புதிய கிழக்கு மாகாண இராணுவ தளபதி நாளை முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்கின்றார்
காத்தான்குடி அபூ ரீஷா: கிழக்கு மாகாண இராணுவ புதிய தளபதியாக மேஜர் ஜென்ரல் லால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை 25.8.2011-கிழக்கு மாகாண முஸ்லிம் சமூக பிரதிநிதிகளை சந்தித்து நிலவிவரும் அசாதாரண நிலை தொடர்பில் கலந்துரையாடவுள்ளார். கிழக்கு மாகாண இராணுவ தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜென்ரல் போனிபேஸ் பெரேரா சீனாவுக்கு உயர்கல்விக்காக செல்லவுள்ளார்.
புதிதாக கடமையை பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜென்ரல் லால் பெரேரா கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இந்த சந்திப்பு நாளை மாலை 4.00 மணிக்கு ஏறாவூர் ஜாமிஉல் அக்பர் ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெறவுள்ளது.







