Lankamuslim.org

One World One Ummah

Archive for August 18th, 2011

புது டில்லியில் இருந்து எமக்கு எந்த அழைப்பும் வரவில்லை: ரவூப் ஹகீம்

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்: இலங்கை இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் பேசுவதற்கு வருமாறு இலங்கையில் உள்ள வடக்கு கிழக்கு தமிழ்க் கட்சிகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் , நீதியமைச்சருமான ரவூப் ஹகீமை lankamuslim.org தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறான எந்த அழைப்பும் எமக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

இலங்கை இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் பேசுவதற்கு வருமாறு இலங்கையில் உள்ள மற்ற முஸ்லிம் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று  அறிய முடிகின்றது. இலங்கை இனப் பிரச்சினை தீர்வு விடயத்தில் முஸ்லிம் தரப்பின் பிரதிநிதித்துவம் அவசியமானது என்பதை இந்திய பிரதமர் ஒத்துக்கொண்டுள்ளார் என்பது குறிபிடதக்கது Read the rest of this entry »

Written by lankamuslim

August 18, 2011 at 8:17 pm

புத்தளம் நகரம் புதுப் பொலிவுடன்

leave a comment »

பவாஸ்: புத்தளம் நகர பகுதியில் சட்டவிரோத கட்டிடங்களை அடையாளம் காணும் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து முன்னெடுக்கபட்டுவருகின்றது. புத்தளம் நகர எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல இடங்களில் பொது வடிகால்களை முழுமையாக மூடி சட்டவிரோத கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது என்றும் . புத்தளம் உப்பளம் பகுதில் பிரதான நீர் வடிகாலை ஆக்கிரமித்து உப்பு வாய்கால்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் நகரசபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர். Read the rest of this entry »

Written by lankamuslim

August 18, 2011 at 4:57 pm

கரையோர பாதுகாப்பிற்கு MI-171 ரக 14 ஹெலிகொப்டர்களை

leave a comment »

யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகளை இலங்கை நெருங்கும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து திடீரென MI-171 ரக 14 ஹெலிகொப்டர்களை இலங்கை கொள்வனவு செய்துள்ளது. இது பல விடயங்களை உணர்த்துகின்றது என்று ஆய்வளர் ஒருவர் தெரிவிக்கின்றார். இதேவேளை யுத்தம் முடிவடைந்து விட்டது, புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்பதற்காக நாட்டின் பாதுகாப்பு முழுமையடைந்துவிட்டது Read the rest of this entry »

Written by lankamuslim

August 18, 2011 at 4:29 pm

கிறிஸ்பூதம் விடயத்தில் அவதானம் தேவை!

with 4 comments

முஹம்மத் ஜான்ஸின்
தற்போது நாடெங்கிலும் சூடுபிடித்துள்ள விடயமாக கிறிஸ் மனிதன் விவகாரம் உள்ளது. இந்த விடயத்தில் மக்கள் மிக நிதானமாக நடந்து கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் கிறிஸ் மனிதர்களில் உண்மையான கிறிஸ் மனிதர்கள் எனவும் திருடர்கள் எனவும் இரண்டு பிரிவுகள் உள்ளன. உண்மையான கிறிஸ் மனிதர்களின் செயற்பாடு பெண்களை காயப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதேவேளை திருடர்கள் கிறிஸ்பூத பீதியை சாதகமாகப் பயன்படுத்தி திருட்டுக்களை செய்ய முற்படுகின்றனர். இந்த வகையில் இரண்டுவகையான மனிதர்களும் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. Read the rest of this entry »

Written by lankamuslim

August 18, 2011 at 2:58 pm

திருகோணமலை பல நோக்கு கூட்டுறவுச்சங்க பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது

leave a comment »

அப்துல்சலாம் யாசீம்: திருகோணமலை பல நோக்கு கூட்டுறவுச்சங்க பணியாளர்களின் பணிப்பகிஸ்கரிப்பு இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண ஆஞனர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தையடுத்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.கூட்டுறவுச்சங்க பணியாளர்கள் தமது சம்பள உயர்வை அமுல்படுத்தக்கோரி கடந்த இரண்டு நாட்களாக பணிப்பகிஸ்கரிப்பிலும்,ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். Read the rest of this entry »

Written by lankamuslim

August 18, 2011 at 2:10 pm

புத்தளம் பிரதேசத்தல் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது

leave a comment »

பவாஸ்: புத்தளம் பிரதேசத்தல் இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புத்தளம் நகர எல்லைக்கு உட்பட்ட குவைத்  வைத்தியசாலை அமைந்துள்ள பகுதில் காணப்பட்ட நீர் நிறைந்த குழி ஒன்றிலிருந்து இன்று காலை இவரின் ஜனாஸா மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் புத்தளம் நாளாம் கட்டையை சேர்ந்த முஹம்மத் சலீம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவர் சற்று மனநிலை பாதிகப்பட்ட நிலையில் இருந்ததாகவும், Read the rest of this entry »

Written by lankamuslim

August 18, 2011 at 1:39 pm

வாகன விபத்தில் இருவர் வபாத்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ், கியாஸ் ஷாபி: நேற்று மாலை கிண்ணியாவில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்று முருங்கன் வீதியில் வைத்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டையிழந்து மரம் ஒன்றில் மோதியதால் இருவர் உயிரிழந்துள்ளனர். மன்னர் அடம்பன் பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த சின்னக் கிண்ணியாவைச் சேர்ந்த எம்.மஹ்மூது வயது 52 குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த எம்.எஸ்.சப்ராஸ்வயது 17 ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். Read the rest of this entry »

Written by lankamuslim

August 18, 2011 at 11:10 am

23 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்பு

leave a comment »

கொழும்பு மாநகரசபை, கல்முனை மாநகரசபை அடங்கலாக 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் இன்று 18 ஆம் திகதி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஏற்கப்பட உள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 17 மாநகர சபைகள் ஒரு நகர சபை மற்றும் 5 பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ளன. தேர்தலுக்காக வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகளில் பிரதான கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. Read the rest of this entry »

Written by lankamuslim

August 18, 2011 at 1:16 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers