புது டில்லியில் இருந்து எமக்கு எந்த அழைப்பும் வரவில்லை: ரவூப் ஹகீம்
M.ரிஸ்னி முஹம்மட்: இலங்கை இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் பேசுவதற்கு வருமாறு இலங்கையில் உள்ள வடக்கு கிழக்கு தமிழ்க் கட்சிகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் , நீதியமைச்சருமான ரவூப் ஹகீமை lankamuslim.org தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறான எந்த அழைப்பும் எமக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.
இலங்கை இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் பேசுவதற்கு வருமாறு இலங்கையில் உள்ள மற்ற முஸ்லிம் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அறிய முடிகின்றது. இலங்கை இனப் பிரச்சினை தீர்வு விடயத்தில் முஸ்லிம் தரப்பின் பிரதிநிதித்துவம் அவசியமானது என்பதை இந்திய பிரதமர் ஒத்துக்கொண்டுள்ளார் என்பது குறிபிடதக்கது எனினும் இந்திய பிரதமர் முஸ்லிம் தரப்பின் அவசியத்தை ஏற்றுக்கொண்டுள்ள பின்னரும் இலங்கை வரும் இந்திய ராஜதந்திரிகள் அனைத்து தமிழ் தரப்பினரையும் சந்திக்கும்போதும் முஸ்லிம் தரப்பை புறக்கணித்து வருகின்றனர்.
இனப்பிரச்சினைக்காண தீர்வு முயற்சியில் முஸ்லிம் தரப்பு உள்ளடக்கப்படாது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு தேடுதல் தோல்வியில் முடியும் என்று முஸ்லிம் தரப்பு தெரிவித்து வருகின்றது. இந்தியாவில் முன்னர் பிரதமர் ராஜீவ் காந்தி அதிகாரத்தில் இருக்கும்போது இலங்கை விடயத்தில் நேரடியாக இந்தியா தலையிட்டவேளை முஸ்லிம் தரப்பு முற்றாக புறக்கணிக்க பட்டமை வரலாறு.
அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனதவுக்கும் இடையில் கைச்சாத்தான இலங்கை இந்திய ஒப்பந்தம் முற்றாக இலங்கை முஸ்லிம்களை புறக்கணித்து மேற்கொள்ளப்பட்டது. என்பது முஸ்லிம் தரப்பு இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றது.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிதிருப்பதை புதிய சனத்தொகைக் கணிப்பு எடுத்துக் காட்டும். கிழக்கில் முஸ்லிம்களின் பரம்பல் நாற்பத்தைந்து வீதத்தை தாண்டிவிட்டது. என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் , நீதியமைச்சருமான ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளமை இங்கு குறிபிடத்தக்கது.









