Archive for August 12th, 2011
பொத்துவில் பிரதேசத்தில் ஒருவர் வபாத் ஊரடங்கு அமுலில்
பொத்துவில் பிரதேசத்தில் அசாதாரண நிலைமையின் போது இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் வபாத்தாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். அலியார் முஹம்மது மஹ்ஜுன் என்பரே வபாதானவர் ஆவார் என்று அறிவிக்கபட்டுள்ளது.
அதேவேளை துப்பாக்கிச் சூட்டின் காரணமாகஒருவர் கொல்லப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைத் தொடர்ந்து பொத்துவில், திருக்கோவில் போலீஸ் பிரிவுகளில் இன்று மாலை தொடக்கம் நாளை காலை6.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.Video Read the rest of this entry »
சிறுபான்மை இனமக்கள் கடும் பீதி- நீதியமைச்சர் ஹக்கீம்
நாட்டின் பல மாவட்டங்களிலும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் பீதியடைந்திருப்பதாகவும், அவர்கள் மத்தியில் பதற்றம் நிலவுவதாகவும், சிலர் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அத்தகையோரின் நடமாட்டத்தை தடுத்து நிறுத்த அவசர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோனிடம் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
வவுனியா பட்டானிசூர் முஸ்லிம் மையவாடி கட்டட விவகாரம் தொடர்பாக உண்ணாவிரதம்
ஏ. அப்துல்லாஹ்: எங்கள் விடுதலை போராட்டம் இன்னும் ஓயவில்லை. எமது விடுதலை வீச்சு அதன் தாகம் குறையவில்லை. 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரமறவர்களின் தியாகங்களையும் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் உயிர் இழப்புக்களும் வீண் போகாது என்ற அடிப்படையில் தான் நாம் ஜனநாயகப் போராளியாக இந்த தேசத்தின் விடுதலைக்காக போராடுகின்றோம். என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உப தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்துள்ளார் Read the rest of this entry »
பொத்துவில்லிலும் பதட்டம் மற்றும் ஹர்த்தால், ஊரடங்கு உத்தரவு
அம்ஹர்: பொத்துவில் கே.பி.எம் முதலாம் குறுக்குத் தெருவில் வசிக்கும் இளம் பெண்னொருவரை கிரீஸ் மனிதன் என்று சந்தேகிக்கப்படும் நபர் தாக்கிவிட்டு தப்பித்துச் சென்ற சம்பவம் நேற்று இரவு சமார் 9.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் விசாரணை மேற் கொள்ள வந்த பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியள்ளது. Read the rest of this entry »
உக்குவளையில் நீர்விநியோகம் தடைப்பட்டுள்ளதால் மக்கள் பாரிய கஷ்டத்தில்
அஸ்லம்: மாத்தளை உக்குவளை பிரதேசத்தில் பல பகுதிகளில் கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக நீர்விநியோகம் இடம்பெறாமையால், மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். நீருக்காக முழுமையாக குழாய் நீர்விநியோக முறையில் தங்கிருக்கும் இந்த பிரதேச மக்களில் பெரும்பாலானவர்கள் பெரும் பாதிப்புக்கு உட்பட்டுள்ளனர். Read the rest of this entry »
கிரீஸ் மனிதர்களின் அட்டகாசமும் சிவில் சமூக அவதானமும்….!
இனாமுல்லாஹ்: கடந்த பல தினங்களாக நாட்டின் பல பாகங்களிலும் கிரீஸ் மனிதர்களின்
அட்டகாசம் அதிகரித்து வந்துள்ளமையால் மக்கள் பீதியும் அச்சமும் கொண்டுள்ளனர்,
குறிப்பாக மாதர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப் படும் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ள அதே வேளை பாது காப்பு தரப் பினரால் காத்திரமான் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப் படாமையும் , கைது செய்யப்படுபவர்கள் மன நிலை பாதிக்கப் பட்டவர்கள் என விடுதலை செய்யப்படுவதும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் நம்பிக்கையீனத்தையும் உண்டாக்கியுள்ளது. Read the rest of this entry »
தம்பலாகம விபத்தில் சிறுவன் வபாத்
கியாஸ் ஷாபி: தம்பலாகமம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றிலிருநது கந்தளாய் நோக்கிப் பயணித்த பஸ் வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 15 வயதுச் சிறுவன் உயிரிழந்ததுடன் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இன்று காலை 25 பெண் ஊழியர்களுடன் குறித்த பஸ் கந்தளாய் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது 85 வது மைல் கல்லில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது Read the rest of this entry »
மர்ம மனிதன் சம்மாந்துறையில் நடந்தது என்ன?
நேற்று இரவு மர்ம மனிதர்கள் என்று சந்தேகிக்கபடும் இருவரை சம்மாந்துறை பொதுமக்கள் துரத்தி சென்றபோது அவர்கள் சம்மாந்துறைபோலீஸ் நிலையத்தினுள் இதை தொடர்ந்து பொது மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது இது தொடர்பாக சம்மாந்துறைடிகே வழங்கியுள்ள தகவலை இங்கு தருகின்றோம்.
எவியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள கோரக்கோயில் பிரதேசத்தில் பெண்ணொருவர் குளித்துக்கொண்டு இருந்திருக்கிறார். இரவுவேளையில் அவ்விடத்திற்கு மர்மமான முறையில் வந்த இருவர் அப்பெண்மீது சேஷ்டையில் ஈடுபட்டுள்ளனர். Read the rest of this entry »
வாழைச்சேனை மர்ம மனிதனை இஸ்லாமிய நீதிமன்றத்தில் ஒப்படைக்க கோரி ஆர்பாட்டம் செய்தார்களா ?
கிறிஸ் மனிதன் தொடர்பாக விளக்கமளித்துள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர வாழைச்சேனையில் மர்ம மனிதனை இஸ்லாமிய நீதிமன்றத்தில் ஒப்படைக்க கோரி பொலிசாருக்கு எதிராக வாழைச்சேனை மக்கள் ஆர்பாட்டம் செய்தார்கள் என்று தெரிவித்துள்ளார்என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் அவர் தெரிவித்துள்ளத்தில் கிறிஸ் மனிதன் என்ற வதந்தி திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. Read the rest of this entry »
முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டி வரும் அமைச்சர் ரிஷாத்; பசில் ராஜபக்ஷ
அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது தாமும் ஒரு இடம்பெயர்ந்தவராக இருந்த போதும் தமது குறிக்கோள்களுக்கோ தமது சமூகத்துக்கோ முக்கியத்துவம் கொடுக்காமல் தமிழ் மக்களை மீள் குடியேற்றுவதில் கூடிய கவனம் செலுத்திய பிறர்நலம் பேனும் ஒருவர் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ புகழாரம் சூடினார். Read the rest of this entry »







