Lankamuslim.org

One World One Ummah

பாங்கு சொன்னவுடன் வர்த்தக நிலையங்கள் தொழுகைக்காக மூடப்பட சட்டம்: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா

with 5 comments

எதிர் வரும் மே மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் காத்தான்குடி நகர வியாபர நிலையங்கள் ‘ பாங்கு’ -தொழுகைக்கான அழைப்பு- சொல்லப்பட்டதும் தொழுகைக்காக மூடப்படவேண்டும் என்ற சட்டம் அமுல் படுத்தப்படும் என்று பிரதியமைச்சர் எம் .எல் .ஏ.எம் ஹிஸ்புல்லாதெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள இஸ்லாமிய அறிஞரான டாக்டர் சாகிர் நாயிக் நேற்று காத்தான்குடிக்கு சென்று பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யபடிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார் இதன் போது அந்த நிகழ்வில் உரையாற்றியுள்ள   பிரதியமைச்சர் எம் .எல் .ஏ.எம் ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் விரிவாக

அங்கு அவர் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகளை இங்கு தருகின்றோம் – காத்தான்குடியை ஒரு புனிதமான நகராக கட்டியெழுப்ப வேண்டும் ஏனைய முஸ்லிம்களுக்கு இந்த நாட்டின் முஸ்லிம்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழவேண்டும் நமது மண்ணில் நாம் நடைமுறைப்படுத்தும் இஸ்லாமிய சட்டங்கள் ஏனைய பிரதேசங்களுக்கும் இன்ஷா அல்லாஹ் நடைமுறைப்படுத்த முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காக நிறைய தீர்மானங்களை எடுத் திருகின்றோம் அந்த அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் மே மாதம் தொடக்கம் நமது மண்ணில் பாங்கு- தொழுகைக்கான அழைப்பு- சொன்னவுடன் கடைகள் மூடப்பட்டு முதல் கட்டமாக பிரதான வீதியில் உள்ள கடைகள் மூடப்பட்டு தொழுகைக்காக பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற ஒரு சட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்த இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ் மே மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் அந்த சட்டம் அமுலுக்கு வரவிருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

February 1, 2011 at 9:01 am

5 Responses

Subscribe to comments with RSS.

  1. தீர்மானனம் எடுப்பது சுலபம். நடந்தால் கோடி நன்றி அல்லாஹ்வுக்கு .நல்ல முயற்சிக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு …

    MAHI

    February 1, 2011 at 6:40 pm

  2. அல்லாஹ் உங்கள் முயற்சிகளுக்கு அருள்புரிவானாக.
    பாங்கு சொல்லுதல் கடைகள் மூடுதல் மட்டுமல்ல, நடக்கின்ற வியாபாரமும் இஸ்லாமிய முறையில் நடப்பதற்கு வியாபாரிகளின் உள்ளங்கள் பண்படுத்தப்படல் வேண்டும் அதற்கும் சேர்த்து முயற்சித்தால் இன்னும் கோடி நன்மைகள் கிட்டும். மட்டுமல்ல சமூகமும் சீர் பெறும் அத்தோடு சமுதாயத்தின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும் சமுதாயத்தின் அனைத்து தளங்களும் அபிவிருத்தியடையும். இன்ஷா அல்லாஹ் அதன் நன்மைகள் அனைத்தும் அனைத்து தரப்பினரையும் சென்றடைவதோடு முஸ்லீம சமுதாயத்தின் எழுச்சியை எவராலும் தடுத்து நிறுதத் முடியாது. அத்தோடு எல்லா சமூகங்களுக்கும் முன்மாதிரியாகவும் அமையும்.
    அதற்கு முயற்சிப்போமாக.

    Abuumarah

    February 2, 2011 at 1:13 pm

  3. The Almighty Allah bless and guide you and us to implement his orders with pure mind and actions…

    Jazakumullah Ahsanal Jaza’

    farraj

    February 3, 2011 at 2:20 pm

  4. When a …you tries to implement rules are the problem.

    Look at Akurana no rules but an agreement with the people. Why don’t you try to do something like that with forcing people. Its something between Allah and the people

    Irfan

    May 29, 2012 at 8:04 pm

  5. allah unkal muyatchikku nat kooli valankuvanake kalmunaiilum intha saddam kondu vanthal nanraha irukkum ithu kalmunai arasiyal vathikal kavanaththil eduththal nanraha irukkum

    Nafeer

    May 31, 2012 at 12:19 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers