Archive for August 28th, 2011
ஜிஹாத் என்ற பிரசாரத்தில் உண்மையில்லை : கோட்டாபய
மர்ம மனிதர்கள் எதிர்ப்பு நடவடிக்கையின் பின்னணியில் அடிப்படைவாத ஜிஹாத் அமைப்புகள் இருப்பதாக தெரிவிக்கும் பிரசாரத்தில் உண்மையில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை ஜம்இயதுல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாளரை சந்தித்து கலந்துரையாடிய போது சில ஊடகங்கள் முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற சில சம்பவங்களின் பின்னணியில் ஜிஹாத், அல் கைதா அமைப்புகள் இருப்பதாக குற்றஞ்சாட்டுவது குறித்து வினவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
சர்வதேச இயக்கமாக பரிமாணம் பெரும் ”நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்”
M.ரிஸ்னி முஹம்மட்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இலங்கை வடக்கு கிழக்கு தமிழர்களை கொண்ட புலம்பெயர் அமைப்பு முழு சர்வதேச தமிழர்களையும் உள்வாங்கிய அமைப்பாக பரிமாணம் பெறுகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரில் ருத்ரகுமாரன் தலைமையில் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு தனிநாடு ஒன்றை உருவாக்கும் நோக்கம் கருதி உருவாக்கப்பட்ட அமைப்பு தன்னை பரந்த சர்வதேச இயக்கமாக கட்டமைக்கத் தீர்மானித்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் புலிகளின் ஆயுத போராட்டம் அழிவுக்கு வந்த பின்னர் புலம்பெயர் நாடுகளில் இருந்த புலிகளினால் இலங்கை வடக்கு கிழக்கு தமிழர்களை மட்டும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு Video Read the rest of this entry »
தேசிய புலனாய்வு பிரிவின் கண்காணிப்பில் முக்கிய அமைச்சர்கள்
M.ரிஸ்னி முஹம்மட்: ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செல்வாக்கு மிக்க அமைச்சர்களான மின்சக்தி அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தருமான சம்பிக்க ரணவக்க மற்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் -The Patriotic National Movement (PNM)- முக்கிய உறுப்பினரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ ஆகியோர் நாட்டின் தேசிய புலனாய்வு பிரிவினால் – The State Intelligence Service (SIS)- மிகவும் நெருக்கமாக கண்காணிக்க பட்டு வருவதாக தேசிய புலனாய்வு பிரிவின் முக்கிய முலங்களை ஆதாரமாக கொண்டு தி சண்டே லீடர் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்கண்ட இருவரும் அரசின் அங்கமாகவும் முக்கிய செல்வாக்குள்ள அமைச்சர்களாகவும் இருந்தபோதும் அண்மைகாலமாக வெளியிட்டுள்ள அறிக்கைகள் அரசுக்கு எதிரான விமர்சனங்களை கொண்டிருந்தமை குறிபிடத்தக்கது. Read the rest of this entry »
கொழும்பு மாநகர சபையை கைப்பற்றும் பலப் பரீட்சையில் பிரதான கட்சிகள்
ஒக்டோபர் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் கொழும்பு மாநகர சபையை எந்தக் கட்சி கைப்பற்றும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. நீண்ட காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழிருந்துவரும் இச்சபையைக் கைப்பற்ற இம்முறை என்றுமில்லாதவாறு கட்சிகள் பலவும் களத்தில் கங்கணம்கட்டி இறங்கியுள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக Read the rest of this entry »







