Lankamuslim.org

One World One Ummah

Archive for July 20th, 2011

வடக்கின் சூடான அரசியல் களம் ஒரு பார்வை

leave a comment »

இன்னும் மூன்று தினங்களில் அதாவது 23ஆம் திகதி நடைபெறவுள்ள 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான பிரசாரப்போர் உச்சக்கட்டடத்தை அடைந்துள்ள நிலையில் வடக்கில் மிகவும் கடுமையான போட்டி இடம்பெற்று வருகின்றது. வடக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோட்டையாக பார்க்கப்படும் நிலையில், அதனை இந்த தேர்தலுடன் மாற்றியமைக்கும் நோக்குடன் ஆளும் தரப்பு களம் ஆடிவருகின்றது.

வடக்கில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச, உட்பட பலமான அமைச்சர்கள் , பிரதியமைச்சர்கள்,என்று 24 முக்கிய புள்ளிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் முகாமிட்டு தீவிர பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read the rest of this entry »

Written by lankamuslim

July 20, 2011 at 12:37 pm

பொது நிர்வாக சேவை ஆள்சேர்ப்பு முறைமையை மாற்றியமைக்க வேண்டும்

leave a comment »

பொது நிர்வாக சேவையில் சேர்த்துக் கொள்வதற்கான முறைமையை மாற்றியமைக்க வேண்டும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதேவேளை தமிழ்மொழியை பேசக் கூடியவர்களை தேவையான வகையில் பொது நிர்வாக சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பது தொடர்பிலான யோசனையொன்றை அரசாங்கத்திடம் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Written by lankamuslim

July 20, 2011 at 11:25 am

அமெரிக்க இந்திய பேச்சில்

leave a comment »

தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அமெரிக்கா முழுமையாகத் துணை நிற்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உறுதியளித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற அவர் செவ்வாய் கிழமை காலை, இந்திய வெளியுறவு அமைச்சருடன் இரு நாடுகளுக்கிடையிலான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது, இந்தியா – அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை அமல்படுத்துதல், பாதுகாப்பு ஒத்துழைப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல், தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை வற்புறுத்துதல், Read the rest of this entry »

Written by lankamuslim

July 20, 2011 at 10:59 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,819 other followers