Lankamuslim.org

One World One Ummah

Archive for May 2011

‘பயங்கரவாத ஒழிப்பு- இலங்கையின் அனுபவம்’

leave a comment »

‘பயங்கரவாத ஒழிப்பு- இலங்கையின் அனுபவம்’ என்ற தொனிப்பொருளில் இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு இன்று கொழும்பில் நடைபெறுகின்றது

கலதாரி ஹோட்டலில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையில் இன்று காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாத ஒழிப்பு- இலங்கை யின் அனுபவம் என்பன தொடர்பான விசேட உரை நிகழ்த்தவுள்ளார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 31, 2011 at 11:02 am

ஐநா வும் இலங்கையும் ஒரு தொகுப்பு பார்வை

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்:தொகுப்பு: இலங்கையில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உயர் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தால், அவரது அலுவலகத்துடன் இனிவரும் காலங்களில் ஆக்கபூர்வமாகப் பணியாற்ற முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றது

போர்க் குற்றங்களை விசாரிக்க உள்நாட்டிலேயே முழுமையான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அதனைக் கண்காணிப்பதற்கு சுயாதீனமான சர்வதேசப் பொறிமுறை ஒன்றும் தேவை என்று நவிப்பிள்ளை நேற்றுத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் நிபுணர் குழுவின் அறிக்கையை தனது பேச்சின் இடையே இழுத்திருப்பதன் மூலம் மனித உரிமைகள் சபையின் சட்டதிட்டங்களையும் நடைமுறையையும் நவிப்பிள்ளை மீறி இருக்கிறார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 31, 2011 at 9:44 am

தீர்வுப் பேச்சுக்களில் தனித்தரப்பாக இருக்கும் தகைமை முஸ்லிம் காங்கிரஸிற்கு உண்டு

leave a comment »

இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைக் காணும் விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் தனித்தரப்பாகப் பேசுவதற்குரிய தகுதியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே பெற்றிருப்பதாக அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி தெரிவித்திருக்கிறார்.

முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் நலன்களையும் பேணுவதற்காக முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று தோற்றம் பெற்ற கட்சிகளெல்லாம் தங்களது கட்சிகளின் பெயர்களில் இருந்து “முஸ்லிம்’என்ற அடையாளத்தையே விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 31, 2011 at 9:01 am

விபத்தில் கட்பிட்டியை சேர்ந்தவர் வபாத்

leave a comment »

கொழும்பு புத்தளம் பிரதான வீதி ஆராய்ச்சிகட்டு பிரதேசத்தில் நேற்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கற்பிட்டியைச் சேர்ந்த எம்.எம். முபாரிஸ் -வயது 45- ஸ்தலத்திலேயே வபாத்தாகியுள்ளார். லொறியில் பயணித்த மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தங்காலையிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த அஷோக் லேலாண்ட் பஸ்சும், கற்பிட்டியிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மீன் லொறியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான வாகனங்கள் சிலாபம் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டிருப்பதுடன், இது தொடர்பான விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Written by lankamuslim

May 31, 2011 at 8:05 am

மனித உரிமைகள் சபையில் இலங்கை

leave a comment »

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 17வது அமர்வு ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்க மனித உரிமைகள் கவுன்சிலில் உரையாற்றவுள்ளார்.

இம்மாநாட்டில்  இலங்கையில் யுத்தக் குற்றம் இடம்பெற்றதாக பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் தனியார் தொலைக்காட்சி செனல்4 வெளியிட்ட ஐந்து நிமிட  காட்சிகள்  உண்மையானவை என ஐநா விசாரணையாளரும் சட்டத்துறை பேராசிரியருமான கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ்-Christof Heyns-  தெரிவித்துள்ளமை மாநாட்டில் இலங்கை விடயத்தில் முக்கியமானதாக பார்கப்படுகின்றது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 30, 2011 at 4:00 pm

சிராஜியா அரபுக் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி வபாத்

with 2 comments

மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி பிரதேச சிராஜியா அரபுக் கல்லூரி மாணவர்கள் மூவர் ஆற்றில் நீராடுகையில் நீரில் மூழ்கி வபாத்தகியுள்ளனர் என்று எமது lankamuslim.org  ஓட்டமாவடிசெய்தியாளர் தெரிவிக்கின்றார் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இந்த விபத்தில் கல்லூரி மாணவர்களான தாஸிம் முஹம்மட் ராபி, பாறூக் முஹம்மது றிபாஸ்தீன், ஆகிய மாணவர்களும் அவர்களுடன் முஹம்மட் அன்வர் என்ற மௌலவியான கல்லூரி விடுதிப் பொறுப்பாளரும் உயிர் இழந்துள்ளார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 29, 2011 at 1:58 pm

புலியை பிடித்து கூண்டிலடைத்து போற்றிப் புகழுகிற உலகம் !!

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
“நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே”  (அதிவீரராம பாண்டியர்) இலங்கை அரசின் தகவல்களின் அடிப்படியிலே நெதர்லாந்தில் புலிப் பயங்கரவாதிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் தொடராக கைது செய்யப்பட்டுவருவதனை செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது.

ஆனால் இந்த பயங்கரவாதிகள் மீண்டும் புலிகளின் பயங்கரவாதத்தை இலங்கையில் கட்டியெழுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் என்றும் இவர்கள் மீது நெதர்லாந்து தமிழ் மக்கள் வழங்கிய புகார்களை அடிப்படையாகக் கொண்டே இவர்களை கைது செய்யப்பட்டதாகவும் முதலில் செய்திகள் வந்தன. என்றாலும் இவர்களின் கைதுகள் நெதர்லாந்து நாட்டின் பயங்கரவாத தடை சட்டப்படி நடை பெற்றதாக குறிப்பிடப்படுகிறது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 29, 2011 at 8:16 am

கல்குடா பிரதேசத்தில் இரண்டாம் கட்ட மீள்குடியேற்றம்.

leave a comment »

கிரான் பிரதேச செயலகப் பிரிவில் வகுலாவள – ஜப்பார்ர திடல் பிரதேசத்தில் இருந்து 1985ம் ஆண்டு பயங்கர வாதிகளால் விரட்டப்பட்ட குடும்பங்களில் அறுபது (60) குடும்பங்கள் இன்று (28.05.2011) இரண்டாம் கட்டமாக மீள் குடியமர்த்தப்பட்டனர்.

வகுலாவள – ஜப்பார்ர திடல் பகுதியில் வசித்து வந்த முஸ்லீம் மக்கள் 1985ம் ஆண்டு பயங்கரவாதிகளால் விரட்டப்பட்டதையடுத்து அவர்கள் ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீறாவோடை, காவத்தமுனை, தியாவட்டுவான் போன்ற பிரதேசங்களில் உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடுகளில் மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தனர் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 28, 2011 at 10:31 pm

இன்று காஸா எகிப்து எல்லை நிரந்தரமாக திறக்கப்பட்டுள்ளது

with one comment

OurUmmah:எகிப்து, காஸா ரபாஹ் எல்லையை இன்று-28.05.2011- சனிக்கிழமை தொடக்கம் நிரந்தரமாக திறந்துள்ளது தினமும் 8 மணித்தியாலங்கள் இந்த எல்லை திருந்து விடப்படும் என்றும் வெள்ளி மற்றும் விடுமுறை தினங்களில் மட்டும் மூடப்படும் என்று எகிப்து தெரிவித்துள்ளது.   இன்று எல்லை திறக்கப்பட்டவுடன் இரண்டு அம்புலன்சுகள் மற்றும் பல வாகனங்கள் எல்லையை கடந்து எகிப்தினுள் நுழைந்துள்ளது

இதன் ஊடாக 18 வயது தொடக்கம் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் எகிப்தின் விசா பெற்று செல்லவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது எகிப்து விரைவில் விசா அலுவலகம் ஒன்றை காஸாவில் திறக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது விரிவாக

Written by lankamuslim

May 28, 2011 at 9:31 pm

யாழ்.முஸ்லிம்கள் தொடர்பாக யாழ். அரச அதிபர்

leave a comment »

யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியிருந்த முஸ்லிம்கள் அங்கு அரசின் அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களின் வீட்டுத்திட்ட உதவிகளைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் மீண்டும் வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்படமாட்டாது.புத்தளத்தில் வீட்டுத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்ளாத வர்கள் யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறியிருந்தால் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் தமக்கு வழங்கப்படவிருந்த வீட்டுத்திட்ட உதவிகள் பிரதேச செயலகத்தால் தடுத்து நிறுத்தப்படுவதாக உதயனுக்கு முறைப்பாடு செய்திருந்தனர். இந்த விடயம் தொடர்பாக யாழ். விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 28, 2011 at 8:34 pm

பல பகுதிகளில் மழை ஏழு பேர் உயிர் இழப்பு

leave a comment »

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கடும் மழையால் ஏழு பேர் உயிரிழந்திருப்பதுடன் 3621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல ஆறுகள் பெருக்கெடுத்திருப்பதுடன், வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன், மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் பலியாகியுள்ளனர்.

ககாலை மாவட்டம் தம்பள பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சமீலா சமரசிங்க மற்றும் அவருடைய மகள் 17 வயதுடைய சந்திமா சமரசிங்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர். இவர்கள் கட்டிலில் படுத்திருந்தபோதே மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர். கொழும்பு கம்பஹா கேகாலை காலி நுவரெலிய ஆகிய பிரதேசங்களில் கடுமையான மழை பெய்து வருகின்றது.

Written by lankamuslim

May 28, 2011 at 3:08 pm

மாணவர்கள் நேற்று இராணுவ முகாமில் ஜும்மாஹ் நடாத்தினர்

with 8 comments

வதிவிட தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள பல்கலைக் கழகங்களுக்கு செல்லவுள்ள மாணவர்கள் நேற்று இராணுவ முகாமில் ஜும்மாஹ் தொழுகையை நிறைவேற்றியுள்ளனர் என்று அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் பொது செயலாளர் பொறியலாளர் நிஷாத் lankamuslim.org க்கு தெரிவித்தார்.

இந்த ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு நுழையவுள்ள 22 ஆயிரத்தி 500 மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி நாட்டின் 28 முகாம்களில் நடாத்த தீர்மாணிக்கபட்டு முதல் கட்டத்தில் தெரிவானவர்களுக்கு இராணுவ முகாம்களில் மூன்று வாரகால வதிவிட தலைமைத்துவ பயிற்சி இடம்பெற்று கொண்டிருகின்றது இந்த வேலையில் நேற்று வெள்ளிகிழமை ஜும்மாஹ் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஆலிம் ஒருவரினால் இராணுவ முகாமில் குத்துபா மற்றும் ஜும்மாஹ் தொழுகை நடாத்தப்பட்டுள்ளது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 28, 2011 at 2:12 pm

பல்கலைக்கழகங்களுக்கு 20,274 பேர் தெரிவு

leave a comment »

பல்கலைக்கழகங்களுக்கு 20,274 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வியமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கா தெரிவித்துள்ளதாகவும் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 2,33,609 பேர் தோற்றியிருந்தனர். இதில் பல்கலைக்கழக அனுமதிக்கான ஆகக் குறைந்த புள்ளிகளை 1,42,516 பேர் பெற்ற நிலையில் பல்கலைக்கழக அனுமதிக்காக 54,124 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் 20,274 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மருத்துவத்துறைக்கு 1147 பேரும் பொறியியல் துறைக்கு 1247 பேரும் முகாமைத்துவத்துக்கு 3,287 பேரும் கலைத்துறைக்கு 3,806 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, மொத்தமாக 86 பாடநெறிகளுக்காக 20,274 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 28, 2011 at 10:19 am

மாணவியருக்கு பெற்றோர் வெள்ளை நிற ஹிஜாப் கருப்பு நிற அபாயா எடுத்து செல்லவும்

with 2 comments

வதிவிட தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவியருக்கு பெற்றோர் வெள்ளை நிற ஹிஜாப் கருப்பு நிற அபாயா எடுத்து செல்லுமாறு அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது முகாம்களில் மூன்று வாரகால வதிவிட தலைமைத்துவ பயிற்சி இடம்பெற்று கொண்டிருகின்றது

இஸ்லாமிய உடையை பொறுத்தவரை அதற்கு தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை அனால் முஸ்லிம் மாணவியர் தலைமைத்துவ பயிற்சி உடையை தமது பல்வேறுபட்ட வர்ண உடைகளுக்கு மேல் அணிவதால் பல வர்ணங்களில் ஒழுங்கு முறைக்கு மாற்றமாக தென்படுகின்றனர். இது தொடர்பாக இன்று அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ள செய்தியொன்றில் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 27, 2011 at 10:41 pm

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் புதிய விசா நடைமுறை

leave a comment »

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல், இந்தியர்களுக்கான இலவச விசாவை இலங்கை இரத்துச்செய்துள்ளது. இலங்கைக்கு வரும் இந்தியர்கள் தற்போது விசா எடுக்கத் தேவையில்லை. கொழும்பு விமான நிலையத்திலேயே அவர்களுக்கான விசா வழங்கப்பட்டு வந்தது.

அதேபோல பல நாட்டு பிரயாணிகளும் இவ்வாறே இலங்கை வந்துசென்றனர். ஆனால் இனி வரும் காலங்களில் அவர்கள், இலங்கை வருவதற்கு விண்ணப்பித்து விசா எடுத்தபின்னரே வரமுடியும் என இலங்கை இன்று அறிவித்துள்ளது. சுமார் 78 நாடுகளின் பட்டியல் அதில் அடங்குகிறது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 27, 2011 at 10:08 pm

வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியாகியுள்ளது

leave a comment »

2010ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியாகியுள்ளது. பார்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்

Written by lankamuslim

May 27, 2011 at 4:13 pm

இந்தியா மீண்டும் ஒரு குழப்பநிலையை உருவாக்கும்: றொகான் குணரட்ண

leave a comment »

இந்தியாவின் பூகோள மூலோபாய விருப்பங்களுக்கு முரணாக இலங்கை செயற்படுமானால், இந்தியா மீண்டும் ஒரு குழப்பநிலையை உருவாக்கும். இலங்கையை மீண்டும் ஒருமுறை தண்டிக்கவும் அது தயங்காது என்று எச்சரித்துள்ளார் சிங்கப்பூர் நயங்யாங் பல்கலைக்கழகப் பேராசிரியர் றொகான் குணரட்ண. கொழும்பில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய போதே இவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்

2009இல் முடிவடைந்த 30 ஆண்டுகாலப் போரின் தொடக் கத்தில் தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு இந்தியா ஆதரவு கொடுத்தது. இது ஒரு தவறு. அது மீண்டும் இடம்பெற அனுமதிக்கக் கூடாது. அப்படி இடம்பெற்றால் அதனால் நாம் மிகவும் பாதிக்கப்படுவோம்.   சீனாவுடன் அதிகப்படியான நெருக்கத்தை ஏற்படுத்தி இந்தியாவுடன் விரோதத்தை வளர்ப்பது இலங்கைக்கு ஆபத்தானது. விரிவாகVideo Read the rest of this entry »

Written by lankamuslim

May 27, 2011 at 11:05 am

சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய வங்கி நடைமுறை

leave a comment »

சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய வங்கி நடைமுறையை அறிமுகப்படுத்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதுடன் அதனை உடனடியாக அமுல்படுத்தும் வகையில் விசேட குழுவொன்றையும் நியமித்துள்ளார்.

முஸ்லிம் பயனாளிகளின் நன்மை கருதி சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்து பார்த்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய வங்கி நடைமுறையினை அறிமுகப்படுத்த அனுமதியளித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 27, 2011 at 10:47 am

கொழும்பில் இன்று யுத்த வெற்றிவிழா

leave a comment »

யுத்த வெற்றியின் இரண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகிறது.

யுத்த வெற்றி அணிவகுப்பின் பிரதான வைபவம் காலை 8.30 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலிலும் தேசிய படை வீரர்கள் நினைவு தின பிரதான வைபவம் மாலை 4.30 மணிக்கு பாராளுமன்ற முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 27, 2011 at 10:40 am

பொஸ்னிய போர்குற்றவாளி ராட்கே மிலடிச் கைது

with one comment

முஸ்லிம் இனப் படுகொலை தொடர்பான குற்றச்ச்சாட்டுக்களுக்குள்ளாகி 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முன்னாள் பொஸ்னிய செர்பிய இராணுவ தளபதி ராட்கே மிலடிச்-Ratko Mladic- கைது செய்யப்பட்டுள்ளார். லட்சக்கனக்கான பொஸ்னிய முஸ்லிம்களை படுகொலை செய்துள்ளதாக ஆய்வாளர்களும் பொஸ்னிய முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனினும் செப்ரநிட்சா என்ற இடத்தில் இவரின் தலைமையின் கீழ் செயல்பட்ட படையினர் 8500 முஸ்லீம்களை கொன்றனர் என்பதுதான் இவர் மீதான அடிப்படைக் குற்றச்சாட்டாக உள்ளது.

செர்பியாவின் வடக்கேயுள்ள ஒரு கிராமத்திலிருந்து வியாழக்கிழமை காலை அவர் கைதுசெய்யப்பட்டதாக செர்பிய அதிபர் போரிஸ் டாடிக் தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 27, 2011 at 9:39 am

பல்கலைக்கழக தலைமைத்துவ பயிற்சி மேலும் அவதானம் தேவை

with 9 comments

இந்த வருடம் பல்கலைக்கழகத்துக்கு நுழையவுள்ள 22 ஆயிரத்தி 500   மாணவர்களுக்கு கட்டாய தலைமைத்துவ பயிற்சி நாட்டின் 28 முகாம்களில் நடாத்த தீர்மாணிக்கபட்டு முதல் கட்டத்தில் தெரிவானவர்களுக்கு நாட்டில் 28 பல்வேறு முகாம்களில் மூன்று வாரகால வதிவிட தலைமைத்துவ பயிற்சி இடம்பெற்று கொண்டிருகின்றது முஸ்லிம்கள் தொகையாக பயிற்சி பெற்றுவரும் ரந்தனிகள இராணுவ முகாம் மற்றும் திருகோணமலை கடற்படை முகாம் ஆகியவற்றை பொறுத்தவரை அங்கு நிலைமை திருப்தி கரமாக இருப்பதாக எம்மால் அறியமுடிகின்றது.

தொழுகை , இஸ்லாமிய உடை, ஹலால் உணவு, ஆண் பெண் கலந்த உடலியல் பயிற்சி என்பனவற்றில் தொழுகையை பொறுத்தவரை முகாம்களின் தலைமைத்துவ பயிற்சி நேர ஒழுங்குகள் எதுவும் சுபஹ் தொடக்கம் இஷா வரை தொழுகை நேரங்களுடன் மோதவில்லை என்பதால் தொழுவதற்கு சிக்கல்கள் ஏற்படவில்லை என்பதுடன் தொழுவதற்கான ஒழுங்குகளை செய்வது சிரமமாக மாணவ மாணவியர் கருதவில்லை விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 26, 2011 at 11:12 pm

காஸா எல்லையை எகிப்து நிரந்தரமாக திறக்கின்றது

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்து பாலஸ்தீன் காஸா ரபாஹ் எல்லையை சனிக்கிழமை தொடக்கம் நிரந்தரமாக திறக்கபோவதாக அறிவித்துள்ளது இந்த அறிவிப்பை எகிப்து எகிப்தின் அதிகார பூர்வ தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த அறிவிப்பை பலஸ்தீனர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். காஸா ரபாஹ் எல்லையை நிரந்தரமாக திறக்கபட்டால் கடந்த நான்கு ஆண்டுகால காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகை உடைக்கப்படும் என்பது குறிபிடத்தக்கது.

எகிப்தின் இடைக்கால வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபி கடந்த ஏப்ரல் மாதம் இறுதி பகுதியில் காஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவர முக்கிய தீர்மானம் எடுக்கபோவதாகவும் எதிர் வரும் பத்து தினங்களில் நீதிக்கு விரோதமான காஸா மீதான முற்றுகையை நீக்கும் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது விரிவாக

Written by lankamuslim

May 26, 2011 at 8:31 pm

பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மறுசீரமைப்பு

leave a comment »

இந்த வருடம் பல்கலைக்கழகம் நுழையவுள்ள மாணவர்களுக்கான அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் மே மாதம் 27ஆம் திகதி வெள்ளிகிழமை வெளியிடப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 22 ஆயிரத்து 500 மாணவர்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்றவாறு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மறுசீரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 26, 2011 at 11:18 am

முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தொடர்பு கொள்ளவும்

leave a comment »

அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு ஒன்றில் இராணுவ முகாம்களில் நடைபெறும் தலைமைத்துவ பயிற்சியில் பங்குபற்றியுள்ள முஸ்லிம் மாணவ மணவியர் தொடர்பில் மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர் மாணவாகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தம்முடம் 0714812058, 0711117876/ 0776508220 ஆகிய கையடக்க தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கோரியுள்ளனர்.

பொதுவாக  ஐவேளைத் தொழுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஹலால் உணவு வழங்கப்படுவதாகவும்  குறிப்பா ரந்தனிகள இராணுவ முகாமில்  முஸ்லிம்களும் நிலை திருப்பிகரமாக இருப்பதாகவும் மாணவர்கள்  தகஜுத்   -நடுநிசி தொழுகை- கூட தொழுததாகவும் தெரிவித்துள்ளனர் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 26, 2011 at 9:47 am

டாக்டர் ஸாகிர் நாயிக் மீதான வழக்கு ஒத்திவைப்பு

with 2 comments

பிரபல இஸ்லாமிய அறிஞர் ஸாகிர் நாயிக் மீது தொடுக்கப்பட்ட வழக்குக்கான தீர்ப்பை அலஹபாத் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இவ்வழக்கில் ஸாகிர் நாயிக் அவர்களுக்குப் பிணை வழங்க ஜான்ஸியிலுள்ள நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதம் 12 ஆம் திகதி தன் மீதான விசாரணைகளின்போது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஸாகிர் நாயக் மீதான வழக்கு, ஜான்ஸியைச் சேர்ந்த மேலதிக நீதிபதியினால் அலஹபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.டீ.. காரே அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து, மும்பாயில் உள்ள இஸ்லாமிய ஆய்வு நிறுவனத் தலைவர் ஸாகிர் நாயிக் அவர்களுக்கு ஜூன் மாதம் 1 ஆம் திகதிக்கு முன் நீதிமன்றத்தில் சமூகமளிக்குமாறு பிணை மறுப்புப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 26, 2011 at 8:57 am

நெதர்லாந்தில் புலிகளின் மற்றுமொரு தளபதி ராம சந்திரன் கைது

leave a comment »

நெதர்லாந்தில் செயற்பட்டு வந்த புலிகளின் தளபதி எஸ்.ராமச்சந்திரன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது புலிகளின் தற்போதைய தலைவராக செயற்பட்டு வரும் நெடியவன் எனப்படும் சிவரூபன் நோர்வேயில் கைது செய்யப்பட்டதன் பின் நெதர்லாந்தில் ராமச்சந்திரனின் கைது சம்பவம் நடைபெற்றுள்ளது.

ராமச்சந்திரனின் வீட்டை சோதனையிட்ட பொலிசார் பென் டிரைவ்யில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 136 மில்லியன் பணம் தொடர்பான விபரங்களையும் கைப்பற்றியுள்ளனர். அப்பணம் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் ஆயுதக் கொள்வனவுக்காக ஐரோப்பிய வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2011 at 9:05 pm

முஸ்லிம் மக்களை கணக்கிலெடுக்காது அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது

with one comment

இலங்கை வாழ் சிறுபான்மை முஸ்லிம் மக்களை கணக்கிலெடுக்காது அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. பல்கலைக்கழக தலைமைத்துவ பயிற்சி திட்டத்தின் போது முஸ்லிம் மாணவர்களின் கலாச்சாரம் குறித்து கவனத்தில் கொள்ளப்படவில்லை எனவும் அதனால் முஸ்லிம் மாணவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு பேச்சுவார்த்தை நடத்துகின்ற போதும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து எந்தவொரு முஸ்லிம் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசு முயற்சிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்  விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2011 at 6:09 pm

குருடர்களாகவும் , ஊமைகளாகவும் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது கல் வீசவேண்டாம்

with 17 comments

இந்த வருடம் பல்கலைக்கழகத்துக்கு நுழையவுள்ள 22 ஆயிரம் மாணவர்களுக்கு கட்டாய தலைமைத்துவ பயிற்சி நாட்டின் 28 முகாம்களில் நடாத்த தீர்மாணிக்கபட்டு முதல் கட்டத்தில் தெரிவான சுமார் 12 ஆயிரம் பேருக்கு நாட்டில் 28 முகாம்களில் மூன்று வாரகால வதிவிட தலைமைத்துவ பயிற்சி இடம்பெற்று கொண்டிருகின்றது.

இந்த பயிற்சி நெறி 18 இராணுவ முகாம்களிலும் 2 கடற் படை முகாமிலும் 2 விமான படை முகாமிலும் 4 காலால் படை முகாமிலும் 2 போலீஸ் முகாமிலும் இடம்பெறுகின்றது ஒரு முகாமிற்கு சுமார் 430 மாணவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது. மாணவர்களுக்கு கட்டாய தலைமைத்துவ பயிற்சி தொடர்பாக கருத்துரைத்துள்ள டாக்டர் அஷ்ஷேய்க் மசீஹுத்தீன் இனாமுல்லாஹ் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2011 at 12:01 pm

முஸ்லிம்களை வெளியேற்றியதும் ராஜீவ் காந்தியை கொலை செய்தமையும் நியாயமானது

with one comment

உருத்திரகுமாரை தலைவராக கொண்ட புலிகளின் புலிகளின் அரசியல் மறுபிறப்பு என்று கருதப்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்று அழைக்கப்படும் அமைப்பின் கிழக்கு லண்டன் உறுப்பினர் எஸ் செல்வராஜா என்பவர் முஸ்லிம்கள் யாழில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதற்கும் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கும் தகுந்த காரணங்கள் இருக்கலாம் என்று அவற்றை நியாயப்படுத்தியுள்ளார்.

அவர் ராஜீவ் காந்தியின் கொலையை நியாயப்படுத்தியும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனத்துவேசமான கருத்துக்களையும் வெளியிட்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது கடந்த மே 19ல் லண்டனில் இடம்பெற்ற சர்வமத பிரார்த்தனையில் கலந்துகொண்டு பேசும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2011 at 10:34 am

கொழும்புக்கும் புத்தளத்துக்கும் இடையிலான ரயில் சேவை துரிதமாகும்

leave a comment »

கொழும்புக்கும் புத்தளத்துக்கும் இடையிலான ரயில் சேவைகளில் ஏற்படும் வீண் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில்  கொழும்புக் கோட்டைக்கும் ஜாஎலைக்கும் இடையில் அமைக்கப்பட்டுவந்த  இரட்டை ரயில் பாதை நேற்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த இரட்டைப் பாதையை சீதுவை வரையில் விஸ்தரிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜாஎலையில் இருந்து சீதுவை வரைக்கும் உள்ள 6 கிலோ மீற்றர் தூரத்துக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கவும் துடல்ல மற்றும் அலவதுபிட்டிய ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் தரிப்புக்காக புதிய மேடைகளை அமைக்கவும் ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Written by lankamuslim

May 25, 2011 at 9:46 am

25 கோடி ரூபா பெறுமதியான அரச மருந்துப் பொருட்கள் பதுக்கல் !!

leave a comment »

புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க 25 கோடி ரூபா பெறுமதியான அரச மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படாமல் மஹரகம புற்றுநோய் ஆஸ்பத்திரியின் களஞ்சிய சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக விரிவான விசா ரணைகளை நடத்துமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான மருந்துப் பொருட்கள் தொடர்பான மீளாய்வுக் குழுவுக்கு நேற்றுப் பணிப்புரை விடுத்துள்ளார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2011 at 9:20 am

ரிஸானா நபீக் சிறையில் நாட்கள் 2,193

leave a comment »

ரிஸானா நபீக் கைது செய்யப்பட்டு 2,193 நாட்கள்   கடந்துள்ளது ஆனால் அந்த துயர் தொடர்கதையாக உள்ளது. 2005ஆம் ஆண்டு சவூதி அரேபியா நாட்டுக் கைக்குழந்தையொன்றை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக் உளநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பதாகவும் நினைவுகளை மறந்தும் விடயங்களை விளங்கிக்கொள்ளாத தன்மையையும் கொண்டவராகக் காணப்படுவதாகவும் ஏசியன் ரிபியூன் இணையத்தளத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

குழந்தையொன்றை கொலை செய்தாரென்ற குற்றச்சாட்டின் பேரில் 2005 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி ரிஸானா நபீக் சவூதி அரேபியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தவாத்மி மேல் நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரிஸானா நபீக்கு மரண தண்டனை விதித்திருந்தது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 24, 2011 at 9:15 pm

புத்தளம் நகர வீதிக்கு தந்தை செல்வநாயகம் பெயர்

with one comment

புத்தளம் நகரிலுள்ள பெயர்களற்ற அனைத்து குறுக்கு வீதிகளுக்கும் புதிய பெயர்களைச் சூட்டி அதற்கான பெயர்ப்பலகைகளை நாட்டிவைக்க புத்தளம், நகர பிதா கே. ஏ. பாயிஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நகர சபைப் பேச்சாளரும், நகர பிதாவின் செயலாள ருமான எஸ். எச். எம். நியாஸ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தகவல் தருகையில் கூறியதாவது: புத்தளம் நகரிலுள்ள பெரும்பாலான வீதிகளுக்கு நீண்டகாலமாக பெயர்கள் இல்லாததால் பலவித சிரமங்களை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். உரியவர்களுக்கு கடிதங்கள் வருவதில் கூட காலதாமதம் ஏற்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் அனைத்து வீதிகளுக்கும் பெயர் சூட்ட நகரபிதா முடிவு செய்துள்ளார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 24, 2011 at 9:05 am

முஸ்லிம் மாணவருக்கு சமய கடமைகளை நிறைவேற்ற வசதி

with 2 comments

இன்று -24.05.2011-தினகரனில் வெளியான இந்த தகவல் இங்கு பதிவு செய்யப்படுகின்றது: முஸ்லிம் மாணவருக்கு சமய கடமைகளை நிறைவேற்ற வசதி: ஹலால் உணவுக்கும் ஏற்பாடு முஸ்லிம் மாணவிகள் கலாசாரப்படி உடை அணியவும் நடவடிக்கை- பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சியின் போது முஸ்லிம் மாணவர்கள் தங்களது நாளாந்த சமயக் கடமைகளை வேளா வேளைக்கு நிறைவேற்றுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்றுத் தெரிவித்தார்.

இப்பயிற்சி நெறியில் பங்குபற்றுகின்ற முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு அளிக்கப்படுகின்ற உணவு ஹலாலானவை என்பதை உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இப்பயிற்சியில் பங்குபற்றியுள்ள முஸ்லிம் மாணவிகள் அவர்களது கலாசாரப்படி உடை அணிவதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 24, 2011 at 8:41 am

வாழைச்சேனை: அதிபர் இடமாற்றம் நிர்வாகத்தை சீர்குலைக்கும்

with one comment

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகாவித்தியாலய அதிபரை இடமாற்றும் முயற்சியானது நிர்வாகத்தை சீர்குலைக்கும் செயலென இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் ஓட்டமாவடிக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

இவ்வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்துவிட்டு வேறு ஒரு அதிபரை நியமித்து பாடசாலை நிர்வாகத்தை சீர்குலைக்கச் செய்வது கடும் கண்டனத்திற்குரிய விடயமாகும். மட்டக்களப்பு மத்திய வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகாவித்தியாலயம் 01.04.2009 இல் தரம் ஐஇ(சி) பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு எத்தகைய அரசியல் தலையீடுகளுக்கும் உட்படாதவாறு தற்போது அதிபராகக் கடமையாற்றும் ஜனாப் எம்.ரீ.எம்.பரீட் நியமனம் பெற்று பாடசாலையைப் பொறுப்பேற்றுக்கொண்டார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 24, 2011 at 8:21 am

தாய் தனது குழந்தையை மூச்சுத் திணற செய்து கொலை செய்த முயற்சி செய்யும் காட்சிகள்

with one comment

இணைப்பு-2 லண்டன் நகரில் தாயொருவர் தனது சொந்த 4 மாதங்களே ஆன குழந்தையை மூச்சுத் திணற செய்து கொலை செய்த முயற்சித்த சம்பவம் பாதுகாப்பு இரகசிய கமெராவில் பதிவாகியுள்ளது . குழந்தையின் தந்தை குழந்தை பற்றி அக்கரை கொள்ளாமையால் குழந்தையின் தாய் குழந்தையை பராமரிப்பதை சுமையாக கருதியதாலும் தனது சுதந்திரமான வாழ்க்கைக்கு குழந்தை இடையூறாக இருந்தமையாலும் அந்த 17 வயது லண்டன் நகர நாகரீக பெண் தனது குழந்தையை கொலை செய்ய முயன்றுள்ளார் என்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கு வறுமை காரணமல்ல என்பது குறிபிடத்தக்கது

வைத்தியசாலையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வீடியோ கமெராவில் குறித்த பெண் தனது குழந்தையை மூச்சுத் திணற செய்து கொலை செய்த முயன்ற காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. பல தடவைகள் குழந்தை சுவாசிப்பதை தடை செய்யும் முகமாக துணியாலும் , கையாளும் அதன் முகத்தை அழுத்தி மூச்சை நிறுத்துவதும் பதிவாகியுள்ளது விரிவாக Video Read the rest of this entry »

Written by lankamuslim

May 24, 2011 at 8:03 am

வாழைச்சேனை கடதாசி ஆலையில் முஸ்லிம் தொழிலாளர்களுக்கு அநீதி

leave a comment »

வாழைச்சேனை கடதாசி ஆலையில் பணியாற்றும் முஸ்லிம் ஊழியர்களுக்கு வழமையாக வழங்கப்பட்டு வருகின்ற வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கான 2 மணி நேர குறுகிய விடுமுறை தொடர்பாக நிருவாகம் மேற்கொண்டுவரும் அநீதி பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் கடதாசி ஆலை, ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம், முஸ்லிம் மஜ்ஜிஸ் என்பன கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளன

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கென மதிய நேரம் 2 மணித்தியால விடுமுறை வழங்கும் நடைமுறை உள்ளது. இதே போல வாழைச்சேனை கடதாசி ஆலையும் விடுமுறை வழங்கி வருகின்றது. ஆயினும் இந்த விடுமுறையை வழங்கிவிட்டு அதனை ஊழியர்களது மேலதிக வேலை நேரக்கொடுப்பனவிலிருந்து கழிக்கப்படுகிறது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 23, 2011 at 4:56 pm

நாளை 2400 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்

leave a comment »

தேசியக் கல்வியியல் கல்லூரிகளில் மூன்று வருடகால டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த சுமார் 2400 பேருக்கு நாளை -24.05.2011- ஆசிரியர் நியமனம் வழங்கப் படவுள்ளது. புதிய டிப்ளோமா பாடத்திட்டத்தை முடித்தவர்களில் அதிகமானவர்கள் நாட்டின் தேசிய பாடசாலைகளுக்கே நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நியமனத்தின் மூலம் நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் முற்றாக நிவர்த்திக்கப்படும் என கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் கே. முஹமத் தம்பி தெரிவித்துள்ளார் தேசிய பாடசாலைகளுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தவிர்ந்த எஞ்சியவர்கள், மாகாணப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 23, 2011 at 11:00 am

பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: ஒபாமா

with one comment

தேவை ஏற்பட்டால் அமெரிக்கா மீண்டும் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் என்று ஒபாபா தெரிவித்துள்ளார் பாகிஸ்தானில் அமெரிக்கா தேடும் பயங்கரவாதத் தலைவர்கள் இருப்பது தெரியவந்தால் உஸாமாவை தாக்குதல் நடத்திக் கொன்றது போல் மற்றொரு தாக்குதல் நடத்த அனுமதி அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

BBC க்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அல் காய்தா தலைவர்களில் ஒருவரோ அல்லது தலிபான் தலைவர் முல்லா ஓமரோ பாகிஸ்தானிலோ அல்லது வேறொரு நாட்டிலோ இருப்பது தெரியவந்தால் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 22, 2011 at 11:40 pm

முஸ்லிம் மாணவர் தொடர்பான பிரச்சினைகள் சாதகமாக அணுகப்படும் ?

with 4 comments

முஸ்லிம் மாணவ மாணவியர் தொடர்பான சிக்கல்களை தீர்க்கும் முகமாக உயர்கல்வி அமைச்சர் சாதகமாக பதில் வழங்கியுள்ளார் என்று அறிய முடிகின்றது. பல்கலைக்கழகத்துக்கு நுழையவுள்ள மாணவர்களுக்காக தலைமைத்துவ பயிற்சி நெறி இன்று ஆரம்பித்துள்ள நிலையில் உயர்கல்வி அமைச்சர் எஸ். பி .திசாநாயகாவின் கவனத்திற்கு முஸ்லிம் மாணவ மாணவியர் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக  அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் ஆகியன கொண்டு சென்றுள்ளது இது தொடர்பாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை எழுத்து மூல கோரிக்கை ஒன்றையும் நேற்று முன்வைத்துள்ளது.

அந்த கோரிக்கைகளில் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு நேரடியாக சவாலாக உள்ள விடயங்கள் தொடர்பில் அமைச்சர் எஸ். பி .திசாநாயகா சாதகமாக பதில் வழங்கியுள்ளார் என்று அறிய முடிகின்றது  விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 22, 2011 at 9:19 pm

நெடியவனை இலங்கை கோருகின்றது

leave a comment »

நோர்வேயில் வைத்துக் கைது செய்யப்பட்டு இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் பிரமுகர் நெடியவனை ஒப்படைக்க வேண்டும் என நோர்வேயிடம் இலங்கை அரசு கோரி உள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றது

பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டமைக்காக நெடியவன் இலங்கையில் தேடப்பட்டு வருகின்றார் என்று இக்கோரிக்கையில் சுட்டி க்காட்டப்பட்டு உள்ளது என்றும் நெடியவன் கைது செய்யப்பட்டிருக்கின்றமை தொடர்பான அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டு உள்ளதுடன் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 21, 2011 at 9:19 pm

தொடரும் ஆபிரிக்கா மீதான ஆக்கிரமிப்பும் பலியாகிப் போன லிபியாவும்

with one comment

நல்லையா தயாபரன்
ஈராக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் போர்வையின் கீழ் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் 2003 மார்ச் 19இல் அந்த நாட்டில் விமானக் குண்டுவீச்சை ஆரம்பித்தார். 2011 மார்ச் 19ஆந் திகதி பிரான்ஸ், சரியாக எட்டு வருடங்கள் கழிந்தநிலையில், லிபியாவில் குண்டுமழை பொழிய ஆரம்பித்தது. ஜனநாயகத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இது இடம்பெறுகின்றதென்று மீண்டும் கூறப்படுகின்றது.

அமெரிக்க மனிதாபிமானத்தின் கந்தக நெடியை லிபியர்களுக்குப் பரிசளிக்கும் விதமாய் நோபல் சமாதானப் பரிசை வென்ற அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஜனநாயகத்தை நிலைநாட்டவேநீர்மூழ்கிகளிலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்படுவதாகத் தெரிவிக்கின்றார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 21, 2011 at 11:40 am

கற்பிட்டி அரச காணிகள் பறிபோகின்றது: நியாஸ்

leave a comment »

அதிகமான மக்கள் செறிந்து வாழும் கற்பிட்டி பிரதேசத்திலுள்ள அரச காணிகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்பவர்கள் புத்தளம் மாவட்டத்திற்கு வெளியே உள்ள பெரும் வர்த்தகர்களே என முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்துள்ளார் .

அரசாங்கத்தினால் கற்பிட்டி பிரதேசம் சுற்றுலா வலயமாகப் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதனால் கற்பிட்டி பகுதியில் ஹோட்டல்களை அமைப்பதற்கு பல வர்த்தகர்கள் முண்டியடிக்கிறார்கள். அந்தந்தப்பகுதிகளிலுள்ள காணிகளை எவ்வளவு விலை கொடுத்தாவது பெறுவதற்கும் அவர்கள் தயார் நிலையில் உள்ளார்கள். இந்நிலையில் கற்பிட்டி பிரதேசத்திலுள்ள இனங்காணப்பட்ட அரச காணிகள் சில அரசியல்வாதிகளின் உதவியுடன் புத்தளத்திற்கு வெளியே உள்ளவர்கள்  வர்த்தகர்களுக்கு விற்கப்படுகிறது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 20, 2011 at 10:00 pm

இலங்கையில் சல்மான் ருஸ்தியின் நடுநிசி சிறுவர்கள் இரகசியமாக படமாக்கப் பட்டு விட்டது

with one comment

M.ரிஸ்னி முஹம்மட்: சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஸ்தி 1981 இல் எழுதி வெளியிட்ட நடுநிசி சிறுவர்கள்- Midnight’s Children- என்ற கதையை இலங்கையில் இரகசியமாக படமாக்கப் பட்டு விட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் இலங்கையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் தீடீர் என்று இடை நிறுத்தப்பட்டது. இதற்கு ஈரானின் தலையீடு இருந்ததாக இயக்குனர் தீபா மேத்தா தெரிவித்துள்ளார்.விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 20, 2011 at 9:14 pm

தலைமைத்துவ பயிற்சி குறித்த திகதியில் நடைபெறும்

leave a comment »

பல்கலைக்கழகத்துக்கு நுழையவுள்ள மாணவர்களுக்காக நடைபெறவுள்ள தலைமைத்துவ பயிற்சி திட்டமிட்டபடி எதுவித தாமதமுமின்றி நடைபெறும் என உயர்கல்வி அமைச்சர் எஸ். பி .திசாநாயக தெரிவித்துள்ளார். முன்னதாக அறிவிக்கபட்டதற்கிணங்க எதிர்வரும் 23 ஆம் திகதி பயிற்சிகள் ஆரம்பமாகவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றது.

முதன்முறையாக பலகலைக்கழக மாணவர்களுக்காக இராணுவ முகாம்களில் நடைபெறவுள்ள பயிற்சிகள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணமுள்ளன. இந்த பயிற்சிகளுக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் 7 நாட்களுக்கு இந்த பயிற்சியை பிற்போடுவது தொடர்பாக கவனம் செலுத்துமாறு சட்டமா அதிபருக்கு உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 20, 2011 at 8:41 pm

மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி உலகின் வேறெந்த நாட்டிலும் நடைமுறையில் இல்லை

with 2 comments

பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்க அரசு தீர்மானித்துள்ளது. இவ்வாறானதொரு திட்டம் உலகின் வேறெந்த நாட்டிலும் நடைமுறையில் இல்லை. பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளித்தல் தொடர்பாக அரசமைப்பிலோ, பல்கலைக்கழக சட்டத்திலோ, சர்வதேச மனித உரிமை பட்டயத்திலோ எதுவும் இல்லை. இப்படி ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்றுத் தெரிவித்துள்ளார்

ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற போது . இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியதாவது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 20, 2011 at 9:20 am

இராணுவப்பயிற்சியல்ல ஆளுமைப் பயிற்சியே வழங்கப்படும்

leave a comment »

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி அன்றி சிறந்த எதிர்காலத் தலைவர்க ளாக மாற்றுவதற்கான ஆளுமை பயிற்சியே வழங்கப்படுகிறது.ஆளுமை விருத்தி, திறன் விருத்தி, தலைமைத்துவம், வரலாறு, சமூக ரீதியான பழக்கவழக்கங்கள், பாலியல் ரீதியான வன்முறைகள், சட்டம் ஒழுங்கு, தேக ஆரோக்கியம் உட்பட 15 அம்சங்கள் தொடர்பில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கூறினார்.

இந்தப் பயிற்சியினூடாக ரியூசன் மற்றும் உயர்தர வகுப்பு மனநிலையில் இருந்து விலகி பல்கலைக்கழக கல்விக்கு ஏற்ற மனநிலை மாணவர்களுக்கு வழங்கப்படும். பகிடி வதையும் முற்றாக ஒழிக்கப்படு மெனவும் அமைச்சர் கூறினார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 20, 2011 at 9:18 am

ஐ நா விலிருந்து ஆபிரிக்க நாடுகள் அவசரம் வெளியேறுவது அவசியம் !

leave a comment »

நல்லையா தயாபரன்
ஆபிரிக்க நாடுகள் நன்கு சிந்தித்து முடிவெடுக்கப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும்போதே அதற்குப் பலமும், உண்மையான சுதந்திரமும் கிட்டும். கௌரவத்துக்கும், மதிப்புக்கும் ஒரு விலை உண்டு. அதைச் செலுத்த ஆபிரிக்க நாடுகள் தயாரா?

ஐக்கிய நாடுகள் அமைப்பு கூட அங்கத்துவ அரசுகளின் விவகாரங்களில் ஆபிரிக்க யூனியனின் பாத்திரத்தை உதாசீனம் செய்கின்றது . இதன் உள்நோக்கம் உப-சஹாரா (மத்திய, மேற்கு, கிழக்கு மற்றும் தென் ஆபிரிக்க) ஆபிரிக்க நாடுகளைத் தனிமைப்படுத்தி, அவற்றை மேலும் கட்டுப்படுத்துவதாகும். ஐநூறு வருட காலம், மேற்குலகுடன் பெருமளவுக்குச் சமத்துவமற்ற ஓர் உறவுக்குப் பின்னர் எது நல்லது, எது மோசமானது என்பது குறித்து ஆபிரிக்க மக்களுக்கு மேற்குலகுடன் ஒரே மாதிரியான அளவுகோல்கள் கிடையாது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 20, 2011 at 8:57 am

தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாடு

with one comment

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மூன்றாவது உலகத் தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாடு இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மலேசியா உட்பட 12 நாடுகளிலிருந்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட பேராளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

மாநாட்டின் மலேசிய பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது பேராதனை பல்கலைக்கழக மெய்யியல்துறை தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் மற்றும் பேருவளை ஜாமீயா நளீமியா கலாபீடத்தின் பிரதி பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார் முஹம்மட் ஆகியோர் மாநாட்டில் சிறப்புரையாற்றவுள்ளனர். இதில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான சுமார் 160 இலங்கையர்கள் பங்குகொள்ளவுள்ளனர்

Written by lankamuslim

May 20, 2011 at 8:12 am

மே 18 இரு தேசங்களாக இலங்கை !!!

leave a comment »

புலிப் பயங்கரவாதத்துக் கெதிரான இலங்கை அரசின் யுத்தத்தில் வெற்றி பெற்ற நாளாக பிரபாகரனை கொன்ற மே 18ஆம் திகதியை இலங்கை அரச படைகளின் வெற்றி நாளாக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை தமிழர் தரப்புகள் மே 18ஆம் திகதியை துக்கதினமாக பிரகடனப்படுத்தி இலங்கை உட்பட உலகின் பல பாகங்களிலும் அதனை அனுஷ்டித்து வருகின்றனர்.

இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பின் தலைவர் -பிரதமர் -விஸ்வநாதன் உருத்திரகுமாரன் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென் தமிழீழத்தில் ஆரம்பித்து வன்னிப் பெருநிலமெங்கும் படர்ந்து விரிந்த சிங்களத்தின் கொடுங்கரங்கள் முள்ளி வாய்க்கால் மூலைக்குள் வைத்து நமது மக்களைக் கொன்றொழித்து இனப்டுகொலை புரிந்த பெரும் கொடுமையின் இரத்த சாட்சிமாய் அமைந்து விட்ட நாள் .. விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2011 at 7:41 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,798 other followers