Archive for July 2011
Lankamuslim.org யின் நிர்வாக அறிவித்தல் !
Lankamuslim.org அதன் வாசகர்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்: Lankamuslim.org க்கு செய்திகள், கட்டுரைகள் என்பனவற்றை அனுப்பும்போது கண்டிப்பாக அனுப்பும் நபரின் முழுமையான விபரங்கள் இணைக்கப்பட்டு அனுப்பபடல் வேண்டும். விபரங்கள் அற்ற தகவல் , மற்றும் கட்டுரை ஆகியவை எம்மால் பதிவு செய்யபடமாட்டது.
ஆக்கங்களை அனுப்புபவர்கள் தொலைபேசி இலக்கம், அடையாள அட்டை இலக்கம், பெயர், ஊர், என்பன வற்றை இணைத்து அனுப்பவேண்டும் அனுப்பபடும் தகவல் எமது செய்தி மற்றும் கட்டுரை ஆசிரியர் சுழற்சிக்கு உட்படுத்தபட்ட பின்னர் Read the rest of this entry »
இலங்கை முஸ்லிம்களையும் வெளியேற்ற வேண்டும் நோர்வே பயங்கரவாதி
நோர்வேயில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்ட கிறிஸ்தவ பயங்கரவாதியான பிரிங் தனது 1500 பக்கங்கள் கொண்ட கொள்கை பிரகடனத்தில் இலங்கை முஸ்லிம்களை இலங்கையையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளான் என்று சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
அவன் 1500 பக்கங்கள் கொண்ட கொள்கை பிரகடனத்தின் 1235 பக்கத்தில் இலங்கை, ஐரோப்பா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டு என்ற கருத்தை தான் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளான். Read the rest of this entry »
யாழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஆறாக குறைக்க முயல்வது கேலிக்கூத்தானது
யாழ் தேர்தல் மாவட்டத்தின் 9 பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஆறாக குறைக்க தீர்மானிப்பது கேலிக்கூத்தானது. நாட்டு 1947ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்ற போது 101 பேர் இருந்த சபையில் 7 பேர் யாழ் மாவட்டத்திற்கு இருந்ததனர் , 64 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே சபையில் 225 ஆசனங்களுக்கு 6 ஆசனங்கள் மட்டுமே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திற்கு கிடைக்க இருப்பது வெறும் கேலிக்கூத்து என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தேர்தல் ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். Read the rest of this entry »
குகநாதன் விசாரணையை துரிதப் படுத்துமாறும் ஜனாதிபதி உத்தரவு
உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டது தொடர்பில் அறிக்கை ஒன்றினை தனக்கு சமர்ப்பிக்குமாறும், விசாரணையை துரிதப் படுத்துமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோனுக்கு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞா.குகநாதன் காடையர்களால் Read the rest of this entry »
கிண்ணியாவில் சிங்கள மொழிப் பயிற்சி நிலையம்
கியாஸ் ஷாபி: தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் அனுசரணையுடன் கிண்ணியா மொழிப் பயிற்சி நிலையம் ஏற்பாடு செய்த தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கான சிங்கள மொழிப்பயிற்சி செயலமர்வின் அங்குரார்ப்பண வைபவம் இன்று காலை கிண்ணியா இஹ்ஸானியா வித்தியாலயத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் முதன் முதலாக கிண்ணியா பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள Read the rest of this entry »
நிரூபமா ராவ் ஜனாதிபதியை சந்தித்தார்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் அறிவிக்கப்படாத விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமா ராவ் இன்று காலை ஜனாதிபதியை சந்தித்துள்ளார். நிரூபமா ராவிற்கு காலை உணவுடன் பிரியாவிடை அளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன. Read the rest of this entry »
புனித ரமழான் மாதத்தை வரவேற்கும் மாணவர் ஊர்வலம்
கியாஸ் ஷாபி: புனித ரமழான் மாதத்தை வரவேற்கும் முகமாக கிண்ணியா நிஜாமியா சிறுவர் செயற்பாட்டு மையத்தினால்; ஏற்பாடு செய்யப்பட்ட சிறார்களின் வீதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது. கிண்ணியா குட்டிக் கராச்சி சந்தியில் இருந்து பிரதான வீதி ஊடாக கிண்ணியா பாலம் வரையிலான ஐந்து கிலோமீற்றர் தூரம் இந்த ஊர்வலம் சென்றது. படங்கள் Read the rest of this entry »
ஈரான் வெளிவிவகார பிரதியமைச்சர் வீடமைப்புத்திட்டத்தை திறந்து வைத்தார்
ஏ.அப்துல்லாஹ்: ஈரான் வெளிவிவகார பிரதியமைச்சர் செய்யித் அமீர் மனசூர் பொர்க்கே இன்று காலை மட்டக்களப்பு காங்கேயனோடை கிராமத்திற்கு விஜயம் செய்தார். ஈரான் நாட்டு அரசு உதவியுடன் 176 மில்லியன் ரூபாய் செலவில் காங்கேயனோடை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத்திட்டத்தை திறந்து வைத்தார். Read the rest of this entry »
இலங்கையில் உம்முல் குரா பல்கலைக்கழகத்தின் கிளை
மட்டகளப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் சர்வதேச மட்டத்தில் பிரபல்யமான உம்முல் குரா பல்கலைக்கழகத்தின் கிளை ஒன்றினை திறப்பதற்குத் நடவடிக்கைகளை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவூதி மக்காவில் மூன்று பாரிய வளாகங்களை கொண்டுள்ள பல்கலை கழகம் ஏககாலத்தில் இஸ்லாமிய ஷரியா , மற்றும் மருத்துவம் , பொறியியல் ஆகிய பல்வேறு துறைகளில் பட்ட படிப்பு , பட்ட பின்படிப்பு , நிபுணத்துவ கற்கை , முதுமாணி கற்கை போன்றவற்றி வழங்கிவருகின்றது என்பது குறிபிடத்தக்கது. Read the rest of this entry »
கிண்ணியா கல்வி வலயத்துக்கான கோட்டக் கல்வி அலுவலகம் திறப்பு
கியாஸ் ஷாபி: கிண்ணியா கல்வி வலயத்துக்கான முள்ளிப்பொத்தானை கோட்டக் கல்வி அலுவலகத்தை இன்று சிறாஜ் நகர் மகா வித்தியாலயத்தில் வலயக்கல்வி பணிப்பாளர் யு.எல்.எம்.காசிம் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இக் கல்விக் கோட்டம் 27 பாடசாலைகளையும் 4985 மாணவர்களையும் 191 ஆசிரியர்களையும் கொண்டுள்ளது.இதற்கு புதிதாக கோட்டக்கல்வி அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். Read the rest of this entry »
ரமழான் காலத்தின் முஸ்லிம் ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கவேண்டும்
புனித ரமழான் நோன்பு காலத்தில் வணக்கங்களுகாக அரச, தனியார் துறை முஸ்லிம்களுக்கு விசேட விடுமுறை வசதிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரச, தனியார் நிறுவனங்களிடம் தொழில், தொழிலுறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்த கோரிக்கை அரசினால் கடந்த ஆண்டும் விடுக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது. Read the rest of this entry »
பயங்கரவாதமும் பைத்தியமும் !!!
எஸ்.எம்.எம்.பஷீர்
“நான் சாகத் தயாராக இருக்கிறேன் , ஆனால் நான் கொல்வதற்கு தயாராகவிருப்பதற்கான காரணம்தான் இல்லை” (மகாத்மா காந்தி) (I am prepared to die, but there is no cause for which I am prepared to kill” . ~Mahatma Gandhi)
நோர்வேயில் சென்ற வெள்ளிக்கிழமை பயங்கரவாத செயல்புரிந்து முழு ஐரோப்பாவையும் மட்டுமல்ல உலகின் மேற்குலக பயங்கரவாதம் பற்றிய கருத்தியலுக்கு புதிய பார்வை வீச்சினை ஏற்படுத்திய பிரிவிக் ஒரு கிரீஸ்தவனில்லை , ஒரு முஸ்லிம் எதிர்ப்பாளன் , ஒரு வலதுசாரி என்ற அடையாளப்படுததலே உலகின் பிரபல ஊடகங்களால் இன்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. Read the rest of this entry »
தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்றார்
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ஆம் வயதை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய குறித்த கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை புதிதாய் பிறந்த மகன் என பொருள்தரும் வலீத் என்ற பெயரை வைக்க தீர்மாணிதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
ஐரோப்பா வாழ் முஸ்லிம்களும் யாழ்ப்பாண காணிகளும்
முஹம்மத் ஜான்ஸின்
யாழ்ப்பாணம் சோனகரிஸ்தானில் 1990ஆம் ஆண்டளவில் ஏறக்குறைய 1800 வீடுகள் முஸ்லிம்களுக்கு சொந்தமானவையாக இருந்தன. 2002ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட மோதல் தவிர்ப்பு உடன்படிக்கையின் பிறகு சில முஸ்லிம்கள் தங்களது காணிகளை பல்வேறு முஸ்லிமல்லாதவர்களுக்கு விற்று இருந்தனர்.
ஏ-9 பாதையூடாக பிரயாணம் செய்த முஸ்லிம்களை ஓமந்தையில் வைத்து சோதனை வரி என்று பல்வேறு பட்ட இம்சைகளுக்கு உள்ளாக்கி அவர்களின் மீளக்குடியேறும் எண்ணங்கள் சிதறடிக்கப்பட்டன. மேலும் யாழ்ப்பாணத்திலும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருந்த புலி உறுப்பினர்களும் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டிருந்தனர். Read the rest of this entry »
மட்டக்களப்பு பாரிய கடலரிப்பு பிரதேசத்தை கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் பார்வை
ஜீனைட்.எம்.பஹத்: மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பை கடற்றொழில் அமைச்சின் மாவட்ட கடற்றொழில் திணக்கள பிரதி பணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை நேரில் சென்று அவதானித்தனர். இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில் நாவலடி பிரதேசத்தின் பிரதான வீதி கடலரிப்பினால் முற்றாக சேதமடைய ஆரம்பித்துள்ளது. Read the rest of this entry »
பாடசாலைகளை இன அடிப்படையில் வகைப்படுத்துவதை தவிர்க்க ஜனாதிபதி வலியுறுத்தல்
பாடசாலைகளை சிங்கள பாடசாலைகள், தமிழ் பாடசாலைகள், முஸ்லிம் பாடசாலைகள் என வகைப்படுத்தும் முறைமை மாற வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். நேற்றுபுதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு வலியுறுத்தினார்.
அப்போது, தேசிய கல்வி ஆணைக்குழுவும் இதுபோன்ற சிபாரிசுகளை முன்வைத்திருப்பதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார். எனினும், பிரதமர் டி.எம். ஜயரட்ன கருத்துத் தெரிவிக்கையில் Read the rest of this entry »
ரமழான் மாத தலைப்பிறை தீர்மானிக்கும் கூட்டம்
ஹிஜ்ரி 1432 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெறவுள்ளது. புனித ரமழான் நோன்பை தீர்மானிக்கும் வகையில் அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 06.31 மணி தொடக்கம் புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். Read the rest of this entry »
அரசியல் தீர்வில் முஸ்லிம்கள் தொடர்பிலான அரசின் அணுகுமுறை என்ன ?
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் எதிர்வரும் 4 ஆம் திகதி 10 அடுத்த சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இவ்விரு தரப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையைப் பூரணமாக வரவேற்கின்றோம்.
தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் பேச வேண்டுமென்பதைக் கடந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவு மட்டுமல்ல நடைபெற்று முடிந்த தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளனர். Read the rest of this entry »
புத்தளம் ராசிக்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
புத்தளத்தில் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பொலன்னறுவையில் வைத்து கடத்தப்பட்ட பட்டான் ராசிக் என்பவரின் உடல் வாழைச்சேனை பகுதியில் கண்டுபிடிகபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. முந்தல்‐ நோட்டன் தீவு பிதேசத்தின் சமீரகம பகுதியை வசிப்பிடமாக கொண்ட 54 வயதான பட்டான் ராசிக் என்பவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவர்.
தமது நிறுவனத்தின் பணிக்காக பொலன்னறுவை சென்றிருந்த போது, வேன் ஒன்றில் சென்ற குழுவொன்று அவரை கடத்திச் சென்றதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்தது. Read the rest of this entry »
யாழ் மாநகர சபையில் முஸ்லிம் உறுப்பினர்களின் மூன்று நிபந்தனை கொண்ட சிறப்பு அறிக்கை
ஏ.அப்துல்லாஹ்: யாழ்பாணத்தில் மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்கென தனியான கொள்கை அமுலாக்கப்பட வேண்டும், யாழ். பிரதேச செயலரின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் அல்லது குறித்த பிரதேச செயலரை மாற்றவேண்டும், முஸ்லிம்களின் விவகாரத்திற்கு என முஸ்லிம் கிராம சேவையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். என யாழ். மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்கள் மூன்று அம்சக் கோரிக்கையை அடங்கிய சிறப்பு அறிக்கையொன்றை முன்வைத்து சபையில் இருந்து வெளியேறியியுள்ளனர்.
மாநகர சபையின் கூட்டத் தொடர் ஆரம்பத்தில் யாழ்.முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றத்தின் தடைகள் குறித்து கவனயீர்ப்பு பிரேரணையை யாழ். மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டு சபையில் விவாதிக்கப்பட்டது. Read the rest of this entry »
திருகோணமலை வட கடற்கரை வீதியில் சூட்டு சம்பவம்
கியாஸ் ஷாபி: திருகோணமலை வட கடற்கரை வீதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படடுள்ள அதேவேளை இன்னும் ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி சாதாரண சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். Read the rest of this entry »
காத்தான்குடியில் அரபு மொழி வாசகங்கள் அழிக்கப்பட்டுள்ளது
ஏ.அப்துல்லாஹ்: மட்டகளப்பு மாவட்டம் காத்தான்குடி நகர சபையினால் நகர வீதி பெயர்ப் பலகைகளில் அரபு மொழியிலும் எழுதப்பட்டிருந்தது அனைவருக்கும் தெரியும் இந்த நிலையில் இனம்தெரியா நபர்களினால் அரபு மொழியில் எழுதப்பட்டிருந்த அரபு மொழி வீதி பெயர்கள் வெள்ளை நிற வர்ணம் பூசி அவை அழிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றிருக்கின்றது.இது தொடர்பாக காத்தான்குடி மக்கள் பேரினதும் விசனம் தெரிவித்து வருகின்றனர். Read the rest of this entry »
முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை
முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் நோன்பு விடுமுறைக்காக நாளை 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்பவுள்ளது இப் பாடசாலைகள் மீண்டும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை தமிழ், சிங்களப் பாடசாலைகள் யாவும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக Read the rest of this entry »
பிரிட்டன் இனவாத முன்னணியான EDL பயங்கரவாதத்துடன் தொடர்பு
M.ரிஸ்னி முஹம்மட்: நோர்வேயில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐரோப்பாவை உலுக்கிய மனித படுகொலை பயங்கரவாத தாகுதல்களில் மேற்கு நாடுகளில் பல காலம் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்பு பற்றிய தகவல்கள் ஆதர பூர்வமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில் பல மேற்கு ஆய்வளர்கள் அப்படி ஒரு அமைப்பு இருக்கிறது என்பதாகன ஆதாரம் எதுவும் இல்லை என்று எந்த ஆய்வுகளும் இன்றி தெரிவித்து வருகின்றனர்.
ஆனால்பயங்கரவாதம் மற்றும் பிரிட்டன் வலது சாரி தீவிரவாதம் தொடர்பான நிபுணரும் பேராசிரியருமான மார்டின், -Martin Feldman- எமது ரேடாரில் இந்த அமைப்பு சிறிதாக தெரிந்தாலும் இதன் இருப்பை மறுக்கமுடியாது என்று தெரிவித்துள்ளார் Read the rest of this entry »
ஈரானில் மற்றுமொரு அணுத்துறை விஞ்ஞானி படுகொலை: ஒரு தகவல்
M.ஷாமில் முஹம்மட்
OurUmmah: கடந்த 24 ஆம் திகதி ஞாயிற்று கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அணு விஞ்ஞானிகள் படுகொலை வரிசையில் மற்றுமொரு இளம் அணுத்துறை விஞ்ஞானி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 35 வயதான டாரிஷ் ரிஷாநஜாத் -Darioush Rezainejad- என்ற இளம் அணுவாயுத விஞ்ஞானி தெஹ்ரானில் கிழக்கு பகுதியில் தனது மகளை கல்லூரி ஒன்றிலிருந்து அழைத்து வர சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் அவரின் மனைவியும் படுகாயமடைந்துள்ளார். ஈரான் அணு உற்பத்தி திட்டத்துடன் தொடர்பை கொண்டிருக்க கூடியவரான டாரிஷ் ரிஷாநஜாத் படுகொலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்புகள் தொடர்பு பட்டிருப்பதாக ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் குற்றம் சாட்டியுள்ளார் விரிவாக
சம்மாந்துறையில் குடிசைகள் தீக்கிரை
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புர கிராமத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 150 ற்கு மேற்பட்ட குடிசைகளில் 15 குடிசைகள் இன்று புதன்கிழமை அதிகாலை 1:00 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. Read the rest of this entry »
பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் பிரான்ஸ் தூதுவருடன் சந்திப்பு
ஜீனைட்.எம்.பஹத்: பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ. கிறிஸ்டின் ரொபிகொன் நேற்று (26.07.2011) சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் அவர்களை அவரது அமைச்சில் சந்தித்து கிழக்கு மாகாணத்திலுள்ள வறிய மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக கலந்துரையாடினார். Read the rest of this entry »
வை.எம்.எம்.ஏ. கிளைகளுக்கான தலைமைத்துவ பயிற்சிக் கருத்தரங்கு
ஜீனைட்.எம்.பஹத்: நமது சமூகத்திடையே இருக்கின்ற தலைவர்களை நாங்கள் கண்ணியப்படுத்தாமையினால் தான் சிறந்த தலைவர்களை எம்மால் காணமுடியாதுள்ளது. இன்றைய தலைவர்கள் மக்கள் மனங்களிலிருந்து தூரப்போகின்றவர்களாகவே இருக்கிறார்கள் என்று அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தலைவர் நத்வி பஹாவுத்தீன் தெரிவித்தார். Read the rest of this entry »
ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி மாணவன் வபாத்
ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி, பாடசாலை மாணவன் வபாத்தாக்கியுள்ளார். வரக்காபொலை, கணிதபுர, ஹஸன்புரையை சேர்ந்த முஹம்மது நப்லி எனும் 12 வயது மாணவனே, இவ்வாறு வபாத்தாக்கியுள்ளார். தனது வீட்டுக்கு சமீபமாகவுள்ள ரம்புட்டான் மரத்திலிருந்து பறித்த இரண்டு ரம்புட்டான் பழங்களை ஒரே சமயத்தில் சாப்பிட சென்ற போது, அவை தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளார். Read the rest of this entry »
கிண்ணியாவில் சமய புரிந்துணர்வு கலந்துரையாடல்
கியாஸ் ஷாபி: சமூக ரீதியாகவும் சமய ரீதியாகவும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமயத்தவர்களை ஒன்றிணைத்து சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்புவதை நோக்காகக்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட சமயத்தலைவர்களின் ஒன்றுகூடல் நேற்று மாலை கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது Read the rest of this entry »
வடக்கில் ஆளும் தரப்பு வாக்கு வங்கி முன்னேற்றம் கண்டுள்ளது
வடக்கின் தேர்தல் முடிவுகள் சமஷ்டி முறைக்கு விருப்பம் தெரிவிப்பதாக கருதமுடியாதென ஜாதிக்க ஹெல உறுமய காட்சியின் பிரதம செயலாளர் அமைச்சல் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் . அதேவேளை வடபகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ள 17 இடங்களிலும் அபிவிருத்தியை செய்யுமாறும் நாட்டின் பெரும்பாலனவர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிதுள்ளார்கள் என்றும் 17 இடங்களை வெற்றிகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாட்டை பின்னோக்கி தள்ள கூடாது என்றும் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
தேர்தல் முறைமையை உடனடியாக மாற்ற வேண்டும்
மோசடிகளற்ற தேர்தல் ஒன்றிற்காக நாட்டின் தேர்தல் முறைமையை உடனடியாக மாற்ற வேண்டுமென சட்ட வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமை காரணமாக அரசியற் கட்சிகளுக்கு இடையிலும், ஒரே கட்சிக்குள்ளும் மோதல்கள் ஏற்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவிரையாளர், காலநிதி பிரதிஹா மஹானாமஹேவா தெரிவிக்கின்றார். Read the rest of this entry »
மறைந்த அறிவிப்பாளர் பற்றிய நினைவு பகிர்ந்து
ஜீனைட்.எம்.பஹத்: இலங்கை தமிழோசை சர்வதேச வானொலியின் ஏற்பாட்டில் மறைந்த இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனஅறிவிப்பாளர் மர்ஹூம் பரீன் அப்துல் காதர் அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடல் ஒன்று எதிர்வரும் 30-07-2011ம் திகதி சனிக்கிழமை காலை 9.30. மணியளவில் கொழும்பு வெள்ளவத்தை Read the rest of this entry »
உக்குவளை பிரதேச சபைக்கு மூன்று முஸ்லிம்கள்
ஏ.அப்துல்லாஹ்: முஸ்லிம்கள் மற்றும் தமிழ் மக்கள் கணிசமாக வாழும் மாத்தளை மாவட்ட உக்குவளை பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம் மற்றும் தமிழ், உறுப்பினர்கள் நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், முதன் முதலாவதாக இப்பிரதேச சபைக்கு ஒரு பௌத்த பிக்குவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட்ட வரக்காமுறையை சேர்ந்த எம்.என்.நக்கீர் 6,296 விருப்புவாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன், Read the rest of this entry »
முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் சிங்கள பெண் தெரிவு
ஏ.அப்துல்லாஹ்: கண்டி மாவட்டத்தில் யடிநுவர பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் புஷ்பா கொடிதுவக்கு என்ற சிங்கள பெண்மணி 892 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார் . யடிநுவர பிரதேச சபைக்கு இம்முறை இரு முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இப்பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட யடிநுவர மிக்தாத் 2,347 விருப்பு வாக்குகளைப் பெற்றும் ஐக்கிய தேசியக்கட்சியில் புதுமுகமாக களமிறங்கிய Read the rest of this entry »
குச்சவெளி பிரதேச சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர்
கியாஸ் ஷாபி: திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச சபையை பொது மக்கள் ஐக்கிய முன்னணி கைப்பற்றியமைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியே காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபையின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஏ.ஆர் அன்வர் தெரிவித்தார். உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவு குறித்து அவரிடம் கருத்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். Read the rest of this entry »
ஒஸ்லோ தாக்குதலுக்கு பின்னால் Knights Templar
OurUmmah: நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் மத்திய பகுதியில் நடாத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் மற்றும் தலைநகர் பகுதியில் இருந்து 20 மையில் துரத்தில் அமைந்துள்ள தீவில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், ஆகிய இரண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 93 பேர் கொல்லப்பட்துள்ளனர். இவற்றுக்கு பின்னால் ஐரோப்பாவை இணைக்கும் கிஸ்தவ வலது சாரி பயங்கரவாதம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரிவாக
வட பகுதி மக்களின் தீர்ப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது
வடக்கு மக்கள் இம்முறை உள்ளூராட்சி சபை தேர்தலில் வழங்கிய தீர்ப்பை அரசாங்கம் சிரம் தாழ்த்தி, அமைதியுடன் ஏற்றுக் கொள்வதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக அமைச்சரின் கருத்தை கேட்டபோதே அவர் மேற்கூறியவாறு பதிலளித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது Read the rest of this entry »
தாமதம் வேண்டாம் தமிழ் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள்
1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலும் அதற்குப் பின்னர் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தெரிவித்து வந்த திட்டவட்டமான செய்தியையே நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் தமிழ் மக்கள் ஐயத்துக்கு இடமேயில்லாத வகையில் தீர்ப்பாக வழங்கியுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். Read the rest of this entry »
தேர்தல் முடிவுகளை பார்வையிடும் ஜனாதிபதி
பெரும் பரபரப்புக்கு மத்தியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய சுதந்திர முன்னணி 45 சபைகளில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சி 17 சபைகளிலும் தமிழர் விடுதலை கூட்டணி இரண்டு சபைகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலின் உத்தியோக பூர்வ முடிவுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்வையிட்டார் படங்கள் Read the rest of this entry »
அக்குரணை பிரதேச தேர்தலில் இஸ்லாமிய சமூகக் கட்டுக்கோப்பு பேணப்பட்டது
நேற்று நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் அக்குரணை பிரதேச சபைக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் போட்டியிட்ட நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு (PMJD) என்ற பொது சமூக நலன் பேணும் அமைப்பு போட்டியிட்ட முதல் தடவையிலேயே 2 ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 12763 வாக்குகளை பெற்று 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 10026 வாக்குகளை பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6175 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. Read the rest of this entry »
மருதமுனையில் சிறுவன் கடல் அலையில் சிக்கி வபாத்
மருதமுனை கடலில் பெற்றோர் பாதுகாப்பில் சென்ற ஒன்றரை வயது சிறுவன் கடல் அலையில் சிக்கி வபாத்தாகியுள்ளான் மருதமுனை இமாம் கஸ்ஸாலி வீதியைச் சேர்ந்த அஸ்பத் என்ற சிறுவனே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.இந்த விபத்து நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry »
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 45, தமிழரசுக்கட்சி17
நடந்து முடிந்த 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 45 சபைகளிலும் இலங்கை தமிழரசுக்கட்சி 18 சபைகளிலும் தமிழர் விடுதலை கூட்டணி இரண்டு சபைகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
வடபகுதி தொடர்பாக பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டு. 16 சபைகளின் 13 சபைகளை கைப்பற்றி வடக்கில் தனது சக்தியை நிரூபித்துள்ளது. ஊர்காவல் துறை ,நெடுந்தீவு வேலணை ஆகிய மூன்று தீவு பகுதிகளில் Read the rest of this entry »
கிணற்றில் வீசப்பட்டு குழந்தை படுகொலை
காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஹைறாத் நகரில் அமைந்துள்ள வீடொன்றில் தாயொருவர் தனது ஆறுமாதக்குழந்தையை கிணற்றினுள் வீசி குழந்தையை கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலமுனைக்கிராமத்தில் வசித்து வரும் இத்தாய் தனது குடும்பத்தகராறு காரணமாக காத்தான்குடியிலுள்ள அவரது சகோதரியின் வீட்டுக்கு வந்து இன்று காலை சகோதரியின் வீட்டு கிணற்றினுள் தனது குழந்தை வீசியதால் குழந்தை உயிரிழந்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார். Read the rest of this entry »
உத்தியோக பூர்வ தேர்தல் முடிவுகள்
65 உள்ளூராட்சி சபைகளிலும் இருந்து 875 உள்ளூராட்சி சபை உறுபினர்களை தெரிவு செய்யவதற்கான ஒரு மாநகரசபை, 9 நகர சபைகள், 55 பிரதேச சபைகளுக்கான தேர்தல் குறித்த பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருந்த 2226 வாக்கு பதிவு நிலையங்களில் இன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை இடம்பெற்றது.
தற்போது வாக்குகளை என்னும் பனி இடம்பெற்று கொன்றிருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இன்று இரவு 8.00 மணியின் பின்னர் முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோக பூர்வ தேர்தல் முடிவுகளை நேரடியாக பார்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்
ஆடி மாதமும் ஆடி அடங்கா தமிழ் இனவாத அரசியலும் : ஒரு நினைவுக் கிளறல்
எஸ்.எம்.எம்.பஷீர்
“மொழி சிந்தனையை சிதைக்கலாம்” -Language can corrupt thought’- George Orwell–ஜோர்ஜ் ஓர்வெல். இலங்கை வரலாற்றில் ஆடி (ஜூலை) மாதம் வைகாசி (மே) மாதம் ஆவணி (ஆகஸ்ட்) மாதம் ஆகிய மாதங்கள் சகல இலங்கை மக்களாலும் மறக்கமுடியாத துர்ப்பாக்கிய சம்பவங்களால் நிறைந்திருக்கிறது.
தமிழ் தேசியவாதிகளின் புலி ஆதரவாளர்களின் சிங்கள இனவெறியூட்டல்கள் ஆண்டுதோறும் ஆடி மாதத்திலும் வைகாசி மாதத்திலும் களமேற்றப்படும் பொழுது முழு இலங்கை மக்களும் தமிழ் தேசிய வெறியர்களும் பயங்கரவாதிகளுமான புலிகளால் மற்றும் ஆயுதம் தாங்கிய தமிழ் இயக்கங்களால் இலங்கை மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளையும் நாம் நினைவு கூறவேண்டியுள்ளது. Read the rest of this entry »
வாக்களிப்பு ஆர்வத்துடன் இடம்பெற்று வருகின்றது
ஒரு மாநகரசபை, 9 நகர சபைகள், 55 பிரதேச சபைகளில் நடைபெறும் இந்தத் தேர்தலுக்கான 25,181 பொலிஸாரை கடமையில் ஈடு படுத்தியுள்ளதாகத் தேர்தலுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். 65 உள்ளூராட்சி சபைகளிலும் இருந்து 875 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதற்காக 26 இலட்சத்து 30 ஆயிரத்து 985 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். கண்டி மாவட்டம் , அக்குரணை பிரதேச சபை , அதேபோன்று மாத்தளை மாவட்டம் உக்குவல பிரதேச சபை ஆகியவற்றில் முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர் Read the rest of this entry »
யாழ் முஸ்லிம் பிரதேசத்திற்கு முஸ்லிம் உதவி வழங்கும் நிறுவனங்களின் பங்களிப்பு தேவை!
முஹம்மத் ஜான்ஸின்
யாழ்ப்பாணம் மிகவும் வளமான பூமி. காத்தான்குடி அக்குரனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே குடியேறியுள்ளனர். இவர்கள் மூலமாகத்தான் கிளிநொச்சி கொடிகாமம் சுன்னாகம் பருத்தித்துறை போன்ற பிரதேசங்களிலிருந்த பள்ளிவாசல்கள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது. எனவே இந்த ஊர்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் மேலும் யாழ்ப்பாணத்தில் குடியேற விருப்பம் கொண்டிருக்கலாம் என்பதை உதவி வழங்கும் நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
யாழ் சின்னப் பள்ளிவாசல் கட்டிட புனர்நிர்மானக் குழு அண்மையில் யாழ்ப்பாணம் சென்று சின்னப்பள்ளிவாசலின் நிலைமைகளை நேரில் ஆராய்ந்தது. இதன் போது கட்டிடத்தினை மீள்நிர்மானம் செய்வதற்கான செலவுகளும் என்ஜினியர் மற்றும் கட்டிட வேலை செய்வோரை கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. Read the rest of this entry »
நம்பிக்கை கொண்ட ஒருவன் ஒரு இலட்சம் பேரின் சக்திக்கு நிகரானவன்:ஓஸ்லோ குண்டு
OurUmmah:நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் நேற்று மத்திய பகுதியில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் தலைநகர் பகுதியில் இருந்து சற்று தொலைவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் ஆகிய இரண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 91 பேர் கொல்லப்பட்துள்ளனர்.
நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் நிகழ்ந்த குண்டு தாக்குதலில் 7 பேர் பலியாகினர். அதை தொடர்ந்து உடோயா-Utoya.- தீவுப் பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 84 பேர் கொல்லபட்டுள்ளனர். இரு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் இந்த சம்பவங்களுடன் தொடர்பு பட்ட வலது சாரி தீவிரவாத அமைப்பு ஒன்றின் கிஸ்தவ அடிப்படைவாதியான 32 வயதான ஆண்டெர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக்-Anders Behring Breivik- விரிவாக
அமெரிக்க தீர்மானம் அமெரிக்க ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணானது: அரசாங்கம்
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் பிறப்பிக்கும் எந்த உத்தரவும் அமெரிக்காவினால் முன்மொழியப்படும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணானது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு ஆம் ஆண்டு போர்க்குற்றம் தொடர்பாக உரிய விசாரணைகளை முன்னெடுக்கத் தவறினால் இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கத்தின் உதவிகளை தடைசெய்யப்பட வேண்டும் என அமெரிக்க பாராளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. Read the rest of this entry »
உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை தேர்தல்
65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுகள் ஆரம்பமாகி பிற்பகல் 4 மணிவரை இடம்பெறும்.
ஒரு மாநகரசபை, 9 நகர சபைகள், 55 பிரதேச சபைகளில் நடைபெறும் இந்தத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். 65 உள்ளூராட்சி சபைகளிலும் இருந்து 875 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் Read the rest of this entry »
தேர்தல் பெட்டிகள் மாற்றப்படும் செய்தியில் இவ்வித உண்மையுமில்லை
65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் 23ம் திகதி நடைபெற வுள்ளது. இதற்கான சகல ஏற் பாடுகளும் பூர்த்தி செய்யப்பட் டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் இரவு 10 மணி அளவில் முதலாவது தேர்தல் முடிவு வெளிவருமெனக் கூறிய அவர், அனேகமாக அனைத்து பெறு பேறுகளும் 24 ஆம் திகதி அதிகாலைக்கு முன்னர் வெளியிட முடியுமென தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
மாணவர் தலைமைத்துவப் பயிற்சியின் பின்னர் மேலும் ஒரு பயிற்சி
தலைமைத்துவப் பயிற்சியை முடித்து கொண்ட பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான மாணவர்களுக்கு மேலும் ஒரு பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகி தலைமைத்துவப் பயிற்சி பெற்ற மாணவர்களின் ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவை மேலும் விருத்தியடையச் செய்வதற்கு விசேட பாடநெறியொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தலைமைத்துவப் பயிற்சி பெற்று வெளியேறிய முதலாவது தொகுதி மாணவர்களுக்கான பயிற்சிநெறி நேற்றுமுதல் ஆரம்பமாகியுள்ளது எனவும், இரண்டாம் தொகுதி மாணவர்களுக்கான பயிற்சிநெறி விரைவில் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
ராசிக் கடத்தல் தொடர்பில் அழுத்தங்கள்
இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அடையாளம் தெரியாத ஆட்களினால் கடத்திச்செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்ற பட்டாணி ராசிக் என்பவரது கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என புத்தளம் மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
இது தொடர்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருக்கின்றது.சிடிஃப் எனப்படும் சமூக நம்பிக்கை நிதியம் என்ற தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபக நிர்வாகியான பட்டாணி ராசிக் என்பவரே கடத்திச் செல்லப்பட்டவாராவார். Read the rest of this entry »
பாகிஸ்தானை முடிந்தவரை நிர்ப்பந்திப்போம்: ஹிலாரி
பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பாகிஸ்தானை முடிந்தவரை நிர்ப்பந்திப்போம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் குறிப்பிட்டார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் புது டில்லியில் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியபின் இருவரும் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்தனர். அப்போது ஹிலாரி தெரிவிக்கையில்;
பயங்கரவாதத்தை எதிர்கொள்வதே முதன்மையானதும் முன்னுரிமை அளிக்க வேண்டியதுமான பிரச்சினை என்பதையே கடந்த வாரம் நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் உணர்த்துகிறது. Read the rest of this entry »









