Archive for June 20th, 2011
அச்சுறுத்தலினால் பாத்தியா மாவத்தை மஸ்ஜித் மூடப்பட்டுள்ளது !
கொழும்பு தெஹிவளை கல்போவில பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றுக்குள் பெளத்த மதகுருமார்கள் சிலர் நுழைந்து அதனை மூடிவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப் பட்டதால் மஸ்ஜித் நேற்று ஞாயிற்று கிழமையுடன் ஜமாஅத் தொழுகைகள் நடைபெறாது மூடப்பட்டுள்ளதாகவும் அந்த மஸ்ஜிதின் தினமும் தொழுகையில் ஈடுபட்டுவந்த நபர் முஹமத் lankamuslim.org க்கு தெரிவித்தார்.
மேலும் அவர் வழங்கிய தகவலில் பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள அல் பௌசுல் அக்பர் மதரஸா என்ற மாலை நேர சிறுவர் அரபு பாடசாலை ஒரு வருடத்துக்கு முன்னர் அதன் பின் பகுதியில் நிர்மானிக்கப்பட்ட மஸ்ஜித் ஒன்றுடன் மஸ்ஜித்தாக இயங்கிவந்ததாகவும் அந்த மாவத்தையில் மஸ்ஜித்துக்கு சற்று தொலைவில் வசிக்கும் ஒரு பெரும்பான்மை இனத்தவர் மஸ்ஜிதின் முன்பாக வாகங்கள் விடுவதால் தம்மை சிரமத்துக்கு உள்ளாக்குவதாக முறையிட்டுவந்துள்ளார் விரிவாக Read the rest of this entry »
மேற்கத்திய ஆக்கிரமிப்பினை எதிர்த்து செயல்பட அனைத்து முஸ்லிம்களும் அணி திரளவேண்டும்
மேற்கத்திய நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உலகிலுள்ள சகல முஸ்லிம்களும் அணி திரளவேண்டும் என சர்வமத ஒன்றியத்தின் தலைவர் பேராசிரியர் கம்புறுகமுவே வஜிர தேரர் அழைப்பு விடுத்துள்ளார். சமாதனத்தைப் பேணுவதற்காக நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை முஸ்லிம் நாடுகள் மீது தொடர்ச்சியான அத்துமீறல்களை மேற்கொண்டு சமாதனத்தை சீர் குலைத்து வருவதாகவும் இதற்கு எதிராக சர்வதேச மக்கள் குரல் எழுப்ப வேண்டும் என்றும் அவர் கோட்டுகொண்டுள்ளார்.
மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற முஸ்லிம் நாடுகளை ஆக்கிரமிக்கும் மேற்கத்தியவாதிகள் தொடர்பிலான கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது போன்று பின்னர் மேற்கு ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலான தலைமையில் இடம்பெற்றுள்ளது.
உதவிகளின் போது கவனத்தில் கொள்வோம்
இன்று இலங்கையில் பல சிறிய பெரிய உள்ளநாட்டு வெளிநாட்டு அரச சார்பற்ற முஸ்லிம் நிறுவங்கள் செயல்பட்டு வருகின்றது அதன் சேவைகள் போதுமானதாக இல்லாவிட்டாலும் கல்வி ஊக்குவிப்பு தொடக்கம் வறியவர்களுக்கு உதவிகளை வழங்குதல் அனர்த்தங்களில் போது உதவுதல் என்று பாராட்டத்தக்க முறையில் அமைத்துள்ளது அவற்றை பாராட்டாமல் இருக்கமுடியாது ஆனாலும்
அந்த நிறுவங்களில் உதவிகளில் போது உதவிகளை பெறுவோர் பின்னர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக சுட்டிகாட்டப் பட்டுள்ளது குறிப்பாக அவ்வாறான நிறுவங்களின் இணையத்தளங்களில் அவற்றின் வெளியீடுகளில் உதவிகள் பெற்றவர்களின் படங்கள் , உதவிகள் வழங்கப்படும் போது பிடிக்கப்பட்ட படங்கள் என்பன பார்வைக்கு பதிவு செய்யப்படுவதால் விரிவாக Read the rest of this entry »
கிழக்கு ஆசிரியர் இடமாற்றத்தை இடைநிறுத்த உத்தரவு
கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
அரச தரப்பு பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற போது இந்த இடமாற்றத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, விஜித் விஜிதமுனி சொய்சா, விநாயகமூர்த்தி முரளிதரன்,எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா எச்.எம்.எம்.ஹரீஸ் பைசால் காசீம் மற்றும் ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர் என்று தமிழ் மிரர் செய்தி தெரிவிக்கின்றது.
அமெரிக்கநீதிமன்றம் அழைப்பாணையை நிராகரிப்பு
அமெரிக்க டெக்ஸாஸ் பிராந்திய நீதிமன்றம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய அழைப்பாணையை ஏற்றுக்கொள்ளாது தவிர்த்துள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. நிதியமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் இதனை தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுடனான மோதல்களின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சில கொலைச்சம்பவங்கள் குறித்து நட்டயீட்டினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் விரிவாக Read the rest of this entry »
மன்னாரில் பெற்றோலிய ஆய்வுக்கு இந்தியா ,சீனாவுடன் , ரஷ்யாவும்
மன்னாரில் கேஸ் மற்றும் எண்ணெய் ஆய்வுக்கு ஒத்துழைப்பை வழங்க உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு – GAS- நிறுவனங்களில் ஒன்றான ரஷ்ய நாட்டு கேஸ்பிறோம் -Gazprom- நிறுவனம் முன்வந்துள்ளது நிறுவனத்தின் தலைவர் அலெக்சி மில்லர் -Alexei Miller- தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு தனது கம்பனியின் நிபுணர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அலெக்சி தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »
ஆயர்மாருக்கு வத்திக்கான் அழைப்பு: சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகம்
கத்தோலிக்க பாதிரிமாரால் சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களை தடுப்பதற்கு புதிய நெறிமுறைகளை உருவாக்குவதற்காக ரோமில் அடுத்த மாதம் நடத்தப்படவுள்ள மூன்று நாள் மாநாட்டுக்காக உலகெங்கிலுமிருந்து கத்தோலிக்க ஆயர்மார் 200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரோமிலுள்ள ஜெய்சுயிட் பல்கலைக்கழகத்தில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ரோமுக்குப் புறப்படுவதற்கு முன்னதாக, மாநாட்டில் பங்குகொள்ளவுள்ள ஆயர்மார் அனைவரும், தத்தமது பிரதேசங்களில், கூட்டங்களை நடத்தி உள்ளூரில் பாதிக்கப்பட்டவர்களுடனான சந்திப்புகளை மேற்கொள்ள வேண்டுமென வத்திக்கான் கூறுகிறது விரிவாக Read the rest of this entry »
அளவெட்டித் தாக்குதலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம்
அளவெட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரசாரக் கூட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. என்று அதன் செயலாளர் நாயகம் ஹசன் அலி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றது
அந்த கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் அதிகளவு தேர்தல் வன்முறைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முகம் கொடுத்தது Read the rest of this entry »







