Archive for October 2011
ஒக்டோபர் 31 இல் பிறந்த குழந்தையும் 700 கோடியாவது ஆள்
உலகில் இன்று, அக்டோபர் 31 இல் பிறந்த எந்தக் குழந்தையும் 700 கோடியாவது ஆளாக கருதப்படும் என்று ஐநா அறிவித்துள்ளது. 1999ல் உலகின் சனத்தொகை 600 கோடியை எட்டியபோது போஸ்னியாவில் ஹெர்செகோவினா என்ற இடத்தில் பிறந்த அத்னன் நெவிக் என்ற குழந்தையை அறுநூறு கோடியாவது ஆளாக ஐ.நா. தேர்ந்தெடுத்தது. Read the rest of this entry »
முஸம்மில் நாளை கொழும்பு மாநகர மேயராக கடமைகளை பொறுப்பேற்கிறார்
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு கொழும்பு மாநகர சபை மேயராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட ஏ.ஜே.எம்.முஸம்மில் நாளை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார். அத்துடன் பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள டைடஸ் பெரேராவும் நாளை கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். Read the rest of this entry »
யாழ் ஒஸ்மானியா கல்லூரியும் அதிபரும்
முஹம்மத் ஜான்ஸின்
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி 1963இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதல் அதிபராக மர்ஹும் சி.எம்.ஏ. ஜிப்ரி அவர்கள் கடமையாற்றினார்கள். அவரைத் தொடர்ந்து எம்.எம். யூசுப் ,எம்.எம். குத்தூஸ் ,எம்.ஏ.ஆர்.அப்துல் ரஹீம் , ஏ.எச் ஹாமீம் போன்றவர்கள் சிறந்த நிர்வாகத்தை நடத்தினர். 1990 ஓக்டோபரில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது முதல் 2002 வரை பாடசாலை இயங்கவில்லை.
2002 இல் மீளக்குடியேறிய முஸ்லிம் மாணவர்களைக் கொண்ட பாடசாலையாக இது மீண்டும் இயங்க ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் அதன் அதிபராக முபாரக் Read the rest of this entry »
காணி விடயங்களை ஆராய புதிய குழு தேவை
இறக்காமம், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை பிரதேசங்களில் சில பகுதிகளை உள்வாங்கி புதிய தீகவாப்பிய பிரதேச செயலக வட்டாரம் உருவாக்கப் படவுள்ளது, சிறு பானமையினருக்கு பாதகமான உள்ளூராட்சித் திருத்த சட்டமூலம் விரைவில் பாராளுமன்ற அங்கீகாரத்தை பெற்றவுடன், உள்ளூராட்சி எல்லைகள் மாத்திரமன்றி, அரச நிர்வாக செயலக எல்லைகளும் மீள் நிர்ணயம் செய்யப் படவுள்ளன.! சரணாகதி அரசியல் செய்யும் Read the rest of this entry »
சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா! IV
எஸ்.எம்.எம்.பஷீர்
தொடர் நான்கு: “எல்லா உண்மைகளும் மூன்று கட்டங்களை தாண்டி செல்கிறது, முதலாவது அது பரிகசிக்கப்படுகிறது , இரண்டாவது , அது வன்மையாக எதிர்க்கப்படுகிறது. மூன்றாவது அது சுய சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.” -ஆர்தர் சொபென்ஹுர் All truth passes through three stages: First, it is ridiculed; Second, it is violently opposed; and Third, it is accepted as self-evident. – Arthur Schopenhauer ஹிஸ்புல்லா நினைத்தவாறு ஏனைய வேட்பாளர்கள் தங்களின் குடும்பப் பெயரை (surname) எழுதி (சாதாரண நடைமுறையில் Read the rest of this entry »
தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளும் பணியை செய்ய வேண்டாம்.
வன்னி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுனியா தமிழ் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார். Read the rest of this entry »
கவிஞர் பொத்துவில் அஸ்மின் தேசிய விருது பெற்றார்.
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெறும் ‘வியர்வையின் ஓவியம்’ உழைக்கும் மக்கள் கலைவிழா அண்மையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இவ்வருடத்தின் சிறந்த பாடலாசிரியருக்கான Read the rest of this entry »
எனது கமரா கண்டுகொண்டதில் சில உங்களுடன்
அலி ரிஷான்- லண்டன்: 21 வருடங்களின் முன்னர் நான் வாழ்ந்த வீடுகள் இன்று தகர்ந்து போயுள்ளது, எனது நண்பர்களின் வீடுகள் இருத்த இடமே தெரியவில்லை, நான் ஓடித்திரிந்த தார் வீதிகள் இன்று மண் ஒழுங்கைகளாக மாறியுள்ளது.
எனக்கு கணிதம் கற்றுத்தந்த ஜெமீல் ஆசிரியர் வீட்டை, விஞ்ஞானம் கற்றுத்தந்த தஸ்லீம் ஆசிரியர் வீட்டை, சமூக கல்வி கற்றுத்தந்த பூவாத் ஆசிரியர் வீட்டை தேடினேன் காணவில்லை Video Read the rest of this entry »
எனது பயணத்தின் அனுபவக் குறிப்பு
அலி ரிஷான்- லண்டன்
வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயக பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 21 ஆண்டுகளாகியுள்ளது. இந்த நிலையில் எமது தாயக பிரதேசத்தில் நாம் மீண்டும் இருப்பு கொள்வது பலத்த சவாலாக மாறிவருகின்றது. யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் மீள் இருப்பை உறுதிபடுத்த அரசியல் , பொருளாதார , சமூக காரணிகள் பெரும் தடையாக உள்ளது என்று கூறுகின்றார்கள்.
கொழும்பு , நீர்கொழும்பு , கண்டி ஆகிய பிரதேசங்களில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் தாம் வாழும் பிரதேசங்களில் வாழ விரும்புகின்றார்கள். Read the rest of this entry »
வடக்கில் புலிகள் நடத்திய இனச்சுத்திகரிப்பு: ஒரு தமிழரின் குரல்
எஸ்.அருளானந்தம்
இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது. Read the rest of this entry »
ஹஜ்ஜுப் பெருநாளை 07ம் திகதி திங்கட்கிழமை கொண்டாட முடிவு
‘ஈதுல் அல்ஹா’ ஹஜ் பெருநாள் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாடப்படும் என அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் உப தலைவர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹமத் lankamuslim.orgக்கு தெரிவித்தார். புனித துல்ஹிஜ்ஜாஹ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதற்கான தகவல்கள் எதுவும் கிடைக்காததால், துல்கஃதா மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து நேற்று முதல் Read the rest of this entry »
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்காவில்
நியூயோர்க் நகரில் நடைபெறும் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதன் தலைவரான நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் சனிக்கிழமை அதிகாலை அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். Read the rest of this entry »
சிறுபான்மை மாணவர்களுக்கு சிங்கள பாடசாலைகளில் 20 வீத இட ஒதுக்கீட்டு !!
பிரபல பாடசாலைகள் தவிந்த சிங்கள பாடசாலைகளில் 20 வீதமான அனுமதியை தமிழ், முஸ்லிம் பிள்ளைகளுக்கு பெற்று கொடுப்பது குறித்து அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவேன் என ஜாதிக ஹெல உருமையவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்த தேரர் கூறினார் என்று நவமணி பத்திரிகை தெரிவிக்கின்றது.
அந்த பத்திரிகை தகவலில் ஜாதிக ஹெல உருமைய தூதுக்குழுவுக்கும் முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சிலுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் Read the rest of this entry »
சமூகங்கள் மத்தியில் நல்லினக்க கலந்துரையாடல்: முஸ்லிம் கவுன்சில்
தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கிடையே காணப்படும் சந்தேகங்களை அகற்றி புரிந்துணர்வையும் நல்லுறவையயும் கட்டியெழுப்புவதற்கான புதிய அணுகு முறையை கையாளுவதற்கு திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம் கவுன்சில் மேற்கொண்ட இந்தத் திட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியேரத்ன தேரோ தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய கட்சி முன் வந்துள்ளது. Read the rest of this entry »
ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் அமெரிக்காவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இன்று வெள்ளிகிழமை ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் அக்கரைப்பற்றில் மஸ்ஜித் ஒன்றின்முன்னர் கூடிய ஒரு தொகுதியினர் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர் லிபியாவில் மும்மர் கடாபி கொல்லப்பட்டதை கண்டித்தும் ஆர்ப்பாட்ட பதாகைகள் காணப்பட்டது இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு Read the rest of this entry »
சவூதி உம்முல் குரா பல்கலைக்கழக ஆசிய பிராந்திய கிளை இலங்கையில்
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் நேரில் இணக்கம் சவூதி அரேபியாவின் மக்காவிலுள்ள உம்முல் குரா பல்கலைக்கழகத்தின் ஆசியப் பிராந்தியத்திற்கான கிளையை இலங்கையில் அமைப்பதற்கு கொள்கை யளவில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக மகளிர் விவகார, சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று தெரிவித்தார். சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை Read the rest of this entry »
“சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா! “
எஸ்.எம்.எம்.பஷீர்
தொடர் மூன்று: “உண்மை பெரும்பான்மை வாக்குகளால் தீர்மானிக்கப்படுவதல்ல “ தாக் குவைன் ( Truth is not determined by majority vote. ~Doug Gwyn) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட கிழக்கு மாகான சபை தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும் அதில் அபார வெற்றி பெற்றிருந்தாலும் வட கிழக்கு மாகாண சபை நிர்வாகம் யதார்த்தத்தில் செயற்படுமா அதற்கான பாதுகாப்பு சூழல் இல்லாத நிலையில் இந்திய படையின் பாதுகாப்பு உத்தரவாதம் என்ன என்ற கேள்விகள் நிலுவையாக, விடை காணப்படாமல் ஊகங்களுடன் இருந்த போதே Read the rest of this entry »
ஹஜ் பெருநாள் உழ்ஹியா தொடர்பாக டாக்டர் மேர்வின் சில்வா
ஹஜ் பெருநாள் தினங்களில் மாடுகளை அறுத்துப் பலியிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனை உரிய முறையில் நிறைவேற்றுங்கள். ஆனால் கன்றுக் குட்டிகள், பசுக்கள், எருமைகள் போன்றவற்றை அறுக்க வேண்டாம். இத்தினங்களில் குர்பான் செய்யப்படும் மாடுகளை வதை செய்யாமல் அறுத்து, முஸ்லிம்கள் தம்முடைய மார்கக் கடமையை மேற்கொள்ளலாம் என மக்கள் தொடர்பாடல், மக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளாராம் Read the rest of this entry »
கருப்பு ஒக்டோபர் கொள்ளை சம்பவம் என்பதையும் வலியுறுத்தி நினைவு கூறப்படுகின்றது
சர்ராஜ்: வடமாகாண முஸ்லிம்கள் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இந்த ஒக்டோபர் மாதத்துடன் 21 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இந்த சம்பவம் ஆண்டுதோறும் வடமாகாண முஸ்லிம்களால் நினவு கூறப்படுகின்றது. இந்த ஆண்டும் நினைவுகூறும் நிகழ்வுகள் இன்று 27.10.2011 தொடாக்கம் எதிர் வரும் 30 தாம் திகதிவரை கொழும்பு ,கண்டி, புத்தளத்தில், மன்னார் , யாழ்பாணம் ஆகிய பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படங்கள் இணைப்பு Read the rest of this entry »
முஸ்லிம், தமிழ் மீள்குடியேற்றம்
கிழக்கு மாகாணத்தில் 1990 ஆம் ஆண்டு விடுதலை புலிகளின் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் உச்சம் பெற்றிருந்த போது தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான இன முறுகலில் எதிரொலியாக மட்டக்களப்பு ஏறாவுர் நகர பிரதேசத்திலிருந்து வெளியேறிய நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் இதுவரை மீள்குடியேற்றப்படாத நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது. என்று செய்திகள் தெரிவிக்கின்றது.
அன்று அங்கிருந்து வெளியேறி புத்தளம், கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் சிலாபம் உட்பட நாட்டின் பலபாகங்களிலும் வாழ்ந்து வந்த இக்குடும்பங்கள் Read the rest of this entry »
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெள்ளிவிழா கொண்டாடப் போகின்றது
1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி கொழும்பு பாஷாவிலாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 25 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு விழாவொன்றை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் மூலம் அறிய முடிகின்றது. இதன்படி எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி வெள்ளி விழாவை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் Read the rest of this entry »
எமக்குரிய நிலத்தை எமக்குத் தாருங்கள்: காத்தான்குடியில்
காத்தான்குடியில் குப்பை கொட்ட இடமில்லை, காத்தான்குடியின் குடி நீர் பழுதாகிவிட்டது. காத்தான்குடியில் சன அடர்த்தியின் காரணமாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். காத்தான்குடிக்குரிய 1.6 கிலோமீற்றர் காணி காத்தான்குடியின் வடக்கு எல்லை பக்கமாக தற்போது மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் உள்ளது.
அது காத்தான்குடிக்குரிய காணியாகும். எனவே எமது காத்தான்குடி வடக்கு எல்லையை நிர்ணயம் செய்யுங்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் நேற்று Read the rest of this entry »
புலிகளின் ஆயுதங்கள் வேறு நபர்களின் கையில் சிக்கியுள்ளதாம்
விடுதலைப் புலிகளிடமிருந்த ஆயுதங்களில் ஒரு தொகுதி ஆயுதங்கள வேறு நபர்களின் கையில் சிக்கியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.சுயாதீன தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கம் கருணா அம்மான் தலைமையில் பிரிந்து இரண்டாகப் உடைந்த போது Read the rest of this entry »
இலங்கையின் ஹஜ்ஜாஜிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை
சவூதி அரேபியாவின் மத விவகார, இஸ்லாமிய விவகார, கலாசார அலுவல்கள் பதில் அமைச்சர் டாக்டர் அம்மாரை சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்த போது சந்திந்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலின் போது எதிர்காலத்தில் இலங்கையின் ஹஜ்ஜாஜிகளினுடைய எண்ணிக்கையை Read the rest of this entry »
“சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா! “ -II
எஸ்.எம்.எம்.பஷீர்
“புதிரான உலகமடா – உண்மைக்கு எதிரான உலகமடா – இதில் பொறுமையைக் கிண்டிவிடும் போக்கிரிகள் அதிகமடா” கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மேலும் ஹிஸ்புல்லாவின் சட்டத்தரணி எல். செனிவிரட்ன , ஹிஸ்புல்லாவின் மனுவை ஆதரித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றில் ” ஹிஸ்புல்லாஹ் ஒரு நாடாளுமன்றத்துக்கு முழுமையான காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் . எனவே ஒரு அரசியல் கட்சி அதன் பிரதிநிதியின் நாடாளுமன்ற அங்கத்துவ காலத்தை நாடாளுமன்றத்தில் கட்டுப்படுத்துவதற்கு அல்லது அவரின் ஆசனத்திலிருந்து Read the rest of this entry »
ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு நிராகரிப்பு!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக அவுஸ்திரேலிய மெல்பேர்னில் தாக்கல் செய்யப்பட்ட போர் குற்ற வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாதென அவுஸ்திரேலியாவின் சட்டமா அதிபர் நிராகரித்துள்ளார். இலங்கை ஜனாதிபத்திக்கு எதிராக வழக்குத் தொடர சட்டமா அதிபரின் அனுமதி தேவை என அவுஸ்திரேலிய பிரதமர் Read the rest of this entry »
பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து முறையிட தொலைபேசி இலக்கம்
பொது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புதிய அவசர பிரிவு தொலைபேசி இலக்கம் ஒன்றை இராணுவத் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவங்கள் இடம்பெறும் பட்சத்தில் அது குறித்து 0113 13 62 33 என்ற இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என இராணுவ ஊடகப் Read the rest of this entry »
டிசம்பர் 12 இல் சாதாரண தரப் பரீட்சை
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார் .இம்முறை க. பொ. த. (சா/த) பரீட்சை 3000 பரீட்சை நிலையங்களில் நடைபெற உள்ளது , இது டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி முடிவடையம் என்று அறிவியாகபட்டுள்ளது இம்முறை சுமார் ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் மாணவர்கள் இதில் தோற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருப்பு ஒக்டோபா
முஹம்மத் சரீப்
பாகம்-3: இந்நிலையில் 1991 ஜூலை 10 ஆம் திகதி ஆனையிரவு படைத்தளம் மீதான தாக்குதலை புலிகள் ஆரம்பித்திருந்தனர். முப்பத்தொரு நாற்கள் நடைபெற்ற இச்சண்டையில் 575க்கு மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டிருந்தனர். ஏறக்குறைய 1500 பேர் காயமடைந்திருந்தனர். இப்பெருமிழப்பினால் தமிழீழ கோரிக்கையை வலுப்படுத்த மாற்று நடவடிக்கைகள் பற்றி பல மாதங்களாக புலிகள் ஆராய்ந்து கொண்டிருந்தனர் . அந்தவேளையில்தான் 29.04.1992 அன்று பொலனறுவை மாவட்டத்திலுள்ள அழிஞ்சிபொத்தான கிராமம் தாக்கப்பட்டது. Read the rest of this entry »
மாளிகாவத்தை சுற்றிவளைப்பு அரசியல் பழிவாங்கள்: முஜீபுர் ரஹ்மான்
மாளிகாவத்தைப் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பு தேடுதலானது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும்.இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெவித்துள்ளார். இதற்கு எதிராக மனித உமை மீறல்கள் ஆணைக்குழுவில் புகார் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். Read the rest of this entry »
ஜனாதிபதி அவுஸ்திரேலியா சென்றுள்ளார்
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று காலை அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றுள்ளார். இலங்கை மீது மனித உரிமை மீறல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என சர்வதேச ஜூரி சபையின் அவுஸ்திரேலிய கிளை கோரிக்கை விடுத்திருந்தது. Read the rest of this entry »
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க பயணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாளை அமெரிக்கா செல்கிறது. உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்கா செல்லும் இவர்கள் அந்நாட்டு ஆளும் தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »
போலீஸ் மீது குற்றச்சாட்டு
BBC:இலங்கையில் பொலிஸ் காவலில் இருப்போர் மீதான சித்திரவதைகளும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளும் அளவின்றி தொடர்வதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. இந்த ஆண்டில் கடந்த 9 மாதங்களில் மட்டும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே பொலிஸ் நிலையங்களுக்குள் Read the rest of this entry »
கேணல் கடாபி: ஒரு சரித்திரத்தின் சரிவு
M.ஷாமில் முஹம்மட்
1942 ஆம் ஆண்டு ஜூன், 7ஆம் திகதி பிறந்த கடாபி தனது வாலிப பருவத்தில் இராணுவத்தில் இணைந்தார். அன்றைய லிபிய மன்னரான முஹம்மத் இத்ரீஸ் அஸ்ஸனூஸி என்பவர் சிகிச்சைக்காக துருக்கி சென்றிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 1969 ஆம் ஆண்டு தனது 27 வது வயதில் இராணுவ சதிப் புரட்சி மூலம் லிபியாவின் ஆட்சியை கைப்பற்றினார்.
இவரின் காலத்தில் ரஷிய சோசலிஷம் களந்த அரபு இனத் தேசியவாதத்தை முழங்கியவரான எகிப்திய ஜனாதிபதி -இவரும் இராணுவ சதிப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியவர் – கமால் அப்துல நாசரின் பரந்த அரபு தேசியவாதத்தினால் அல்லது ”நாசரிஷம்” என்று அழைக்கப்பட்ட சோசலிஷமும் அரபு தேசியவாதமும் களந்த Read the rest of this entry »
வாழவைத்த குளம் முஸ்லிம்களின் காணிகள் சுவீகப்பு
வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிவில் ஆண்டியா புளியங்குளம் கிராம அலுவலகப் பிவில் வாழவைத்த குளம் கிராமத்தில் வசிக்கின்ற முஸ்லிம்களின் மேட்டு நிலக்காணி இலங்கை இராணுவத்தினரால் “பயிடும் அபிவிருத்தி” என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்தும் கூட இதுவரை எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென்றும் Read the rest of this entry »
“தருஸ்மன் அறிக்கை” ஐ.நாவின் அதிகாரப்பூர்வ அறிக்கையா ?
இலங்கையில் நடந்த இறுதிப் போரில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை ஐ.நாவின் அதிகாரப்பூர்வ அறிக்கைதான் என்று சொல்லி இருக்கிறார் குழுவின் தலைவர் தருஸ்மன். Read the rest of this entry »
கருப்பு ஒக்டோபர் பாகம்-2
முஹம்மத் சரீப்
அதைத் தொடாந்து 1990.08.03 ஆம் திகதியன்று இரவு இஷா தொழுகையில் ஈடுபட்டிருந்த 104 முஸ்லிம்கள் காத்தான்குடி மீரா ஜும்ஆப் பள்ளி மற்றும் ஹுசைனியா பள்ளி போன்றவற்றில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் 6 வயதுக்கும் 14 வயதுக்குமிடைப்பட்ட 25 சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இதனால் ஆத்திரமுற்ற முஸ்லிம்கள் சில தமிழ்ப் பகுதிகளிலும் தாக்குதல்களை நடாத்தியிருந்தனர். இப்படியான தாக்குதல்கள் ஆரம்பத்தில் புலிகளின் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளை கட்டுப்படுத்தவில்லை. Read the rest of this entry »
கருப்பு ஒக்டோபர் :கவிதைப் போட்டி முடிவுகள்..!
இலங்கையின் வடக்கு முஸ்லிம்கள் அவர்களின் தாயகப் பிரதெசத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 21 வருடங்கள் நிறைவடைவதையிட்டு புலம்பெயர்ந்த இலங்கை வடக்கு முஸ்லிம் சம்மேளனமும், யாழ் முஸ்லிம் வலைத்தளமும் இணைந்து நடத்திய கவிதைப் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விபரம். Read the rest of this entry »
சொல்லவா, கதை சொல்லவா, நடந்த கதை சொல்லவா!
எஸ்.எம்.எம்.பஷீர்
“மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர் பேசுஉற்ற இன்சொல் பிறிது என்க “- நன்னெறி- -அண்மையில் வலைத்தளம் ஒன்றில்- மறுபிரசுரம் செய்யப்பட்ட மப்ரூக் என்ற ஆரசியல் பத்தி எழுத்தாளர் “கல்முனை மேயர் பதவி மாயக் கரங்களால் அடித்து விளையாடப்பட்ட பந்து” கட்டுரையினை வாசிக்க நேர்ந்தது.
அக்கட்டுரையின் இறுதிப பகுதியை வாசித்த போது, அச்சம்பவம் தொடர்பில் நான் அறிந்தவற்றை இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் சொல்ல வேண்டிய தேவையொன்றினை ஏற்படுத்தியதால் இக்கட்டுரையை எழுத வேண்டி Read the rest of this entry »
புதிதாக ஐந்து புலனாய்வுப் பிரிவுகள் ?
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய புலனாய்வுப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இலங்கையில் போர் ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், சர்வதேச அளவில் தொடர்ந்தும் இயங்கி வருகின்றனர். Read the rest of this entry »
சிறுபான்மையினரின் காணிப் பிரச்சினை தொடர்பான கருத்துக்கள்
இனங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் இலங்கையில் கிடையாது என நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச வலியுறுத்தியுள்ளார். அப்பாவி தமிழ் மக்களை தொடர்ந்தும் பழைய கொடூரமான நிலைமைக்கு இழுத்துச் செல்ல முயலும் அரசியல் நடவடிக்கையொன்று வுவனியாவில் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் காணிகளை வேறு இன மக்களுக்கு வழங்க வேண்டாம் எனக் கூறி அண்மையில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டமும் அதில் ஒரு Read the rest of this entry »
முஸ்லிம்கள் ஏகாதிபத்திற்கு எதிராக ஒன்றிணையவேண்டும்
ஏகாதிபத்திய நாடுகள் முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளைக் கங்கணம்கட்டிக்கொண்டு முன்னெ டுக்கும் நடவடிக்கையின் ஒரு வெளிப்பாடே முஅம்மர் கடாபியின் படுகொலை அமைந்துள்ளதென மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
ஒவ்வொரு அநியாயக்காரனினதும் சர்வாதிகாரியினதும் தவனை முடிவுக்கு வருகிறது
அபூ அய்யூப் முஹம்மத்
ஒவ்வொரு அநியாயக்காரனினதும் சர்வாதிகாரியினதும் தவனை முடிவுக்கு வருகிறது. புதியதோர் எதிர் காலத்துக்கு ஆல்லாஹுத் தஆலா அடித்தளமிடுகிறான்: அநியாயக்காரன் இம்மையிலும் மறுமையிலும் எவ்வாறான இழிவுகளை அடைவான் என்பதற்கான மற்றுமோர் உதாரணமே கடாபியின் தோல்வியாகும்.
கடாபியையும் அவனது சர்வாதிகார ஆட்சியையும் இல்லாமல் செய்தமை விசுவாசிகளுக்கு மிகச் சிறப்பான ஒரு செய்தியாகும். وَبَشِّرِ الْمُؤْمِنِينَ 10:87. மேலும்இ நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!’ ஜ10:87ஸ Read the rest of this entry »
கடாபி உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்படப்போகும் காட்சிகள்
OurUmmah:லிபியாவில் 42 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்த கடாபி, உயிருடன் பிடிக்கப்பட்ட பின்னர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். சர்வாதிகாரம் அழிக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியம் வெற்றிபெற்றுள்ளது. மேற்கு ஏகாதிபத்தியம் வழிகாட்டிய போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் லியியாவின் சாதாரண மக்கள்தான். இஸ்லாமிய தாகத்துடன் இருக்கும் அந்த மக்கள் எப்படி வழிகாட்டப்படபோகின்றார்கள்.Videos
காவு கொள்ளப்பட்ட கடாபியும் , கற்பனை ராச்சியங்களும்
எஸ்,.எம்.எம்.பஷீர்
கேணல் முஅம்மர் கடாபி கொல்லப்பட்ட செய்தி காட்டுத் தீபோல் உலக ஊடகங்களில் இப்போது பரவி ஆக்கிரமித்திருக்கிறது. எங்கும் எதிலும் அது பற்றிய செய்திகள் பரபரப்பாக பேசப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன. கடாபி எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றிய செய்திகளும் பல விதங்களில் சில நிமிடங்களுக்குள் மாறு பட்டே வரத் தொடங்கின .
குறிப்பாக முதன் முதலில் மேற்குலக செய்தி ஊடகங்களுக்கு பரவிய செய்தி கடாபி சென்றதாக சந்தேகிக்கப்பட்ட வாகனத் தொடரணி மீது நேட்டோ படையினரின் நடத்திய தாக்குதலில் அவர் Read the rest of this entry »
கருப்பு ஒக்டோபர் -பாகம்-1
முஹம்மத் சரீப்
கருப்பு செப்டம்பர் பற்றி அதிகமானவர்கள் அறிந்திருப்பீர்கள். 1971இல் ஜோர்தானில் பதாயீன் பதாஹ் பலஸ்தீன் விடுதலை இயக்கங்கள் செயற்பட்ட காலத்தில் அவர்களுக்கெதிராக தடையொன்று மன்னர் ஹுஸைனால் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ஜோர்தான் இராணுவமும் பலஸ்தீன் போராளிகளும் பரஸ்பரம் மோதிக் கொண்டனர். இரண்டு பக்கமும் இழப்புகள் ஏற்பட்டது. இரு பகுதியினரும் முஸ்லிம்கள். இது ஓரு சகோதரப் படுகொலையாக அன்று விளங்கியது.
இதனால் பலஸ்தீன் விடுதலை இயக்கங்கள் அங்கிருந்து வெளியேறி லெபனானுக்குச் சென்றன. Read the rest of this entry »
கடாபி கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
லிபிய தலைவர் கேணல் மொஹம்மர் கடாபி போராளிகளினால் கொல்லப்பட்டமையை லிபிய தேசிய கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது. இவர் உயிருடன் பிடக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றனர். இவருடன் பல முக்கிய முன்னாள் அதிகாரிகளும் கொல்லபட்டுள்ளனர். இவரின் ஒரு மகன் பிடிபட்டுள்ள நிலையில் சைபுல் இஸ்லாம் தப்பி சென்றுள்ளதாக சர்வதேச Read the rest of this entry »
நீதித்துறை நேர்மையாக செயற்படாவிட்டால் மக்கள் சட்டத்தைக் கையிலெடுப்பர்
நாட்டில் நீதித்துறை நேர்மையாக செயற்படாவிட்டால் பொது மக்கள் சட்டத்தைக் கையிலெடுப்பார்கள். இதனால், மக்கள் எழுச்சிகள் உருவாகும். எனவே , முல்லேரியா சம்பவத்தில் பதவி, தராதரம் பாராது விசாரணைகளை மேற்கொண்டு தண்டனைகளை வழங்கவேண்டும் என்று அமைச்ரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் யெலாளருமான சம்பிக்க ரணவக்க தெவித்துள்ளார். Read the rest of this entry »
காணி மீள்பதிவு தொடரும், நாம் நிறுத்தமாட்டோம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நலன்கருதியே அப்பகுதிகளில் காணி மீள்பதிவுகளை மேற்கொண்டுவருகின்றோம் இதனை எக்காரணம் கொண்டும் நாம் நிறுத்தமாட்டோம். ஆனால் தமிழ்த் தேசியயத் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க்கட்சிகள் விடயங்களை புந்துகொள்ளாமல் இந்த வேலைத்திட்டத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை கவலைக்குயதாகும் என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்ர் ஜனக பண்டார தென்னக்கோன் தெவித்தார். Read the rest of this entry »
திறக்கப்படும் பாதைகளும் , பாலங்களும்
மன்னார் மாவட்டத்தின் தள்ளாடி மறிச்சுக்கட்டி வீதியில் பால திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தால் வடக்கிற்கும் தெற்கிற்குமான குறுகிய பாதை விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளது. நாவற்குழி கேரதீவு, சங்குப்பிட்டி மன்னார் பாதைகளின் புனரமைப்பு பணிகளும், வீதி விஸ்தரிப்புப் பணிகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன. Read the rest of this entry »
ஒரு பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு நிகழும் அவலங்களை அந்த பிரதேசத்துடன் மட்டும் வைத்து பார்க்கமுடியாது
முஸ்லிம் சமூகத்திடம் .. ஆற்றல் இல்லை. முஸ்லிம்களிடம் தலைமைத்துவம் இல்லை , முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தக்கூடிய பொருத்தமான தலைமைத்துவத்தை முஸ்லிம் சமூகத்தால் பெறமுடியவில்லை. தமிழ் சமூகத்தில் நடக்கும் சிறிய , பெரிய பிரச்சினைகள் சர்வதேச கவனத்தை பெறுகின்றது. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் சர்வதேச கவனத்தை பெறுவதில்லை.
இதற்கு தலைமைத்துவம் இன்மை ஒரு பிரதான காரணம். இரண்டாவது காரணம் முஸ்லிம் சமூகத்திடம் ஒழுங்கமைப்பு இன்மை. மூன்றாவது முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சர்வதேச வலையமைப்பு இன்மை. Read the rest of this entry »
புலம் பெயர்ந்துள்ள வடக்கு முஸ்லிம் உறவுகளின் கவனத்திற்கு..!
ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
வடக்கு முஸ்லிம்கள் தமது பாரம்பரிய தாயகப் பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளின் இனச்சுத்திகரிப்புக்கு உட்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி 21 வருடங்கள் நிறைவடைகிறது.
வடக்கு முஸ்லிம்களுக்கெதிராக புலிகள் மேற்கொண்ட இந்த இனச்சுத்திகரிப்பை எமது உறவுகள் எங்கிருந்த போதும் ஞாபகப்படுத்தவேண்டிய ஒரு தேவையுள்ளது. இவ்வாறான ஞாபகமூட்டல் எமது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக புலிகள் மேற்கொண்ட கொடூரங்களை இந்த உலகமும், எமது இளம் சந்ததியும் அறிந்துகொள்ள பெரிதும் உதவும். Read the rest of this entry »
முஸ்லிம் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வர்த்தகரை ஏன் கைது செய்யவில்லை?
கண்டி அம்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகரை இது வரை ஏன் கைது செய்யவில்லை என நேற்று இடம்பெற்ற பல்லேகல பிரதேச சபை அமர்வின் போது கேள்வி எழுப்பப்பட்டது. பல்லேகல நகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினரான குணதிலக ராஜபக்ஷவே இந்த விடயம் குறித்துக் கேள்வி எழுப்பினார். Read the rest of this entry »
2012 பட்ஜட் நிதிஒதுக்கீடுகள் சபையில் சமர்ப்பிப்பு
2012 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த செலவினம் 128,428,44,71000 ரூபா (நூற்றியிருப்பத்தெட்டாயிரத்து நானூற்றியிருபத்தெட்டு கோடி நாற்பத்து நான்கு இலட்சத்து எழுபத்தோராயிரம் ரூபா) என மதிப்பிடப்பட்டுள்ளது.
தேவையான நிதியை திரட்டுகையில் நூற்றிப்பதினையாயிரம் கோடியை விட அதிகரிக்கக் கூடாது என நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது Read the rest of this entry »
இலங்கையில் அமெரிக்க பாராளுமன்றக் குழு
இலங்கை வந்துள்ள அமெரிக்க பாராளுமன்றக் குழுவினர் கடந்த செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர் இலங்கையில் யுத்ததிற்குப் பின்னரான யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் நிலைகளை நேரில் அறிவதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். Read the rest of this entry »









