Archive for September 20th, 2011
மிலிந்த, ஜம்இய்யதுல் உலமா சந்திப்பு
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்துக்கு இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளர் மிலிந்தமொரகொட விஜயம் மேற்கொண்டு ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாற்றினார் இதன்போது கொழும்பு நகரில் மேற்கொள்ளவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கியுள்ளார்.
குறிப்பாக கொழும்பு வாழ் முஸ்லிம்கள் தொடர்பான தமது திட்டங்களை விளக்கவுள்ளனர். கொழும்பு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் Read the rest of this entry »
ஸியாரம் உடைப்புக்கு நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்வேன்: நீதியமைச்சர்
‘அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு தொடர்பில் நியாயம் கிடைக்கவில்லை என்றால், இந்த அரசாங்கத்திலுள்ள நீதியமைச்சர் என்பதைக் கூடப் பார்க்காமல் நிச்சயமாக நானும் நீதிமன்றம் செல்வேன்.
ஸியாரம் உடைக்கப்பட்டபோது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காக்கியுடைக்காரர்களுக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்வேன். யார் தடுக்க முயன்றாலும் இதை நான் செய்தே தீருவேன்’ என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். Read the rest of this entry »
பேரினவாதிகளின் அடுத்த இலக்கு ஜெயிலானி
பேரினவாதிகளின் அடுத்த இலக்கு ஜெயிலானியிலுள்ள தர்ஹாவும் அங்குள்ள பள்ளிவாயலும் என கூறப்படுவதாக உள்நாட்டு வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
பல நூற்றாண்டுகள் பலமை வாய்ந்த அநுராதபுரத்திலுள்ள சியாரம் மற்றும் பள்ளிவாசல் என்பன பேரின வாதிகளினால் உடைத்து தகர்க்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »
முஸ்லிம் சமூகம் புறக்கணிக்க, ஒடுக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது
இந்த நாட்டிலே அரசியல் தீர்வின் போதும், அதிகாரப் பகிர்வின் போதும் முஸ்லிம் சமூகம் ஒடுக்கப்படுவதையோ, புறக்கணிக்கப்படுவதையோ ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மருதமுனையில் Read the rest of this entry »
முதற்தடவையாக ஹஜ் செல்வோருக்கே இம் முறை முன்னுரிமை
ஹஜ் கடமையை நிறைவேற்றவென முதற்தடவையாக செல்பவர்களுக்கே இம்முறை முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி நேற்றுத் தெரிவித்தார்.
அதேநேரம் இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லுபவர்களிடம் 3 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவுக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் முகவர் நிலையங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். Read the rest of this entry »
இடம்பெறும் பேச்சுக்கு முஸ்லிம்கள் ஆதரவு தரவேண்டும் மாவை சேனாதி ராஜா
அரசியல் தீர்வு எட்டப்படுவதற்கு சர்வதேசம் தமிழ் மக்களுக்கு பலமாக இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் தமிழர்கள் அப்படியொரு அரசியல் தீர்வை எட்டும் நேரத்தில் கிழக்கில் குறிப்பாக பரவலாக முஸ்லிம் மக்களின் ஆதரவு எமக்குத் தேவையாகவுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் நடாத்தும் பேச்சு வார்த்தைக்கு ஆதரவு வழங்கி தீர்வை பலமுள்ளதாக மாற்ற முஸ்லிம் தலைவர்களும் , மக்களும் முன்வரவேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதி ராஜா தெரிவித்துள்ளார் Read the rest of this entry »
பத்து வீதம் வரைதான் சம்பள அதிகரிப்பா ?
2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு தொடர்பான கலந்துரையாடல்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈடுபட்டு வருகின்றார். அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கான ஊதியத்தை 10 வீதம் வரை அதிகரிக்க ஆலோசிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதியமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் ஜனதிபதி அரசாங்க ஊழியர்களுக்கு ஐந்து தொடக்கம் பத்து வீத Read the rest of this entry »







