26, 2011 at 9:30 am

லொக்கு சீயா மரணம் விசாரணை தொடர்கின்றது

leave a comment »

கடந்த 6 ஆம் திகதி அக்கரைப்பற்று பதூர் நகர் கடற்கரையிலிருந்து மீட்கபபட்ட உடல் வத்தளையில் கடத்தப்பட்ட லொக்கு சீயா என்று அழைக்கப்படும் நியாஸ் என்பவருடையது என அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது .குறித்த நபர் கடந்த மாதம் 27 ஆம் திகதி கெரவலபிட்டிய பகுதியில் வேன் ஒன்றில் Read the rest of this entry »

Written by lankamuslim

November 25, 2011 at 11:57 pm

மழை மற்றும் கடும் காற்றினால் 10 பேர் மரணம்

leave a comment »

நாட்டின் தென் கரையோரப் பிரதேசங்களில் இன்று முற்பகல் வீசிய கடும் காற்றினால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காற்றினால் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது. என்று செய்திகள் தெரிவிக்கின்றன. காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை Read the rest of this entry »

Written by lankamuslim

November 25, 2011 at 9:28 pm

அனைத்து ஜும்மாஹ் மஸ்ஜிதுகளிலும் கேன்சர் வைத்தியசாலை நிர்மாணத்திற்கு உதவுமாறு குத்பா

leave a comment »

முஹம்மத் அஸ்லம்:  கண்டி மாவட்டம் அக்குரணை பிரதேசத்தின் அமைந்துள்ள அனைத்து ஜும்மாஹ் மஸ்ஜிதுகளிலும் இன்று வெள்ளிக்கிழமை அனைத்து குப்பா உரைகளும் கண்டி கேன்சர் வைத்தியசாலை நிர்மாணத்திற்கு உதவுமாறு கோரியுள்ளன. கண்டி மத்திய அரச வைத்தியசாலையின் கீழ் முன்னெடுக்கப்படும் கேன்சர் வைத்தியசாலை நிர்மாணத் திட்டத்திற்கு உதவுமாறே  மக்களை கோரும் உரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

November 25, 2011 at 2:56 pm

நாட்டில் கடும் மழை மற்றும் காற்று

leave a comment »

மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களை உடறுத்து கடும் காற்று வீசியதாகவும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக  கட்டடங்கள், வீடுகள் மற்றும் வீதிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் மாத்தறை மாவட்ட உதவிப் பணிபாளர் மேஜர் சமன் பாலசூரிய கூறியுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

November 25, 2011 at 2:12 pm

அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சி காணும் இரண்டாவது பாராளுமன்றத் தேர்தல்

leave a comment »

OurUmmah:மொரோகோவில் இன்று பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுகின்றது. மொரோகோவில் அரசியல் கட்சிகளுக்கும் ஆளும் மன்னர் தரப்புக்கும் இடையிலான உடன்பாட்டை அடுத்து ஏற்பட்ட முடிவுகளின் படி நவம்பர் மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெரும் என்று முன்னர் இணக்கம் காணப்பட்டது. அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சியின் பின்னர் அந்த பிராந்தியம் சந்திக்கும் இரண்டாவது தேர்தல் இதுவாகும். விரிவாக

Written by lankamuslim

November 25, 2011 at 9:30 am

2012 ஆம் ஆண்டு மும்மொழி இலங்கையாக பிரகடனம்

leave a comment »

2012 ஆம் ஆண்டை மும்மொழி இலங்கையாகப் பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல், ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.மும்மொழி இலங்கை அமுலாக்கலுக் காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் அமைச்சரவைக்கு சமர்ப் பிக்கப்பட்ட பத்தாண்டு கால தேசிய திட்டத்திற்கும் Read the rest of this entry »

Written by lankamuslim

November 25, 2011 at 9:16 am

வீதியில் நின்ற வெள்ளதினால் உயிரே பிரிந்தது!

leave a comment »

மட்டக்களப்பு சம்மாந்துறையில் வீதியில் சைக்கிளில் சென்ற ஒருவருக்கு எதிரே ஓட்டோவில் வந்த மூவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது. ஆட்டோவில் வந்தவர்கள் இரும்புக்கம்பியால் தாக்கியதில் சைக்கிளில் வந்தவர் வபாத்தாகியுள்ளார் . இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நிந்தவூர் 13 ஆம் பிரிவைச்சேர்ந்த இப்ராஹீம் லெவ்வை அபுல் ஹசன் வயது46 Read the rest of this entry »

Written by lankamuslim

November 25, 2011 at 8:55 am

பாணந்துறை வாழ் மக்கள் கண்டனம்

leave a comment »

பாணந்துறை, கேதுமதி மகப்பேற்று வைத்தியசாலையில் பிரேத அறை இன்மை காரணமாக அங்கு வபாத்தான குழந்தையொன்றின் ஜனாஸா 38 மணித்தியாலங்களாக பா ணந்துறை வைத்தியசாலை, கேதுமதி வைத்தியசாலை, நாகொடை வைத்தியசாலை என பல்வேறு இடங்களுக்கும் மாறி மாறி எடுத்துச்செல்லப்பட்ட Read the rest of this entry »

Written by lankamuslim

November 25, 2011 at 7:18 am

750,000 ஆவது உல்லாசப் பிரயாணிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு

leave a comment »

இலங்கைக்கு இவ்வருடம் வருகை தந்த 750,000 ஆவது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணி இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார். இலங்கை உல்லாசப் பயணத்துறையில் இது புதிய சாதனையாகும். வருடமொன்றில் 700,000 இற்கும் அதிகமான உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு இலங்கைக்கு வருவது இதுவே முதல் தடவையாகும். Read the rest of this entry »

Written by lankamuslim

November 24, 2011 at 11:33 pm

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மூன்று மொழிகளில்

leave a comment »

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மூன்று மொழிகளிலும் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த நிலையத்தில் நடைபெற்ற நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும் தொடர்பான Read the rest of this entry »

Written by lankamuslim

November 24, 2011 at 7:41 pm

ஜோர்ஜ் புஷ், டொனி பிளேயர் குற்றவாளிகள்

leave a comment »

பல லட்சம் மனிதர்களை படுகொலை செய்துள்ளதாக குற்றச்சாட்டுகளை சுமந்துள்ளது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் ஆகியோர் சமாதானத்துக்கு எதிரான குற்றங்களில் “crimes against peace” குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

November 24, 2011 at 3:44 pm

அநுருத்த ரத்வத்த மரணமடைந்தார்

leave a comment »

இலங்கையின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தைமரணமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றது இலங்கையின் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்த கடந்த செவ்வாய்க்கிழமை கண்டி பொதுவைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். Read the rest of this entry »

Written by lankamuslim

November 24, 2011 at 1:48 pm

மூவாயிரம் பட்டதாரிகளுக்கு டிசம்பருக்குள் ஆசிரியர் நியமனம்

leave a comment »

நாடளாவிய ரீதியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 3000 பட்டதாரி ஆசிரியர்கள் இவ்வருட இறுதிக்குள் நியமனம் பெறவுள்ளனர் என கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நேற்றுத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது குறித்து தெரிவித்த அமைச்சர் அடுத்த வருடத்தில் 1000 பாடசாலைகளை அபிவிருத்தி Read the rest of this entry »

Written by lankamuslim

November 24, 2011 at 10:13 am

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க ஆளும் தரப்பு சபையில் பிரேரணை

leave a comment »

இலங்கையின் இனப்பிரச்சினை குறித்தும் இலங்கை மக்களுக்கு ஒரே தேச மக்களாக வாழ்வதற்கு அதிகாரமளிப்பதற்கான அரசியல் மற்றும் அரசியலமைப்பு நடவடிக்கைகள் பற்றி பரிந்துரை செய்து அறிக்கை  தயாரித்து சிபாரிசுகளை அரசுக்கு முன்வைக்க பாராளுமன்ற தெரிவுக்குழு என்ற பெயரில் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

November 24, 2011 at 8:27 am

யாழ் . முஸ்லிம்கள் என்னை மிரட்டுவதாக வெளியான தகவலை அறிந்து நான் அதிர்ந்து போனேன்

leave a comment »

எம்.சி.நஜிமுதீன்: யாழ். முஸ்லிம்கள் யாழ். அரசாங்க அதிபரை மிரட்டுவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. தற்போது யாழ்பாணத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகத்தின் இருப்பை விரும்பாத சிலரின் சதி முயற்சியே இதுவென யாழ் .அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது , Read the rest of this entry »

Written by lankamuslim

November 24, 2011 at 8:04 am

அமைச்சர் லுப்னா காலித் அல் காஸிமி அமைச்சர் ரிஷாத் சந்திப்பு

leave a comment »

எஃப்.எம்.பர்ஹான்:இவ்வருட ஜனவரி தொடக்கம் செப்டம்பர் காலப்பகுதி வரை இலங்கை மற்றும் ஜக்கிய அரபு ராஜ்யம் என்பன இரு தரப்பு வர்த்தக செயற்பாடுகள் மூலம் 808 மில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை பெற்றுள்ளதாகவும், இலங்கையில் அடுத்த ஆண்டில் நடை பெறவுள்ள எக்ஸ்போ -2012 மாபெரும் கண்காட்சியில் தனியார் முதலீட்டு துறையினரின் வருகையினை அதிகரிக்க ஜக்கிய அரபு ராஜ்ஜியம் தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என Read the rest of this entry »

Written by lankamuslim

November 23, 2011 at 11:22 pm

அனாதை இல்லங்களினதும் அனாதை பராமரிப்பு நிறுவங்களினதும் ஒன்றியம் உதயம்

with one comment

M.ரிஸ்னி முஹம்மட்: இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் அனாதை இல்லங்களையும் மற்றும் அனாதை பராமரிக்கும் நிறுவங்களையும் உள்ளடக்கிய ஒன்றியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் உப தலைவர்களுள் ஒருவரும் ஜாமியா நழீமியாவின் பிரதிப்பணிப்பாளருமான அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹமத் lankamuslim.org க்கு தெரிவித்தார்.

அவர் தெரிவித்துள்ள தகவலில் உலகில் அனாதைகள் பிரச்சினை பாரிய பிரச்சினையாக உள்ள நிலையில் இலங்கையில் அனாதைகளின் எண்ணிக்கை நான்கு லட்சம் வரை உள்ளது. முஸ்லிம் சமூகத்தில் 35 வரையான அனாதை இல்லங்களும் அனாதைகளை பராமரிக்கும் நிறுவங்களும் உள்ளது Read the rest of this entry »

Written by lankamuslim

November 23, 2011 at 2:42 pm

அரபிக் கல்லூரிகளின் விரிவுரையாளர்களுக்கான பயிற்சிக் கல்லூரி

leave a comment »

எஃப்.எம்.பர்ஹான்: அரபிக் கல்லூரிகளின் விரிவுரையாளர்களுக்கான பயிற்சிக் கல்லூரியை உருவாக்க புத்தசாசன மதவிவகார அமைச்சு இணக்கம். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை:

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள், இலங்கையில் இருக்கின்ற அரபிக் கல்லூரிகளில் உலமாக்களை உருவாக்குகின்ற, அல்ஆலிம் பரீட்சைக்கு தயார்ப்படுத்துகின்ற, Read the rest of this entry »

Written by lankamuslim

November 23, 2011 at 2:40 pm

வெலிகம ஆர்வலர்களிடமிருந்து தகவல் கோரல்

leave a comment »

எம்.இக்பால்: வெலிகம வாசிகள் ஊரிலும் வெளிப்பகுதிகளிலும் சன்மார்க்கம், அரசியல், பொதுச் சேவைகள் போன்ற பல துறைகளிலும் பணியாற்றி  மாண்பை பெற்றுத் தந்தோரை கௌரவிக்கும் முகமாக அவர்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய ஒரு நூல் இரு தொகுதிகளாக வெளியிடப்பட்டன. Read the rest of this entry »

Written by lankamuslim

November 23, 2011 at 10:57 am

வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர் வீடு திரும்பியுள்ளார்

leave a comment »

ஒருகொடவத்த பகுதியில் நேற்றைய தினம் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தகர் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். கடத்தப்பட்ட குழுவினரால் குறித்த வர்த்தகர் நேற்றிரவு நீர்கொழும்பு பகுதியில் கைவிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார். நேற்றிரவு 11.30 அளவில் அவர் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Written by lankamuslim

November 23, 2011 at 10:15 am

துபாயின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் இலங்கை வருகின்றார்

leave a comment »

துபாயின் முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ள லுப்னா காலித் அல் காஸிமி இலங்கை வருகைதருகிறார். இவர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியுதீனின் அழைப்பின் பெயரில் மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை அவர் மேற்கொள்கிறார்.இதன் போது இலங்கைக்கும் துபாயிகும் இடையிலான வர்த்தக உடன்படிக்கைகள் செய்யப்படவுள்ளதுடன். Read the rest of this entry »

Written by lankamuslim

November 23, 2011 at 10:00 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers