Archive for April 2011
ஐநா செயலர் விசாரணைக்குழு அமைக்க முடியுமாம்
ஐநா நிபுணர் குழு சமர்ப்பித்துள்ள தருஸ்மன் அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது இது தொடர்பில் கருத்துரைத்துள்ள ஊடகத்துறை அமைச்சர் சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது இலங்கை தொடர்பில் ஒருதலைப்பட்சமாக முடிவு எடுக்க ஐ.நா. செயலாளருக்கு உரிமை கிடையாது. இந்த அறிக்கை குறித்து தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. தருஸ்மன் அறிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய நிபுணர் குழுவொன்றை நியமித்ததை நாம் ஆரம்பத்திலேயே நிராகரித்தோம். இந்த செயற்பாட்டை ஏற்க முடியாது விரிவாக Read the rest of this entry »
குவாண்டனாமோ சிறையில் அப்பாவிகள் சித்திரவதை
சிறைக்கைதிகளை சித்திரவதை செய்வதில் உலகப் புகழ் பெற்ற குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலானோர் நிரபராதிகள் என்பது அமெரிக்காவிற்கு தெரியும் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் அமெரிக்கா 780 பேரை சிறையிலடைத்து சித்தரவதைக்குள்ளாக்கி வருகிறது. இவர்களில் 220 பேரை ஆபத்தானவர்கள் என்ற பட்டியலிலும், 150 பேரை நிரபராதிகள் என்ற பட்டியலிலும் அமெரிக்கா உட்படுத்தியுள்ளது. 380க்கும் மேற்பட்டவர்கள் சாதாரண போராளிகள் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் விரிவாக Read the rest of this entry »
மஸ்ஜித்துகள் முன்பாக பெரஹரா எவ்வாறு செல்லும் ?
மஸ்ஜிதுகள் முன்பாக பெளத்த மத ஊர்வலமான பெரஹரா செல்லும்போது பறை,மேளம் அடித்தும் குழல் ஊதியும் செல்வது தொடர்பாக முஸ்லிம்களின் கருத்தை அறிவதற்கான கூட்டம் திக்குவல்லை வெவுருகன்னல ரஜமஹா விகாரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது .
இங்கு உரையாற்றிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும பெரஹரா பொது வீதியால் செல்லும் போது எவரது அனுமதியையும் பெறத் தேவையில்லை. மகிந்த சிந்தனையின் கீழ் சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள மதவழிபாட்டுத் தலங்களின் முன்பாக பெரஹரா செல்வது தொடர்பாக அவர்களின் கருத்துக்களை அறியவேண்டியுள்ளது என்றும் அதன்காரணமாக திக்குவல்லை பகுதியில் முஸ்லிம்களின் கருத்துக்களை அறிவதற்காக இக்கூட்டத்தை நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »
புலிகளின் பணம் பறிமுதல் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடப்பட வேண்டும்
போரின் இறுதி கட்டத்தில் நிகழ்ந்த விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலருக்கு ஆலோசனை கூற அமைக்கப்பட்ட மூவர் குழுவின் அறிக்கையில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் செயல்பாடுகளும் கணிசமாக விமர்சிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளுக்கு கணிசமான பொருளுதவியையும், தார்மீக ஆதரவையும் பல ஆண்டுகளாக புலம் பெயர் தமிழர்கள் வழங்கி வந்துள்ளனர் என்றும் இவர்கள் இலங்கை அரசு மீது மனக்குறைகளை கொண்டிருக்கின்றனர் என்றும் ஐ நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது விரிவாக Read the rest of this entry »
கிண்ணியா ஆதார வைத்தியசாலை புறக்கணிக்கப்பட்டுள்ளதா ?
கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் போதாமையால் பொதுமக்கள் சுகாதார சேவைகளை பெறமுடியாது பெரும் அவதியுறுவதாக சுட்டிகா ட்டப்பட்டுகிறது. 80 ஆயிரம் வரையான மக்கள் வாழ்கின்ற கிண்ணியாவின் ஆதார வைத்தியசாலையில் 8 வைத்தியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் இந்த வைத்தியர்களுக்குத் 32 டாக்டர்கள் தேவை உள்ளபோதும் . நீண்ட காலமாக இவ் வெற்றிடங்கள் நிரப்பப் படாமலேயே காலம் கடத்தப்படுவதாகவும் இதனால் பொது மக்கள் பெருஞ் சிரமங்களை அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை 55 ஆயிரம் மக்களைக் கொண்ட தெஹியத்த கண்டியவின் வைத்தியசாலையில் 85 வைத்தியர்களும், 46 ஆயிரம் மக்களைக் கொண்ட கந்தளாய் வைத்தியசாலையில் 65 வைத்தியர்களும் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது விரிவாக Read the rest of this entry »
ஐ.நா அறிக்கை மட்டும்தான்
நிபுணர் குழுவின் அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், உள்நாட்டு யுத்தத்தின் இறுதி மாதங்களின்போது பொதுமக்கள் கொல்லப்பட்ட விடயம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு தனிப்பட்ட முறையில் தனக்கு அதிகாரம் குறைவாகவே உள்ளதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார் என்று ராய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது
இலங்கையின் போர்க் குற்றச் சாட்டுகள் தொடர்பாக நம்பகரமான ஆதாரங்கள் இருப்பதாக நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததுடன், சர்வதேச மட்டத்திலான சுயாதீன விசாரணைக்கான ஏற்பாட்டை பான் கீ மூன் மேற்கொள்ள வேண்டுமென நிபுணர் குழு பரிந்துரை செய்திருந்தது விரிவாக Read the rest of this entry »
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் 214 பக்கங்களை கொண்ட அறிக்கை ஐக்கியநாடுகள் சபையினால் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை வெளியிடக்கூடாது என இலங்கை அறிவித்திருந்தமை இந்த அறிக்கை மேற்குலகு இலங்கையின் மீது ஆதிக்கம் செலுத்த வாயல்களை துறந்து கொடுக்கும் என்று விமர்சிக்கப் படுகின்றது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கையை முழுமையாக ஆங்கிலத்தில் பார்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்
கிழக்கில் 716 மேலதிக ஆசிரியர்களுக்கு இடமாற்றம்
கல்முனையை சேர்ந்த மூன்று கல்வி வலயங்களில் மேலதிக ஆசிரியர்களாக கடமையாற்றும் 716 பேரை கிழக்கு மாகாணத்தில் பற்றாக்குறையாக உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக வேறு வலயங்களுக்கு மே மாதம்முதல் இடமாற்றம் செய்யப்படுவர் என கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் தெரிவித்துள்ளார் கடந்த வெள்ளிகிழமை ஆசிரியர் இடம்பாற்றதை எதிர்த்து மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர் என்பது குறிபிடத்தக்கது
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் மேலும் தெரிவித்துள்ள தகவலில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 106 ஆசிரியர்களும் சம்மாந்துறை கல்வி வலயத்தில் 275 ஆசிரியர்களும் கல்முனை கல்வி வலயத்தில் 335 ஆசிரியர்களும் தேவைக்கு மேலதிகமாகவுள்ளனர். விரிவாக Read the rest of this entry »
ஐநா அறிக்கைஅரசியல் தீர்வை துரிதப்படுத்தும்: பசீர் சேகுதாவூத்
எம்.சுக்ரி: ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கு வழங்கியுள்ள அறிக்கையானது இலங்கையில் அரசியல் தீர்வை துரிதப்படுத்துவதற்கான இராஜதந்திர நடவடிக்கையாக கருதமுடியுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பூநொச்சிமுனை இக்றாஹ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் விரிவாக Read the rest of this entry »
‘படை முகாம்களில் வதிவிட பயிற்சி; முஸ்லிம் மாணவிகளுக்கு பிரச்சினை’
2011ஆம் கல்வி ஆண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ள மாணவர்களுக்காக உயர்கல்வி அமைச்சு முப்படைகளின் நெறிப்படுத்தலின் கீழ் படை முகாம்களில் நடத்தப்படவுள்ள மூன்று வார வதிவிட தலைமைத்துவ பயிற்சிநெறி கலாசார ரீதியில் முஸ்லிம் மாணவிகளுக்கு பல்வேறு பிரச்சiனைகளை ஏற்படுத்தும் என மாற்றுக் கொள்கைக்கான பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் சஹ்பி எச். இஸ்மாயில் தெரிவித்தார்.
தமது கலாசாரத்தை இறுக்கமாக பின்பற்றும் முஸ்லிம் பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகளை இவ்வாறான பயிற்சி நெறியை தொடர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என அவர் குறிப்பிட்டார் விரிவாக Read the rest of this entry »
பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் தொடர்புகொள்ளவும்
வடமாகாண சபையின் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான தகைமைப் பரீட்சை எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணம், சாவகச்சேரி, பருத்தித்துறை, மன்னார் , வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
27ஆம் திகதிக்குப் பின்னரும் அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் 021 321 5543 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அலுவலகத்துடன் நேரடியாகவோ தொடர்பு கொள்ளுமாறு ஆணைக்குழு செயலாளர் சி. திருவாகரன் கேட்டுள்ளார் விரிவாக Read the rest of this entry »
காத்தான்குடியில் பல பாடசாலைகளுக்கு அதிபர்களும் இல்லை
காத்தான்குடியில் பல பாடசாலைகளுக்கு அதிபர்களும் இல்லை கல்வி அதிகாரியும் இல்லை: மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் உள்ள காத்தான்குடி கல்வி பிரிவில் பல பாடசாலைகளில் நிரந்தரமான அதிபர்கள் நியமிக்கபடாமையால் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்கள் நிரப்படாமையாலும் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கபடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காத்தான்குடி அன்வர் வித்தியாலயம் , அல் அமீன் வித்தியாலயம் , ஹைராத் வித்தியாலயம் ,அல் ஹஸனாத் வித்தியாலயம், இக்பால் வித்தியாலயம், மொத்தபள்ளி வித்தியாலயம், ஆகிய பாடசாலைகளில் அதிபர்கள் நியமிக்கப்படாது அங்கு பணி புரியும் ஆசிரியர்கள் சிலரே பாடசாலைகளின் நிர்வாகத்தை கவனிப்பதாகவும் அதேபோன்று விரிவாக Read the rest of this entry »
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளிவருகின்றது
கடந்த ஆண்டு உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகள் எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜயந்த நவரடன தெரிவித்துள்ளார் .
வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்து வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்களும் தெரிவித்துள்ளது என்றும் மே மாதம் பல்கலை கழக நுழைவுக்கான விண்ணப்பங்களும் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கபடுகின்றது.
இனப் பிரச்சினை தீர்வினை உடன் முன்வைக்கவேண்டும்
இனங்களுக்கு இடையில் ஏற்படக் கூடிய முறுகல் நிலையயை தவிர்க்கும் வகையில் இனப் பிரச்சினைக்குத் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்ட வேண்டும் அதன் மூலம் இன ஒற்றுமையையும் சமாதானத்தையும் , சக ஜீவனத்தையும் இனங்களுக்கிடயே பேண முடியும் என நீதியமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார் மன்னார் மாவட்டம் அரச அதிபர் அரச அதிகாரிகள் போன்ற பிரமுகர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் ஒன்றில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கடந்த யுத்த காலங்களில் தமிழ் , மற்றும் முஸ்லிம்கள் அனுபவித்த இன்னல்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது இன ரீதியான முறுகல் நிலையினால் ஏற்பட்ட புண்களை ஆற்றுவதற்கான காலம் தற்போது தோன்றியுள்ளது இந்த புண்களை ஆற்றிக்கொண்டு அணைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக கைகோர்த்து செயல்படவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புத்தளம் வாகன விபத்தில் 8 பேர் படுகாயம்
புத்தளம் நாவற்காடு பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வான் வேகமாக பயணித்ததைத் தொடர்ந்து மழை காரணமாக பாதையைவிட்டு விலகி மரத்தில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 8 பேரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் மூவரது நிலை மோசமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன விரிவாக Read the rest of this entry »
இலங்கை சனத்தொகை 20.65 மில்லியன் தொலைபேசி 20.8 மில்லியன்
இலங்கை சனத்தொகை 2010ம் ஆண்டில் 20.65 மில்லியனாக இருந்தது. ஆயினும் தொலைத்தொடர்பு துறையில் குறிப்பாக தொலைபேசித் துறையின் வளர்ச்சி அதைவிட கூடுதலாக இருக்கின்றது. இலங்கையின் சனத்தொகை 20.65மில்லியனாக இருந்தாலும் எங்கள் நாட்டிலுள்ள கையடக்க தொலைபேசிகள், வீடுகளில் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ள தொலைபேசிகள் மற்றும் சி.டி.எம்.ஏ தொலைபேசிகள் என்பன 20.8 மில்லியனாக இருக்கின்றது.
இந்த புள்ளி விபரங்களின் படி எங்கள் நாட்டின் ஒவ்வொரு பிரஜையிடமும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அளவில் தொலைபேசிகள் இருப்பது ஆதாரபூர்வமாக இப்போது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் தெரிவித்த தொலைத்தொடர்புகள் அமைச்சின் அதிகாரி ஒருவர் பின்தங்கிய கிராமங்களில் வறுமைக் கோட்டின் கீழுள்ளவர்களும் ஒரு கையடக்கத் தொலைபேசியை வைத்திருக்கிறார்கள் என்றார் விரிவாக Read the rest of this entry »
குஜராத் படுகொலை : “துணைநின்றார் மோடி”
குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி, கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்துக்கு துணை நின்றதாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சஞ்சீவ் பட் என்ற அந்த அதிகாரி, கோத்ரா கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட எஸ்.ஐ.டி. எனப்படும் சிறப்புப் புலனாய்வுக் குழு மீது நம்பிக்கையில்லாத காரணத்தால்தான் தான் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார் -இந்த திட்ட மிட்ட பயங்கரவாத படுகொலைக்கு சுமார் 3000 தொடக்கம் 5000 வரையான முஸ்லிம்கள் கொல்லபட்டுள்ளனர் – விரிவாக Read the rest of this entry »
பிரான்சின் பெண் உரிமை மீறலை எதிர்த்து புத்தளத்தில் கண்டன கூட்டம்
பிரான்சில் முஸ்லிம் பெண்களின் உடை உரிமைகளை மறுக்கும் சட்டத்துக்கும் , முகத்தை மூடி உடையணிந்தால் அந்த பெண்களை குற்றவாளியாக பார்க்கும் அரச சட்டத்தையும் எதிர்த்து இன்று புத்தளத்தில் பெண்கள் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்த கூட்டமும் அமைதி எதிர்ப்பும் இடம்பெற்றுள்ளது என்று எமது lankamuslim.org செய்தியாளர் தெரிவிக்கின்றார்
முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி உடையணிவது கடமை என்ற நிலை இல்லாதபோதும் பலர் விரும்பி அதை அணியும் போது அதை தடுப்பதும் அதை சட்ட படி குற்றமாக சட்டம் அமுல்படுத்துவதும் அவர்களை குற்றவாளிகளாக கையாண்டு சிறையில் அடைப்பதும், நடு வீதில் வைத்து அவர்களின் உடையை அகற்றுவதும் பெண்கள் மீதான அப்பட்டமான உரிமை மீறல் என்பதற்கும் மேலாக முஸ்லிம் பெண்கள் மீதான பயங்கரவாதம் என்று அமைதி ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர் விரிவாக Read the rest of this entry »
Time 100 இல் இருந்து ஜனாதிபதி மஹிந்த பெயர் நீக்கம்
டைமிஸ் சஞ்சிகையினால் நடாத்தப்படும் உலகின் செல்வாக்கு பெற்ற 100 நபர்களை தெரிவு செய்வதற்கான இணைய வாக்கெடுப்பின் இறுதி கட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரை அதிலிருந்து அகற்றியுள்ளது இந்த வாக்கெடுப்பில் இறுதியாக தெரிவு செய்யப்பட்ட 10 நபர்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் 4ஆவது இடத்தினை பெற்றுக் கொண்டிருந்தார் எனினும் அந்த பட்டியலில் இருந்து இன்னும் சிலரும் நீக்கப்பட்டுள்ளனர்.
எகிப்திய மக்கள் எழுச்சியை இணைத்தளம் மற்றும் FaceBook ஆகிய வற்றின் ஊடாக ஆரம்பித்து வைத்த வாயில் கனீம் என்ற செயல்பாட்டாளருக்கு டைமிஸ் சஞ்சிகையின் செல்வாக்கு பெற்ற 100 நபர்களின் பட்டியலில் முதல் இடம் வழங்கப்பட்டுள்ளது விரிவாக Read the rest of this entry »
ஆசிரியர் இடமாற்றத்தை ரத்துச் செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு கோரி கிழக்கு மாகாணத்தில் கல்முனை சம்மாந்துறை வலயங்களிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் நாளை வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது
கல்முனை,கல்முனைக்குடி,மருதமுனை,சாய்ந்தமருது,சம்மாந்துறை,நிந்தவூர் போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை ஜூம் ஆத் தொழுகையைத் தொடர்ந்து பள்ளிவாசல்களுக்கு முன்னால் இவ்வார்ப்பாட்டங்கள் இடம்பெறும் என்று அறிக்கப்பட்டுள்ளது விரிவாக Read the rest of this entry »
ஐ. நா. நல்லிணக்க செயற்பாட்டை குழப்பக் கூடாது: ரஷ்ய தூதுவர்
நீண்ட கால மோதலினால் ஏற்பட்ட காயங்களை இலங்கை தேற்றி வரும் இச்சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையானது தேவையேற்படின் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டு மேயொழிய இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்கச் செயற்பாடுகளை குழப்பாமலிருப்பதே சிறந்ததென தாங்கள் நம்புவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விலடிமிர் பி. மிக்கைலொவ் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த வாரம் ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டு ள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »
சாய்ந்தமருதில் கவர்ச்சி நடனம் அமைச்சர் திட்டினார்
சாய்ந்தமருதில் நடைபெற்ற இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் நிகழ்ச்சியொன்றின்போது கவர்ச்சி நடனங்கள் நடத்தப்பட்டமை குறித்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உத்தயோகஸ்தர்களை கடுமையாக திட்டியுள்ளார்.
அண்மையில், கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் கிழக்கு மாவட்ட நிலையம் என்பன இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் திறந்து வைக்கப்பட்டன விரிவாக Read the rest of this entry »
யாழ் மீள்குடியேற்றம் இஸ்லாமிய மீள்குடியேற்றமாக அமைய வேண்டும்
கடந்த ஞாயிற்று கிழமை லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது என்று லண்டனில் இருந்து அலி ரிஸான் lankamuslim.org க்கு தெரிவித்துள்ளார் 20 ஆண்டுகளின் பின் தாயக மண்ணில் குடியேறுவதில் ஏற்படும் சவால்கள் , பிரச்சினைகள் அவற்றை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் மற்றும் வெளிநாடுகளில் குறிப்பாக பிரிட்டனில் வாழும் யாழ் முஸ்லிம்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்புகள் தொடர்பான அந்த கலந்துரையாடலுக்கு பிரதம அதீதியாக யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி எம் .எம் .எம் ரமீஸ் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து ஏற்பாடுகளையும் லண்டன் யாழ்ப்பாண முஸ்லிம் அசோசியேசன்- Jaffna Muslim Association- மேற்கொண்டுள்ளது யாழ்ப்பாண முஸ்லிம் அசோசியேசன் செயலாளர் பாசில் தலைமயில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் விரிவாக Read the rest of this entry »
நில அதிர்வு ஆய்வு நடைபெறுகின்றது
ஹம்பாந்தோட்டை, கிரிந்த பிரதேசத்தில் நில அதிர்வு உணரப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்துள்ளார் . கிரிந்த, யால சந்திக்கு அருகில் சமகி மாவத்தையில் வசிக்கும் சிலர் நேற்று முன்தினமிரவு இரவு 10.10 மணி முதல் இரவு 10.15 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இரண்டொரு வினாடிகள் இந்த அதிர்வை உணர்ந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்ட இணைப்பாளர் எம்.ஜி.ஏ. நந்தன கூறியுள்ளார்.
இந்த அதிர்வு சுமார் ஐநூறு சதுர மீற்றர்கள் பரப்பில் தான் உணரப்பட்டுள்ளது. இதனால் 8 வீடுகளின் சுவர்களில் வெடிப்புக்களும், நிலத்தில் சிறு பிளவுகளும் ஏற்பட்டுள்ளன. அதில் ஒரு வீட்டின் கொங்ரீட்டும் இடிந்து விழுந்துள்ளது. இங்கு சில வீடுகளின் நிலத்தில் சுமார் 20 சென்றி மீற்றர்கள் நீளத்திற்கு சுமார் 6 மில்லி மீற்றர்கள் அகலத்திற்கு சிறு பிளவுகளும் ஏற்பட்டுள்ளன விரிவாக Read the rest of this entry »
சாய்ந்தமருது மக்களுக்கு வீடுகள் கிடைக்க ஏற்பாடு !
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 7 ஆண்டுகள் ஆகும் நிலையிலும் இலங்கையில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் வீடுகளை இழந்தவர்களின் வீடில்லா பிரச்சினை இன்னமும் தீர்ந்தபாடில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றார்கள்.
இம்மாவட்டத்தில் சுனாமியினால் இருப்பிடமிழந்தவர்களில் அநேகமானோருக்கு மீண்டும் இருப்பிடங்கள் கிடைத்துவிட்ட போதிலும் குறிப்பாக சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த 405 குடும்பங்கைளக் கொண்ட சுமார் 2000 பேர் இன்னமும் தற்காலிக இருப்பிடங்களிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்ந்து வரும் நிலை தற்போதும் இருப்தாக தெரிவிக்கப்பட்டுகின்றது விரிவாக Read the rest of this entry »
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தேர்தல் ஆணையாளர் சந்திப்பு
வன்னி மாவட்டத்தில் மன்னார், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, இடம்பெயர்ந்து புத்தளத்தை அண்டிய பிரதேசங்களிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் மீண்டும் தங்கள் முன்னைய வசிப்பிடங்களில் தேர்தல் இடாப்புகளில் தமது பெயர்களை பதிவு செய்து கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு உரிய தீர்வுகளை காணும் முகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் பிரதிநிதிகள் நேற்று திங்கட்கிழமை தேர்தல் ஆணையாளர் திரு மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாரூக், பிரதித்தலைவர் பாரூக் மஜீத், அரசியல் பீட உறுப்பினர் சட்டத்தரணி மில்ஹான், முல்லைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பீட உறுப்பினர் நஜாத் ஆகியோரும் இடம்பெற்றனர் விரிவாக Read the rest of this entry »
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு த.தே.கூட்டமைப்பு வரவேற்பு
ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் அவர் நியமித்த நிபுணர் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. “நிரூபிக்கப்பட்டால், இலங்கை அரசாங்கத்தினாலும் புலிகளினாலும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் என்பவை பாரியளவில் பாரதூரமான முறையில் மீறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டும் நம்பகத் தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன.
இவை போர்க் குற்றங்களின் தன்மையைக் கொண்டவையாகலாம். அத்துடன் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றச்செயல்களின் தன்மையையும் கொண்டவையாகும். உண்மையில் யுத்தம் இடம்பெற்ற விதமானது போர் மற்றும் சமாதானத்தின் போது தனிப்பட்ட கௌரவத்தை பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சர்வதேச சட்டத்தின் முழுப்பரிமாணத்தின் மீதும் இடம்பெற்ற தாக்குதலாக தென்படுகிறது’ விரிவாக Read the rest of this entry »
காத்தான்குடியில் அரபுமொழி: BBC
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியின் நகர சபையின் ஆளுமைக்கு உட்பட்ட வீதிகள் மற்றும் ஒழுங்கைகளின் பெயர்ப் பலகைகளில் “அரபு “மொழிக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நூறு வீதம் முஸ்லிம்கள் மட்டும் வாழும் பிரதேசம் காத்தான்குடி பிரதேசமாகும்.
தமது பிரதேசத்திற்கு தப்லீக் ஜமாத் மற்றும் தஹ்வா அமைப்புகள் என வருகை தரும் அரபியர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாகவும், வீதிகளை இலகுவாக அவர்கள் அடையாளம் காண்பதற்காகவே சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளுக்கு மேலதிகமாக நான்காவது மொழியாக அரபு மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக நகர சபையின் தலைவர் எஸ்.எச்.மொகமட் அஸ்பர் கூறுகின்றார் விரிவாக Read the rest of this entry »
புத்தளம் குவைத் ஹொஸ்பிடல் இயங்குகின்றது
புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘குவைத் ஹொஸ்பிடல்’ பல இடையூறுகள், சிரமங்கள் சவால்கள் என்பனவற்றுக்கு மத்திலும் தொடர்ந்து இயங்கி வருவதாக எமது புத்தளம் lankamuslim.org செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் கடந்த ஒன்பதாம் திகதி எமது இணையத்தில் வெளியான தகவல் ஒன்றில் புத்தளம் நகர சபை உறுப்பினர் ஒருவர் புத்தளம் நகர மக்களுக்கு சொந்தமான் ‘குவைத் ஹொஸ்பிடல்’ பல கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் மூடப்பட்டு பல கோடி ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்த தகவல் தொடர்பாக கருத்துரைத்துள்ள எமது புத்தளம் செய்தியாளர்கள் தற்போதும் குவைத் ஹொஸ்பிடல் தொடர்தும் இயங்குவதாகவும் தினமும் மாலை 5.00 மணி தொடக்கும் இரவு 8.00 மணி வரை வெளிநோயளர்கள் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர் இது தொடர்பான புகை படங்களையும் அனுப்பியுள்ளனர் அவர்கள் மேலும் தெரிவித்துள்ள தகவலில் விரிவாக Read the rest of this entry »
ஒரு இஸ்லாமிய இணையத்தின் குரல் !
இலங்கையில் தமிழ் மொழி இணையத்தளங்களில் முஸ்லிம்களின் குரல் மிகவும் அரிதாகவே ஒலித்து வருகின்றது என்ற நிலைதான் இன்றும் தொடர்ந்தாலும் அண்மைகாலமாக இலங்கை முஸ்லிம்களில் மத்தியில் இணையத்தள பயன்பாடு சற்று முன்னேற்றம் கண்டுவருகின்றது குறித்த சில முஸ்லிம் பிரதேசங்களில் அந்த பிரதேச செய்திகளை தாங்கியதாக இணையத்தளங்கள் தோன்றியுள்ளன இவை பாராட்டுக்குரியவை.
Lankamuslim.org, lankamuslim.com, OurUmmah.org, Lankamuslim.info ஆகிய எனது இணையத்தளங்கள் இலங்கை முஸ்லிம்களின் தேசிய செய்திகள் , பிராந்திய செய்திகள் ,செய்தி கட்டுரைகள் , விமர்சன கட்டுரைகள் அரசியல் ஆய்வுகள், சர்வதேச செய்திகள், ஆய்வு கட்டுரைகள்,மொழி மாற்று கட்டுரைகள் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடராக முன்வைத்து வரும்போது பிராந்திய இணையதளங்கள் தமது பிரதேச நடப்புகளை செய்திகளாக பதிவு செய்து முஸ்லிம் சமூகத்துக்கு முக்கிய பங்காற்றி வருகின்றது இந்த வகையில் puttalamonline.com என்ற பிரதேச இணையத்தளம் தனது ஆசிரியர் கருத்தாக பதிவு செய்துள்ள இஸ்லாத்தின் குரலை lankamuslim.org இங்கு பதிவு செய்கின்றது விரிவாக Read the rest of this entry »
பிரதமர் பதவி விலகவேண்டும் ஜாதிக ஹெல உறுமய
பிரதமர் டீ.எம். ஜயரட்ன பதவி விலக வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முக்கியஸ்தரான அமைச்சர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது வயோதிபம் காரணமாக பிரதமரினால் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியவில்லை. ஓய்வுபெறும் வயதில் பதவிகளை வகிப்பதனால் எவருக்கும் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தனியார் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதெல்லையொன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசியல்வாதிகளுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் இவ்வாறு ஓய்வுபெறும் வயதெல்லை கிடையாது விரிவாக Read the rest of this entry »
Arrigoni:பலஸ்தீனர்களின் மற்றுமொரு நண்பன் கொல்லப்பட்டுள்ளான் !
S.M. மஸாஹிம்- (இஸ்லாஹி)
OurUmmah:இத்தாலி நாட்டை சேர்ந்த விட்டோரியோ அரிகோனி -Vittorio Arrigoni, 36- என்ற மனித உரிமை செயல்பாட்டாளர் பலஸ்தீனின் காஸாவில் இயங்கும் சிறிய தீவிரவாத முஸ்லிம் குழு ஒன்றினால் கடத்தப்பட்டு கொல்லபட்டுள்ளார் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது இந்த படுகொலை பயங்கரவாதத்தை ஹமாஸ் மற்றும் எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் ஆகிய அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன.
விட்டோரியோ அரிகோனி இத்தாலி நாட்டை சேர்ந்தவர் இவர் பலஸ்தீனியில் ஊடகவிளாளராகவும் எழுத்தாளராகவும் மற்றும் பலஸ்தீன் மனித உரிமை செயல்பாட்டாளருமாக செயல்பட்டு வந்துள்ளார் என்றும் குறிப்பாக காஸா மீனவர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலைகளை கண்காணிக்க படகு ஒன்றை கடலில் தயார் செய்து வந்துள்ளார் என்று பலஸ்தீன் தகவல்கள் தெரிவிக்கின்றது விரிவாக
பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் – ஒரு தொடர் கதையாடல் 4
எஸ்.எம்.எம்.பஷீர்: “மே மாதம் ம திகதி ஸ்ரீ பெரும்புத்தூரில் ராஜீவ் காந்திக்கு நினைவாலயம் கட்டியிருக்கிறார்கள் , அதே ஸ்ரீ பெரும்புத்தூரில் எமது பத்தினி தெய்வம் தணுவுக்கு நினைவாலயம் கட்டுவோம்” – தேனிசை செல்லப்பா கனடாவில் ஆகஸ்ட் மாதம் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழர் பண்பாட்டு மாநாட்டில் புலிகளின் பிரச்சார பாடகர் தேனிசை செல்லப்பா சூளுரைத்தது. ( தமிழர் பண்பாட்டுக்கும் தற்கொலைதாரி தனுவுக்கும் என்ன சம்பந்தம் என்று தயவு செய்து என்னை கேட்டுவிடாதீர்கள் )
அமைதி குலைந்த அமைதிப்படை நாட்கள்: புலிகளுக் கெதிரான தாக்குதல்களை இந்திய அமைதிப்படை ஒருபுறம் தொடுக்க தெற்கில் மறுபுறம் ஜே வீ பீ இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற சதேகத்தின் பேரில் சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் இலங்கை அரசின் பாதுகாப்பு படையினால் வகை தொகையின்றி கைது செய்யப்பட்டும் கொல்லப்பட்டும் போயினர் விரிவாக
ஐ நா நிபுணர் குழுவின் அறிக்கையும் இலங்கையும்
தனது உறுப்பு நாடான இலங்கையைப் பாதுகாக்க ஐ.நா. சபை தவறும் பட்சத்தில் ரஷ்யா சீனா போன்ற நாடுகளிடம் அடைக்கலம் கோர வேண்டிய நிலைமை ஏற்படலாம் என கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றது
ஒரு சில நாடுகளின் மறைமுக நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் தனது அங்கத்துவ நாடொன்றுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு இவ்வாறான அறிக்கைகளை வெளியிட முனைப்பு காட்டினால், சீனா, ர’ஷ்யா போன்ற நாடுகளிடம் பாதுகாப்பு கோர வேண்டிய சூழ்நிலை உருவாகும் என பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன விரிவாக Read the rest of this entry »
இலங்கை கடல் பரப்பில் கதிரியக்க பரிசோதனை
ஜப்பான் புகுசிமா அணு உலையில் ஏற்பட்ட அணுக்கசிவு இலங்கையை சூழவுள்ள கடல் நீரில் கலந்துள்ளதா என்பது குறித்து இலங்கை அணு சக்தி அதிகார சபை ஆய்வு நடத்தி வருவதாக அதன் தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரம தெரிவித்துள்ளார்
இதற்காக கிழக்கில் இருந்து தென்பகுதி வரையான கடற்பகுதியில் இருந்து கடல் நீர் மாதிரிகள் பெறப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார் விரிவாக Read the rest of this entry »
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் தொடர் இஜ்திமாக்கள்
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியினால் வருடந்தோறும் நடைபெறும் இஜ்திமாக்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன இம்முறையும் நாடளாவிய ரீதியில் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று ஜமாஅதே இஸ்லாமி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது
அந்த தொடரில் “அறிவியல் உலகில் அறியாமை” என்ற கருப்பொருள் கொண்ட இஜ்திமா அக்குரணை அஸ்ஹர் கல்லூரி உள்ளக மைதானத்தில் 24.04.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30மணி முதல் 12.30 வரை இடம்பெறவுள்ளது அறியாமை ஒரு வழிகேடு என்ற தலைப்பில் இந்திய ஜமாஅதே இஸ்லாமியின் பொது உறவு செயலாளர் சிக்கந்தர் என்பவரும் விரிவாக Read the rest of this entry »
அக்குரணையில் மின்னல் மற்றும் கொள்ளை
அக்குரணையில் ஸாஹிரா தேசிய பாடசாலை அமைந்துள்ள பகுதியில் நேற்று மாலை மின்னல் தாக்கியதில் பாடசாலை உட்பட 15ற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று எமது அக்குரணை lankamuslim.org செய்தியாளர் தெரிவிக்கின்றார்
ஸாஹிரா தேசிய பாடசாலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மின்சாரம் தாக்கியதில்பாடசாலையின் நீர்த் தாங்கி ஒரு பகுதி உடைந்து சேதமடைந்துள்ளது விரிவாக Read the rest of this entry »
நிபுணர் குழு அறிக்கை தவறானது, பாரபட்சமானது: அரசு
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை தொடர்பான தனக்கு ஆலோசனை வழங்க நியமித்த நிபுணர் குழு சமர்ப்பித்துள்ள இலங்கையின் பொறுப்புடைமை தொடர்பான அறிக்கை தவறானதும் பாரபட்சமானதுமாகும் என இலங்கை அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
மூன்று அங்கத்தவர்கள் கொண்ட மேற்படி நிபுணர் குழு இன்று ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது விரிவாக Read the rest of this entry »
தமிழ் நாட்டில் 234 சட்ட சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்றுள்ளது
இன்று தமிழ் நாட்டில் 234சட்ட சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்றுள்ளது இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றுள்ளது . பாதுகாப்பு பணியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் துணை இராணுவ படையினர் மற்றும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் 4 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 687 பேர் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள். இதில் ஆண்கள் 2 கோடி 37 லட்சத்து 4,802, பெண்கள் 2 கோடி 34 லட்சத்து 10,716, திருநங்கைகள் 1,169 பேர். 234 தொகுதிகளிலுமாக 54,314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 2 லட்சத்து 88 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் விரிவாக Read the rest of this entry »
ஐநா நிபுணர் குழு அறிக்கை தயாரித்து வழங்கியுள்ளது
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்க ளுக்குப் பொறுப்புக்கூறுதல் தொடர்பாகத் தனக்கு ஆலோசனை கூறவென ஐக்கிய நாடு கள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு தனது அறிக்கையை நேற்றுக் கையளித்துள்ளது . அதன் ஒரு பிரதி அரசுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இறுதிப் போர் இடம்பெற்ற போது மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்கள் இடம்பெற்றதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு யார் பொறுப்புக் கூறுவது என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென ஐ.நா. பொதுச் செயலாளர், மூவர் அடங்கிய குழு ஒன்றை நியமித்திருந்தார் விரிவாக Read the rest of this entry »
யாழ் புதிய சோனகர் தெரு புனரமைக்கப்படுகின்றது
யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட யாழ் முஸ்லிம் பகுதியில் ஒன்றான புதிய சோனகர் தெரு -பொம்மைவெளி- பகுதியை மாநகர சபையினால் கடந்த பெப்ரவரி மாதம் முதல் வீதி புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது என்று அறிய முடிகின்றது பல முஸ்லிம் குடும்பங்கள் மீள் குடியேறியுள்ள நிலையிலும் மிகவும் நீண்ட காலம் புனரமைக்கப்படாது இருந்த அந்த பகுதி கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் புனரமைக்கப்பட்டு வருவதாக தெரிகின்றது
இந்த நடவடிக்கையின் கீழ் ஒரு சமாந்தர வீதியும் , ஒன்பது குறுக்கு வீதிகளும் உள்ளடங்கலாக 1.25 கி.மீ வீதியும் 8 மதகுகளுடன் வடிகால்களும் இத்திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது விரிவாக Read the rest of this entry »
கப்பம்பெறும் குழுக்களை ஒழிப்பதற்கான படை நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பம்
நாடு முழுவதும் உள்ள கப்பம் பெறும் குழுக்களை ஒழித்துக் கட்டுவதற்கான படை நடவடிக்கைகள் அடுத்த வாரம் தொடக்கம் தீவிரமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உறுதியளித்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
பேலியகொடை நவீன மீன் வர்த்தகக் கட்டிடத்தில் இனிமேல் கப்பக் குழுக்களுக்கு இடமில்லை. விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதென்றும் அமைச்சர் தெரிவித்தார் விரிவாக Read the rest of this entry »
1000 பாடசாலைகள் அபிவிருத்தி: தென்பகுதி முஸ்லிம் பாடசாலைகள் எதுவும் உள்வாங்கப் படவில்லை!!
அரசாங்கத்தினால் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தில் தென் பகுதி முஸ்லிம் பாடசாலைகள் எதுவும் உள்ளவாங்க படவில்லை என்று சுட்டிகாட்டப்படுகின்றது தென் மாகாணத்தில் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி செயற்திட்டத்தில் 110 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளபோதும் ஒரு முஸ்லிம் பாடசாலையேனும் தெரிவு செய்யப்படவில்லை என்றும்.
தென் மாகாணத்தில் சுமார் 80000 முஸ்லிம்கள் வாழ்கின்றனர் இங்கு சுமார் 100 முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன இதில் முஸ்லிம் பாடசாலைகள் ஒன்றுகூட உள்வாங்கபடாமை தென்பகுதி முஸ்லிம்களை அதிர்வடைய செய்துள்ளது விரிவாக Read the rest of this entry »
முஸ்லிம் காணிகள் பறிபோகும்போது முஸ்லிம் அரசியல் வாதிகள் மௌனம் ?
அம்பாறை மாவட்டத்தின் முஸ்ஸிம் மக்களுக்குச் சொந்தமான பெருமளவான நிலப்பரப்புகள் பெரும்பான்மை இனத்தவர்களால் அப கரிக்கப்பட்டுள்ளன எனவும் இதனைக்கூட தட்டிக்கேட்க முடியாத நிலையிலேயே ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்ஸிம் அரசியல் வாதிகள் உள்ளனர் என்பதனையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவத்துள்ளார்.
பொத்துவில் முஸ்லிம்கள் பெரும் தொகை நிலங்களை இழந்து வருகின்றனர் அதேபோன்று அட்டாளச்சேனை அஸ்ரப் நகர் முஸ்லிம்கள் தமது காணிகளை பறிகொடுத்துள்ளனர் இவைகள் பற்றி எதிர் தரப்பில் இருந்து குரல் எழுப்பிய முஸ்லிம் அரசியல் வாதிகள் இன்று ஆளும் தரப்புடன் இருப்பதால் விரிவாக Read the rest of this entry »
பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் – ஒரு தொடர் கதையாடல்-3
எஸ்.எம்.எம்.பஷீர்
“இந்திய அமைதிப்படையின் தொடர்சியான பிரசன்னம் இந்த நாட்டில் இரண்டு சமூகத்தினருக்குமிடையில் பாரிய அவநம்பிக்கை உருவாக்கத்திற்கு இட்டு செல்லும். ஆட்சியிலுள்ள குழுவினரே அவர்கள் எந்த கட்சியாகவிருந்தாலும் சரி இதன் (இந்திய அமைதி காக்கும் படையினரின் பிரசன்னத்தால்) நன்மைகளை பெரும் நபர்களாக இருப்பார்கள், உழைக்கும் மக்கள் இழந்தவர்களாகவே இருப்பார்கள்”
உமா மகேஸ்வரன் ( வாசுதேவ நாணயக்காரவுக்கு 1988 ல் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது) . இலங்கையின் புவிசார் பொருளாதார நலன்களை தனது ஆதிக்க கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்திய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தவர் மறைந்த பாரத பிரதமரான இந்திரா காந்தி, ஒரு புறம் கூட்டு சேர அணியினை வலுப்படுத்திகொண்டு மறுபுறம் Read the rest of this entry »
அற்ப சொற்ப சலுகைகளுக்காகத் தமிழ் மக்கள் தமது தன்மானத்தை அடகு வைக்க முடியாது
உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 12 சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிப்பிரமாண வைபவம் திருகோணமலையில் நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்றபோது தமிழ் தேசியக் கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர் இதன்போது அவர் ஆற்றிய உரை தமிழ் மொழி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன அவற்றை இங்கு தருகின்றோம்.
அற்ப சொற்ப சலுகைகளுக்காகத் தமிழ் மக்கள் தமது தன்மானத்தை அடகு வைக்க முடியாது.சாத்வீக வழியிலான எமது முயற்சிகள் தோல்வியடையுமானால், நாமும் மாற்று வழியைத்தான் கடைப்பிடிக்க நேரிடும். இதனை எவராலும் தடுக்கமுடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு சூளுரைத்துள்ளார் விரிவாக Read the rest of this entry »
முஸ்லிம்கள் மத்தியில் பிரதேசவாதம் அதிகரித்து தேசிய உணர்வு மங்குவது கவலைக்குரியது
முஸ்லிம்கள் மத்தியில் தற்போது பிரதேச அடிப்படையான உணர்வும் தனி மனிதர்களை மையப்படுத்திய உணர்வுகளுமே மேலோங்கியுள்ளது முஸ்லிம்கள் மத்தியில் பிரதேசவாத உணர்வு மேலோங்கியதன் காரணமாக தேசிய ரீதியான உணர்வு மங்கி வருகன்றது இந்த நிலை தொடருமானால் முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினை களுக்கும் அரசியல் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவது கடினமாக இருக்கும் என்று பிரதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார் என்று எமது lankamuslim.org தேசிய செய்தியாளர் தெரிவிக்கின்றார்
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது முஸ்லிம்களின் தேசிய உணர்வுகள் பிரதேச அடிப்படையிலும் ஆள் அடிப்படையிலுமே உள்ளது எதிர்காலத்தில் பிரச்சினைகள் வராது இருக்க பேச்சு வார்த்தைகள் அவசியமாகின்றன இதனை புரிந்து கொள்ளவேண்டும் மீண்டுமொருமுறை இலங்கையில் இனக் கலவரமோ வேறு கலவரங்களோ வராது என கூறமுடியாது விரிவாக Read the rest of this entry »
புத்தளம் நகர சபை மேலதிக திட்டங்களுடன்
புத்தளம் நகர சபையினை புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள முன்னால் பிரதியமைச்சர் கே.அப்துல் பாயிஸ் தலைமையிலான நகரசபை, புத்தள நகர மக்களின் நலன் கருதி பல திட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக புத்தளம் நகரசபை உறுப்பினர் முஜாஹிதுல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இவர் தெரிவித்துள்ள கருத்தில் புத்தளம் நகரசபை அதன் வழமையான செயல்பாடுகளுக்கு அப்பால் புத்தளம் நகர பகுதியில் வாழும் முஸ்லிம், சிங்கள, தமிழ் மக்களின் உரிமைகளை காக்கவும், புத்தளத்தில் பொது நிறுவனங்கள், அரசியல் நிறுவங்கள், இஸ்லாமிய நிறுவங்கள் ஆகியவற்றின் முறைகேடான செயல்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவதுடன், நகரின் கல்வி, பொருளாதார அபிவிருத்தி , பாதுகாப்பு என்பன தொடர்பாகவும் நடவடிக்ளைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »
புத்தளம் மாவட்டத்தில் கைத்தொழில் பேட்டைகள்: தனி நபர் பிரேரணை
புத்தளம் மாவட்டத்தில் கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபிக்கவேண்டும் என்று குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் கொண்டு வந்த தனி நபர் பிரேரணைக்கு நேற்று சபையில் ஏகமான அங்கீகாரம் பெற்றது. இப் பிரேரணை மீதான விவாதத்தை தொடக்கி வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர், “புத்தளம் மாவட்டத்தில் தொழில் வாய்ப்பு வசதிகள் குறைவாக உள்ளது. ஆனால் தொழில் வாய்ப்புக்கான வளங்கள் நிறைய உள்ளன.
இம் மாவட்டத்தில் கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதன் மூலம் இம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பின்றி இருப்போருக்கு தொழில்களை வழங்கக் கூடியதாக இருக்கும்.இதனைக் கருத்தில் கொண்டே இப் பிரரேரணையை சபைக்கு கொண்டு வந்தேன் என்றார்.அதனைத் தொடர்ந்து இப் பிரேரணை சபையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.









