சில இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம்
இன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி மஸ்ஜிதுக்கு முன்னாள் ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் லிபியா மீது மேற்கு நாடுகள் நடத்தும் தாக்குதலை கண்டித்து நூற்று கணக்கானவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது.
அதேவேளை அழைப்பு விடுக்கப்பட்டது போன்று நாட்டின் மற்ற முஸ்லிம் பிரதேசங்களில் ஆர்பாட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று எமது lankamuslim.org செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் குருநாகல் பிரதேசத்தில் ஜும்மாஹ்வின் பின்னர் ஒரு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாகவும் அறிய முடிகின்றது







