Archive for June 26th, 2011
அக்குரனையில் உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் சூடு பிடிக்கின்றது
ஜூலை 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தகள் நடை பெறப்போகும் பிரதேசங்களில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது ஜூலை 23 ஆம் திகதி 64 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தகள் இடம்பெறவுள்ளன. இதில் வட மாகாணத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள் ஆளும் தரப்புடன் இணைந்தும் தனித்தும் போட்டியிடுகின்றன.
அமைச்சர் ரிஷாத் தலைமயிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மன்னார் பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அதேவேளை கண்டி அக்குரனை பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் உச்சாகமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
காத்தான்குடி சம்மேளன அறிக்கை
கடந்த வியாழகிழமை BBC தமிழ் மற்றும் மேலும் சில ஊடகங்களில் காத்தான்குடியை சேர்ந்த இரண்டு முஸ்லிம் மாணவிகள் தனியார் இணைய மையம் ஒன்றில் ஒன்றில் ஆபாச படத்தைப் பார்த்ததாகக் கூறி, காத்தான்குடியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் அவர்களை பின் தொடர்ந்து, அவர்களை தடுத்து வைத்து தாக்கியதாகவும், பின்னர் அவர்களை காத்தான்குடியின் பள்ளிவாசல் சம்மேளன அலுவலகத்திலும் வைத்து, பொதுமக்களைக் கூட்டி பிரச்சினையை பெரிது படுத்த முயன்றதாகவும், பின்னர் காவல்துறையினர் வந்து அவர்களை மீட்டதாகவும் செய்திகள்களை வெளியிட்டன.
இது தொடர்பாக இன்று -26.6.2011 -காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளம் பத்திரிகை மாநாடொன்றை நடாத்தி விடயத்தை தெளிவு படுத்தியுள்ளது. அங்கு சம்மேளம் வெளியிட்ட அறிக்கை சம்மேளனத்தின் உப செயலாளர் ஏ.எல். இசட். பௌஹ்மி ஊடாக எமது காத்தான்குடி செய்தியாளர் lankamuslim.org க்கு தருகின்றார் விரிவாக Read the rest of this entry »
‘இளம் யுவதிகள் கடத்தப்படும் அபாயம்’
இலங்கையில் பெண்கள் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படும் அபாயம் அதிகரித்து இருப்பதால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அறிமுகமற்றோருடன் அனுப்பக் கூடாது என்று தேசிய சிறார் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திசாயக்க கூறியுள்ளார்.
வடக்கே முல்லைத்தீவைச் சேர்ந்த சிறுமியும் பண்டாரவளையைச் சேர்ந்த சிறுமியும் அடங்கலாக சில யுவதிகள் கொழும்பில் விபச்சார விடுதியொன்றிலிருந்து அண்மையில் மீட்கப்பட்டுள்ளனர் விரிவாக Read the rest of this entry »
தொப்பி அணிந்த விண்ணப்பங்களை நிராகரித்தமை அடிப்படை மனித உரிமை மீறல் : நீதியமைச்சர்
தொப்பி அணிந்து விண்ணப்பிக்கப்பட்ட அடையாள அட்டை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை அடிப்படை மனித உரிமை மீறல் என்று நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக தொப்பி அணிந்த நிலையில் மாகோள அனாதை இல்ல மாணவர்கள் சமர்ப்பித்த விண்ணபங்கள் நிராகரிக்கப் பட்டமை தொடர்பாக நீதியமைச்சர் ரவூப் ஹகீம் ஆட்பதிவு திணைக்களப் பணிப்பாளருக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
தொப்பி அணிந்தமைக்காக நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை ஏற்றுகொண்டு அவர்களுக்கான தேசிய அடையாள அட்டையை துரிதமாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதியமைச்சர் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு எழுதியுள்ள அவசரகடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார். Read the rest of this entry »







