Lankamuslim.org

One World One Ummah

Archive for August 2011

புத்தளத்தில் ”போட்ட உப்பு கூடிவிட்டது”

with 8 comments

புத்தளத்தில் வழமை போன்று ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் கொத்பா பிரசங்கமும் புத்தளம் ஸாஹிரா தேசியப் பாடசாலை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு பெரும்திரளான மக்கள் தமது குடும்பத்துடன் பங்குகொண்டனர். இன்று காலை 6.30 மணிக்கு தொழுகை ஆரம்பமான தொழுகை மற்றும் கொத்பா பிரசங்கத்தை அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் நடத்தியுள்ளார்கள். Read the rest of this entry »

Written by lankamuslim

August 31, 2011 at 11:05 am

உலகின் பல்வேறு நகரங்களில் பெருநாள் தொழுகை

leave a comment »

முஸ்லிம்கள  ரமழான் பெருநாள் தொழுகையை உலகின் பல்வேறு நகரங்களில் மேற்கொண்டனர் அவற்றின் சில வற்றை BBC Tamil படங்களாக தமது இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளது. அந்த BBC பதிவு செய்த முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடும் காட்சிகளை பார்பதற்கு இங்கு கிளிக் செய்யவும் படங்கள்

Written by lankamuslim

August 31, 2011 at 1:34 am

ஜனாதிபதியின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்து

with one comment

இஸ்லாமிய மார்க்கத்தில் மேன்மைமிகு மாதமான ரமழான் மாதத்தின் பூர்த்தியின் பின்னர் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. புனித அல்குர்ஆனினதும் இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளை முழுமையாகப் பின்பற்றி ஒரு முக்கியமான இஸ்லாமிய கடமையை ஒரு மாதகாலமாக நிறைவேற்றியதன் பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் உலகெங்கிலுமுள்ள தமது சகோதரர் முஸ்லிம்களோடு மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்ளும் நாள் இதுவாகும். Read the rest of this entry »

Written by lankamuslim

August 31, 2011 at 1:12 am

நாளை இலங்கையில் ஈதுல் பிதுர் பெருநாள்

with 2 comments

ஹிஜிரி 1432 புனித ஷவ்வால் மாதத்தின் தலைபிறை இன்று நாட்டின் பல பகுதிகள் தென்பட்டதை அடுத்து நாளை ஈதுல் பிதுர் நோன்புப் பெருநாளை கொண்டாது மாறு அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் என்பன அறிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 30, 2011 at 7:10 pm

நாளை துபானசாலைகள் யாவும் மூடப்படும்

leave a comment »

நாளைய தினம் அனைத்து மதுபானசாலைகளை மூடுவதற்கு கலால்வரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. ரமழான் நோன்பு பெருநாளை முன்னிட்டு நாளையத தினம் அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக திணைக்கள அதிகாரி பிரசாத் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 30, 2011 at 6:55 pm

அனைவருக்கும் ஈதுல் பித்ர் நேன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

with 5 comments

ஈதுல் பித்ர் நேன்பு பெருநாள் வாழ்த்துக்கள் உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்கள் ஒரு மாதகாலம் அல்லாஹ்வுக்காக நோன்பிருந்து நோன்பு கற்பித்த பயிற்சிகளை பெற்றவர்களாக ஈதுல் பித்ர் நேன்பு பெருநாளை கொண்டாடியும் கொண்டாடவும் தயாராகி வருகின்றனர். இந்த மகிழ்சிகரமான வேளையில் எமது குழுமம் உங்கள் அனைவருக்கும் ஈதுல் பித்ர் நேன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 30, 2011 at 2:21 pm

மிருக பலிக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

with one comment

BBC Tamil : இலங்கையில் சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் வரும் 13ம் திகதியன்று நடைபெறவுள்ள மிருக பலி பூஜைக்கு உடனடியாக தடை விதிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நிராகரிக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பான பிரதான மனு மீதான விசாரணையை அக்டோபர் 14ம் திகதிவரை ஒத்தி வைப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 30, 2011 at 12:55 pm

வடமாகாண முஸ்லிம்கள் பிரச்சினைகளும் எதிர்காலமும் கட்டுரையின் தவறுகள் திருத்தப்பட வேண்டும்.

with 2 comments

முஹம்மத் சரீப்
இடம்பெயர்ந்த வடமாகாண முஸ்லிம்கள் பிரச்சினைகளும் எதிர்காலமும் என்ற தலைப்பில் எம்.சி.எம். இக்பால் அவர்களும் கலாநிதி ஏ.ஆர்.எம். இம்தியாஸ் அவர்களும் சேர்ந்து ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி இனைணத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த முயற்சி பாராட்டப்படக் கூடியதாக இருந்தாலும் இந்த அறிக்கையில் சில முக்கியமான விடயங்களில் தவறுகள் விடப்பட்டுள்ளன.

முதலாவதாக முஸ்லிம்களை வெளியேற்றியதற்கான காரணம் கொழும்புடன் வியாபாரத் தொடர்புகளை கொண்டுள்ள முஸ்லிம்கள் இராணுவத்துக்கு தகவல் கொடுப்பவர்களாகவும் அல்லது இராணுவத் Read the rest of this entry »

Written by lankamuslim

August 30, 2011 at 12:16 am

பெருநாள் பிறை பார்த்து அறிவிக்குமாறு வேண்டுகோள்

leave a comment »

ரமழான் பெருநாளை தீர்மானிக்கும் ஹிஜ்ரி – 1432 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் கூட்டம் நாளை -30.08.2011- செவ்வாய்க்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. நோன்புப் பெருநாளை தீர்மானிக்கும் வகையில் அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.19 மணி தொடக்கம் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு கேட்கப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

August 29, 2011 at 11:06 am

ஜிஹாத் என்ற பிரசாரத்தில் உண்மையில்லை : கோட்டாபய

leave a comment »

மர்ம மனிதர்கள் எதிர்ப்பு நடவடிக்கையின் பின்னணியில் அடிப்படைவாத  ஜிஹாத் அமைப்புகள் இருப்பதாக தெரிவிக்கும் பிரசாரத்தில் உண்மையில்லை என்று பாதுகாப்பு செயலாளர்  கோட்டாபய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ஜம்இயதுல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள்  பாதுகாப்பு செயலாளரை   சந்தித்து கலந்துரையாடிய போது சில ஊடகங்கள் முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற சில சம்பவங்களின் பின்னணியில் ஜிஹாத்,  அல் கைதா அமைப்புகள் இருப்பதாக குற்றஞ்சாட்டுவது குறித்து வினவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 28, 2011 at 10:43 pm

சர்வதேச இயக்கமாக பரிமாணம் பெரும் ”நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்”

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இலங்கை வடக்கு கிழக்கு  தமிழர்களை கொண்ட புலம்பெயர் அமைப்பு முழு சர்வதேச தமிழர்களையும் உள்வாங்கிய அமைப்பாக பரிமாணம் பெறுகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரில் ருத்ரகுமாரன் தலைமையில் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு தனிநாடு ஒன்றை உருவாக்கும் நோக்கம் கருதி உருவாக்கப்பட்ட அமைப்பு தன்னை பரந்த சர்வதேச இயக்கமாக கட்டமைக்கத் தீர்மானித்துள்ளது.

கடந்த 2009 ஆம்  ஆண்டு முள்ளிவாய்காலில் புலிகளின் ஆயுத போராட்டம் அழிவுக்கு வந்த பின்னர் புலம்பெயர் நாடுகளில் இருந்த புலிகளினால் இலங்கை வடக்கு கிழக்கு தமிழர்களை மட்டும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு Video Read the rest of this entry »

Written by lankamuslim

August 28, 2011 at 2:27 pm

தேசிய புலனாய்வு பிரிவின் கண்காணிப்பில் முக்கிய அமைச்சர்கள்

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்: ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செல்வாக்கு மிக்க அமைச்சர்களான மின்சக்தி அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தருமான சம்பிக்க ரணவக்க மற்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் -The Patriotic National Movement (PNM)- முக்கிய உறுப்பினரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ ஆகியோர் நாட்டின் தேசிய புலனாய்வு பிரிவினால் – The State Intelligence Service (SIS)-  மிகவும் நெருக்கமாக கண்காணிக்க பட்டு வருவதாக தேசிய புலனாய்வு பிரிவின் முக்கிய முலங்களை ஆதாரமாக கொண்டு தி சண்டே லீடர் செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட இருவரும் அரசின் அங்கமாகவும் முக்கிய செல்வாக்குள்ள அமைச்சர்களாகவும் இருந்தபோதும் அண்மைகாலமாக வெளியிட்டுள்ள அறிக்கைகள் அரசுக்கு எதிரான விமர்சனங்களை கொண்டிருந்தமை குறிபிடத்தக்கது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 28, 2011 at 2:34 am

கொழும்பு மாநகர சபையை கைப்பற்றும் பலப் பரீட்சையில் பிரதான கட்சிகள்

with 2 comments

ஒக்டோபர் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் கொழும்பு மாநகர சபையை எந்தக் கட்சி கைப்பற்றும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. நீண்ட காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழிருந்துவரும் இச்சபையைக் கைப்பற்ற இம்முறை என்றுமில்லாதவாறு கட்சிகள் பலவும் களத்தில் கங்கணம்கட்டி இறங்கியுள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக Read the rest of this entry »

Written by lankamuslim

August 28, 2011 at 1:42 am

இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாறிவிட்டனராம்

leave a comment »

இலங்கையில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் இன்று பயங்கரவாதிகளாக மாறிவிட்டனர் என்றும் இதனால் இலங்கைக்கு பாதுகாப்புப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் சிங்கள ராவய என்ற பௌத்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 27, 2011 at 3:15 am

அசாதாரண நிலை, ஜம்இயதுல் உலமாவுக்கு புதிய சவால்

leave a comment »

முஸ்லிம் பகுதிகளில் நிலவிய அசாதாரண நிலைதொடர்பாக மீடியாக்களில் பல இனவாத சிந்தனையை தூண்டிவிடும் கருத்துகளும் உண்மைக்கு புறம்பான கருத்துகளும் அவற்றில் மர்ம மனிதன் நாடகம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் உருவாக்கப் பட்ட அரசுக்கு எதிரான சதியென்றும். பாதுகாப்பு படையினருக்கு எதிரான தாக்குதல்கள் அடிப்படைவாதிகளினால் ஒழுங்கு படுத்தப்படுகின்றது என்றும் மஸ்ஜித்துகள் இந்த கலவரங்களை வழிகாட்டுகின்றது. என்றும் சில ஊடகங்கள் செய்திகளை பதிவு செய்ய. Read the rest of this entry »

Written by lankamuslim

August 27, 2011 at 12:31 am

மரண தண்டனையை தடுத்து நிறுத்துமாறு வழக்கு

leave a comment »

இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்தமைக்காக மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட , முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்குத்தண்டனையை தடுத்து நிறுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படவுள்ளது என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றது. இந்திய தேசத்தின் பிரதமரை, இந்திய தேசத்தின் தேசத்தலைவரை படுகொலை செய்தமைக்காக தமிழ் நாட்டின் தமிழ் பற்றாளர்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

August 26, 2011 at 5:12 pm

பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு மரண தண்டனை

leave a comment »

அங்குலான இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய அங்குலான முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி அடங்கலான நான்கு பொலிஸாருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இதைவிடவும் நான்கு குற்றவாளிகளுக்கும் தலா 40 வருட சிறைத் தண்டனையும் தலா ஒரு இலட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது. இத் தீர்ப்பு ட்ரயல் அட்பார் விசாரணை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 26, 2011 at 4:37 pm

கிழக்கில் சந்திப்பு இடம்பெற்றது

leave a comment »

கிழக்கு மாகாண புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜென்ரல் லால் பெரேரா கடந்த 25 ஆம்திகதி கிழக்கு மாகாண முஸ்லிம் சமூக பிரதிநிதிகளை சந்தித்து நிலவிவரும் அசாதாரண நிலை தொடர்பில் கலந்துரையாதியுள்ளார். கிழக்கு மாகாண இராணுவ தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜென்ரல் போனிபேஸ் பெரேரா சீனாவுக்கு உயர்கல்விக்காக செல்லவுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 26, 2011 at 12:43 pm

கண்டியில் மாணவர் சுட்டுக் கொலை

leave a comment »

கண்டி மாவட்டம் குருந்தெனிய என்ற பகுதியில் மாணவன் ஒருவன் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட மாணவர் 16 வயதுடைய கண்டி தர்மராஜ கல்லூரி மாணவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. மர்ம மனிதன் அல்லது திருடன் தமது பகுதிக்குள் புகுந்துள்ளதாக அயலவர்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

August 26, 2011 at 11:28 am

புத்தளத்தில் 30 பேர் கைது

leave a comment »

புத்தளம் பிரதேசத்தில் ஏற்பட்ட மர்ம மனிதன் தொடர்பான அசாதாரண நிலையின் போது பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் கொல்ல்பாட்டார் இதனுடன் தொடர்பு பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் கான்ஸ்டபில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 26, 2011 at 11:12 am

கிண்ணியாவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் கட்டம் கட்டமாக அகற்றப் படுவர்

leave a comment »

கிண்ணியா பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை கட்டம் கட்டமாக அகற்ற நவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ நேற்று முன்தினம் புதன்கிழமை உறுதியளித்தார் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 26, 2011 at 8:32 am

ஒழிந்தது அவசரகாலச் சட்டம் , புதிய சூழலுக்குல் இலங்கை மக்கள்

leave a comment »

பல சதாப்தங்களாக நாட்டில் இருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பிரேரணை ஒன்றை ஜனாதிபதி பாராளுமன்றில் முன்வைத்துள்ளார். இதனடிப்படையில் நாட்டில் இதுவரை காலமும் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம் நீக்கப்படுகிறது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 25, 2011 at 2:48 pm

கொழும்பு மாநகர சபைக்கு முஸம்மிலும் , மிலிந்தவும் பிரதான கட்சிகளின் முதன்மை வேட்பாளர்கள்

leave a comment »

கொழும்பு மாநகர சபையின், ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகர முதல்வர் வேட்பாளராக, ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவாகியுள்ளார்.  ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரிவினர் இம்தியாஸ் பாகீர் மாக்காரை முதன்மை வேட்பாளராக நியமிக்குமாரு கோரிய போதும் அவர் தெரிவுக்கு அழைக்கப்படவில்லை.  அதேவேளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலி்ல் கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்நிதிர முன்னனியின் மாநகர முதல்வர் வேட்பாளராக மிலிந்த மொரகொட தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 25, 2011 at 12:47 pm

யாழ்.முஸ்லிம்கள் பிரச்சினைகளுக்கும் உரிய வகையில் தீர்வு காணப்படும் !

with one comment

இஷாக்: மனக்கசப்புகளுக்கும் காழ்ப்புணர்வுகளுக்கும் இடங்கொடுக்காமல் யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களது பிரச்சினைகளுக்கும் உரிய வகையில் தீர்வு காணப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற முஸ்லிம் தரப்பு பிரதிநிதிகளுடனான படங்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

August 25, 2011 at 11:31 am

ஜனாதிபதி பாராளுமன்றில் விசேட உரை !

leave a comment »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று பாராளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார். இதன் போது அவசரகால சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பை மேற்கொள்வார் என இந்தியாவை தளமாக கொண்டு இயங்கும் த இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 25, 2011 at 11:04 am

புதிய கிழக்கு மாகாண இராணுவ தளபதி நாளை முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்கின்றார்

leave a comment »

காத்தான்குடி அபூ ரீஷா: கிழக்கு மாகாண இராணுவ புதிய தளபதியாக  மேஜர் ஜென்ரல் லால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை 25.8.2011-கிழக்கு மாகாண முஸ்லிம் சமூக பிரதிநிதிகளை சந்தித்து நிலவிவரும் அசாதாரண நிலை தொடர்பில் கலந்துரையாடவுள்ளார். கிழக்கு மாகாண இராணுவ தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜென்ரல் போனிபேஸ் பெரேரா சீனாவுக்கு உயர்கல்விக்காக செல்லவுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2011 at 10:54 pm

ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி தடுத்து நிறுத்தபட்டுள்ளது

with one comment

வடமத்திய மாகாணமான அனுராதபுரம் மாவட்டத்தின் இன்று நொச்சியாகம பிரதேசத்தின் புத்தளம் – அநுராதப்புரம் பிரதான வீதியை மறித்தும் டயர்களை எரித்தும் பிரதேச பெரும்பான்மையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அங்கு பதட்டம் நிலவியுள்ளது புத்தளத்தில் இடம்பெற்ற அசாதாரண நிலையின்போது கொல்லப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் அனுராதபுரம் நொச்சியாகம ஜெயபிமை கிராமத்தை சேர்ந்தவர் என்பது குறிபிடத்தக்கது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2011 at 8:41 pm

முஸ்லிம் சமூகத்தில் அசாதாரண நிலை தொடர்பான சில அவதானங்கள்

with 16 comments

M.ஷாமில் முஹம்மட்
மர்ம மனிதர்கள் என்ற விடயம் முஸ்லிம் சமூகத்தின் மீது பெரிய தாகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்படுத்தி வருகின்றது. இந்த மர்ம மனிதர்கள் விவகாரம் திட்டமிட்ட ஒரு நடவடிக்கையா ? இல்லையா ?  திட்டமிடப்பட்ட நடவடிகையானால் யாருடைய திட்டமிடல் ? அரசாங்கத்தினுடையதா ? அல்லது அரசுடன் இருக்கும் இனவாத சக்திகளுடையதா ? அல்லது அரசு கூறுவது போன்று மேற்கு  நாடுகளின் சதியா ? அல்லது புலிகளின் பின்னணி கொண்டதா ? போன்ற எம்முன் தோன்றும் கோள்விகளுக்கு பதில் கண்டுகொள்வது இலகுவானதாக இல்லை காரணம் எதற்கும் போதுமான ஆதாரங்கள் இல்லை. Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2011 at 4:51 pm

மஹர மஸ்ஜித் மீது தாக்குதல் முயற்சி ஜனாதிபதி உடனடி விசாரணைக்கு உத்தரவு

leave a comment »

மேல் மாகாணத்தில் மஹர பிரதேசத்தில் மஹர சிறைச்சாலைக்கு வெளியே அமைந்துள்ள மஸ்ஜித் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு உரிய நேரத்தில் கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அவர் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்துள்ளார். மஹர மஸ்ஜித் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். அண்மைகாலமாக குறிபிடும் படியான அச்சுறுத்தல் அவதானிக்கப் பட்டு வந்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2011 at 1:23 pm

பாதுகாப்பு செயலாளரிடம் காத்தான்குடி சம்மேளனத் தலைவரின் கேள்வி

leave a comment »

காத்தான்குடி அபூ ரீஷா: கடந்த முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பயங்கர வாதத்தை ஒழித்து சமாதானத்தை ஏற்படுத்திய உங்களுக்கு ஏன் இந்த மர்ம மனிதர்களை கண்டு பிடிக்க முடியாமலுள்ளது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்சவிடம் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ்.சுபைர் கேள்வி எழுப்பினார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2011 at 1:06 pm

புத்தளத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை தொடர்பாக எமது விசேட ஆங்கில கட்டுரை

leave a comment »

புத்தளத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைகாரணமாக ஒரு வீதி போக்குவரத்து போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பல அதிர்வலைகளை நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிர்வலைகள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவிரோத கருத்துகளாகவும் சில இடங்களில் இனவிரோத நடத்தையாகவும் வெளிப்பட்டுள்ளது.

இந்த அசாதாரண சம்பவம் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் சக்திகளுக்கு பெரிய சந்தர்பத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதன் வெளிப்பாட்டை நாங்கள் நேற்றும் இன்றும் ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2011 at 1:35 am

புத்தளம் நகரப் பகுதியில் முழுமையாக வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன

leave a comment »

புத்தளம் நகரப் பகுதியில் முழுமையாக வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன புத்தளத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையின் போது கொல்லப்பட்ட  போலீஸ் கான்ஸ்டபிளுக்கு அனுதாபம் தெரிவித்து இந்த கடையடைப்பு இடம்பெறுகின்றது. இது தொடர்பாக புத்தளம் ஜம்இயதுல் உலமா, புத்தளம் பெரிய பள்ளி மற்றும் புத்தளம் நகரசபை, வர்த்தக சங்கம் ஆகியன புத்தளம் பெரிய பள்ளியின் ஊடாக இந்த முடிவை எடுத்துள்ளன. இது தொடர்பான அறிவிப்பு புத்தளம் நகரின் மஸ்ஜிதுகளில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கபட்டுள்ளது. என்று எமது புத்தளம் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2011 at 12:32 am

சட்டத்தை எவரும் கையிலெடுக்க அனுமதிக்க போவதில்லை முஸ்லிம் பிரதிநிதிகள் மத்தியில்: கோட்டாபய

with 3 comments

அகில இலங்கை ஜம்இயதுல் உலமா மற்றும் தற்போது மர்ம மனிதன் தொடர்பாக பிரச்சினைகள் எழுந்துள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கண்டி, குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பிரதான மஸ்ஜித்களின் பிரதிநிதிகளை இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ்வை சந்தித்தித்துள்ளனர். பாதுகாப்புச் செயலாளரின் ஏற்பாட்டில் விசேட விமாங்கள் மூலம் அழைத்து வரப்பட்ட இவர்கள் பாதுகாப்பு அமைச்சில் ஏற்பாடு செய்யபட்டிருந்த மாநட்டில் பங்கு கொண்டுள்ளனர்.படங்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

August 23, 2011 at 8:40 pm

புத்தளம் நகரில் கொல்லப்பட்ட போலிஸ் அதிகாரிக்கு அனுதாபம் தெரிவித்து வெள்ளைக்கொடிகள்

with 2 comments

நேற்று முன்தினம் இரவு புத்தளம் நகரில் கொல்லப்பட்ட போக்குவரத்து போலிஸ் அதிகாரிக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இன்று புத்தளம் நகரில் வெள்ளைக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதாக எமது lankamuslim.org செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு புத்தளம் பெரியபள்ளி வாசலில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில்  போலிஸ் அதிகாரி படுகொலை வன்மையாக கண்டிக்கப்பட்டதுடன், நகரில் வெள்ளை கோடி பறக்கவிடப்பட வேண்டுமெனவும், கொல்லப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிளின் குடும்பத்திற்கு புத்தளம் நகரின் மூலம் நஷ்டஈடு வழங்கப் வேண்டும் தீர்மானிக்கப்பட்டது.படங்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

August 23, 2011 at 3:17 pm

நொச்சியாகமயில் பதட்டம்

leave a comment »

வடமத்திய மாகாணமான அனுராதபுரம் மாவட்டத்தின் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியான நொச்சியாகம கிராமத்தில் நேற்று பகல் முதல் பதற்றம் நிலவி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு முஸ்லிம் கொலனி எனும் கிராமத்தில் வீடு ஒன்றின் மீது  தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read the rest of this entry »

Written by lankamuslim

August 23, 2011 at 2:50 pm

புத்தளம் நகரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

leave a comment »

சற்று முன்னர் புத்தளம் நகரில் ஒருவர் போலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். புத்தளம் நகர் பஸ் ஸ்டான் வீதியில் தொலைத்தொடர்பு கடை ஒன்றை நடாத்திவரும் காலித் என்ற நபர் பொலிஸாரினால் அடித்து இழுத்து செல்லப்பட்டுள்ளார் என்று எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். புத்தளம் நகரில் இன்று இராணுவம் ,மற்றும் பொலிசாரும் ஈடுபட்டுள்ளனர் கூட்டமாக நிற்பவர்கள் போலீசாரினால் தாக்கப் படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 23, 2011 at 2:26 pm

நாட்டின் அசாதாரண நிலை தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுடன் சந்திப்பு

leave a comment »

நாட்டில் மர்ம மனிதர்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பாக ரமழான் காலப்பகுதியில் மர்ம மனிதர்கள் பிரச்சினையால் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஆகியன சந்தித்து விரிவாக விவாதித்துள்ளது. இந்த சாதிப்பு பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செயப்பட்டுள்ளது. இதன்போது பிரச்சினைகளை  எதிர்கொள்ளும் மாவட்டங்களின் மஸ்ஜிதுகளுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 23, 2011 at 10:31 am

மர்ம மனிதர்கள் விவகாரத்தின் பின்னணி மற்றும் உண்மைகள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும்

with 5 comments

மர்ம மனிதர்கள் விவகாரத்தின் பின்னணி மற்றும் உண்மைகள் விரைவில் வெளிச்சத்திற்கு வருமெனவும் மர்ம மனிதர்கள் விவகாரம் பொது மக்கள் மத்தியில் பூதாகரமாக பரவுவதில் ஊடகங்களின் பங்களிப்பு கணிசமானதாகுமென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 23, 2011 at 5:56 am

ஆஸாத் சாலி, உமர் காமில் கொழும்பு மாநகர சபைக்கான வேட்பாளர்களாக தெரிவு செய்யப்படவில்லை

with one comment

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலி்ல் கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்நிதிர முன்னனியின் முதன்மை வேட்பாளராக மிலிந்த மொரகொட தெரிவு செய்யப்பட்டுள்ளார், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் துணை மேயர் ஆஸாத் சாலி , மற்றும் முன்னாள் மேயர் உமர் காமில் ஆகியோர் கட்சியினால் முதன்மை வேட்பாளர்களாக தெரிவு செய்யப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. Read the rest of this entry »

Written by lankamuslim

August 22, 2011 at 9:51 pm

இலங்கைக்கு இஸ்ரேல் உட்பட ஆறு புதிய இராஜதந்திரிகள்

leave a comment »

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான ஒரு உயர்ஸ்தானிகரும் 5 தூதுவர்களும் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் இன்று கையளித்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் டென்மார்க், ஆப்கானிஸ்தான், உக்ரேன், டொமினிக் குடியரசு   ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும் ட்ரினிடேட் மற்றும் டுபேகோவிற்கான புதிய உயர்ஸ்தானிகரும் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

August 22, 2011 at 9:14 pm

லிபிய போராளிகள் தலைநகர் திரிபோலியின் மத்திய பகுதியை கைப்பற்றியுள்ளனர்

leave a comment »

OurUmmah: லிபிய தலைநகர் திரிபோலியின் மத்திய பகுதியிலுள்ள சதுக்கத்தினை -Libyan rebels in Tripoli’s central square- லிபிய போராளிகள கைப்பற்றியுள்ளனர் கடாபியின் ஆதிக்கம் எஞ்சியுள்ள பாப் அல் அஸிஸியா  நகரை தவிர அனைத்து பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக போராளிகள தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன விரிவாக  

Written by lankamuslim

August 22, 2011 at 7:54 am

மன்னார் எண்ணெய் வள இருப்புத் தொடர்பான அறிக்கை 2012 ஆம் ஆண்டில்

leave a comment »

மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வள ஆய்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு எண்ணெய் வள இருப்புத் தொடர்பான முழுமையான தகவல்களை 2012 ஆம் ஆண்டில் வெளிபடுத்த முடியும் என்று அகழ்வுப்பணியில் ஈடுபட்டுள்ள “கெய்ரென்” நிறுவனம் தெரிவித்துள்ளது. எண்ணெய் வளத்தை அறிந்துகொள்வதற்கான அகழ்வுப் பணிகள் அமையில் ஆரம்பிக்கப்பட்டன. Read the rest of this entry »

Written by lankamuslim

August 22, 2011 at 7:15 am

இலங்கைக்கு கைகொடுக்கும் அமெரிக்க அறிக்கை

leave a comment »

புலிகள் அமைப்பின் வெளிநாட்டில் உள்ள உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஆயுதக் கொள்வனவில் ஈடு படுகிறார்கள் என்றும் இந்தியாவில் இருக்கும் புலிகள் விடுதலை புலிகள் அமைப்பை மீண்டும் மீள் உருவாக்கி வருவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்கள் இதற்கான நிதி உதவிகளைத் தொடர்கிறார்கள் என்றும் அது குற்றஞ் சாட்டி உள்ளது. புலிகள் வெளிநாடுகளில் பலம் பெற்று வருகின்றார்கள் என்பது எமக்கு பழைய தகவலாக இருந்தாலும் ஆயுத கொள்வனவில் ஈடுபடுவதும் அவை தொடர்பான தகவல்களை Read the rest of this entry »

Written by lankamuslim

August 22, 2011 at 7:01 am

ஐந்து பொதுமக்கள் துப்பாக்கி சூட்டியில் காயம் ஒரு போலீஸ் சிப்பாய் கொல்லப்பட்டுள்ளார்: புத்தளத்தில் பதட்டம்

leave a comment »

இணைப்பு-5 புத்தளம் புத்தளம் புறநகர பகுதியான மணல் குன்று பகுதியில்  இரு மர்ம மனிதர்கள் என்று தெரிவிக்கப்படும் மனிதர்கள் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு மரத்தில் கட்டபட்ட நலையில் அங்கு வந்த போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது  துப்பாக்கி பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 21, 2011 at 10:00 pm

பாதுகாப்பை பிரதேசத்தின் இளைஞர்களை கொண்டு ஏற்பாடு செய்து வருகின்றோம்

with 2 comments

M.ரிஸ்னி முஹம்மட்: பிரதேசத்தின் பாதுகாப்பை பிரதேசத்தின் இளைஞர்களை கொண்டு ஏற்பாடு செய்து வருகின்றோம் போலீசாரை மக்கள் கண்டாள் அச்சப்படுகின்றனர் என்று மாகாண சபை உறுப்பினர்  எஹ்யா ஆப்தீன் தெரிவித்தார். புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தல் கடந்த வெள்ளிகிழமை தொடக்கம் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இது புத்தளம் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் மர்ம மனிதன் தொடர்பாக அசாதாரண நிலை ஏற்படுத்தியுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 21, 2011 at 11:45 am

துபாய் சர்வதேச அல் குர்ஆன் பரிசை இலங்கை மாணவர் வென்றார்

with 47 comments

துபாயின் இடம் பெற்ற 15 வது சர்வதேச அல் குர்ஆன் அவாட் Dubai International Holy Quran Award (DIHQA) பரிசை இலங்கையை சேர்த்த அப்துல் காதர் முகம்மத் அஸ்மி பெற்றுக்கொண்டுள்ளார். என்று துபாய் தகவல்கள் தெரிவிக்கின்றது. கொழும்பு மாளிகாவத்தை சேர்ந்த இவர் மிகவும் சிறந்த முறையில் போட்டில் கலந்து கொண்டு -குரல் வளம் பிரிவில்- நான்காம் இடத்தை பெற்றுகொண்டதன் மூலம் ரூபா 1,950,000 பரிசையும் வென்றுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 21, 2011 at 11:40 am

புலிகள் மீண்டும் அணி திரளுகின்றனர் : அமெரிக்கா

leave a comment »

புலிகள் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கபட்டுள்ளது.2010ம் ஆண்டுக்கான சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களின் நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 20, 2011 at 9:45 pm

காத்தான்குடி பதட்டநிலை தொடர்பில் போலீஸ் மற்றும் சம்மேளனம் எடுத்துள்ள தீர்மானம்

with 4 comments

காத்தான்குடி அபூ ரீஷா: நேற்று இரவு காத்தான்குடியில் இடம்பெற்ற சில அசம்பாவிதங்கள் குறித்து காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கவலையடைகின்றது. இது தொடர்பாக மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் சம்மேளனப் பிரதிநிகளுக்குமிடையில் கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. இதில் கிழக்குமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உற்பட பொலிஸ் அதிகாரிகள், காத்தான்குடியைச் Read the rest of this entry »

Written by lankamuslim

August 20, 2011 at 3:30 pm

முஸ்லிம் காங்கிரஸ் நான்கு மாநகரங்களில் தனித்து போட்டி

with 2 comments

M.ரிஸ்னி முஹம்மட்:கொழும்பு மாநகரசபை, கல்முனை மாநகரசபை, கண்டி மாநகரசபை, காலி மாநகரசபை களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது. 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் கடத்னாஹ் 18 ஆம் திகதி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஏற்றுகொள்ளப்பட்டு வருகின்றது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 20, 2011 at 12:30 pm

காத்தான்குடியில் பதட்டம்

with 3 comments

இணைப்பு-2: பாலமுனையில் மர்ம மனிதர்கள் ஊடுருவியதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று மாலை முதல் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில் புதிய காத்தான்குடி நூறாணியா வீதியில் பொது மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் நடைபெற்றுள்ளது. பாலமுனையில் மர்ம மனிதர்கள் ஊடுருவியுள்ளதாக தகவல் பரவியதையடுத்து காத்தான்குடியைச் சேர்ந்த பலரும் அங்கு சென்று நிலைமைகளை அவதானித்துள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

August 20, 2011 at 12:05 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers