முஸ்லிம்களின் வரலாற்று சின்னமொன்று உடைத்தெரியப் பட்டுள்ளது
வட மத்திய மாகாணமான அநுராதபுரம் பழைய நகர் பகுதியில் ஊர்வளமாக வந்த பெரும்பான்மை இனக் குழுவொன்று மிகவும் பழமையான ஸியாரம் ஒன்றினை உடைத்து தகர்த்துள்ளது என்று அனுராதபுரம் பிரதேச மக்கள் lankamuslim.org க்கு தெரிவித்தனர்.
அநுராதபுரம், குருணாகல் சந்தியில் அமைந்திருந்த எல்லாளன் சிலை அமைந்துள்ள பகுதியில் ஒட்டுப் பள்ளம் என்று அழைக்கபடும் மிகப் பழமைவாய்ந்த முஸ்லிம் ஸியாரம் ஒன்றினை நேற்று மாலை அங்கு வந்த ஒரு குழுவினர் முற்றாகத் தரைமட்டமாக்கிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில் நேற்று சுமார்4.00 மணியளவில் வந்த ஒரு குழுவினர் ஸியாரத்தை முற்றாக நிர்மூலமாக்கிச் சென்றனர்.தற்போது சியாரத்தின் சுற்று மதில்கள் மட்டும் எஞ்சியுள்ளது. என்றும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக குறித்த பிரதேசத்தின் ஆசிரியர் ஒருவர் எமக்கு தகவல் தெரிவிக்கையில் போலீஸாரின் முனிலையில் சியாரம் உடைக்கப்பட்டுள்ளது. உடைக்க வந்த குழுவில் பெளத்த பிக்குகளும் இருந்துள்ளனர். உடைத்த பின்னர் அங்கு பெளத்த கொடியொன்று ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் குறித்த சியாரம் பெளத்த மதக் குழுவொன்றினால் உடைக்கப்பட்டது பின்னர் மீண்டும் முஸ்லிம்களால் கட்டப்பட்டது அந்த சம்பவம் கூட சில இனவாத இணையத்தளங்களில் முஸ்லிம்கள் பலவந்தமாக பெளத்த புனித பகுதியில் புதிதாக மஸ்ஜித் ஒன்றை நிர்மாணித்து வருவதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்தகாக அறிகின்றேன் என்றும் தெரிவித்தார்.
அனுராதபுரம் முஸ்லிம்களின் பிரதேசமான அநுராதபுரம் பழைய நகர் பகுதியில் அமைந்திருந்த பழமை வாய்ந்த இந்த ஸியாரத்தை முஸ்லிம்களின் வரலாற்று சின்னமாகவே பிரதேச முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பார்க்கின்றனர். இங்கு ஷிர்க் இடம்பெறுவதில்லை என்று தெரிவிகின்றனர். இன்று இந்த முஸ்லிம்களின் வரலாற்று சின்னம் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களும் ,தமிழர்களும் அதிகமாக வாழ்ந்த அநுராதபுரம் பழைய நகர் பகுதியில் இருந்து அந்த பிரதேசத்தின் மக்கள் பலர் வெளியேற்ற பட்டனர். அவர்கள் தமது நகர பகுதி காணிகளை இழந்த நிலையில் தற்போது புறநகர், பிரதேசசபை பகுதியில் காணிகள வழங்கப்பட்டு நகரத்துக்கு வெளியில் வாழ்கின்றனர்.
அநுராதபுரம் பழைய நகர் பகுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்தவர்களின் சுமார் 150 வரையான வீடுகள் கடைகள் என்பன புலிகளுடனான யுத்தம் முள்ளிவாய்காலில் முடிவடைததாக அரசாங்கள் அறிவித்த மே 19 ஆம் திகதிக்கு அடுத்த நாள் 20 ஆம் திகதி புல்டோசர்களால் உடைத்து தகர்க்கப்பட்டது என்றும் அந்த ஆசிரியர் தெரிவிக்கின்றார்.
இந்த சம்பவங்கள் யுத்த வெற்றி முழக்கத்தின் மத்தியில் யாரினதும் காதுகளுக்கு விழவில்லை. இதை எதிர்ந்து கட்டிடங்களினதும் காணிகளினதும் உரிமையாளர்கள் பிரதேசத்தில் பலர் தமக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளை ஏற்காது கொழும்பில் வழக்கு தொடுத்துள்ளனர். அந்த வழக்கு தற்போதும் விசாரணையில் உள்ளது. அந்த உடைப்பு சம்பவத்தின் போதும் குறித்த சியாரம் உடைக்கப்படவில்லை என்பது குறிபிடத்தக்கது. 1957 இல் UNESCO World Heritage Site, புராதன பிரதேசமாக அனுராதபுரம் அறிவிக்கப்பட்டுள்ளதும், அனுராதபுரம் பௌத்தர்கள் புனித பூமியாக கொண்டுள்ளதும் குறிபிடத்தக்கது.










சியாரம் உடைப்பது நல்ல விடயம்தானே..
Fawzer.Sh
September 11, 2011 at 4:28 pm
ugada moolaiya
ramzeen
September 12, 2011 at 8:34 pm
சியாரம் ஷிர்க்கை வளர்கின்றது துண்டுகின்றது என்பது பெரும்பாலான முஸ்லிம்களின் நிலைப்பாடு, ஆனால் அவை கொண்டுள்ள தொன்மையின் காரணமாக முஸ்லிம்களின் வரலாற்றை அடையாளப் படுத்த மிகவும் தேவையானது ஆகவே அவை பாதுகாக்கப் படவேண்டும் என்பதுடன் ஷிர்க் ஏற்படுத்த படாமலும் பாதுகாக்கப்படவேண்டும்
Mazahim Mohamed
September 11, 2011 at 5:54 pm
yes it has some historical value.now majority of Muslims know real Islam is what.Adamant is the reason to late implementation.currently on and off we hear that Muslims are decedents reason past .to proof time duration we need these historical remains.
DR MARZOOK
September 13, 2011 at 9:27 am
இணையத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வரும் செய்திகளுக்கு எவ்வாறு நாம் மறுமொழி அளிக்கப்பட வேண்டும் .
நாம் எவ்வாறு ? எப்படி செய்யலாம் ?
irshad
September 11, 2011 at 8:28 pm
சியாரம் உடைப்பது நல்ல விடயம்தான்.
அதை நாம் செய்ய வேண்டும்.
அடுத்தவன் தொட்டால் கையை …..
Ahmed issadeen (Tamil Nadu)
September 11, 2011 at 8:52 pm
Alhamdulillah< the things that we should do Allah made use of our enemies…………
bis
September 12, 2011 at 8:19 am
quraanilo allathu hadeeskalilo ziyarangalakkattippathukaakkumpadi kurippidappttillai.Inshaa Allah Quraanilum Haddeskalilum koorappattullawaikalaippinpatruwom(Atheeullaha Wa Atheeurrasoola)
Abdul Aziz
September 12, 2011 at 4:49 pm
வடக்குக் கிழக்கில் தமிழ் ஆயூதக் குழுக்களின் அராஜகங்களுக்குப் பலியாகிய நமது மக்கள் இன்னும் வன்முறையின் நிழலுக்குள்ளேயே வாழ்கின்றனர். அப்போதெல்லாம் தென்னிலங்கை நமக்குப் பாதுகாப்பான இடம் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது. ஆனால் இன்று தென்னிலங்கையின் யதார்த்தம் அச்சம் நிறைந்ததாகவுள்ளது. எந்த நேரத்திலும் எங்கேனும் ஒரு மூளையில் இனக்கலவரம் வெடித்து விடலாம் எனும் அவலத்தினூடே நாம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம்.
சிங்கள-முஸ்லிம் கலவரங்கள் அனைத்துமே மிகச் சாதாரணமான சம்பவங்களிலிருந்தே தொடங்குகின்றன. முச்சக்கர வண்டிச் சாரதிகள் போன்ற சில அப்பாவிப் பொதுமக்களை மூளைச் சலவை செய்து முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டி விடும் சிங்களத் தீவிரவாத சக்திகள் குறித்து நாம் மிகுந்த எச்செரிக்கையோடு செயற்பட வேண்டியுள்ளது. அவ்வவ்விடங்களில் உடனடிப் பாரிகாரம் காண முடியுமான சிறுசிறு சச்சரவுகளைப் பரிதாகரமாக்கி அரசியல் லாபமடைய சில திரைமறைவு சக்திகள் முனைகின்றன.
அரசியல் ரீதாக மக்களை இணைத்துக் காட்டிய தலைவர் மர்ஹூம் அஸ்ரப். ஒரு தலைவன் பின்னால் இணைந்த அநுபவம் நம் சமூகட்திடமே உள்ளது. நாம் அரசியல் வாதிகளின் (கூஜா தூக்கிகள்) பித்தலாட்டத்திலிருந்து வெளியேறி ஒரு தலைவரைத் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். முஸ்லிம் சமூகத்திடம் இருக்கும் பெரிய குறைபாடு “தலைமைத்துவ வெற்றிடம்.
Journalist of AKP
September 12, 2011 at 6:39 pm
Naangal seyyavendiya velayai avrgal seythu irukirargal… Avalavuthan vithiyasam
Asfaq Mohamed (@AsfaqM)
September 13, 2011 at 4:42 pm
அவர்கள் முஸ்லிம்களின் ஓர் இடம் அதாவது பள்ளிவாசல் மாதிரி என்று நினைத்துக்கொண்டு உடைத்தார்கள்.அடுத்தது உங்கள் ஊர் பள்ளியாகவும் இருக்களாம்
முகம்மத் .
September 13, 2011 at 10:10 pm
yes.that’s true.
DR MARZOOK
September 14, 2011 at 9:30 am
siyaram udaiththathu sarithan but seitha murai than pilai
muzzammil inul haq
September 29, 2011 at 10:17 am