Lankamuslim.org

One World One Ummah

Archive for August 13th, 2011

குற்றச்செயலை தடுக்கும் ,சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பும் பொலிஸுக்கு உண்டு

with one comment

குற்றச்செயலை தடுக்கும் பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது. அதே போன்று சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகின்ற பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது. இது தற்போது குறைவாக உள்ளது. பொலிஸார் அவர்களது கடமையை சீராக செய்யவேண்டும் சட்டம் ஒழுங்கு அனைவராலும் மதிக்கப்படவேண்டும்.

வெள்ளிக்கிழமை மர்ம மனிதன் அச்சுறுத்தலினால் ஏற்பட்ட கலவரத்தில் பொத்துவிலை சேர்ந்த ஒருவர் இறந்ததன் பின்னணியில் பொத்துவில் பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையைப் போக்கி அமைதியான சூழலை கொண்டுவர நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அரசியல்  கூட்டத்தில் உரையாற்றிய நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார். Video Read the rest of this entry »

Written by lankamuslim

August 13, 2011 at 11:00 pm

பொத்துவில் பிரதேசத்தில் என்ன நடைபெறுகின்றது ?

leave a comment »

அம்ஹர்: இராணுவம் சுட்டதில் கொல்லப்பட்ட அலியார் முஹம்மது மஹ்ஜுனின் ஜனாஸா நல்லடக்கத்தில் பெரும் திரளான மக்கள கலந்து கொண்டனர். ஜனாப் மஹ்ஜுனின் அவர்களின் ஜனாஸா முன்னர் குறிப்பிட்டது போல் இன்று காலை 10.00 மணியளவில் அன்னாரின் வீட்டில் தொழுகை நடாத்தப்பட்டு கொடிமரத்தடி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜனாஸாவில் அமைச்சர்களான ரவூப் ஹகீம், ஹிஸ்புல்லா, அதாஉல்லா, சிரேஷ்ட அமைச்சர் பொளசி, மற்றும் பாராளுமன்ற உறுபினர் பைஸல்காசிம், ஆகியோரும் உள்ளூர் அரசியல் வாதிகளான அப்துல் வாசித், முஹமத் ஜமீல், ஜவாத், மாஹிர், உவைஸ் கலந்து கொண்டனர், மிகவும் உணர்வுபூர்வமாக ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 13, 2011 at 6:30 pm

இழப்புகளுடன் தொடரும் மர்மம்

leave a comment »

 சில தினங்களுக்கு முன்னர் அப்புத்தளை தொட்டலாகல தோட்டத்தில் வைத்து  மர்ம மனிதர்கள் என்று கருதிகொலைசெய்யப்பட்ட இருவரும் அப்பாவி வர்த்தகர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. தாங்கள் அப்பாவிகள் என்பதை அவர்கள் தமிழிலும் ,சிங்களத்திலும் கூறி மன்றாடிய நிலையலும் கோபம் கொண்ட பொதுமக்களினால் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

August 13, 2011 at 1:55 pm

தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாடு

leave a comment »

அக்கரைப்பற்றை தளமாக கொண்டு இயங்கும் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியின் வருடாந்த பேராளர் மாநாடு நடைபெறவுள்ளது. காங்கிரஸின் 2011 ஆம் ஆண்டுக்கான பேராளர் மாநாடு, நாடு தழுவிய சுமார் 2000 க்கும் மேற்பட்ட பேராளர்களின் பங்குபற்றுதலுடன் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3.45 மணி தொடக்கம் 6:00 மணி வரை நடைபெறவுள்ளது என்று அறிவிகபட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 13, 2011 at 10:17 am

வவுனியா பட்டானிசூர் காணி முஸ்லிம்களுக்கு சொந்தமானது :அமைச்சர் ரிஷாத்

with one comment

M.ரிஸ்னி முஹம்மட்: வவுனியா நகர சபைக்கு சொந்தமான குமரன்காட்டுப் பகுதியில் இந்துக் கோவிலுக்கு அருகில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், நகர சபையின் அனுமதி இன்றி இராணுவத்தின் உதவியுடன் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணித்து வருவதா வெளியான செய்திகளை வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மறுத்தார்.

மேற்படி குற்றசாட்டு தொடர்பாக அவரை lankamuslim.org தொடர்பு கொண்டபோது அங்கு பள்ளி வாசல் கட்டப்படவில்லை ஒரு கலாச்சார மண்டபமும் ஒரு கடைத் தொகுதியும் நிர்மானிக்கப்படுகின்றது. அந்த காணி முஸ்லிம்களுக்கு சொந்தமானது. முன்னர் அந்த காணியின் ஒரு பகுதி முஸ்லிம்களால் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வழங்கப்பட்ட கணியில்தான் தற்போது கோவிலும் கடைத் தொகுதியும் கட்டப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 13, 2011 at 7:15 am

ஏறாவூரில் நேற்று 21 வது ஆண்டு ஷுஹதாக்கள் நினைவு தினம் அனுஷ்டிப்பு

leave a comment »

ஜூ .எம்.பஹத் : ஏறாவூரில் நேற்று 21 வது ஆண்டு நினைவு கூறுகின்ற ஷுஹதாக்கள் தின நிகழ்வு இடம்பெற்றது. 1990ம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் நடாத்திய இரு கிராமங்கள் மீதான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகயில் ஒரே இரவில் 116 பேர் கொல்லபட்டனர் . இருநூறு பேருக்கு மேல் காயமடைந்தனர். இந்த கொடூரத்தை நேற்று வெள்ளிக்கிழமை 12.08.2011 அன்று நினைவு கூறும் முகமாக Read the rest of this entry »

Written by lankamuslim

August 13, 2011 at 6:00 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers