யாழ்.மாநகர சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் தொடர்ந்தும் சபை பகிஷ்கரிப்பு
இஷாக்: யாழ்.மாநகர சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் மாநகர சபை அமர்வை தொடர்ந்தும் பகிஷ்கரித்து வருகின்றனர். கடந்த மாதம் ஜூலை 28 ஆம் திகதி மூன்று கோரிக்கைகள் அடங்கிய விசேட கவனயீர்ப்பு பிரரேரணையினை முன்வைத்து வெளியேறிசென்றனர். இருந்தும் இது வரையிலும் முன்வைக்கப்பட்டகோரிக்கைகள் தொடர்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர்கள் தமது பகிஷ்கரிப்பை தொடர்ந்து வருகின்றனர்.
யாழ்பாணத்தில் மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்கென தனியான கொள்கை அமுலாக்கப்பட வேண்டும், யாழ். பிரதேச செயலரின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் அல்லது குறித்த பிரதேச செயலரை மாற்றவேண்டும், முஸ்லிம்களின் விவகாரத்திற்கு என முஸ்லிம் கிராம சேவையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். என யாழ். மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்கள் மூன்று அம்சக் கோரிக்கையை அடங்கிய சிறப்பு அறிக்கையொன்றை முன்வைத்து சபையில் இருந்து வெளியேறினர் .
மாநகர சபையின் கூட்டத் தொடர் ஆரம்பத்தில் யாழ்.முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றத்தின் தடைகள் குறித்து கவனயீர்ப்பு பிரேரணையை யாழ். மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டு சபையில் விவாதிக்கப்பட்டது. யாழ். மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்களின் கவனயீர்ப்பு பிரரேரணையினை வரவேற்று ஆளும் தரப்பினரும் எதிர்கட்சி உறுப்பினர்களும் கருத்து வெளியிட்டனர். என்பது குறிபிடதக்கது.
அதேவேளை நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முஸ்லிம்களை யாழ்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் ஒருவர் துரத்துவதாகவும் , புத்தளத்தில் வசிக்கும் இந்த மக்கள் மீள குடியேற போகும்போது ஏன் இங்கு வருகின்றீர்கள் ? என்று கேள்வி எழுப்புவதாகவும்.
வவுனியாவில் நகரசபையில் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடமாகாண முஸ்லிம்களின் நலனுக்கான சில முன்மொழிவுகளை அவர்கள் நிராகரித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது . புலிகளினால் வடமாகாணத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றாமல் தேசிய இனபிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான எமது முந்திய செய்தி:









