பாதுகாப்பை பிரதேசத்தின் இளைஞர்களை கொண்டு ஏற்பாடு செய்து வருகின்றோம்
M.ரிஸ்னி முஹம்மட்: பிரதேசத்தின் பாதுகாப்பை பிரதேசத்தின் இளைஞர்களை கொண்டு ஏற்பாடு செய்து வருகின்றோம் போலீசாரை மக்கள் கண்டாள் அச்சப்படுகின்றனர் என்று மாகாண சபை உறுப்பினர் எஹ்யா ஆப்தீன் தெரிவித்தார். புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தல் கடந்த வெள்ளிகிழமை தொடக்கம் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இது புத்தளம் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் மர்ம மனிதன் தொடர்பாக அசாதாரண நிலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வடமேல் மாகாண சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எஹ்யா ஆப்தீனுடன் lankamuslim.org தொடர்பு கொண்டு இது தொடர்பாக வினவியபோது
இந்த மர்ம மனிதன் பீதி பெரிதும் நோன்புகால இரவு வணக்கங்களை பெரிதும் பாதித்துள்ளது இது தொடர்பாக நாங்கள் பிரதேசத்தின் மஸ்ஜிதுகளுக்கு சென்று அங்கு மக்களுக்கு இரவு கால இபாதத்தில் அச்சம் இன்றி ஈடுபடுமாறும் அதற்கான பாதுகாப்பை நாம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அறிவித்து வருகின்றோம். பிரதேசத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பிரதேசத்தின் இளைஞர்களை கொண்டு ஏற்பாடு செய்து வருகின்றோம் போலீசாரை மக்கள் கண்டாள் அச்சப்படுகின்றனர் என்று தெரிவித்தார் .
கிரீஸ் மனிதனுக்கு பின்னால் போலீஸ் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். நான் ஒரு அரசியல் வாதி என்பதால் என்னால் பல விடயத்தை பேசமுடியாதுள்ளது. எந்த பிரதேசத்தில் கிரீஸ் மனிதன் தேடப்பட்டாலும் அங்கு உடனடியாக போலீஸ் வந்துவிடுவதாகவும் , இந்த பிரதேசத்தில் கிரீஸ் பூதம் பெரும்பாலும் முஸ்லிம் , தமிழ் பகுதிகளில் நடமாடுவதாக பொதுமக்கள் முறைப்பாடு செய்வதாகவும் ,தினமும் ஒவ்வொரு பிரதேசத்திலும் கிரீஸ் மனிதன் வருவதான அச்சம் ஏற்படுவதாகவும் புத்தளத்தின் பல பகுதிகளில் இது தொடர்பான அச்ச நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
எந்த அச்சமும் ரமழான் கால இரவு இபாத்துகளை பாதிக்க கூடாது அதற்கு எவரும் இடம்கொடுக்க வேண்டாம் என்றும் வேண்டிகொண்டார்.
புத்தளம், கற்பிட்டி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து, கடற்படை மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது கற்பிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரினால் பெண் ஒருவர் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்து தேடுதலில் ஈடுபட்ட பிரதேச மக்கள் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒரு நபரை பிடித்து கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதன் போது தான் ஒரு போலீஸ் அதிகாரி என்று தெரிவித்துள்ளார். தாக்கப்பட்டவர் பின்னர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் பொதுமக்கள் வைத்தியசாலையினுல் புகுந்து அசம்பாவிதத்தில் ஈடுபட்டதால் அவர் சிலாபம் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பிந்திய தகவலின் படி அவர் சிலாபம் வைத்திய சாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கிரீஸ் மனிதன் என்று தெரிவிக்கப்பட்டும் போலீஸ் அதிகாரி பிரதேசத்தின் பாடசாலை ஒன்றுக்கு பரீட்சை கால பாதுகாப்புக்கு சென்றவர் என்று போலீசார் தெரிவித்துள்ளார்.
பதற்ற நிலையினை தணிக்கும் முகமாக பொலிஸ் உயரதிகாரிகள் நேற்று கற்பிட்டிக்குச் சென்று கற்பிட்டி நகரிலுள்ள மஸ்ஜிதில் மக்களுடன் கலந்துரையாடினர் என்பதும் கற்பிட்டி பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகரின் தலையீட்டால் இரவு வேளைகளில் கற்பிட்டி பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பொலிஸாரினால் உறுதியளிக்கப்பட்டது என்பதும் குறிபிடத்தக்கது.
அதேவேளை புத்தளத்தின் நகரம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் பிரதேசத்தின் இளைஞர்கள் பிரதேச பாதுகாப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். என்று எமது புத்தளம் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.










இந்த கிரீஸ் மனிதன் ஏன் அரச படை குடும்பங்களுக்கு கடிக்கவில்லை
abu
August 21, 2011 at 3:17 pm