Archive for March 2011
உள்ளூராட்சித் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் 5ஆம் திகதி பாராளுமன்றம் வருகின்றது
உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்
மக்களுக்கு மேலும்பல நன்மைகளை செய்துகொடுக்கும் வகையிலும், ஏற்கனவே காணப்பட்ட சில குறைபாடுகளை நிவர்த்தி செய்தும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர் வரும் 5ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றத்தில் இந்தத் திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்படும்.ஏற்கனவே இருந்த விருப்பு வாக்கு முறைமை சீர்ப்படுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக தொகுதி முறைமை கொண்டு வரப்படவுள்ளது. இதன் ஊடாக விருப்பு வாக்குகளினால் ஏற்படுகின்ற மோதல்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »
22 உள்ளூராட்சி சபைகளின் காலம் ஆறு மாதத்தால் நீடிப்பு
கலைக்கப்படாத 22 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலத்துக்கு நீடிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி மேற்படி 22 உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்படுகிறது.
2011 ஜுலை 30ஆம் திகதியுடன் பதவிக்காலம் முடிவடையும் 22 உள்ளூராட்சி சபைகளும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாவதற்கு 2011ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க அவசர நிலை சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி நிறுவனங்கள் முகாமைத்துவ கட்டளையின்கீழ் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது விரிவாக Read the rest of this entry »
14ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பமாகின்றது
இலங்கையில் 14ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 1981ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் ஆரம்பமாகவுள்ளது ஒரு சிறப்பம்சமாகும் இதன் கீழ் முதலில் நாடு முழுவதும் காணப்படும் கட்டடங்கள் கணக்கிடப்படுவதாக சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள நிறைவேற்றுப் பணிப்பாளர் சுரங்ஜனா வித்யாரட்ன தெரிவித்துள்ளார்
எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதிவரை இந்த நடவடிக்கை இடம்பெறுவதால் அதிகாரிகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார் விரிவாக Read the rest of this entry »
ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராச்சி சபைகளுக்கு ஜூன் மாதம் தேர்தல்
வழக்கு விசாரணை, கிரிகெட் விளையாட்டு, மீள் குடியேற்றம் போன்ற காரணங்களால் தேர்தல் திணைக்களத்தினால் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராச்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஜூன் மாதம் நடாத தேர்தல் திணைக்களம் ஏற்பாடுகளை செய்துவருவதாக தெரிவிக்கபடுகின்றது.
இந்த தேர்தலுக்கான பத்திரங்கள் இன்னும் சில நாட்களில் தேர்தல் ஆணையாளராக புதிதாக பதவி ஏற்றுள்ள மஹிந்த தேசபிரியவினால் கோரப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.நீதிமன்ற வழக்குகள் காரணமாக 64 சபைகளுக்கான தேர்தலும், கிரிகெட் விளையாட்டு காரணமாகவும் மீள் குடியேற்றம் காரணமாகவும் இன்னும் பல சபைகளுக்கான தேர்தலும் ஒத்திவைக்கபட்டது விரிவாக Read the rest of this entry »
பொதுமக்களைக் கொல்பவர்களுடன் நாங்கள் இல்லை: ஜனாதிபதி
நேற்று கொழும்பில் இருந்து செயற்படும் வெளிநாட்டுப் ஊடகவியலாளர்களை ஜனாதிபதி அலரி மாளிகையில் சந்தித்துப் பேசியுள்ளார் அதன்போது லிபியாவில் தற்போது நடைபெற்று வரும் சண்டை குறித்தும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியயுள்ளனர் அதற்கு பதிலளித்த ஜனாதிபதி மக்கள் எப்போதும் சரியாகவே நடந்து கொள்கிறார்கள் என்று எப்போதும் நம்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார்
“பொதுமக்களைக் கொல்பவர்களுடன் நாங்கள் இல்லை. எந்த ஒரு நாட்டின் இறைமைக்கும் எதிராக வன்முறை பயன்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது” என்று தெரிவித்துள்ளார். விரிவாக Read the rest of this entry »
ஐ.நா. நிபுணர் குழு இலங்கையில் விசாரணை நடத்தவே முடியாது ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பாகீ மூன் நியமித்த நிபுணர் குழு போர்க் குற்றங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்கவென இலங்கையில் விசாரணை நடத்த ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்று திட்டவட்டமாகத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் அவர்கள் வேண்டுமானால் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து செயற்படும் வெளிநாட்டுப் ஊடகவியலாளர்களை ஜனாதிபதி நேற்று அலரி மாளிகையில் சந்தித்துப் பேசியுள்ளார் அதன்போது . போர் குற்றங்கள் தொடர்பாக தனது ஆலோசனை வழங்கவென ஐ.நா. பொதுச் செயலாளர் நியமித்த மூவர் கொண்ட நிபுணர் குழு இலங்கை வந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க விரிவாக Read the rest of this entry »
ஒலுவில் பிரதேசத்துக்கு சகல வசதிகளையும் கொண்ட நீதிமன்றம்
ஒலுவிலில் சகல வசதிகளையும் கொண்ட நீதிமன்றம் விரைவில் அமைக்கப்படுமென நீதி அமைச்சர் றஊப் ஹக்கீம் தெரிவித்தார். நிந்தவூர் பிரதேசத்தையும், அட்டாளைச்சேனை பிரதேசத்தையும் உள்ளடக்கியதாக ஒலுவில் துறைமுகத்தை அண்டிய ஓர் இடத்தில் புதிய பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
ஒலுவில் துறைமுகத்தை அண்மித்துள்ள இரண்டு ஏக்கர் நிலம் இதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும், பொலிஸ் நிலைய நடவடிக்கைகளும் மிக நீண்ட தூரம் பிரயாணம் செய்து பல்வேறு அசெளகரியங்களை மக்கள் எதிர் கெண்டு வருவதனை கவனத்தில் கொண்டு ஒலுவிலில் புதிய நீதிமன்றமும் புதிய பொலிஸ் நிலையமும் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது விரிவாக Read the rest of this entry »
போரிடும் சக்தியை புலிகள் இழந்துள்ளபோதும் புலம்பெயர் தமிழ் சமூகம் இழக்கவில்லை
அவர்களின் போராட்டத்தை மழுங்கடிப்பதற்கு அதிகளவிலான அரச சார்பற்ற நிறுவனங்களை அரசு உருவாக்க வேண்டும் என சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகார மற்றும் பயங்கரவாதத் தடுப்பு தொடர்பான விரிவுரையாளரான ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார் ரொஹான் குணரட்ன Inside Al-Qaeda: Global Network of Terror என்ற நூலை எழுதி 2003 ஆம் ஆண்டு வெளியிட்டவர் என்பது குறிபிடத்தக்கது
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்டுவரும் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு அதிகளவான அரசசார்பற்ற நிறுவனங்களை அரசு நிறுவவேண்டும் என ரொஹான் குணரட்ன கொழும்பில் உள்ள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார் Read the rest of this entry »
தேசிய காங்கிரஸ் 2 சபைகளையும் 30 ஆசனங்களையும் பெற்றுள்ளது
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தின் குறித்த பிரதேசங்களில் இணைந்தும் , தனித்தும் போட்டயிட்ட தேசிய காங்கிரஸ் அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகிய வற்றின் சபைகளை கைப்பற்றியது இந்த பிரதேசத்தில் தனித்து குதிரைச் சின்னத்திலும், கிழக்கு மாகாணத்திலும் வெளியில் ஏனைய பிரதேசங்களிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தும் போட்டியிட்டது.
தனித்து போட்டியிட்ட அக்கரைப்பற்று மாநகர சபையில் 8 ஆசனங்களையும், அக்கரைப்பற்று பிரதேச சபையில் 6 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட ஏனைய பிரதேசங்களில் தேசிய காங்கிரஸ் மொத்தமாக 30 ஆசனங்களை கைப்பற்றியது விரிவாக Read the rest of this entry »
ஐந்து தவிசாளர் பதவிகளை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுள்ளது
அமைச்சர் றிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐந்து சபைகளில் தவிசாளர் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
ஆளும் ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய முன்னணி வெற்றி பெற்றுள்ள முஸ்லிம் பிரதேசங்களான முசலி , காத்தான்குடி, ஓட்டமாவடி , கிண்ணியா , வவுனியா சிங்கள பிரிவு ஆகிய நகர மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர் பதவிகளை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொள்ளும் என்று அந்த கட்சியின் தலைவர்அமைச்சர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »
பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் – ஒரு தொடர் கதையாடல்
எஸ்.எம்.எம்.பஷீர்
“ராஜீவ் காந்தி இரண்டு அங்குல வித்தியாசத்தில் உயிர் தப்பினர். நான் இரண்டு நிமிட வித்தியாசத்தில் உயிர் தப்பினேன். அதனால் இன்று உங்கள் முன்னிலையில் நாம் இருவரும் காட்சி தருகிறோம்” -(காட்மண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் ஜே ஆர் ஜெயவர்த்தனா ராஜீவை இலங்கையில் விஜித ரோகன துப்பாகியால் அணிவகுப்பின் பொது அடித்து கொல்ல முற்பட்டதையும் , அதன் பின்னர் தனக்கும் நாடாளுமன்றத்தில் குண்டு எரிந்து கொல்ல முற்பட்டதையும் பற்றி குறிப்பீடு கூறியது. தகவல்: அநாமிகன் )
இந்திய அதிகாரத்துடன் வல்லாதிக்க மனோபாவத்துடன் செய்விக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பத்தத்தின் அடிப்படையில் உருவான பதின்மூன்றாவது அரசியல் அமைப்பு திருத்தச்சட்டம் பற்றி திரும்பிப் பார்க்கும் போது விரிவாக Read the rest of this entry »
மீள் பதிவு :உள்ளுராட்சி அரச நிர்வாக கிராமசேவை பிரிவுகளுக்கான எல்லைகள் மீள் நிர்ணயம்
மீள் பதிவு: ‘உள்ளுராட்சி அரச நிர்வாக கிராமசேவை பிரிவுகளுக்கான எல்லைகள் மீள் நிர்ணயம் முஸ்லிம்களுக்கான ஒரு தேசிய செயலணி அவசியம்’ என்ற அஷ்ஷெய்க் மஸீஹூத்தின் இனாமுல்லாஹ் எழுதிய கட்டுரை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி எமது lankamuslim.org தளத்தில் வெளியானது தற்போதைய தேவை கருதி மீண்டும் இன்று -27.03.2011- மீள் பதிவு செய்யப்படுகின்றது
உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தினால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என முஸ்லிம் அமைப்புகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட்ட பல அமைப்புகள் கடந்த வருடம் 12 மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் அந்த வழக்குகள் இருந்த நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாராளுமன்றில் கடந்த வருடம் நவம்பர் 16 ஆம் திகதி சபாநாயகர் சமல் ராஜபக்ஷ் தெரிவித்தார் விரிவாக Read the rest of this entry »
மீள் பதிவு : உள்ளூராட்சித் தேர்தல் முறை உத்தேச மாற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் அவசியமானது
மீள் பதிவு: ‘உள்ளூராட்சித் தேர்தல் முறை உத்தேச மாற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் அவசியமானது’ என்ற S.M.அப்துல்லாஹ் எழுதிய கட்டுரை கடந்த வருடம் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி எமது lankamuslim.org தளத்தில் வெளியானது தற்போதைய தேவை கருதி மீண்டும் இன்று -27.03.2011- மீள் பதிவு செய்யப்படுகின்றது
உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தினால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என முஸ்லிம் அமைப்புகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட்ட பல அமைப்புகள் கடந்த வருடம் 12 மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் அந்த வழக்குகள் இருந்த நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாராளுமன்றில் கடந்த வருடம் நவம்பர் 16 ஆம் திகதி சபாநாயகர் சமல் ராஜபக்ஷ் தெரிவித்தார் விரிவாக Read the rest of this entry »
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 15வது வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது . ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டதுடன், சிறப்பு பேச்சாளராக ஜாமியா நழீமியா பிரதிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் கலந்து கொண்டுள்ளார்.
விசேட அதிதிகளாக ஆளுனர் அலவி மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். அஸ்வர், பிரதி அமைச்சர் பஷீர் ஷேகுதாவூத் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளார் விரிவாக Read the rest of this entry »
லிபியா மீதான மேற்கின் போர் சிலுவை யுத்தமா ?
M.ஷாமில் முஹம்மட்
OurUmmah: நேட்டோ லிபியா மீதான ஐநாவின் ‘விமான பறப்பு தடையை’ அமுல்படுத்தும் நடவடிக்கைக்கு தலைமை வகிக்க இணங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது. நேட்டோ லிபியா மீதான நடவடிக்கைகளை வழிநடத்தவேண்டும் என்று இத்தாலி, ஜேர்மன், பிரிட்டன், உட்பட பல நாடுகள் வலியுறுத்தி வந்தன பிரான்ஸ் மற்றும் சில நாடுகள் அதை விரும்ப வில்லை என்று செய்திகள் தெரிவித்தன
இந்த நிலையில் நேட்டோ பொது செயலாளர் அண்டெர்ஸ் ரஸ்முசென் ‘விமான பறப்பு தடையை’ அமுல்படுத்தும் பொறுப்பை நேட்டோ ஏற்றுகொள்கின்றது என்பதுடன் தற்பாதுகாப்பு கருதிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் மற்ற நடவடிக்கைகள் மேற்கு கூட்டு படையின் கைகளில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் ஆனாலும் இன்னும் நேட்டோ பொறுப்பு ஏற்கவில்லை இன்று அல்லது நாளை பொறுப்பு ஏற்றுகொள்ளும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது விரிவாக
மகா கொழும்பு கூட்டுத்தாபனம் : தமிழ்,முஸ்லிம் மக்களை குறிவைத்துள்ளதா: மனோ
கொழும்பு மாவட்டத்திலுள்ள கொழும்பு மாநகரசபை தெஹிவளை,கல்கிஸை மாநகரசபை,ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டை மாநகரசபை,கொலன்னாவை நகரசபை,கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகள் ஒரே கட்டமைப்பில் கொண்டுவரப்பட்டு மகா கொழும்பு கூட்டுத்தாபனமாக மாற்றப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த முயற்சிகளுக்கு பின்னால் கொழும்பு தெஹிவளை,கல்கிஸை மாநகரசபைகள்,கொலன்னாவை நகரசபை,கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை பகுதிகளிலே வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய தமிழ்,முஸ்லிம் மக்களை குறிவைத்து பாதிக்கும் இரகசிய நோக்கங்கள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் அரசாங்கம் பதில் அளிக்கவேண்டும் விரிவாக Read the rest of this entry »
ஈ.என்.டி.எல்.எப் இயக்கத்தின் 2500 கி.மீற்றர் நடைபயணம் முடிவுக்கு வந்துள்ளது
இலங்கையின் விவகாரங்களில் தலையிட இந்தியாவின் உளவு அமைப்பான ‘றோ’ வினால் உருவாக்கப்பட்ட இயக்கமாக அறியப்பட்டுள்ள ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ஈ.என்.டி.எல்.எப், இலங்கை தமிழ் வாலிபர்களை கொண்ட இந்த இயக்கம் இந்தியாவை தளமாக கொண்டு இயங்குகின்றது இந்த இயக்கம் சுமார் கடந்த இரண்டு மாதங்களாக இந்திய அரசிடம் மீண்டும் இந்திய அமைதி படையை இலங்கைக்கு அனுப்பவேண்டும் என்ற கோரிக்கை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து 2500 கி.மீற்றர் நடைபயணம் ஒன்றை மேற்கொண்டு வந்தது.
இந்த நடைபயணம் அதன் அறுபத்தேழு நாள் முடிவில் இன்று டெல்லி வந்தடைந்த நிலையில் முடிவுக்கு வந்துள்ளது இந்தியாவை தளமாக கொண்டு இயங்கிவரும் ஈ.என்.டி.எல்.எப் இயக்கத்தின் தலைவராக பரந்தன் ராஜன் என்பவர் செயல்பட்டு வருகின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது விரிவாக Read the rest of this entry »
சில இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம்
இன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி மஸ்ஜிதுக்கு முன்னாள் ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் லிபியா மீது மேற்கு நாடுகள் நடத்தும் தாக்குதலை கண்டித்து நூற்று கணக்கானவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது.
அதேவேளை அழைப்பு விடுக்கப்பட்டது போன்று நாட்டின் மற்ற முஸ்லிம் பிரதேசங்களில் ஆர்பாட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று எமது lankamuslim.org செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் குருநாகல் பிரதேசத்தில் ஜும்மாஹ்வின் பின்னர் ஒரு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாகவும் அறிய முடிகின்றது
கொழும்பு 5 உள்ளூராட்சி சபைகளை உள்ளக்கிய மெட்றோ பொலிட்டன் சிட்டி கோப்ரேசன் !
ஐந்து உள்ளூராட்சி சபைகளை உள்ளடக்கி கொழும்பு ‘மெட்றோ பொலிட்டன் சிட்டி கோப்ரேசன்’ என்ற நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு மாநகர சபை, தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை, கொலன்னாவ நகர சபை, கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளையும் உள்ளடக்கி இந்த சிட்டி கோப் ரேசனை அமை ப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்து ள்ளது விரிவாக Read the rest of this entry »
ஜாமிஆ நளீமிய்யா புதிய மாணவர்களை உள்வாங்குகின்றது
ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் – பேருவளை இஸ்லாமிய கற்கை பட்டபடிப்புக்கான 2011ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை உள்வாங்க உள்ளது இதற்கான புதிய மாணவர் நுழைவு பரீட்சை மூன்று தினங்களில் பிரதேச வாரியாக நடைபெறவுள்ளது . இதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் ஏப்ரல் மாதம் 4ஆம், 5ஆம், 6 ஆம் திகதிகளில் காலை 08.30 மணி முதல் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளன.
நுழைவு பரீட்சை வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 04.04.2011 ஆம் திகதி திங்கட்கிழமையும், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 05.04.2011 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும், மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 06.04.2011 ஆம் திகதி புதன்கிழமையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது விரிவாக Read the rest of this entry »
அக்குரணை வாகன விபத்தில் வாலிபர் வபாத்
இன்று அதிகாலை அக்குரணை 7 ஆம் கட்டையில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் அக்குரணை முதலாம் மயில் கல் பிரதேசத்தில் வசிக்கும் வாலிபர் ஒருவர் உயிர் இழந்துள்ளார் இனாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன், 23 வயது மதிக்கத்தக்க சஹ்ரான் நாசார் என்ற வாலிபரே வபாத்தானவராவார்.
இவர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் தனது நண்பரின் வீட்டில் இருந்து தனது வீட்டுக்கு மற்றும் ஒரு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது கண்டி மாத்தளை பிரதான வீதியில் வாகம் ஒன்றுடன் மோதுண்டு காயமடைந்த நிலையில் கண்டி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை வபாத்தாகியுள்ளார் என்று எமது மாத்தளை lankamuslim.org செய்தியாளர் அறிவித்துள்ளார்
ஐநா அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது
இணைப்பு-2 தற்போது கொழும்பு ஐநா அலுவலகம் முன்பாக லிபியா மீதான ஐநா அணுகுமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன இந்த ஆர்பாட்டம் அமைச்சர் விமல் விரசம்ச தலைமயிலான தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் விரசம்ச ஐநா போது செயலாளர் பான் கீ மூனின் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு சார்பான போக்கை தேசிய சுதந்திர முன்னணி கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார் விரிவாக படங்கள் Read the rest of this entry »
லிபியா மீதான தாக்குதலை கண்டித்து இலங்கையில் ஆர்பாட்டம் மற்றும் கண்டனக் கூட்டம் !!
லிபியா மீதான மேற்கு நாடுகளின் தாக்குதலை கண்டித்து நாளை வெள்ளிகிழமை ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் நாட்டின் பரவலான ஆர்பாட்டங்கள் நடாத்தப்பட்ட உள்ளதாக தெரிவிக்கபடுகின்றது இந்த ஆர்பாட்டங்கள் யாரால் ஒழுங்கு செய்யபடுகின்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை கொழும்பு பெரிய பள்ளி வாசலில் இடம்பெறவுள்ள கண்டன கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா ஆகியோர் கலந்து கொள்வுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
லிபியா மீதான தாக்குதலை கண்டித்து நேற்று பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை கொண்டு வரப்பட்டது அந்த பிரேரணை மீது உரையாற்றிய வெளிநாட்டு அமைச்சர் ஜி .எல் . பீரிஸ் இலங்கை மேற்கு நாடுகளின் லிபியா மீதான தாக்குதல்களை ஐநா உறுப்பு நாடு என்ற வகையில் அங்கீகரிக்கவோ ஏற்றுகொள்ளவோ இல்லை என்று தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »
மேற்குலக தாக்குதலுக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஒளித்த குரல்கள் !
கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற லிபியா மீதான தாக்குதலை கண்டித்து சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றியுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஒளித்த குரல்களில் சில
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில்: பொதுமக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு ஆயிரக்கணக்கான மக்களை மேற்குலக நாடுகள் கொன்று குவித்துள்ளமை காட்டுமிராண்டித்தனமான செயல் லிபியா மீதான தாக்குதல் முழு உலகத்தையும் பாதிக்கும் லிபியாவில் ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது விரிவாக Read the rest of this entry »
மேற்குலகின் லிபியா மீதான தாக்குதல் தொடர்பில் இலங்கையில் எதிரொலி
லிபியா மீதான மேற்கு நாடுகளின் மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டிக்கும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை யொன்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப் படவுள்ளது என்று செய்திகள் தெரிவிகின்றன பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் மேற்படி பிரேரணையை கொண்டுவரவுள்ளார் இதற்கான அங்கீகாரத்தை ஐ.ம.சு.முன்னணியின் பாராளுமன்றக் குழு வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுகின்றது.
அதேவேளை நேற்று இலங்கை வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டிருந்த அறிக்கையில் லிபியாவின் மக்களின் பாதுகாப்பு இலங்கை அக்கரை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சமாதன வழிமுறைகளின் ஊடாக லிபியா பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படுவது முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது விரிவாக Read the rest of this entry »
சீனாவில் நடைபெறவிருக்கும் குன்மிங் சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியில் இலங்கை பங்கேற்பு
இன்று (22) கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியுதீனை அவரது அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்த சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கான சீனக் கழகத்தின் உப தலைவர் ஹூஆங்ஷி சீனாவில் யூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் குனமிங் குன்மிங் சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியில் இலங்கையையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுத்ததுடன் இலங்கைக்கு பொருட்காட்சி மைதானத்தில் கட்டணமேதுமின்றி 100 காட்சி கூடங்களையும் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
அத்துடன் இலங்கையிலிருந்து குன்மிங் சர்வதேசவர்த்தகப் பொருட்காட்சிக்கு கொண்டுவரப்படும் பொருட்களை சுங்கத்திலிருந்து அகற்றுவதற்கு விசேட நடைமுறைகள் பின்பற்றப்படுமெனவும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு விசேட வசதிகள் வழங்கப்படும் எனவும் எடுத்துரைத்தார் விரிவாக Read the rest of this entry »
வட்டி அற்ற ஈட்டு முறையை இலங்கையில் அறிமுகப்படுத்த அமைச்சர் ஹகீம் முயற்சி !
இலங்கையில் இஸ்லாமிய பொருளாதார மாதிரிகள் சில இலங்கையில் தனியார் வங்கி துறை மற்றும் அரச வங்கி துறை ஆகியவற்றில் பின்பற்ற பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது இந்த நிலையில் அடகு வைத்தல் என்பது முற்றிலும் வட்டியை அடித்தளமாக கொண்டுள்ள பொருளாதார முறை தான் இலங்கை முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த வட்டியை கொண்டுள்ள அடகு முறைக்கு வறுமை காரணமாகவும் இன்னும் பல காரணங்களினாலும் முஸ்லிம்களும் சிக்குண்டுள்ளனர் இதை தவிர்க்கும் முகமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹகீம் வட்டி இல்லாத இஸ்லாமிய அடகு முறையை இலங்கையில் அறிமுகபடுத்த முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுகின்றது விரிவாக Read the rest of this entry »
உள்ளூராட்சி மன்றத்தில் முஸ்லிம் பெண்: BBC
இலங்கையில் சுமார் அரை நூற்றாண்டு இடைவெளிக்குப் பின்னர் முஸ்லிம் பெண்மணி ஒருவர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் சகோதரியான சல்மா ஹம்சா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்னர், ஆயிஷா ரவூஃப் என்ற பெண்மணி கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராக 1950களில் தெரிவு செய்யப்பட்டிருந்தார் விரிவாக Read the rest of this entry »
அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக அமைச்சர் அதாவுல்லாவின் மகன்
அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கூடிய வாக்குளை பெற்றுக்கொண்டுள்ள அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் மகன் சக்கி மேயராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்
அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் சார்பாக அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் 11821 வாக்குகளை பெற்று- 8 ஆசனங்கள் கைப்பற்றியது அந்த கட்சியில் போட்டியிட்ட ஒன்பது வேட்பாளர்களில் அமைச்சர் அதாவுல்லாவின் மகன் சக்கி என்பவர் விரிவாக Read the rest of this entry »
110 ஏவுகணைகள் 20 இலக்குகள் நோக்கி ஏவப்பட்டுள்ளது !
OurUmmah: லிபியாவில் கடாபி படைகளுக்கு எதிரான விமான தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன பிரான்ஸ் விமானபடை கடாபியின் பல இராணுவ டாங்கிகளை தாக்கி அழித்துள்ளதாகவும், கூட்டு விமான படை 110 ஏவுகணைகளை - Tomahawk cruise missiles- எவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது ஐநா பாதுகாப்பு சபை நேற்று லிபியாவின் மக்களை பாதுகாக்க தேவையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது இந்த சட்ட அனுமதி மூலம் லிபியாவின் விமானப்டை மற்றும் ஏனைய படைகள் மீதும் மற்ற நாடுகள் தாக்குதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று காலை தொடக்கம் மேற்கு நாடுகளின் தலைவர்கள் கூடி கடாபி படை மீதான தாக்குதல் முறை தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர் இதில் மேற்கு நாடுகளின் அதிபர்கள் முக்கிய பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் சவூதி, தூபாய் ஆகிய நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் விரிவாக
வல்லூறுகளிற்கு இரைபோடும் வக்கற்ற அரபுத் தலைமைகள்
எஸ்.எம்.எம்.பஷீர்
“மூலோபாயத்தின் மையத்திட்டம் இஸ்ரேல பிராந்திய மேலாதிக்க சக்தியாக நிலைபெற மத்திய கிழக்கின் வரைபடத்தினை மீள் வரைவதும் அராபிய தேசங்களை உடைவுறச் செய்வதுமாகும் “ ( உலக சியோனிஸ அமைப்பின் வெளியீடான கேவிநிம் (Kivunim ) எனும் இதழில் 1982 ல் ஓடேட் யிநோன் (Oded Yinon) எனும் யூதரால் சியோனிஷ்டுகளின் மத்திய கிழக்குக்கான திட்டம் என்ற தலைப்பில் விவரிக்கப்பட்ட கொள்கை திட்டத்திலிருந்து ).
பான் ஆம் (Pan –Am Flight 103) விமானம் ஸ்காட்லாந்தின் லோச்கேர்பீ மீது குண்டு வெடிப்பில் வீழ்ந்தாலும் (21/12/1988) லிபியாமீது புலனாய்வு தகவல்கள் குற்றம் சாட்டிய போது கடாபி அதனை மறுத்ததுடன் அதில் சந்தக நபர்கள் இருவரையும் விசாரணைக்காக கையளிக்கவும் மறுத்தார். எனினும். அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் ஐரோப்பிய கூட்டு நாடுகளுடன் பல்வேறு பொருளாதார அழுத்தங்களை லிபியா மீது பிரயோகித்தும் கடாபி நீண்ட காலம் தனது மறுப்பிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் உறுதியாகவிருந்தார் விரிவாக பார்க்க Read the rest of this entry »
முஸ்லிம் பிரதேச தேர்தல் வெற்றி தொடர்பான மூன்று அவதானங்கள் !!
M.ஷாமில் முஹம்மட்
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் முஸ்லிம் பிரதேசங்களில் மூன்று வகையான வெற்றி நிலைகள் அவதானிக்கப் படக் கூடியதாகவுள்ளது சில சபைகளில் வெற்றி பெற்றுள்ள கட்சிகள் அதி கூடிய பெரும்பான்மையை பெற்றுகொண்டு வெற்றி பெற்றுள்ளன அங்கு வெற்றி பெற்றுள்ள கட்சி எதிர் கட்சிகளுக்கு பெரிதாக வாக்குகளை விட்டு வைக்காமல் தட்டி சென்றுள்ளன.
இன்னும் சில சபைகளில் வெற்றி பெற்ற கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளை விடவும் எதிர் தரப்பு கட்சிகளின் வாக்குகளை கூட்டினால் எதிர் கட்சிகளின் மொத்த வாக்குகள் வெற்றி பெற்ற கட்சியின் மொத்த வாக்குகளை விடவும் அதிகமாக உள்ளதை காணமுடியும் இங்கு பெரும் பான்மை வாக்காளர்கள் ஒரு புறம் இருக்க வேறு ஒரு கட்சி கூடிய வாக்குகளை பெற்று கொண்டுள்ளது விரிவாக Read the rest of this entry »
ஜமாஅதே இஸ்லாமி கிண்ணியாவில் பலமான அடித்தளத்தை கொண்டுள்ளது
கிண்ணியா நகர சபையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது இந்த கட்சி 6,876 வாக்களை பெற்றுள்ளது கிண்ணியா நகர சபைக்கு பல புதிய முகங்கள் போட்டியிட்டனர் இதில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் உறுப்பினர்களை கொண்ட சட்டத்தரணி ரிஸ்வான் தலைமையிலான சுயேச்சைக்குழுவும் களம் இறங்கியது இவர்களின் இந்த முதல் அரசியல் களத்தில் கண்ணாடி சின்னத்தில் போட்டியிட்ட இந்த சுயேச்சைக்குழு 3,285 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை வென்றுள்ளது.
அனைத்து வளங்களையும் தனது கையில் வைத்திருக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற வாக்குகளின் அரைவாசிக்கு நிகரான வாக்குகளை பெற்றிருப்பது ஒரு வெற்றியாக பார்க்கப்படுகின்றது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்க தவறினால் ஒதுக்கப்படுவோம் இலங்கையின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சிக்கு கடந்த முறை நகரசபையை வழங்கியும் எதையும் பெற்றுகொள்ளமுடியவில்லை விரிவாக Read the rest of this entry »
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாரிய வெற்றி களிப்பில்
கடந்த வியாழகிழமை இடம்பெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 205 சபைகளை தம்வசப்படுத்தி அமோக வெற்றியீட்டிக் கொண்டுள்ளது . இந்த தேர்தல்களில் ஐக்கிய தேசியக்கட்சி பாரிய பின்னடைவை சந்தித்து 09 மன்றங்களை மட்டுமே இம்முறை கைப்பற்றியுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நான்கு சபைகளையும் , அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் இரண்டு சபைகளையும் கைப்பற்றியுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேச சபையின், பொத்துவில் பிரதேச சபை, அட்டாளச்சேனை பிரதேச சபை, சம்மாந்துரையில் இருந்து பிரித்து புதிதாக உருவாகக்கபட்ட இரகாமம் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளை கைப்பற்றியுள்ளது. அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ்அக்கரைப்பற்று பிரதேச சபை , அக்கரைப்பற்று நகர சபை ஆகிய இரண்டு சபைகளை கைப்பற்றிக்கொண்டது. இலங்கை அரசியலில் மூன்றவது சக்தியாக பார்க்கபட்ட மக்கள் விடுதலை முன்னணி விரிவாக Read the rest of this entry »
உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்
நேற்று நடைபெற்று முடிந்த 234 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் வெளியாகியுள்ள முடிவுகளின்பிரகாரம் பெரும்பாலான சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கைப்பற்றி அதிக ஆசனங்களைப் பெற்று பெருவெற்றியீட்டியது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியால் குறைந்தளவு சபைகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பரவலாக பல சபைகளை வென்றுள்ளதுடன் அக்கரைபற்று நகர சபை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை, வடக்கில் தேர்தல் நடைபெற்ற தமிழ்ப் பகுதிகளில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றி சபைகளைத் தன்வசப்படுத்தியுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இந்தப் பகுதிகளில் படுதோல்வி கண்டுள்ளது விரிவாக Read the rest of this entry »
பேருவளையில் வாக்காளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்
பேருவளையில் ஐ. ம .சு. மு ஆதரவாளர்களினால் வாக்காளர்கள் தாக்கபட்டுள்ளனர் என்று பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது அதேபோன்று சம்பவங்கள் நுவரெலியாவிலும் இடம்பெற்றுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது இது வரை 100 தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கு பின்னர் இதுவரை எவ்வித தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை என்றாலும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் எவ்வித வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபட வேண்டாம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாராச்சி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார் விரிவாக Read the rest of this entry »
முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிக்க விடாது மிரட்டப்பட்டுள்ளனர்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களால் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன ஜனாதிபதியின் கார்ல்டன் ஹவுஸ் அமைந்துள்ள தங்காலை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்துல் ரஹ்மான் என்ற ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் ஜனாதிபதி கார்ல்டன் ஹவுஸ் இல்லத்துக்கு அருகாமையில் உள்ள முஸ்லிம் வீதியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு முஸ்லிம் வாக்காளர்களை வாகனம் ஒன்றில் கொண்டு செலும்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களால் இவர் கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளார் என்று லங்காருத் இணையத்தளம் தெரிவித்துள்ளது விரிவாக Read the rest of this entry »
காலை தொடக்கம் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது
235 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இன்று காலை தொடக்கம் இடம்பெற்று வருகின்றது 3 மாநகர சபைகள், 30 நகரசபைகள், 202 பிரதேச சபைகளை உள்ளடக்கிய 235 உள்ளூராட்சி மன்றங்களுக்கு இந்த தேர்தல் நடைபெறுகின்றது இது 7,362 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறுகிறது. 9,813,375 வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்களிக்கும் தகைமையை பெற்றுள்ளனர்.
3036 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 29,108 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தமாக உள்ள 335 உள்ளூராட்சிச்சபைகளில் உலகக் கிண்ணப் போட்டிகள் காரணமாக 34 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்கள் பிற்போடப்பட்டுள்ளன விரிவாக Read the rest of this entry »
‘அக்கரைப்பற்றில் மஸ்ஜிதுகள் முறைகேடாக பயன்படுத்தப் படுகின்றது’ !!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார மேடையில் இருந்து ஒலிபெருக்கி மூலம் ஒளிபரப்பான பிரச்சார உரைகளை குழப்பும் முகமாக முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சார மேடைக்கு அண்மையில் இருந்த மர்கஸ் மஸ்ஜித்தினுள் நுழைந்து தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் அதன் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி பிரச்சார உரைகளை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது
இதேவேளை அமைச்சர் அதாவுல்லாஹ் இறுதி தூதர் தொடர்பாக தெரிவித்ததாக கூறப்படும் கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது இவர் தெரிவித்ததாக கூறப்படும் கருத்தில் ‘முஹம்மது நபியவர்கள் படிக்காதவர் என்பதால்தான் இறைவன் அவரை நபியாக்கினான். இறைவன் கூறியவைகளையெல்லாம் மறுபேச்சின்றி முஹம்மது நபியவர்கள் ஏற்றுக்கொண்டமைக்குக் காரணம், அவர்கள் படிக்காதவர்கள் என்பதால்தான்! விரிவாக Read the rest of this entry »
முஸ்லிம் சக்திகள் மேற்கின் பொறியிக்குல் விழுந்து கொண்டிருகின்றது !!
M.ஷாமில் முஹம்மட்
OurUmmah: பஹ்ரைனில் மக்கள் ஆர்பாட்டங்கள் தொடர்கின்றது சவூதி மன்னர் ஆயிரம் பேரை கொண்ட இராணுவத்தை கடந்த திங்கள் கிழமை பஹ்ரைனுக்கு அனுப்பியுள்ளார் துபாயும் 500 பேரை கொண்ட படை ஒன்றை அனுப்பியுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிகின்றன பஹ்ரைன் பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவு கூட்டம் இந்த சிறிய தீவு கூட்டம் 33 தீவுகளை கொண்டுள்ளது இதன் பெரிய தீவு 55 கி.மீ நீளத்தையும் 18 கி.மீ அகலத்தையும் கொண்டுள்ளது இங்கு உள்நாட்டு மக்களை விடவும் வெளிநாட்டு மக்கள் அதிகம் வாழ்கின்றனர் இந்த நாட்டின் மக்கள் தொகை 12 இலட்சத்தி 35 ஆயிரம் என்ற மிகவும் சிறிய மக்கள் தொகையை கொண்டுள்ளது.
ஆனால் மக்கள் தொகையில் 54 வீதமானவர்கள் வெளிநாட்டவர்கள் இதில் இலங்கையர் , இந்தியர் பிலிபைன் போன்ற நாடுகளை சேர்ந்தவர்களை அதிகம் கொண்டுள்ளது. அதிகம் வெளிநாட்டவர்களை கொண்டுள்ளமையால் முஸ்லிம்களின் வீதம் 81.2 ஆக குறைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றது கிறிஸ்தவர்கள் 9 வீதமும் ஏனைய மதத்தவர்கள் 9.8 வீதமும் உள்ளனர் விரிவாக
புத்தளம் அனல்மின் நிலையத்தை ஜனாதிபதி 22 ஆம் திகதி ஆரம்பித்து வைப்பார்
மூன்று கட்டங்களைக் கொண்ட புத்தளம் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் முதற்கட்ட பணிகள் பூர்த்தியடைந்திருந்த நிலையில் சோதனை நடவடிக்கைகளின் போது சேதமடைந்த பகுதிகள் திருத்த பட்டு முடிவடைந்துள்ளதால் அனல்மின் நிலையம் இம்மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது என்று தெரியவருகின்றது
இந்த அனல்மின் நிலையத்தால் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனக் அதிகாரிகள் தெரிவிப்பதாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் மின் உற்பத்தியின் போது வெளியேறும் புகை சுத்திகரிக்கப்பட்டு சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே வெளியேற்றப்படும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது இந்த மின் உற்பத்தி நிலையம் பிரதேசவாசிகளின் கடும் எதிர்ப்பின் மத்தியில் உருவாக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது விரிவாக படங்கள் Read the rest of this entry »
நேற்று இரவுடன் தேர்தல் பிரசாரப் பணிகள் முடிவு வன்முறைகள் உயர்வு
உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தன. கட்சிகள் சுயேச்சை குழுக்கள் நேற்று தமது இறுதிக் கட்ட பிரசாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டன புத்தளம், மட்டகளப்பு, அம்பாறை, போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் கட்சிகள் இறுதி பிரசாரத்தில் தீவிரமாக ஈடு பட்டிருந்தது அறிவிக்கபடுகின்றது
கிண்ணியா நகர சபைக்கு போட்டிடும் கண்ணாடி சின்னத்திலான ஜமாஅதே இஸ்லாமி உறுபினர்களை கொண்ட சுயேச்சை அணியும் தனது பிரச்சாரத்தில் நேற்று ஈடுபட்டுள்ளது தேர்தல் பிரசாரப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் சுவரொட்டிகள், தேர்தல் அலங்காரங்கள் அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன விரிவாக Read the rest of this entry »
ஜப்பானில் 3,4 வது அணு உலைகள் வெடிப்பினால் அணு கதிர் வீச்சு ஏற்படும் ஆபத்து
ஜப்பானில் பூகம்பம், சுனாமி ஆகியவற்றின் தாக்குதலை தொடர்ந்து புகுஷிமா மாகாணத்தில் இன்று செவ்வாய் கிழமை அணு மின் நிலையத்தில் மூன்றாவது, நான்காவது அணு உலைகளும் வெடித்துள்ளது இந்த வெடிப்புகள் உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவு அணு கதிர் கசிவு ஏற்படும் என்று அச்சம் தெரிவிக்கபடுகின்றது .
இந்த மூன்றாவது வெடிப்பு அணு உலையின் பாதுகாப்பு கவசத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது இதேவேளை ஐப்பான் பிரதமர் அணு உலை வெடிப்பு பகுதில் இருந்து 30 கி.மீ சுற்று வட்டார பகுதியில் இருப்பவர்கள் தமது வீடுகளை விட்டும் வெளியேறவேண்டாம் என்று அந்த மக்களுக்கு அரசு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார் அணு உலை வெடிப்பு பகுதில் இருந்து 20 கி.மீ சுற்று வட்டார பகுதியில் இருந்த 6 இலட்சம் வரையான மக்கள் ஏற்கனவே விரிவாக Video Read the rest of this entry »
ஐப்பானில் மற்றுமொரு வெடிப்பும் இன்னொரு அதிர்வும் !!
இணைப்பு -2 ஐப்பானில் பூமி அதிர்வால் சேதமடைந்த புக்குஷிமா அணு மின்நிலையத்தில் அணு உலை உருகுவதைத் தடுப்பதற்காக பொறியியலாளர்கள் முயன்று வரும் நிலையில் அங்கு இன்னொரு வெடிப்புச் சம்பவமும் ஏற்படலாம் என்ற எச்சரிக்கையை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை இன்று திங்ககிழமை மீண்டும் சுனாமி எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது மக்கள் உயரமான பகுதிக்கு சென்று பாதுகாப்பு பெற்றுகொள்ளுமாறு அறிவிக்கபடுகின்றது ஜப்பானின் வடகிழக்கு கடற் கரை பிரதேசத்தை இன்று மற்றுமொரு பூமியதிர்ச்சி தாக்கியுள்ளது இதை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கபட்டுள்ளது விரிவாக Video Read the rest of this entry »
காத்தான்குடியில் கல்வீச்சு , இணையத்தள முகாமையாளர் மீது தாக்குதல் !
நேற்று காத்தான்குடியில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது காத்தான்குடி நகர சபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் அப்துல் ரஹ்மான் தலைமயிலான சுயேட்சைக்குழுவாக போட்டியிடும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஆகியவற்றின் ஊர்வலங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் கல்வீச்சு இடம்பெற்றுள்ளது.
இதில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க ஆதரவாளர்கள் இருவர் காயமடைந்துள்ளனர் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பாலிகா மகா வித்தியாலயத்தின் அருகாமையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க ஊர்வலத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊர்வலம் கடந்து சென்ற போது அங்கு இரண்டு சாராரின் ஆதரவாளர்களிகிடையில்இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது விரிவாக Read the rest of this entry »
இலங்கையில் மீண்டும் சல்மான் ருஸ்தி கதை படமாக்கம் !!
பிரபல செய்த்தானிய சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஸ்தி 1981 இல் எழுதி வெளியிட்ட நடுநிசி சிறுவர்கள்- Midnight’s Children- என்ற கதையை மீண்டும் இலங்கையில் படமாக்க முயற்சிகள் மேட்கொள்ளபட்டு வருவதாக தெரியவருகின்றது இந்த படத்தை சர்வதேச விற்பனை முகவரான FilmNation கம்பெனி அனுசரணையில் இந்திய பிரபல இயக்குனர் தீபா மேத்தாவும் சல்மான் ருஸ்தியும் கடந்த இரண்டு வருடங்களாக இயங்கிவருவதாகவும் பல இந்திய நடிகர்கள் ஷ்ரியா சரண் ,சீமா பிஸ்வாஸ், ஷாபானா அஸ்மி ,சித்தார்த் சூரியநாராயண் ஆகியோர் பங்கு கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை இலங்கையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் தீடீர் என்று இடை நிறுத்தப்பட்டுள்ளது அதற்கான காரணம் சில நடிகர்கள் தொடர்பானது படப்பிடிப்பு குழுவின் உள்வட்ட பிரச்சினை என்று தெரிவிக்கபடுகின்றது எனினும் படப்பிடிப்பு நிறுத்தப்படாது சில சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர் இந்த படமாக்கல் ஏப்ரலில் தொடங்கப்படும் என்று இலங்கையில் இந்த படம் தயாரிப்புக்கு பொறுப்பான தி பிலிம் டீம் பிரைவட் லிமிட்டட் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது விரிவாக Read the rest of this entry »
கடாபியின் உலக முஸ்லிம் தலைமைத்துவமும் உள்நாட்டு ஓரம் கட்டலும் !!
எஸ்.எம்.எம்.பஷீர்
“அதிகாரம் பின்னடையாது அதனிலும் கூடிய அதிகூடிய அதிகாரம் அதனை எதிர்கொள்ளாதவரை ” – மல்கம் எக்ஸ் (எல்-ஷாபாஸ்) -இலங்கையில் முஸ்லிம் அரசியலில் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் பாத்திரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது . குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சி எழுபதுகளின் பிற்பகுதியில் ஆட்சி பீடம் ஏறும் வரை அன்றைய கூட்டுச்சேர அணிகளின் முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை இலங்கையின் நலனுக்கு சாதகமாக பெறுவதில் அவரின் அரசியலுக்கப்பால் ஆன தனி மனித தொடர்பாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தன.
1976 இல் நடைபெற்ற அணி சேரா நாடுகளின் மாநாடு இலங்கையில் முஸ்லிம் மக்களை மட்டுமல்ல வடக்கு கிழக்கில் இடது சாரிகளையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. அந்த வகையில் குறிப்பாக அன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியில் நின்ற தமிழ் இடதுசாரிகள் லிபிய கடாபியின் வரவை ஒரு முக்கிய நிகழ்வாகவே கருதினர் . சிறுபான்மை தமிழர் சமூகம் ஒரு முற்போக்கான இன ஐக்கியத்துக்கான பல செயற்பாடுகளை உள்நாட்டு அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் மேற்கொண்டவர்கள் விரிவாக Read the rest of this entry »
ஜப்பானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது !
ஜப்பானில் 8.9 ரிச்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பம் சில தினங்களுக்கு முன்னர் நியூஸிலாந் கிறிஸ்ட்சேர்ச் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தை விடவும் 8 ஆயிரம் மடங்கு பெரியது என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன ஜப்பானில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தாலும் அதன் காரணமாக ஏற்பட்ட பாரிய சுனாமியாலும் காணாமல் போன மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை 1200 என்று ஜப்பான் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது வரை 398 உடல்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளது 805 பேர் காணாமல் போயுள்ளனர் இவர்களில் சுமார் 80 பேரை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டடுள்ளது. ஐந்து அணு ஆலைகள் மூடப்பட்டுள்ளது ஒரு மின்சார உற்பத்தி அணு ஆலையில் ரேடியோ கதிர்கள் அதிகமாக வெளிவருவது பதிவாகியுள்ளது விரிவாக Read the rest of this entry »
புத்தளத்தில் வாக்காளர்களாக விண்ணப்பித்தவர்கள் வாக்களிக்க முடியாத நிலை !!
புத்தளத்தின் தம்மை வாக்காளர்களாக பதியுமாறு விண்ணப்பித்துள்ள வடமாகாண முஸ்லிம்கள் பல ஆயிரம் பேர் இந்த முறை எந்த பிரதேசத்திலும் வாக்களிக்க முடியாத நிலையை எதிர்கொள்கின்றனர் என்று எமது lankamuslim.org புத்தளம் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1.6.2010 ஆம் திகதியில் தாம் வசிக்கும் பிரதேசத்தில் தம்மை வாக்காளராக பதிந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணப்பித்போதும் எதிர் வரும் 17 திகதி நடைபெறபோகும் உள்ளூராச்சி தேர்தலில் வாக்களிக்க தேவையான எந்த ஏற்பாடுகளும் பூர்த்தியாகாத நிலையில் உள்ளதாக தெரிவிகின்றனர். புத்தள மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளரினால் புத்தளத்தில் தம்மை வாக்காளர்களாக பதியுமாறு விண்ணப்பித்தவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மேலும் பூர்த்தியாக்கி அனுப்புமாறு கோரும் ஆவணங்கள் கடந்த 8 ஆம் திகதி – 8.3.2011- மக்களுக்கு கிடைத்துள்ள நிலையில் அந்த ஆவணத்தில் இந்த மாதம் 9 ஆம் திகதிக்கு 9.3.2011- முன்னர் பூர்த்தியாக்கி அனுப்புமாறு கோரப்பட்டுள்ளதுடன் இன்னும் விரிவாக Read the rest of this entry »
யாழ் சாகும்வரை உண்ணாவிரதம்: பிரதான முஸ்லிம் அமைப்புகளுக்கு தொடர்பு இல்லை
யாழ்பாணத்தில் எம்.ஆர். நௌசாத் என்பவர் நேற்று முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகின்றார். கடந்த செவ்வாய்க்கிழமை அடிப்படையான தேவைகளை உடனடியாக செய்து தருமாறு கோரி சத்தியா கிரக போராட்டமாக இந்த போராட்டம் ஆரம்பமானது அது பலனளிக்காத நிலையில் அதனை இடை நிறுத்தி எம்.ஆர். நௌசாத் என்பவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவருகின்றார்
இவர் யாழ்ப்பாணம் புதிய சோனக தெரு அல்லது பொம்மை வெளி என்று அழைக்கப்படும் பகுதியில் தனது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்ட த்தை நேற்று ஆரம்பித்துள்ளார் மீள் குடியேறிய குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் எவையும் வழங்கப்படவில்லை. விரிவாக Read the rest of this entry »
இரகசிய பயற்சி முகாம் பற்றிய செய்தி தவறானது: பிதமர்
இந்தியாவின் தமிழ் நாட்டில் புலிகளின் மூன்று இரகசிய பயற்சி முகாம்கள் இயங்குவதாக பிதமர் டி.எம்.ஜயரட்ன பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் இந்த தகவலை சில பத்திரிகை செய்திகளின் அடிப்படையிலேயே தான் பாராளுமன்றத்தில் கூறியதாகவும் அச்செய்திகள் தவறானவை என பின்னர் தெரியவந்துள்ளதாகவும் பிதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
என்று செய்திகள் தெரிவிக்கின்றன . தமிழகத்தில் புலிகளின் பயிற்சி முகாம்கள் செயற்படுவதாக பிரதமர் கூறியதை இந்திய அதிகாரிகள் நிராகரித்தமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
ஜப்பானின் 8.9 ரிக்டர் நிலநடுக்கம் மற்றும் சுனாமி
ஜப்பானின் வடக்குப் பகுதியில் 8.9 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜப்பானின் கடற்கரையோரப் பகுதிகளில் இன்று சுனாமி தாக்கியுள்ளது கடற்கரைச் பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் சுனாமி யால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
8.9 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவி ஆய்வுமையம் தெரிவித்துள்ளது . டோக்கியோவுக்கு வடகிழக்கே 230 மைல்கள் தொலைவில் 15 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .இதையடுத்து ஜப்பான், ரஷ்யா, மார்கஸ் தீவு மற்றும் வடக்கு மரியானாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது விரிவாக Videos Read the rest of this entry »
முஸ்லிம் நாடுகளும் பெண்கள் அணிகளும் !!
ஆறு நாடுகள் கலந்துகொள்ளும் பதிநான்கு வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உதைபந்தாட்ட போட்டி பம்பலபிட்டி போலீஸ் மைதானத்தில் இன்று ஆரப்பமாகியுள்ளது இந்த போட்டி ஆசிய உதைபந்தாட்ட கழகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த போட்டில் பலஸ்தீன், ஜோர்டான் , ஈரான் , பூட்டான், இந்தியா, இலங்கை ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன இந்த போட்டி இன்று நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன இதில் கலந்து கொள்ள ஈரான் , பலஸ்தீன், ஜோர்டான் ஆகிய மூன்று முஸ்லிம் நாடுகளின் தமது பெண்கள் அணிகளை அனுப்பியுள்ளது விரிவாக படங்கள் Read the rest of this entry »
புலிகள் இந்தியாவில் மூன்று முகாம்களில் பயிற்சி: பிரதமர்
இந்தியாவின் தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் புலிகளின் உறுபினர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சிகள் மூன்று இரகசிய முகாம்களில் இடம்பெற்று வருகின்றது இதில் ஒரு முகாமில் அரசியல் தலைவர்களைப் படுகொலை செய்யும் நோக்குடனும் பயிற்சி வழங்கபடுகின்றது ,
இலங்கையில் மீண்டும் புலிகள் இயக்கத்தை செயல்பட வைக்கும் குறிக்கோளுடனும் தமிழ்நாட்டில் மூன்று இரகசிய முகாம்கள் இயங்கி வருகின்றன என்று இலங்கை புலனாய்வு பிரிவுக்கு நம்பகரமான தகவல் கிடைத்துள்ளதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் இதனை அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையை முன்வைத்து உரையாற்றியபோதே தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »
அபிவிருத்திக்கு உள்ளாகும் 1000 பாடசாலைகளின் நேரம் மாற்றப்படலாம் !
நாடு முழுவதிலுமுள்ள அனைத்து பாடசாலைகளும் பிற்பகல் 3.00 மணி வரை தொடர்ந்து நடத்தும் தீர்மானங்கள் எதனையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார் நாடு முழுவதிலுமுள்ள 1000 பாடசாலைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் வரும் பாடசாலைகள் மாத்திரம் வேண்டுமாயின் பிற்பல் 3.00 மணி வரை தொடர்ந்தும் நடத்தப்படலாம்.
அதுவும் சம்பந்தப்பட்டவர்களின் பூரண இணக்கப்பாட்டுடன். எனினும், இவ்வாறான நேர நீடிப்பு மேற்படி திட்டத்தின் கீழுள்ள புதிய பாடசாலைகளுக்கே அனுமதிக்கப்படலாம். என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெளிவாக கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »









