Archive for July 1st, 2011
தேசிய அடையாள அட்டை சர்ச்சை தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல் காதர்
தேசிய அடையாள அட்டைக்காக புகைப்படங்களில் முஸ்லிம்கள் தொப்பி மற்றும் ஹிஜாப் அணிந்த புகைப்படங்களை கொண்ட விண்ணப்பங்கள் நிராகரிக் கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக சுற்றாடல் பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் வி. விஜேவீரவை சந்தித்துப் பேசியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் இன்று முதலாம் திகதி விசேட கூட்டமொன்று நடத்தப்படும் என்று ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் தம்மிடம் கூறியதாகவும் பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். ஏ. காதர் தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »
சர்வதேச கொடுக்கல் வாங்கல்களின் போது சீனா நாணயதிற்கு அனுமதி
இலங்கை மக்கள் தமது சர்வதேச கொடுக்கல் வாங்கல்களின் போது சீனா நாணயத்தை (Renminb) நேரடியாகவே பயன்படுத்திக் கொள்ள முடியும் என மத்திய வங்கியின் மேற்பார்வை தினைக்களம் நேற்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று சீனா உலகின் இரண்டாவது பாரிய பொருளாதாரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் ரென்மின்பி (Renminb) வேகமாக உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஓர் நாணயமாக படிப்படியாக வளர்ந்து வருகின்றது விரிவாக Read the rest of this entry »
“வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள் எல்லாம் லீடருடையது”
எஸ்.எம்.எம்.பஷீர்
“நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம் நேரு மென்று நினைத்திடல் வேண்டா” – சுப்ரமணிய பாரதி – புலிகளின் யுத்த பயிற்சி கையேடு பல தரப்பட்ட படையணிகளையும் அதற்க்கான பயிற்சி பொறிமுறைகளையும் கொண்டிருந்தது சகலரும் அறிந்ததே.
அவ்வாறான யிற்சிகளையும் தாக்குதல்களையும் நடத்த நியமிக்கப்பட்ட தலைவர்களின் கீழ் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் வெளியிட்ட கையேட்டில் மிகக் கவனமாக தலைமைத்துவத்தை போற்றும், அத்தலைமைத்துவத்தின் கீழ் கட்டுப்படும் “போராளிகள்’ எதனை தலைமைத்துவத்திடம் எதிர்பார்க்கலாம் எவ்வாறு தலைமைத்துவத்துக்கு பக்தியோடு இருக்கலாம் என்பது பற்றியெல்லாம் புலிகளின் “வழிகாட்டி” (Guidelines) கூறுகிறது. ஆனால் மிகக் கவனமாக அவ்வழிகாட்டியின் (கையேட்டின்) தலைமைத்துவம் பற்றிய தலைப்பு மிகக் கவனமாக எழுதப்பட்டுள்ளது விரிவாக Read the rest of this entry »







