Lankamuslim.org

One World One Ummah

Archive for August 24th, 2011

புதிய கிழக்கு மாகாண இராணுவ தளபதி நாளை முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்கின்றார்

leave a comment »

காத்தான்குடி அபூ ரீஷா: கிழக்கு மாகாண இராணுவ புதிய தளபதியாக  மேஜர் ஜென்ரல் லால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை 25.8.2011-கிழக்கு மாகாண முஸ்லிம் சமூக பிரதிநிதிகளை சந்தித்து நிலவிவரும் அசாதாரண நிலை தொடர்பில் கலந்துரையாடவுள்ளார். கிழக்கு மாகாண இராணுவ தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜென்ரல் போனிபேஸ் பெரேரா சீனாவுக்கு உயர்கல்விக்காக செல்லவுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2011 at 10:54 pm

ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி தடுத்து நிறுத்தபட்டுள்ளது

with one comment

வடமத்திய மாகாணமான அனுராதபுரம் மாவட்டத்தின் இன்று நொச்சியாகம பிரதேசத்தின் புத்தளம் – அநுராதப்புரம் பிரதான வீதியை மறித்தும் டயர்களை எரித்தும் பிரதேச பெரும்பான்மையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அங்கு பதட்டம் நிலவியுள்ளது புத்தளத்தில் இடம்பெற்ற அசாதாரண நிலையின்போது கொல்லப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் அனுராதபுரம் நொச்சியாகம ஜெயபிமை கிராமத்தை சேர்ந்தவர் என்பது குறிபிடத்தக்கது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2011 at 8:41 pm

முஸ்லிம் சமூகத்தில் அசாதாரண நிலை தொடர்பான சில அவதானங்கள்

with 15 comments

M.ஷாமில் முஹம்மட்
மர்ம மனிதர்கள் என்ற விடயம் முஸ்லிம் சமூகத்தின் மீது பெரிய தாகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்படுத்தி வருகின்றது. இந்த மர்ம மனிதர்கள் விவகாரம் திட்டமிட்ட ஒரு நடவடிக்கையா ? இல்லையா ?  திட்டமிடப்பட்ட நடவடிகையானால் யாருடைய திட்டமிடல் ? அரசாங்கத்தினுடையதா ? அல்லது அரசுடன் இருக்கும் இனவாத சக்திகளுடையதா ? அல்லது அரசு கூறுவது போன்று மேற்கு  நாடுகளின் சதியா ? அல்லது புலிகளின் பின்னணி கொண்டதா ? போன்ற எம்முன் தோன்றும் கோள்விகளுக்கு பதில் கண்டுகொள்வது இலகுவானதாக இல்லை காரணம் எதற்கும் போதுமான ஆதாரங்கள் இல்லை. Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2011 at 4:51 pm

மஹர மஸ்ஜித் மீது தாக்குதல் முயற்சி ஜனாதிபதி உடனடி விசாரணைக்கு உத்தரவு

leave a comment »

மேல் மாகாணத்தில் மஹர பிரதேசத்தில் மஹர சிறைச்சாலைக்கு வெளியே அமைந்துள்ள மஸ்ஜித் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு உரிய நேரத்தில் கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அவர் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்துள்ளார். மஹர மஸ்ஜித் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். அண்மைகாலமாக குறிபிடும் படியான அச்சுறுத்தல் அவதானிக்கப் பட்டு வந்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2011 at 1:23 pm

பாதுகாப்பு செயலாளரிடம் காத்தான்குடி சம்மேளனத் தலைவரின் கேள்வி

leave a comment »

காத்தான்குடி அபூ ரீஷா: கடந்த முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பயங்கர வாதத்தை ஒழித்து சமாதானத்தை ஏற்படுத்திய உங்களுக்கு ஏன் இந்த மர்ம மனிதர்களை கண்டு பிடிக்க முடியாமலுள்ளது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்சவிடம் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ்.சுபைர் கேள்வி எழுப்பினார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2011 at 1:06 pm

புத்தளத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை தொடர்பாக எமது விசேட ஆங்கில கட்டுரை

leave a comment »

புத்தளத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைகாரணமாக ஒரு வீதி போக்குவரத்து போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பல அதிர்வலைகளை நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிர்வலைகள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவிரோத கருத்துகளாகவும் சில இடங்களில் இனவிரோத நடத்தையாகவும் வெளிப்பட்டுள்ளது.

இந்த அசாதாரண சம்பவம் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் சக்திகளுக்கு பெரிய சந்தர்பத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதன் வெளிப்பாட்டை நாங்கள் நேற்றும் இன்றும் ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2011 at 1:35 am

புத்தளம் நகரப் பகுதியில் முழுமையாக வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன

leave a comment »

புத்தளம் நகரப் பகுதியில் முழுமையாக வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன புத்தளத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையின் போது கொல்லப்பட்ட  போலீஸ் கான்ஸ்டபிளுக்கு அனுதாபம் தெரிவித்து இந்த கடையடைப்பு இடம்பெறுகின்றது. இது தொடர்பாக புத்தளம் ஜம்இயதுல் உலமா, புத்தளம் பெரிய பள்ளி மற்றும் புத்தளம் நகரசபை, வர்த்தக சங்கம் ஆகியன புத்தளம் பெரிய பள்ளியின் ஊடாக இந்த முடிவை எடுத்துள்ளன. இது தொடர்பான அறிவிப்பு புத்தளம் நகரின் மஸ்ஜிதுகளில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கபட்டுள்ளது. என்று எமது புத்தளம் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2011 at 12:32 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers