Archive for April 7th, 2011
ஜப்பானில் மீண்டும் பூமி அதிர்ச்சி
ஜப்பானில் சற்று முன்னர் ஏற்பட்ட பூமி அதிர்வால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த அதிர்வு சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், சுனாமி மற்றும் தொடர் பூமி அதிர்வுகளால் பாதிக்கபட்ட பகுதியிலேயே மீண்டும் ஏற்பட்டுள்ளது.
கடந்த சுனாமி அனர்த்தம் அணு உலைகளை பெரிதும் பாதித்துள்ள நிலையில் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளது .ஜப்பானின் வட கிழக்கு கடற்கரை பகுதியான ஹோன்சு பகுதியை குலுங்க வைத்த இந்த பூமி அதிர்ச்சி, ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி இருந்ததாகவும் இந்த அதிர்வினால் டோக்கியோவின் கட்டங்கள் அதிர்ந்ததாகவும், ஜப்பான் அறிவித்து உள்ளது விரிவாக Read the rest of this entry »
மன்னாரில் ஓகஸ்ட் மாதம் மூன்று எண்ணெய் கிணறுகள் தோண்டப்படும்
மன்னார் பிரதேசத்தில் எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று கனிய வளங்கள் அமைச்சு அறிவித்துள்ளது மன்னார் பிரதேசத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் கொண்ட எட்டு இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன பிரதேசத்தில் எண்ணெய் வளப்படுகையை பொருத்து மேலதிக கிணறுகள் தோண்டப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அவைகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒப்பந்த அடிப்படையில் ஆய்வு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளன முதல் கட்டமாக மூன்று எண்ணெய் கிணறுகள் தோண்டபடவுள்ளது இந்த பணியை இந்தியா நிறுவனமான கெயிர் மேற்கொள்ளவுள்ளது என்று அறிய முடிகின்றது விரிவாக Read the rest of this entry »
கப்பம் பெரும் அரசியல்வாதிகள் கைதாகின்றனர்
பேலியகொடை மீன் விற்பனை சந்தை கட்டிடத் தொகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் பிரதி மேயர் உட்பட கப்பம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கப்பம் பெறப்பட்டுவருவதாகக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டதை அடித்து அடுத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் 100 பேர் நேற்று முன்தினம் இரவு நடத்திய சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட பிரதி மேயர் உட்பட பலர் கைதாகியுள்ளனர் விரிவாக Read the rest of this entry »
சத்ய சாய் பாபாவின் நிலைமை கவலைக்கிடம் !!
கடந்த வாரம் சாய் பாபா நெஞ்சு மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். இதையடுத்து அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அம்மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் ஏ.என்.சபாயா கூறியதாவது,
பகவான் சத்யா சாய் பாபா வென்டிலேட்டர் உதவியால் சுவாசிக்கிறார். அவரின் முக்கிய உறுப்புகள் சிகிச்சையை ஏற்றும் கொள்ளும் நிலையில் இல்லை. அவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார் என்று இந்திய செய்திகள் தெரிவிகின்றன சத்ய சாய் பாபா அவரது அடியார்களினால் இறை அவதாரம் எனவும் இன்னும் பல அடியார்களினால் கடவுள் எனவும் வணங்கப்படுபவர் இவர் அத்துவைதம் என்ற தத்துவம் ஒன்றை போதித்து வருகின்றார் விரிவாக Read the rest of this entry »







