நிரூபமா ராவ் ஜனாதிபதியை சந்தித்தார்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் அறிவிக்கப்படாத விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமா ராவ் இன்று காலை ஜனாதிபதியை சந்தித்துள்ளார். நிரூபமா ராவிற்கு காலை உணவுடன் பிரியாவிடை அளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன.
நீண்டகாலமாக நிரூபமா ராவ் இலங்கையுடன் இணைந்து பல்வேறு விதத்தில் செயற்பட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே இந்த பிரியாவிடை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது நிரூபமா ராவ் அமெரிக்காவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .







