Lankamuslim.org

One World One Ummah

ஜிஹாத் என்ற பிரசாரத்தில் உண்மையில்லை : கோட்டாபய

leave a comment »

மர்ம மனிதர்கள் எதிர்ப்பு நடவடிக்கையின் பின்னணியில் அடிப்படைவாத  ஜிஹாத் அமைப்புகள் இருப்பதாக தெரிவிக்கும் பிரசாரத்தில் உண்மையில்லை என்று பாதுகாப்பு செயலாளர்  கோட்டாபய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ஜம்இயதுல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள்  பாதுகாப்பு செயலாளரை   சந்தித்து கலந்துரையாடிய போது சில ஊடகங்கள் முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற சில சம்பவங்களின் பின்னணியில் ஜிஹாத்,  அல் கைதா அமைப்புகள் இருப்பதாக குற்றஞ்சாட்டுவது குறித்து வினவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். என்று நவமணி பத்திரிகை தெரிவிக்கின்றது.

இந்த சம்பவங்களின் பின்னணயில் சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபடுவோர் இருப்தாகவும் இவர்கள் அப்பாவி மக்களை தூண்டி தமது காரியங்களை சாதிக்க பார்கின்றார்கள் இவ்வாறான பொறிகளுக்குள் முஸ்லிம் மக்கள் சிக்காதிருக்க அறிவூட்ட வேண்டும் என்றும் கேட்டுகொண்டுள்ளார்.

முஸ்லிம் பகுதிகளில் நிலவிய அசாதாரண நிலைதொடர்பாக மீடியாக்களில் பல இனவாத சிந்தனையை தூண்டிவிடும் கருத்துகளும் உண்மைக்கு புறம்பான கருத்துகளும் அவற்றில் மர்ம மனிதன் நாடகம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் உருவாக்கப் பட்ட அரசுக்கு எதிரான சதியென்றும். பாதுகாப்பு படையினருக்கு எதிரான தாக்குதல்கள் அடிப்படைவாதிகளினால் ஒழுங்கு படுத்தப்படுகின்றது என்றும் மஸ்ஜித்துகள் இந்த கலவரங்களை வழிகாட்டுகின்றது. என்றும் சில ஊடகங்கள் செய்திகளை பதிவு செய்தமையும் ,

புத்தளத்தில் போலீசார் ஒரு படிமேலே சென்று புத்தளத்தில் போலீஸ் அதிகாரியை கத்தியால் குத்திவிட்டு அந்த கத்தி புத்தளம் பெரிய பள்ளியின் கவுலில் கழுவப்பட்டுள்ளது என்று விசாரணை நடத்த முயலும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ள என்பது குறிபிடதக்கது

About these ads

Written by lankamuslim

August 28, 2011 at 10:43 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,802 other followers

%d bloggers like this: