முஸ்லிம் சமூகத்தில் அசாதாரண நிலை தொடர்பான சில அவதானங்கள்
M.ஷாமில் முஹம்மட்
மர்ம மனிதர்கள் என்ற விடயம் முஸ்லிம் சமூகத்தின் மீது பெரிய தாகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்படுத்தி வருகின்றது. இந்த மர்ம மனிதர்கள் விவகாரம் திட்டமிட்ட ஒரு நடவடிக்கையா ? இல்லையா ? திட்டமிடப்பட்ட நடவடிகையானால் யாருடைய திட்டமிடல் ? அரசாங்கத்தினுடையதா ? அல்லது அரசுடன் இருக்கும் இனவாத சக்திகளுடையதா ? அல்லது அரசு கூறுவது போன்று மேற்கு நாடுகளின் சதியா ? அல்லது புலிகளின் பின்னணி கொண்டதா ? போன்ற எம்முன் தோன்றும் கோள்விகளுக்கு பதில் கண்டுகொள்வது இலகுவானதாக இல்லை காரணம் எதற்கும் போதுமான ஆதாரங்கள் இல்லை.
ஆனால் இந்த மர்மமனிதன் காரணமாக முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய தாக்கம் ஏற்பட்டு வருகின்றது. மர்ம மனிதன் விவகாரம் இடம்பெற்ற இடங்களில் ஆயுத படைகளின் கெடுபிடிகளை முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர். ஆயுத படைகளின் ஆதிக்கம் ஏற்படுத்தப் பட்டு வீதி சோதனை சாவடிகள் என்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. மர்மமனிதன் என்ற விடயத்தை மக்கள் பெரிதாக கருதி செயல்படும் அளவுக்கு பாதுகாப்பு தரப்பினர் மக்களை திருப்தி படுத்தும் விதமாக நடந்து கொள்ளவில்லை. இரண்டாவது மக்கள் சட்டத்தை கையில் எடுத்து செயல்படுகின்றமை. இவை இரண்டும், நிலைமையை மோசமாக்குகின்றது. எமது கழுத்தில் நாமே கையிற்றை மாட்டிவிட காரணமாக அமைந்து விடுகின்றது.
மர்ம மனிதர்கள் என்ற விடயம் திட்டமிட்ட ஒரு நடவடிக்கையா ? இல்லையா ? என்பதற்கு அப்பால் தற்போது மர்ம பூதங்கள் நான்கு தரப்பினர்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு ப்ராஜெக்ட்டாக மாறியுள்ளது. இதில் முதல் தரப்பினர் பெரும்பான்மை பேரினவாதிகள் இவர்கள் பல ஆண்டுகளாக இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஜிஹாத் என்ற அமைப்புகள் இருப்பதாகவும் அது புலிகளுக்கு அடுத்ததான அரசுக்கு எதிரான பயங்கரவாதம் என்றும் பிரச்சாரப்படுத்தி வந்தனர். இவர்களுக்கு இந்த மர்ம பூத விடயம் மேலும் அனுகூலங்களை வழங்கியுள்ளது .
முஸ்லிம் பிரதேசங்களில் மர்ம மனிதன் விடயத்தில் முஸ்லிம்கள் சிலர் நடந்து கொண்ட தாக தெரிவிக்கப்பட்டும் விதம் அதாவது போலீஸ் நிலையங்களை, கடற் படை முகாம்களை சுற்றி வளைந்து தாக்கியமை போலீஸ் வாகங்களை தாக்கி அழித்தமை, தீ மூட்டியமை , ஆயுத படையினரை தாக்கி காயப்படுத்தியமை, ஆயுதங்களை கைப்பற்ற முற்பட்டமை , தாக்கி படுகொலை செய்தமை , போன்ற தகவல்கள் பெரும்பான்மை பேரினவாதிகளின் பிரச்சாரத்தை ஊக்கப் படுத்தியுள்ளதுடன்.
முஸ்லிம்கள் மத்தியில் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கும் ஆயுத குழுக்களை மர்ம பூதங்களை பயன்படுத்தி வெளியில் கொண்டுவந்து தாக்கி அழிக்க பொருத்தமான சந்தர்பமாக இதை அவர்கள் கருதி செயல்படவும் முடியும் ஆக தற்போது உருவாகியுள்ள சூழ்நலையை இவர்கள் தங்களுக்கு சாதகமாக ஆக்கிகொண்டாள் பாரிய அளவில் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதன் வெளிப்பாடுகளின் ஒன்றுதான் மர்ம மனிதன் தொடர்பாக முஸ்லிம்களின் கோபத்தை இஸ்லாமிய அடைபடைவதிகளின் திட்டமிட்ட நடவடிக்கை என்று அவர்கள் பிரச்சாரப்படுத்துவது என்று குறிப்பிடலாம்.
இரண்டாவது தரப்பினர் மர்ம பூதங்களால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி குறிப்பாக வடக்கு கிழக்கில் பதட்டத்தை ஏற்படுத்தி முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களை அரச படைகளுக்கு எதிராக தூண்டிவிட முயலும் புலிகளும், புலிகளின் ஆதரவு சக்திகளும்.
இவர்கள் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டாள் இவர்கள் தங்களுக்கு சாதகமாக ஆக்கிகொண்டாள் பாரிய அளவில் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் உண்டு. இதன் வெளிப்பாடுதான் புலி ஆதரவு பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளும் கட்டுரைகளும் இன்று வெளியாகியுள்ள ஒரு பத்திரிகை கட்டுரை ஒன்றில் ”தமிழரின் போராட்டம் வீழ்த்தப்பட்ட பின்னர் முஸ்லிம்களை ந_க்குவது ஒரு சிறுவிடயமென கொழும்பு அரசு ஏற்கனவே கணக்குப் போட்டிருந்ததுஎன்றும் .
இதன் மூலம் எதிர்காலத்தில் கிளர்ச்சிக்கோ, புரட்சிக்கோ முஸ்லிம் மக்கள் செல்லக் கூடாத மனநிலையை ஏற்படுத்த அரசு முயற்சிக்கிறது. முஸ்லிம்கள் பலமடைய முன்பே, புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து முஸ்லிம்களையும் பயமுறுத்தி அடக்க வேண்டுமென அரசு திட்டமிடுவதன் விளைவே இது. முஸ்லிம் தலைவர்களைத் தம்முடன் அணைத்து வைத்துக்கொண்டு முஸ்லிம்களை திராணியற்றவர்கள் ஆக்குவது இலகுவென அர_ நினைக்கிறது.
ஆனால் முஸ்லிம் மக்களிடம் காணப்படுகின்ற இறுக்கமான கூட்டுணர்வு அவர்களது பள்ளிவால் தொழுகைகளுக்கு ஊடாக இலகுவாகச் செயற்படக்கூடியது. ஆதலால் முஸ்லிம் மக்களின் எழுச்சியை இலகுவில் அடக்க முடியாது”. என்று முஸ்லிம்களை ஏத்தி விடுகின்றது. இதன் மூலம் இந்த சக்திகள் அரசியல் இலாபம் அடைய முயலுகின்றனர். இதன் பாதிப்பு முஸ்லிம்களுக்கு என்பது தெளிவானது.
மூன்றாவது தரப்பு மேற்கு நாடுகள். இந்த குற்றசாட்டை அரச பிரதிநிதிகள் கூறிவருகின்றனர் இதை முழுமையாக மறுக்க முடியாது. ஆனால் மர்ம மனிதர்கள் தொடர்பாக அசாதாரண நிலை தோன்றியுள்ள பிரதேச மக்கள் மர்ம மனிதன் என்று இனம் காணப்படுபவர்கள் பெரும்பாலும் அரச படையினர் என்றும் அவர்கள் மக்களால் துரத்தப் படும்போது ஆயுத படைகளின் முகாம்களுக்குல் சென்று விடுகின்றனர். என்று குற்றம்சாட்டுகின்றனர். இந்த குற்றசாட்டுகள் மேற்கின் பங்கை வலுவிழக்க செய்கின்றது.
ஆனால் ஜனாதிபதி மஹிந்த தலைமயிலான இந்த அரசாங்கத்தை மேற்கு நாடுகள் திருப்தியுடன் ஏற்று கொள்ளவில்லை. அவர்கள் அரசாங்கதை அடிபணிய வைக்க இது போன்ற சூல்நிலைகளை தோற்று விப்பார்கள் , அல்லது உருவாகும் சூல்நிலைகளை பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை மறுக்க முடியாது.
நான்காவது தரப்பு அரச தரப்பு. மர்ம பூதங்களால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அரசாங்கமும் பயன்படுத்துகின்றது. அதாவது மக்கள் கிரீஸ் பூதம் தொடர்பான தீவிரமாக ஈடுபட்டிருக்க நாட்டின் பல பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. உருளைகிழங்கு , வெங்காயம் , கேஸ் போன்றவைகளின் விலை உட்டபட பொருட்களின் விலைவாசி அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களின் கவனம் மறுபக்கம் இருக்கும் நிலையில் இந்த சந்தர்பத்தை அரசாங்கள் பயன்படுத்தியுள்ளது. என்றுதான் கூறவேண்டும். ஆனால் அரசாங்கள் மர்ம மனிதனை உருவாகியுள்ளது. என்று கூறுவதற்கு பல காரணிகள் தடையாகவுள்ளது.
எது உமையாக இருந்தாலும் பாதிக்கப்படும் தரப்பாக முஸ்லிம் தரப்பு இருக்கிறது. என்பதற்கு நிறையவே ஆதாரங்கள் இருக்கிறது. அதனால் முஸ்லிம் தலைமைகள் விரைந்து செயல்படவேண்டும். முஸ்லிம் சமூகத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பை முஸ்லிம் சமூக தலைமை சரிவர செய்யவேண்டும். இதுவரை எடுக்கபட்டுள்ள முயற்சிகள் எதுவும் போதாத நிலையைத்தான் நடக்கும் சம்பவங்கள் கோடிட்டு காட்டுகின்றன. இலங்கையில் இருக்கும் 2500 ஜும்மாஹ் மஸ்ஜிதுகளின் ஊடாகவும் விசேடமாக இது தொடர்பாக விழிப்பூட்ட வேண்டும். அகில இலங்கை ஜம்இயதுல் உலமா தனது பிராந்திய ,பிரதேச கிளைகளின் ஊடாகவும் , மஸ்ஜிதுகள் ஊடாகவும் முழுஅளவிலான வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். அது முழுமையாக அரசாங்கத்தை சார்ந்து நிற்கும் வேலைத்திட்டங்களாக மட்டும் இருக்க கூடாது. எமது சமூகத்தை நாம் கட்டுப்படுத்தி அறிவுபூர்வமான் முறையில் எமக்கு சவாலாக மாறியுள்ள சூழ்நிலையை கையாள வேண்டும். தவிறினால் நாம் கட்டுபடுத்தப் படுவோம்.
தற்போதைய நிலையில் முஸ்லிம் பிரதேசங்களில் பதிவாகும் ஆயுத படைகளின் அத்துமீறல்கள் சரினான முறையில் பதிவு செய்யபட்டு உரியமுறையில் அரசாங்கத்தின் உயர் மட்டங்களுக்கு அறிவிக்க வேண்டும். பொதுமக்கள் எவ்வாறு சட்டத்தை கையில் எடுக்கமுடியாதோ அதேபோன்று ஆயுத படைகளும் சட்ட ஒழுங்கை மீறமுடியாது மீறப்படும்போது அது சரியான முறையில் பதிவு செய்யப்பட்டு அதற்கான சட்ட , அரசியல் நடவடிக்கைகளை எடுக்க தயங்கக் கூடாது . விரைவாக செயல்பட்டு எம்மை நாம் பாதுகாத்து கொள்வோம் .தவறினால் அடக்கப்படலாம.










i m very inrested…
m.t.noorul hudha
August 24, 2011 at 5:34 pm
Good Analysis, I wish this could be translated in English also…
Mafaz
August 24, 2011 at 6:11 pm
Mr.shamil , intresting ,finally you broke your silence and come up with analysed facts.
Emg.Mufahir
August 24, 2011 at 6:15 pm
Good Analysis and best awareness…
Mohamed Ali
August 24, 2011 at 9:30 pm
முஸ்லிம் பிரதேசங்களில் மர்ம மனிதன் விடயத்தில் முஸ்லிம்கள் சிலர் நடந்து கொண்ட தாக தெரிவிக்கப்பட்டும் விதம் அதாவது போலீஸ் நிலையங்களை, கடற் படை முகாம்களை சுற்றி வளைந்து தாக்கியமை போலீஸ் வாகங்களை தாக்கி அழித்தமை, தீ மூட்டியமை , ஆயுத படையினரை தாக்கி காயப்படுத்தியமை, ஆயுதங்களை கைப்பற்ற முற்பட்டமை , தாக்கி படுகொலை செய்தமை , போன்ற தகவல்கள் பெரும்பான்மை பேரினவாதிகளின் பிரச்சாரத்தை ஊக்கப் படுத்தியுள்ளதுடன்.
Zajaath Abdurraheem
August 25, 2011 at 1:18 am
சிறந்த ஆக்கம் ஆனால் காலம் நகரும்போது உண்மைகள் வெளிவரலாம்
Altaf hussain
August 25, 2011 at 12:12 pm
எமது ஊரில் ( puttalam )கொல்லப்பட்ட போலீசுக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டுகின்றது வரவேற்கின்றேன் ஆனால் சம்பவத்தை பார்த்து கொண்டு இருந்த அப்பாவிகள் கைது செய்யபடுகிறார்கள், நேற்று முன்தினம் அதிகாலை மூன்று மணியளவில் இரு அப்பாவிகளை மோசமாக அடித்து கொண்டு சென்றுள்ளார்கள் அதில் ஒருவர் நலீமியா மொவ்லவி இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக சரியான முறையில் சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் இல்லாமையால் அப்பாவிகள் பாதிகபடுகின்றனர் போலீஸ் ஒரு அப்பாவி அதேபோன்று இவர்களும் அப்பாவிகள்.
AKR
August 25, 2011 at 12:19 pm
புத்தளம்த்தின் நிலை இப்போது ஊமைகள் போசுகின்ற போச்சு ! எமக்கு பாதுகாப்பு அல்லாஹ் ஒருவன் .
zaah
August 25, 2011 at 3:21 pm
excellent analysis mr.shamil.yes these facts should sooner brought into relevant people of this country.mr. shamil gives some suggestion.those suggesion should be implemented very soon.otherwise we will fall any of a trap.but unfortunate who will take this matter forward.no Muslims political stronghold exist in this movement.only acju can do something.because the strength of acju not fully understood by the enemies.as such it can move forward by huge strength.may allah will protect our ummah
DR MARZOOK
August 25, 2011 at 4:31 pm
InshaAllah
M.shamil mohamed
August 26, 2011 at 5:54 pm
Best analysis mr.shamil, I wish you could talk to relevant parties too.
Hakeem
August 25, 2011 at 6:16 pm
தேவையான நேரத்தில் பொருத்தமான கட்டுரை , கிரீஸ் மனிதர்கள் என்று பிடிபடுபவர்கள் ஏன் நீதிமன்றத்தின் முன் நிறுத்த படுவதில்லை என்பதை கட்டுரையாளர் ஷாமில் தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டும் அப்போது உங்களின் முடிவு எப்படி இருக்கும் என்பதையம் பார்க்க வேண்டும்
Ibrahim munas
August 25, 2011 at 9:09 pm
I did one but not article ,InshaAllah I will put to see
M.shamil mohamed
August 26, 2011 at 5:58 pm
Thank you everyone for the comments
M.shamil mohamed
August 26, 2011 at 5:56 pm
தேவையான நேரத்தில் பொருத்தமான கட்டுரை
shihar mohamed
August 28, 2011 at 11:30 am