Lankamuslim.org

One World One Ummah

Archive for June 2011

காத்தான்குடி செய்திகளும் பிராந்திய அரசியலும்

with 16 comments

M.ஷாமில் முஹம்மட்
கடந்த வியாழகிழமை 23.06.2010  தொடக்கம் BBC தமிழ் ,ஆங்கிலம் மற்றும்  உள்நாட்டு ஆங்கில , தமிழ் , சிங்கள ஊடகங்களிலும் காத்தான்குடி தொடர்பான செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன BBC தமிழ்  ‘காத்தான்குடி: பள்ளிப்பெண்கள் தடுத்துவைப்பு’ என்ற தலைப்பில் இது தொடர்பான அதன் முதல் செய்தியை வெளிட்டது இலங்கையின் கிழக்கு மாகாணம் தொடர்பில் தீவிரவாதத்துடனும், தெற்காசியாவின் பயங்கரவாத அமைப்புகள் என்று தெரிவிக்கப்பட்டும் அமைப்புகளுடனும் தொடர்பு படுத்தி பல செய்திகள் இதற்கு முன்னர் வெளிவந்துள்ளன.

அவைகள் உரிய முறையில் இலங்கையின் அரச தரப்பினால் மறுக்கப்பட்டும் உள்ளன இந்த நிலையில் கடந்த வியாழகிழமை தொடக்கம் மீண்டும் கிழக்கு மாகாண காத்தான்குடி பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஒன்றுக்கு பெரிய அளவிலான ஊடக கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. கடும்போக்கு இஸ்லாம் ,Radical Islam இஸ்லாமிய அடிப்படைவாதம் ,Islamic Fundamentalism என்ற வார்த்தை பிரயோகங்களுடன் மஸ்ஜித்  இஸ்லாமிய அலுவலகம் என்பன வற்றை இணைத்தும் தீவிரவாதம், கடும்போக்கு என்பனவற்றை இஸ்லாமிய வாலிபர்கள் என்பதுடன் இணைத்தும் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 30, 2011 at 8:43 pm

முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு கால விடுமுறை ரத்து ?

with 3 comments

முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு காலத்தில் வழங்கப்படும் விடுமுறையை ரத்துச்செய்வது குறித்து கல்வியமைச்சு ஆராய்வதாக தெரிவிக்கப்படுகிறது. நீண்ட காலமாக முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு காலத்தில் விடுமுறை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே கல்வியமைச்சு முஸ்லிம் பாடசாலைகளுக்கான இந்த நோன்புகால விடுமுறையை ரத்துச் செய்வது குறித்து ஆராய்ந்துள்ளது.

கல்வியமைச்சில் நேற்று மாலை இதுகுறித்த முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுகின்றது கல்விமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் நடைபெற்றுள்ள இக்கலந்துரையாடலில் முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 30, 2011 at 5:00 pm

ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றது

leave a comment »

காத்தான்குடி தொடர்பான  உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களின் செய்திகள் தொடர்பிலும் அதன் விளைவுகள் தொடர்பிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தொடர்ந்து அவதானித்து வருகின்றது .

சில ஊடகங்களில் காத்தான்குடியை சேர்ந்த இரண்டு முஸ்லிம் மாணவிகள் தனியார் இணைய மையம் ஒன்றில் கலாச்சாரத்துக்கு அபகீர்த்தியதாக கூறி, ஒரு பெண் மற்றும் இரு இளைஞர்கள் அவர்களை தடுத்து வைத்து தாக்கியதாகவும், பின்னர் அவர்களை காத்தான்குடியின் பள்ளிவாசல் சம்மேளன அலுவலகத்திலும் வைத்து, பொதுமக்களைக் கூட்டி பிரச்சினையை பெரிது படுத்த முயன்றதாகவும், பின்னர் காவல்துறையினர் வந்து அவர்களை மீட்டதாகவும் செய்திகள் வெளியாகின விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 30, 2011 at 3:47 pm

அரச காணிகளை சட்டவிரோதமாக விற்பனை: அமைச்சர் தென்னக்கோன்

leave a comment »

அரச காணிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஒருசிலர் ஈடுபட்டுவருவதால் அது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார் என்று செய்திகள தெரிவிகின்றன.

புத்தளம், அநுராதபுரம், இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அரசின் காணிகள் அதிகம் உள்ளதால் குறித்த மாவட்டங்களில் வணிக செயற்பாட்டுக்காகவோ, குடிமனை அமைப்பதற்காகவோ காணிகளை கொள்வனவு செய்யும் போது மிகுந்து அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Written by lankamuslim

June 30, 2011 at 1:15 pm

வாசகர் ஆக்கம்: காத்தான்குடி மீது BBC ஊடகவியலாளருக்கு ஏன் இந்த காழ்ப்புணர்வு?

with 5 comments

றிசாத் இப்னு ஆதம்
காத்தான்குடி இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற குறைந்த நிலப்பரப்பில் அதிக சனத்தொகையை கொண்ட ஒரு சிறிய அழகிய நகரம். இங்கு வாழ்கின்ற அனைத்து மக்களும் முஸ்லிம்களாக இருப்பதாலும், இங்கு காலம் காலமாக இருந்து வருகின்ற சமூக, கலாச்சார, பாரம்பரிய மற்றும் மார்க்க ரீதியிலான தலைமைத்துவ வழிகாட்டலின் விளைவாலும் இந்த நகரம் ஏனைய நகரங்களை விடவும் ஒரு தனித்துவ நகராக மிளிர்ந்து காணப்படுகின்றது.

வர்த்தக ரீதியில் கிழக்கிலங்கையின் முக்கிய நகராகவும், தலை சிறந்த வர்த்தகர்களையும் சிறந்த சிந்தனையாளர்களையும் தன்னகத்தே கொண்டு அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றம் கண்டு வருகின்றது என்றால் அது மிகையாகாது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 30, 2011 at 8:40 am

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்வைக்கும் தீர்வே இறுதியானது

leave a comment »

ஜனாதிபதி அமைக்கப் போகும் பாராளுமன்றத் தெரிவுக்குழு, இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வை முன்வைக்கிறதோ அதுவே இறுதியானதும் அறுதியானதுமான தீர்வாக இருக்கும் என்று ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  அந்த பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்வைக்கும் தீர்வு எதுவாக இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த நான் தயார் என்றும் அவர் கூறியுள்ளார் ஊடகங்களின் ஆசிரியர்களை நேற்று அலரி மாளிகையில் சந்தித்த போது அவர் இதனைக் கூறியுள்ளார் .

பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தீர்வு குறித்து அரசியல் கட்சிகள் பேசிவரும் போதே சமாந்தரமாகத் தமிழ்க் கட்சிகளுடன் தீர்வு குறித்து அரசு பேச்சு நடத்தும் என்றும் ஜனாதிபதி.தமிழ்க் கட்சிகளுடன் இப்போது நடத்தப்படும் பேச்சு சில விடயங்களில் இணக்கம் காண்பதற்கானது மட்டுமே தவிர அது இறுதியான தீர்வாக இருக்காது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 29, 2011 at 11:00 am

அலரிமாளிகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசு தரப்பு 8 ஆம் சுற்றில்

leave a comment »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசு தரப்புக்கும் இடையான 8 ஆம் சுற்று பேச்சு வார்த்தை முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டது போன்று இன்று மாலை இடம்பெறவுள்ளது.

அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் அரசு சார்பில் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், நிமால் சிறிபால டி சில்வா பாராளுமன்ற உறுப்பினர்களான சச்சின் டி வாஸ் குணவர்த்தன, ரஜீவ விஜேசிங்க ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சுரேஷ்பிரேமச்சந்திரன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 29, 2011 at 10:28 am

கிண்ணியாவில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது

leave a comment »

கிண்ணியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட 26 பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளதுடன் பாடசாலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா வலய கல்வி பணிப்பாளர் பாடசாலை நிகழ்வொன்றில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பும் சந்தர்ப்பத்தில் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Written by lankamuslim

June 29, 2011 at 10:27 am

தப்பியோடி வந்த தமிழ் மக்களை புலிகள் சுட்டுக் கொன்றனர்: ஜனாதிபதி

leave a comment »

இறுதிக்கட்ட யுத்தம் முல்லைத் தீவில் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது நாம் ஆகாயத் திற்கு அனுப்பிய விமானியில்லாத தன்னிச்சையில் இயங்கும் விமானம் அரசாங்கத்தரப்புக்கு தப்பியோடி வரும் மக்களை எல்.ரி.ரி.ஈயினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யும் உண்மைக் காட்சிகளை தத்ரூபமாக படமெடுத்துள்ளது”

என தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்த வீடியோ காட்சிகளை இலங்கையில் உள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகளை அழைத்து, அவர்கள் முன்னிலையில் அந்தக் காட்சிகளை பார்த்தேன் என்று கூறினார். இதிலிருந்து வெளிநாட்டு அரசாங்கங்கள் எல்.ரி.ரி.ஈயினரின் கொடுமைகளை நன்கு புரிந்து கொண்டு ள்ளார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்தார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 29, 2011 at 9:50 am

நாம் நீதிகேட்டு வாதாடவும் போராடவும் தயங்காமல் தயாராகவுள்ளோம்: பைசர் முஸ்தபா

with 2 comments

அரசாங்கத்தின் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தில் கீழ் ஊவா மாகாண முஸ்லிம் பாடசாலை எதுவும் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் கருத்துரைத்துள்ள தொழில்நுட்ப ஆராட்சி பிரதிமைச்சர் பைசர் முஸ்தபா 1000 பாடசாலைகளை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஊவா மாகாணத்தில் ஒரு முஸ்லிம் படசாளையேனும் தெரிவு செய்யப்படாமை குறித்து முன்னெடுக்க படும் நடவடிக்கைகள் வெற்றி தராவிடின் நீதிமன்றம் சென்று நியாயம் கோரவும் தயங்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவரின் உரையில் ஜனாதிபதின் போதனை படி சகலருக்கும் சரிசமமான சேவைகள் செய்யப்படவேண்டும் தனிப்பட்ட ஒரு சாராருக்கு அநீதி இழைக்கப் படக்கூடாது. அதை நாம் அனுமதிக்க முடியாது அப்படி எதுவும் பட்சத்தில் நாம் நீதிகேட்டு வாதாடவும் போராடவும் தயங்காமல் தயாராகவுள்ளோம்  விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 29, 2011 at 9:13 am

யாழ் ஒஸ்மானியாவின் வரலாறு திரிந்து போகும் நிலை மாறுமா?

with 9 comments

முஹம்மது ஜான்ஸின்
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி 1963ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலைக்கு ஒரு கீதம் வேண்டுமென்ற அவசியம் ஏற்பட அப்போது அங்கு கடமையாற்றிய தமிழ்ப்புலமைமிக்க ஆசிரியர் அமரர் அசாரியஸ் பொர்ணான்டோ அவர்கள் உடனடியாக ஒரு பாடசாலைக் கீதத்தை இயற்றிக் கொடுத்தார்கள்.

வளர்கலை மாமதி யோடிளந் தாரகை வானக மேலொளி மல்க ,வல்லோனின் மார்க்கமதை யோது நம் சாலை வளமே வாசிகள் நல்க, வந்தனை மொழிமெய் சிந்தனை மூன்றும் வன்மை பெறஞ்சலி செய்வோம். வகைபல கடமை கண்யம் வாகை புனை கட்டுப்பாட்டில் வாழின்ப யாழ் ஒஸ்மான்யா! விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 28, 2011 at 10:03 pm

பேச்சில் முஸ்லிம் தரப்பு கலந்துகொள்ள வேண்டுமென்ற கோரிக்கை நியாயமானது: பிரதமர்

leave a comment »

அரசாங்கத்திற்கும் தமிழ் கூட்டமைப்புகளுக்கும் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் அரசியல் தரப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டுமென்ற அவர்களினது கோரிக்கை நியாயமானதாகும் என பிரதமர் தி.மு. ஜயரத்ன தெரிவித்தார்.

இந்த நாட்டில் ஐந்து வகையிலான இனத்தவர்கள் வாழ்கின்றனர். இந்த வகையில் பேச்சுவார்த்தைகள் மூலம் வடக்கில் பெற்றுக் கொடுக்கப்படும் தீர்வுகள் ஏனைய இனங்களையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். நேற்று -27.6.2011- கண்டிக்கு விஜயம் செய்த பிரதமர் மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களின் ஆசியைப் விரிவாக  Read the rest of this entry »

Written by lankamuslim

June 28, 2011 at 8:17 am

ஹிங்குராணை விவசாயிகளின் காணிப் பிரச்சினைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு கிடைக்குமா ?

leave a comment »

ஹிங்குராணை சீனித் தொழிச்சாலை தொடர்பான விவசாயிகளின் காணிப் பிரச்சினைகளை ஒரு மதத்திற்குள் தீர்வு காணுமாறு அமைச்சர் தயாசிற திஸ்சேரா மீண்டும் அறிவுறுத்தியுள்ளார் ஹிங்குராணை சீனித் தொழிச்சாலைக்கும் அந்த பிரதேச விவசாயிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான காணி பிரச்சினை நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வருவதுடன் காணி விடயத்தில் இராணுவம் போலீஸ் பிரிவுகள் தலையிடும் சம்பங்களும் இடம்பெற்றுள்ளது என்று சுட்டிக் கட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் ஆகியோர் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரசாங்க வளங்கள் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனை குழு கூட்டத்தில் விரிவாக எடுத்துரைத்துள்ளனர் அங்கு உரையாற்றியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மல்லிகைத்தீவு, வாங்காமம், ஆலம்குலம், குடுவில் காட்டுவெளி , பொத்தன் வெளி ஆகிய பிரதேச விவசாயிகள் வீணாக நீண்ட காலமாக அலைகழிக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 28, 2011 at 8:16 am

ரிஸானா தண்டனை தொடர்பான தகவல் மறுக்கபட்டுள்ளது

with 5 comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக்கின் மரண தண்டனையை நிறைவேற்ற சவூதி அரேபிய அதிகாரிகள் கட்டளையிட்டுள்ளதாக நேற்று SMS ஊடாக பரவிய செய்தியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மறுத்துள்ளது மேலும் தாம் இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக்கை விடுதலை செய்ய கடுமையாக முயன்றுவருவதாகவும் தெரிவித்துள்ளது. நேற்று மற்றும் நேற்று முன்தினம் சில வெளிநாட்டு ஆங்கில இணையத்தளத்திலும்  இந்த மரண தண்டனை செய்தி வெளியானமை குறிபிடத்தக்கது .

குழந்தையொன்றை கொலை செய்தாரென்ற குற்றச்சாட்டின் பேரில் 2005 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி ரிஸானா நபீக் சவூதி அரேபியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தவாத்மி மேல் நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரிஸானா நபீக்கு மரண தண்டனை விதித்திருந்தது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 28, 2011 at 8:15 am

ஆசிய – ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் புதிய தலைவராக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்

leave a comment »

ஆசிய – ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின்- the Asian and African Legal Consultative Organisation- புதிய தலைவராக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்துள்ளார் . ஆசிய – ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் ஐம்பதாவது வருடாந்த அமர்வு கொழும்பு சினமன்லேக் சைட் ஹோட்டலில் நேற்று ஆரம்பமானது.

இச்சர்வதேச அமர்வை ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் நடைபெற்ற பிற்பகல் அமர்வின்போது இந்த அமைப்பின் தலைவராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்துள்ளார். நேற்று முதல் ஜுலை மாதம் முதலாம் திகதி வரையும் நடைபெறவிருக்கும் இந்த சர்வதேச அமர்வை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுக் காலை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 28, 2011 at 8:02 am

மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த வருட இறுதிக்குள் பூர்த்திதியாகும்

leave a comment »

மக்கள் தொகை மற்றும் வீட்டு மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இரண்டு கட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் தொகை மதிப்பீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட இந்த இரண்டு கட்டங்களும் வெற்றிகரமாக பூர்த்தியடைந்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் எச்.ஆர் குணசேகர தெரிவித்துள்ளார்.

அனைத்து வீடுகளுக்கும் கட்டடங்களுக்கும் தற்போது இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. இறுதி கட்டமாக சனத்தொகையினை கணக்கிடும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. பெரும்பாலும் இந்த வருட இறுதிக்குள் இந்த பணியினை பூர்த்தி செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Written by lankamuslim

June 27, 2011 at 5:03 pm

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் அங்கம் வகிக்குமா

with one comment

இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து ஆராய நியமிக்கப் படவுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது குறித்து முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடம் கூடி முடிவு எடுக்கும் இருந்தும், பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கத் தேவையில்லை என்பதே பெரும்பாலான கட்சி முக்கியஸ்தர்களின் கருத்தாக உள்ளது.

ஏனென்றால், முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் மாநாடு உட்பட பல குழுக்களிடம் தனது நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. இனப்பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து தீர்வு யோசனைகளை முன்வைக்க நியமிக்கப்படவுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கம் வகிக்குமா? எனக் கேட்கப்பட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 27, 2011 at 4:54 pm

கண்டி நக்கில்ஸ் காட்டுத்தீ

leave a comment »

கண்டி மாவட்ட நக்கில்ஸ் வனப் பகுதியிலும், நுவரெலிய மாவட்டத்தின் ஹங்குரன்கெத்த மற்றும் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள காடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் சுமார் 75 ஏக்கர் காடுகள் அழிவுற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய மாவட்ட இணைப்பாளர்கள் நேற்றுத் தெரிவித்திருந்தனர்.

இக்காட்டுத்தீயினால் நக்கில்ஸ் வனத்தில் சுமார் 60 ஏக்கர்களும், ஹங்குரன்கெத்த மற்றும் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவிகளிலுள்ள காடு களில் சுமார் 15 ஏக்கர்களும் எரிந்து அழிந்துள்ளதாகவும் கூறினர் அதேவேளை இன்று காட்டுத் தீயினை கட்டுப்படுத்த இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குழுக்களின் தலைவர் அன்ரூ விஜயசூர்ய தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

June 27, 2011 at 3:33 pm

அக்குரனையில் உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் சூடு பிடிக்கின்றது

with one comment

ஜூலை 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தகள் நடை பெறப்போகும் பிரதேசங்களில்   சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது ஜூலை 23 ஆம் திகதி 64 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தகள் இடம்பெறவுள்ளன. இதில் வட மாகாணத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள் ஆளும் தரப்புடன் இணைந்தும் தனித்தும் போட்டியிடுகின்றன.

அமைச்சர் ரிஷாத் தலைமயிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மன்னார் பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அதேவேளை கண்டி அக்குரனை  பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் உச்சாகமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

Written by lankamuslim

June 26, 2011 at 7:50 pm

காத்தான்குடி சம்மேளன அறிக்கை

with 5 comments

கடந்த வியாழகிழமை BBC தமிழ் மற்றும் மேலும் சில ஊடகங்களில் காத்தான்குடியை சேர்ந்த இரண்டு முஸ்லிம் மாணவிகள் தனியார் இணைய மையம் ஒன்றில் ஒன்றில் ஆபாச படத்தைப் பார்த்ததாகக் கூறி, காத்தான்குடியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் அவர்களை பின் தொடர்ந்து, அவர்களை தடுத்து வைத்து தாக்கியதாகவும், பின்னர் அவர்களை காத்தான்குடியின் பள்ளிவாசல் சம்மேளன அலுவலகத்திலும் வைத்து, பொதுமக்களைக் கூட்டி பிரச்சினையை பெரிது படுத்த முயன்றதாகவும், பின்னர் காவல்துறையினர் வந்து அவர்களை மீட்டதாகவும் செய்திகள்களை வெளியிட்டன.

இது தொடர்பாக இன்று -26.6.2011 -காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளம் பத்திரிகை மாநாடொன்றை நடாத்தி விடயத்தை தெளிவு படுத்தியுள்ளது. அங்கு சம்மேளம் வெளியிட்ட அறிக்கை சம்மேளனத்தின் உப செயலாளர் ஏ.எல். இசட். பௌஹ்மி ஊடாக எமது காத்தான்குடி செய்தியாளர் lankamuslim.org க்கு தருகின்றார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 26, 2011 at 7:20 pm

‘இளம் யுவதிகள் கடத்தப்படும் அபாயம்’

leave a comment »

இலங்கையில் பெண்கள் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படும் அபாயம் அதிகரித்து இருப்பதால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அறிமுகமற்றோருடன் அனுப்பக் கூடாது என்று தேசிய சிறார் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திசாயக்க கூறியுள்ளார்.

வடக்கே முல்லைத்தீவைச் சேர்ந்த சிறுமியும் பண்டாரவளையைச் சேர்ந்த சிறுமியும் அடங்கலாக சில யுவதிகள் கொழும்பில் விபச்சார விடுதியொன்றிலிருந்து அண்மையில் மீட்கப்பட்டுள்ளனர் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 26, 2011 at 12:33 pm

தொப்பி அணிந்த விண்ணப்பங்களை நிராகரித்தமை அடிப்படை மனித உரிமை மீறல் : நீதியமைச்சர்

with 7 comments

தொப்பி அணிந்து விண்ணப்பிக்கப்பட்ட அடையாள அட்டை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை அடிப்படை மனித உரிமை மீறல் என்று நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக தொப்பி அணிந்த நிலையில் மாகோள அனாதை இல்ல மாணவர்கள் சமர்ப்பித்த விண்ணபங்கள் நிராகரிக்கப் பட்டமை தொடர்பாக நீதியமைச்சர் ரவூப் ஹகீம் ஆட்பதிவு திணைக்களப் பணிப்பாளருக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

தொப்பி அணிந்தமைக்காக நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை ஏற்றுகொண்டு அவர்களுக்கான தேசிய அடையாள அட்டையை துரிதமாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதியமைச்சர் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு எழுதியுள்ள அவசரகடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

June 26, 2011 at 11:27 am

இலங்கை மாணவர்களுக்கு அமெரிக்க தலைமைத்துவப் பயிற்சி 6 முஸ்லிம் மாணவர்கள்

leave a comment »

அமெரிக்காவின் ஹாவார்ட் மற்றும் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகங்களில், சர்வதேச மாணவர்களுக்கான இரண்டு வாரகால தலைமைத்துவ பயிற்சி நெறி நடைபெறவுள்ளது 2012 நடைமுறை தலைமைத்துவ மாநாடு என்ற தலைப்பில் உலகின் குறித்த 30 நாடுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 300 மாணவ மாணவியர் பங்குகொள்வார்கள் என்று அறிவிக்கபட்டுள்ளது.

2012 “செயலில் தலைமைத்துவ உச்சி மாநாடு’ என்ற இந்த மாநாடு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த முறை இலங்கையிலிருந்து இந்த மாநாட்டில் 33 மாணவர்கள் பங்குகொள்ளவுள்ளனர் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 25, 2011 at 3:33 pm

மேல் மாகாண பட்டதாரிகளுக்கு நியமனங்கள்

leave a comment »

160 மேல் மாகாண பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளது அதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாகவும் .2008 ஆம் ஆண்டு ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த மேல் மாகாண பட்டதாரிகள் இரண்டாயிரத்து 709 பேருக்கு இதுவரை நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்

வழங்கப் படவுள்ள 160 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் விரைவில் மேற்கொள்ளவுள்ளதாகவும் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 25, 2011 at 3:06 pm

வெதுப்பகத்தில் தனது குழந்தையை போட்டு கொலை செய்த அமெரிக்கத் தாய்

with one comment

ஏ.அப்துல்லாஹ்:அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தின் சாக்ரமென்டோ நகரில் ஒரு தாய் தனது குழந்தையை மைக்ரோவேவ் அவனில் -வெதுப்பகத்தில்- வைத்து மூன்றாவது டிக்ரீ – 3rd degree burn- வரை  வெதும்ப செய்யது கொலை செய்துள்ளார். தான் பெற்று 6 வாரங்களே ஆன தனது குழந்தை அழுது கொண்டே இருந்த காரணத்தால் மைக்ரோவேவ்  வெதுப்பகத்தில் போட்டு கொலை செய்துள்ளார் இந்த கொலை அமெரிக்காவில் அறியப்பட்ட மூன்றாவது மைக்ரோவேவ் வெதுப்பக குழந்தை படுகொலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு காரணமான தனது நண்பர் தொடர்பை துண்டித்தமையால் குழந்தையின் அருமை தாய் இந்த நாகரீக ! முடிவை எடுத்துள்ளார். 29 வயதான கா யேன்ங். என்ற இந்த அமெரிக்க பெண் தற்போது கைதாகியுள்ளார் கடந்த மார்ச் 17ஆம் தேதி இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 24, 2011 at 5:13 pm

சவூதி அரேபிய உயர்மட்ட குழு இலங்கையில்

with one comment

இலங்கை அரசுக்கும் சவூதி அரேபியாவுக்குமிடையில் நீண்ட காலமாக உறவு நிலவி வருகின்ற நிலையில் அந்த உறவை மேலும் பலப்படுத்தி இலங்கையில் முதலீடுகளையும் பல்வேறுபட்ட பொதுச் சேவைகளையும் நோக்காகக் கொண்டு சவூதி அரேபியாவைச் சேர்ந்த உயர்மட்ட குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

இக்குழுவினர் வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பாகவும், வடகிழக்கு புனர்வாழ்வு தொடர்பாகவும், வடகிழக்கில் அழிக்கப்பட்ட பள்ளிவாசல்களை கட்டியெழுப்புவது தொடர்பாகவும் அமைச்சர்களோடும் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரநிதிகளோடும் ஏனைய அமைப்புக்களோடும் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 24, 2011 at 4:19 pm

கூட்டமைப்பு அரச தரப்பு பேச்சு தொடர்பில் கூட்டறிக்கை வெளிவரும்

leave a comment »

அரசுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான ஏழாவது கட்ட பேச்சுவார்த்தைகள் நேற்று 23ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இனப் பிரச்சினை தீர்வை அடிப்படை யாகக் கொண்ட அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது அதிகாரப்பகிர்வை அடிப்படை யாகக் கொண்டு பேச்சு நடத்தப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் நேற்று தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முஸ்லிம்கள் பேச்சில் ஒரு தரப்பாக பங்குகொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அரசாங்கத்திற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமிடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் தரப்பும் உள்வாங்கப்பட்டு விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 24, 2011 at 2:53 pm

தாய்மாரின் கண்ணீரை துடைத்த எம்மை மின்சார கதிரைக்கு கொண்டு செல்ல சதி

leave a comment »

நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு பொருளாதாரத்தில் கட்டியெழுப்ப முற்படும் போது சர்வதேசத்தின் உறுதுணையுடன் காலை வாரி விடும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

‘செனல்-4′, தாருஸ்மன் அறிக்கை என எமக்கெதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, அதில் குறிப்பாக எனது பெயருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ என எம் மூவரது பெயர்களே குறிப்பிடப்படுகின்றன விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 24, 2011 at 11:58 am

கவிதை எழுதிய கைகளும் காய்ந்து போகாத மையும்: எகிப்திய எதிபார்ப்புக்கள்

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
“உன்னால் முடியுமானால் நீ செய்யவே வேண்டும்” (If you can, you must do ) -முஹமது ஹவாஸ் எகிப்து எழுதிய புதுக் கவிதை ஒரு காவியமாகுமாஎகிப்து எழுதிய புதுக் கவிதை காவியமாகுமா ?என்ற எனது கட்டுரையில் எகிப்தில் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்கள் எப்போது நடைபெறப் போகிறது அல்லது மக்கள் எழுச்சியின் வெற்றிகள் எதிர்பார்த்த பலனை தருமா என்ற ஆதங்கத்துடன் “இராணுவ தலைமை இப்போது முபாரக்கின் கூட்டாளியிடமே இருக்கிறது என்றாலும் முபாரக்குக்கு மட்டுப்படுத்தப்படாத அதிகாரங்களை வழங்கிய அரசியல் சாசனம் இடைநிறுத்தப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு சட்ட வரைவும் அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடும் முறைமை பற்றியும் ஆராய ஒரு சபை உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்தியுடன் இன்னும் ஆறு மாதம் மக்கள் இராணுவ நிர்வாகத்தில் தனது தலைவிதிகளை நிர்ணயிக்கும் சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கு காத்திருக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தேன் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 24, 2011 at 11:58 am

பேராசிரியர் அப்துல்லாஹ் இலங்கையில்

leave a comment »

இந்திய பேராசிரியர் அப்துல்லாஹ் -பெரியார்தாசன்-  இலங்கை வந்தடைந்துள்ளார். இவர் இன்று வியாழக்கிழமை காலை கொழும்பை அடைத்தார் இவர் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சென்று இஸ்லாமிய பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார்.

அமெரிக்க லொஸ் ஏஞ்ஜலிஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பகுதி நேர விரிவுரையாளராகக் கடமையாற்றும் அப்துல்லாஹ் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவவியல் பேராசிரியராக நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர் திராவிடர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்து வந்தமையும் பின்னர் பௌத்தத்தை ஏற்றுகொண்டு வாழ்ந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

June 23, 2011 at 10:54 pm

உலமாக்களுக்கான இரு நாள் பயிற்சிக் கருத்தரங்கு

with one comment

சமூக அபிவிருத்திக்கான உலமாக்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் உலமாக்களுக்கான ஒரு விஷேட பயிற்சிக் கருத்தரங்கு ஒன்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச கலாச்சார நிலையத்தின் இலங்கைக் கிளையுடன் இணைந்து நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என கருந்தரங்கு இணைப்பாளர் அஷ்-ஷைக் தையிப் ஹைதர் அலி தொவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தொரிவிக்கையில்: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தவைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம்.ரிஸ்வி முஃப்தி அவர்களின் தலைமையில் நடவிருக்கும் இக்கருத்ரங்கு “இன்ஷா அல்லாஹ்” விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 23, 2011 at 5:12 pm

முஸ்லிம்கள் எதிர்கொள்ளப்போகும் பிரச்சினைகளை கையாள ஒரு பொறிமுறை வேண்டும்

with 26 comments

M.ஷாமில் முஹம்மட்
கொழும்பு தெஹிவளை பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றுக்குள் பெளத்த மதகுருமார்கள் சிலர் நுழைந்து அதனை மூடிவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த அச்சுறுத்தல் பின்னர் அதை தொடர்ந்த அச்சுறுத்தல்கள் காரணமா குறித்த மஸ்ஜித் அதன் ஜமாஅத் தொழுகைகளை இடைநிறுத்தியுள்ளது என்ற செய்தி நம் அனைவருக்கும் தெரியும்.

ஒரு நாட்டில் ஒரு இனத்தின் உரிமைகளுக்காக அந்த இனத்தின் நிறுவங்கள் குரல் எழுப்புவது அதன் உரிமை. ஆனால் அந்த உரிமை குரல்கள் மற்ற இனத்தின்  அல்லது மதத்தின் உரிமைகளை முடக்குவதாகவே அதன் குரல் வலையை நசுக்குவதாகவே இருக்குமாக இருந்தால் அது தெளிவான இனவாதமாக மாறிவிடுகின்றது. இலங்கை சுதந்திரம் அடைந்த 1949 ஆம் ஆண்டில் இருந்து இலங்கையை எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு இலங்கை பெளத்த நாடு என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் 1972 ஆம்  Read the rest of this entry »

Written by lankamuslim

June 23, 2011 at 12:08 pm

யாழ் முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பில் விசேட சட்டமூலம் நடக்குமா ?

leave a comment »

ஏ. அப்துல்லாஹ்
மீள் குடியேற்றம் அதனுடன் தொடர்பான யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன பிரதிநிதிகளுக்கு மிடையிலான சந்திப்பு ஒன்று இன்று புதன்கிழமை 22 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் , அமைச்சர் பஷீர் சேகு தாவூத், பாராளுமன்ற உறுப்பினர்களான ஹஸன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக், ஆகியோர் கலந்துகொண்துள்ளனர் இந்த சந்திப்பு யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் வேண்டுகோளின் பேரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 22, 2011 at 7:11 pm

மணியோசை வரும் முன்னே. தோர்தல் வரும் பின்னே!

with 2 comments

எம். அப்துல்லாஹ்
அண்மையில் வை.எம்.எம்.ஏ. யின் 61 வது மாநாட்டில் உரையாற்றிய நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் வடக்கு மக்கள் மீள்குடியேற்றத்துக்காக அரசாங்கத்தை எதிர்பார் த்திருக்க முடியாதென்றும் தொன்டு நிறுவனங்கள் மற்றும் புத்திஜீவிகள் அவர்களது மீள்குடியேற்றத்துக்கு உதவவேண்டும் என்பதாக கூறியிருந்தார்.

அமைச்சர்ரவுப் ஹக்கீம் அவர்கள் இவ்வாறு கூறியிருப்பதை வரவேற்க முடியாது என வடக்கு முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர். முஸ்லிம்களின் வெளியேற்றத்துக்கான காரணங்களில் ஒன்றாக முஸ்லிம் காங்கிரஸின் தோற்றமும் கிழக்கில் அதன் செயற்பாடுகளும் அமைந்திருந்தன. வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றத்தினால் அடைந்த இன்னல்கள் சொல்லிலடங்காது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 22, 2011 at 1:05 pm

முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி என்ற மனப்பாங்கு ஏற்பட்டு வருகின்றது

with 3 comments

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி என்ற மனப்பாங்கு பெரும்பான்மையான மக்களிடம் ஏற்பட்டு வருகின்றது வடக்கு, கிழக்குக்கு வெளியில் முதலாவது உள்ளூராட்சி மன்ற ஆட்சியை அக்குறணை பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்படுத்தும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி என்ற மனப்பாங்கு பெரும்பான்மையான மக்களிடம் ஏற்பட்டு வருகின்றது கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நேர்மை, நம்பிக்கை என்பவற்றின் அடிப்படையில் மக்கள் முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்தினர். எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் அக்குறணை பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 22, 2011 at 10:06 am

தெஹிவளை பாத்தியா மாவத்தை மஸ்ஜித் விவகாரம்

with 2 comments

கொழும்பு தெஹிவளை கல்போவில பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜித் விவகாரத்தை தெஹிவளை பெரியபள்ளி நிர்வாகம் கையாண்டு வருகின்றது, சமந்தப்பட்டவர்களுடன் பேசுவதுடன் அரசியல் வாதிகளுடனும் இது தொடர்பாக பேசிவருகின்றது தற்போது ஜமாஅத் தொழுகை நிறுத்தபட்டுள்ள நிலையில் கூட்டு தொழுகை இன்றி ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுது வருமாறு கேட்கப்பட்டுள்ளனர் .

குறித்த மஸ்ஜித் நிர்வாகமும் மற்றும் தெஹிவளை கல்போவில பெரிய பள்ளி நிர்வாகமும் கூட்டு தொழுகை இன்றி ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுது வருமாறு  கேட்டுள்ளது என்றும் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக தற்போது பகல் நேரங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இதனால் தொழும்போது தாக்கப்படுவோம் என்ற அச்சம் இன்றி தனியாக தொழுது வருவதாகவும் அந்த மஸ்ஜிதின் தினமும் தொழுகையில் ஈடுபட்டுவரும் முஹமத் lankamuslim.org க்கு தெரிவிக்கின்றார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 22, 2011 at 9:37 am

தகவல் உரிமை சட்டமூலம் நிராகரிப்பு

leave a comment »

இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியகட்சியால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த சட்டமூலம் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டது.

முன்னதாக இந்த சட்ட மூலத்தை ஆதரித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் பேசுகையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. இச்சமயத்தில் குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர் சட்ட முன்வரைவில் உள்ள அனைத்து அம்சங்களையும் ரணில் படிக்க அனுமதி அளிக்க முடியாது என்றார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 22, 2011 at 8:03 am

முஸ்லிம்கள் தாய்மொழியாக தமிழைக் கற்பதில் ஆர்வமூட்டிய அறிஞர் அஸீஸ்

leave a comment »

1950 ஆம் ஆண்டுகளில் தேசியவாத அலை நாட்டில் பரவலாக வீசிய போது மிகவும் துணிச்சலுடன் சரியான தீர்மானத்தை சரியான நேரத்தில் மேற்கொள்வதில் அறிஞர் அஸீஸ் சிறந்து விளங்கினார். உத்தியோகபூர்வ மொழி என்ற விவகாரம் தலைதூக்கிய போது அறிஞர் அஸீஸ், முஸ்லிம்களை பொறுத்தவரை தாய்மொழியாக தமிழைக் கற்பதிலேயே ஆர்வம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தினார் என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் 61 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மேலும் உரையாற்றிய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 21, 2011 at 5:50 pm

சமூகம் எதிர்நோக்கும் சவால்களுக்கு முகம்கொடுக்க அரசாங்கத்தை மட்டும் எதிர்பார்க்க முடியாது

with 5 comments

இலங்கையில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில் சமூகம் எதிர்நோக்கும் சவால்களுக்கு முகம்கொடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் அரசாங்கத்தை மட்டும் எதிர்பார்த்திருக்க முடியாதெனவும் சமூக சேவை இயக்கங்களும் புத்திஜீவிகளும் இந்த விடயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

அண்மையில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்குச் சென்றிருந்த பொழுது இடம்பெயர்ந்த மக்கள் அனுபவிக்கும் இன்னல்களை நேரில் காண முடிந்தது. முல்லைத்தீவில் மீள்குடியேற முன்வந்துள்ள 400 முஸ்லிம் குடும்பங்கள் கழிவறை வசதிகள் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 21, 2011 at 5:38 pm

Knowledge Box ஊடக நிறுவனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

leave a comment »

ஏ. அப்துல்லாஹ்
ஊடக துறையில் அதிலும் இஸ்லாமிய விழுமியங்களை பேணி தடம் பதித்து வரும் நிறுவங்களின் ஒன்றான Knowledge Box ஊடக நிறுவனத்தின்  அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த ஜுன் 19ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை சுற்றுலா சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் தேசிய, சர்வதேச நிகழ்வுகளை ஆவனப்படுத்தும் முயற்சியில் இடுபட்டுவருகின்றது. அண்மையில் மலேசியாவில் இடம்பெற்ற உலக தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டின் உத்திகோபூர்வ ஊடகமாகவும்  இந்த நிறுவனம் தொழிற்பட்டடு ள்ளது என்பது குறிபிடதக்கது

Written by lankamuslim

June 21, 2011 at 7:10 am

அச்சுறுத்தலினால் பாத்தியா மாவத்தை மஸ்ஜித் மூடப்பட்டுள்ளது !

with 26 comments

கொழும்பு தெஹிவளை கல்போவில பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றுக்குள் பெளத்த மதகுருமார்கள் சிலர் நுழைந்து அதனை மூடிவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப் பட்டதால் மஸ்ஜித் நேற்று ஞாயிற்று கிழமையுடன் ஜமாஅத் தொழுகைகள் நடைபெறாது மூடப்பட்டுள்ளதாகவும் அந்த மஸ்ஜிதின் தினமும் தொழுகையில் ஈடுபட்டுவந்த நபர் முஹமத் lankamuslim.org க்கு தெரிவித்தார்.

மேலும் அவர் வழங்கிய தகவலில் பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள அல் பௌசுல் அக்பர் மதரஸா என்ற மாலை நேர சிறுவர் அரபு பாடசாலை ஒரு வருடத்துக்கு முன்னர் அதன் பின் பகுதியில் நிர்மானிக்கப்பட்ட மஸ்ஜித் ஒன்றுடன் மஸ்ஜித்தாக இயங்கிவந்ததாகவும் அந்த மாவத்தையில் மஸ்ஜித்துக்கு சற்று தொலைவில் வசிக்கும் ஒரு பெரும்பான்மை இனத்தவர் மஸ்ஜிதின் முன்பாக வாகங்கள் விடுவதால் தம்மை சிரமத்துக்கு உள்ளாக்குவதாக முறையிட்டுவந்துள்ளார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 20, 2011 at 10:38 pm

மேற்கத்திய ஆக்கிரமிப்பினை எதிர்த்து செயல்பட அனைத்து முஸ்லிம்களும் அணி திரளவேண்டும்

with one comment

மேற்கத்திய நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உலகிலுள்ள சகல முஸ்லிம்களும் அணி திரளவேண்டும் என சர்வமத ஒன்றியத்தின் தலைவர் பேராசிரியர் கம்புறுகமுவே வஜிர தேரர் அழைப்பு விடுத்துள்ளார். சமாதனத்தைப் பேணுவதற்காக நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை முஸ்லிம் நாடுகள் மீது தொடர்ச்சியான அத்துமீறல்களை மேற்கொண்டு சமாதனத்தை சீர் குலைத்து வருவதாகவும் இதற்கு எதிராக சர்வதேச மக்கள் குரல் எழுப்ப வேண்டும் என்றும் அவர் கோட்டுகொண்டுள்ளார்.

மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற  முஸ்லிம் நாடுகளை ஆக்கிரமிக்கும் மேற்கத்தியவாதிகள் தொடர்பிலான கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது போன்று பின்னர் மேற்கு ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலான தலைமையில் இடம்பெற்றுள்ளது.

Written by lankamuslim

June 20, 2011 at 8:28 pm

உதவிகளின் போது கவனத்தில் கொள்வோம்

leave a comment »

இன்று இலங்கையில் பல சிறிய பெரிய உள்ளநாட்டு வெளிநாட்டு அரச சார்பற்ற முஸ்லிம் நிறுவங்கள் செயல்பட்டு வருகின்றது அதன் சேவைகள் போதுமானதாக இல்லாவிட்டாலும் கல்வி ஊக்குவிப்பு தொடக்கம் வறியவர்களுக்கு உதவிகளை வழங்குதல் அனர்த்தங்களில் போது உதவுதல் என்று பாராட்டத்தக்க முறையில் அமைத்துள்ளது அவற்றை பாராட்டாமல் இருக்கமுடியாது ஆனாலும்

அந்த நிறுவங்களில் உதவிகளில் போது உதவிகளை பெறுவோர் பின்னர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக சுட்டிகாட்டப் பட்டுள்ளது குறிப்பாக அவ்வாறான நிறுவங்களின் இணையத்தளங்களில் அவற்றின் வெளியீடுகளில் உதவிகள் பெற்றவர்களின் படங்கள் , உதவிகள் வழங்கப்படும் போது பிடிக்கப்பட்ட படங்கள் என்பன பார்வைக்கு பதிவு செய்யப்படுவதால்  விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 20, 2011 at 7:58 pm

கிழக்கு ஆசிரியர் இடமாற்றத்தை இடைநிறுத்த உத்தரவு

leave a comment »

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

அரச தரப்பு பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற போது இந்த இடமாற்றத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, விஜித் விஜிதமுனி சொய்சா, விநாயகமூர்த்தி முரளிதரன்,எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா எச்.எம்.எம்.ஹரீஸ் பைசால் காசீம் மற்றும் ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர் என்று தமிழ் மிரர் செய்தி தெரிவிக்கின்றது.

Written by lankamuslim

June 20, 2011 at 6:17 pm

அமெரிக்கநீதிமன்றம் அழைப்பாணையை நிராகரிப்பு

leave a comment »

அமெரிக்க டெக்ஸாஸ் பிராந்திய நீதிமன்றம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய அழைப்பாணையை ஏற்றுக்கொள்ளாது தவிர்த்துள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. நிதியமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் இதனை தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுடனான மோதல்களின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சில கொலைச்சம்பவங்கள் குறித்து நட்டயீட்டினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 20, 2011 at 5:35 pm

மன்னாரில் பெற்றோலிய ஆய்வுக்கு இந்தியா ,சீனாவுடன் , ரஷ்யாவும்

leave a comment »

மன்னாரில் கேஸ் மற்றும் எண்ணெய் ஆய்வுக்கு ஒத்துழைப்பை வழங்க உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு – GAS- நிறுவனங்களில் ஒன்றான ரஷ்ய நாட்டு கேஸ்பிறோம் -Gazprom- நிறுவனம் முன்வந்துள்ளது நிறுவனத்தின் தலைவர் அலெக்சி மில்லர் -Alexei Miller- தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு தனது கம்பனியின் நிபுணர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அலெக்சி  தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 20, 2011 at 12:58 pm

ஆயர்மாருக்கு வத்திக்கான் அழைப்பு: சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகம்

leave a comment »

கத்தோலிக்க பாதிரிமாரால் சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களை தடுப்பதற்கு புதிய நெறிமுறைகளை உருவாக்குவதற்காக ரோமில் அடுத்த மாதம் நடத்தப்படவுள்ள மூன்று நாள் மாநாட்டுக்காக உலகெங்கிலுமிருந்து கத்தோலிக்க ஆயர்மார் 200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரோமிலுள்ள ஜெய்சுயிட் பல்கலைக்கழகத்தில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ரோமுக்குப் புறப்படுவதற்கு முன்னதாக, மாநாட்டில் பங்குகொள்ளவுள்ள ஆயர்மார் அனைவரும், தத்தமது பிரதேசங்களில், கூட்டங்களை நடத்தி உள்ளூரில் பாதிக்கப்பட்டவர்களுடனான சந்திப்புகளை மேற்கொள்ள வேண்டுமென வத்திக்கான் கூறுகிறது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 20, 2011 at 11:59 am

அளவெட்டித் தாக்குதலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம்

leave a comment »

அளவெட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரசாரக் கூட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. என்று அதன் செயலாளர் நாயகம் ஹசன் அலி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றது

அந்த கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் அதிகளவு தேர்தல் வன்முறைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முகம் கொடுத்தது Read the rest of this entry »

Written by lankamuslim

June 20, 2011 at 11:11 am

சிறுபான்மை மக்களின் காணிகள் திருமலை மாவட்டத்தில் அபகரிப்பு

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: நேற்று வெளியான நவமணி  பத்திரிகையில்  ‘சிறுபான்மை மக்களின் காணிகள் திருமலை மாவட்டத்தில் அபகரிப்பு’ என்ற தலைப்பில் வெளியான செய்தியை lankamuslim.org வாசகர்களுக்கு வழங்குகின்றேன். திருகோணமலை மாவட்டத்தில் சிறுபான்மை இன மக்களுக்கு சொந்தமான காணிகளைச் சிங்கள மக்கள் கையகப்படுத்தி வருவதுடன் அரசுக்கு சொந்தமான காணிகளும் உல்லாச பயணிகளின் ஹோட்டல்களுக்கு தாரைவார்த்து கொடுக்கப்படுவதாக நம்பகமான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன என்று நவமணி பத்திரிகை தெரிவித்துள்ளது.

மூதூரிலுள்ள ஒட்டு , படுகாடு ஆகிய பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் , தமிழ் மக்களுக்கு உரித்தான காணிக்கை திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெளத்த பிக்கு ஒருவரின் தலைமையில் சென்ற சிங்கள மக்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்த விடையம் தொடர்பில் பொலிசாருக்கு அறிவித்தும் அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது. விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

June 19, 2011 at 12:29 pm

முஸ்லிம் அரசியல் நிலையை காரணம் காட்டி எவரும் முஸ்லிம்களின் உரிமைகளை புறக்கணிக்க முடியாது

with 4 comments

முஸ்லிம்கள் தரப்பில் இருக்கும் அரசியல் பலவீனங்களை காரணமாக காட்டி அரசாங்கமோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது வேறுயாருமோ முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளை உரிமைகளை புறக்கணிக்க முடியாது இலங்கையில் பொதுவாக எல்லா கட்சிகளும் -சிறுபான்மை – பலவீனமாகவே உள்ளது அதனை காரணமாக காட்டி முஸ்லிம்களுக்கு கொடுக்கப்படவேண்டிய உரிமை எந்தவகையிலும் மறுக்கப்படமுடியாது என்று பிரிட்டனை தளமாக கொண்டியங்கும் தீபம் தொலைகாட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் கலந்துகொண்டு கருத்துரைத்துள்ள அஷ் ஷெய்க் நஜா முஹம்மத் ( இஸ்லாஹி) தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள இந்த நேரத்தில் நீண்ட காலத்தில் இலங்கை நிரந்தரமான ஒரு சமாதானத்தை அடைய வேண்டுமானால் நிச்சயமாக அரசாங்கம் தீர்வொன்றை கொடுக்கவேண்டும் விரிவாக Video Read the rest of this entry »

Written by lankamuslim

June 18, 2011 at 8:05 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,819 other followers