Archive for February 2011
இலங்கை – இந்தியா பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்
கொழும்பு துறைமுகத்திற்கும் தென் இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத் திற்கும் இடையிலான முதலாவது பயணிகள் கப்பல் சேவை இன்று திங்கட்கிழமை தூத்துக்குடியில் இருந்து ஆரம்பமாகின்றது. 500 பயணிகளை அவர்களின் பொதிகளுடன் மிகவும் சிறந்த முறையில் ஏற்றிச் செல்லக் கூடிய வசதிகளைக் கொண்ட இந்த கப்பலை இந்தியாவில் தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகின்றது.
தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள பாரிய களஞ்சிய சாலையொன்றை பயணிகளின் தங்குமிடமாக மாற்றியமைத்துள்ளார்கள். இங்கு பொதிகளை சோதனையிடல், சுங்க பரிசோதனைகள், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கரும பீடங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன விரிவாக Read the rest of this entry »
நேற்று 9 இலங்கையர் நாடு திரும்பியுள்ளனர்
லிபியாவில் பணியாயாற்றும் இலங்கையர்களை அழைத்துவர அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது நேற்று ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிய 9 பேர் அந்த ஹோட்டலின் உதவியுடனும் இலங்கையை வந்தடைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது மேலும் திரிபோலியிலுள்ள 58 இலங்கையர்கள் இன்று அல்லது நாளை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட் டிருப்பதாகத் தெரிவிக்கபடுகின்றது.
அதேநேரம், திரிபோலியிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு அண்மித்த பகுதியில் 350ற்கும் அதிகமான இலங்கை யர்கள் பாதுகாப்பாகத் தங்கவைக்கப் பட்டிருப்பதாக தெரிவிக்கபடுகின்றது
நஜுமுதீன் அர்பகான் வபாத்தானார்
OurUmmah: துருக்கியின் இஸ்லாமிய அரசியல் எழுச்சிக்கு முக்கிய பங்காற்றிய டாக்டர் நஜுமுதீன் அர்பகான் வபாத்தாகியுள்ளார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று தனது 85 வயதில் வபாத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது இவர் ரபாஹ் என்ற இஸ்லாமிய அரசியல் இயக்கம் தோன்ற முக்கிய பங்காற்றியதுடன் துருக்கியின் முதல் இஸ்லமிய சிந்தனை கொண்ட பிரதமராகவும் பதவி வகித்துள்ளார் விரிவாக
வியூகம் வகுக்காத அநுராதபுர முஸ்லிம் அரசியல் !!
அநுராதபுர முஸ்லிம்களின் அவலநிலை நூறுக்கு மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களையும் மஸ்ஜிதுக்களையும் பாடசாலைகளையும் கொண்டுள்ள அனுராத புர மாவட்டத்தில் 42000 வாக்காளர்களும் உள்ளபோதும் ஒரு பாராளுமன்ற பிரதிநிதியோ அல்லது போதுமான மாகான சபை பிரதிநிதிகளோ இல்லாமை சுட்டிகாட்டப் படுகின்றது.
இங்கு வாழும் முஸ்லிம்கள் போதுமான விழிப்பூட்டல் இன்றி இருப்பதாக தெரிவிக்கபடுகின்றது இங்கு முஸ்லிம்கள் மிக குறைந்த அளவில் அரச அதிகாரிகளாக , ஆசிரியர்களாக இருப்பதுடன் பிரதான பதவிகளில் எவரும் இல்லாத நிலையம் கானப்படுவதாகும் சில கிராமங்களில் மத்ரஸாக்கள் இயங்குகின்றபோதும் அங்கு போதுமான ஆசிரியர்கள் குறைவாக காணப்படுவதாகவும் தெரிவிக்கபடுகின்றது இது தொடர்பாக எமது lankamuslim.org அனுராதபுர செய்தியாளர் ஒருவருடன் தொடர்பு கொண்டபோது விரிவாக Read the rest of this entry »
கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !!
எஸ்.எம்.எம் பஷீர்
“உலகே அண்ணாந்து பார் , உற்றுக்கேள் ,எதிரியின் படை வருகிறது ,எங்களை அழிக்க விழைகிறது,உண்மையுடனும் எனது துப்பாக்கியுடனும் நான் அவனை புறமுதுகிடச் செய்வேன், நான் கொல்லப்படுவேனேயானால், என்னோடு அவனையும் கொல்வேன்:” (லிபியாவின் தேசிய கீதத்தின் ஒரு பகுதி)
ஒரு உணர்ச்சி கொப்பளிக்கும் போர்க்கால கவிதை வரிகள் போல் தோன்றும் லிபியாவின் தேசிய கீதத்தின் ஒரு பகுதி இது, அடக்குமுறையிலும் இத்தாலிய பாசிச ஆட்சியின் கீழும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் காலனித்துவ ஆட்சியின் பொருளாதார சுரண்டலுக்கும் ஆளாகிப்போன லிபியாவின் இந்த தேசிய கீதத்தின் வரிகள் உண்மையில் லிபியாவின் சுதந்திர தேசிய கீதமல்ல , மாறாக 1956 ஆம் ஆண்டு சுயெஸ் யுத்தத்தில் எகிப்திய யுத்த படையணியினரின் படை அணிவகுப்பு பாடல் விரிவாக Read the rest of this entry »
அரபு முஸ்லிம் பிராந்திய இஸ்லாமிய அரசியல் எழுச்சி ஒரு ஆய்வுப் பார்வை !!
OurUmmah: அரசியல் மற்றும் இஸ்லாமிய துறைகளில் தகமைகளை கொண்ட ஆய்வு துறையில் அனுபவம் கொண்ட அரசியல் ஆய்வாளர் M.ஷாமில் முஹம்மட் யிடம் அரபு முஸ்லிம் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் ஆர்பாட்டங்கள் தொடர்பாக எமது இணையதளத்தின் மற்றுமொரு கட்டுரையாளர் M.ரிஸ்னி முஹம்மட் அவர்கள் ஒரு நேர்காணலை செய்துள்ளார் இந்த நேர்காணலில் எமது கட்டுரையாளர் கேட்கும் கேள்விக்களுக்கு அவர் பதில்களை வழங்கியுள்ளார் அவை இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமான பயனுள்ள தகவல்களை கொண்டுள்ளது அதில் லிபியாவில் செயல்படும் இஸ்லாமிய இயக்கம் , எகிப்து, துனீசியா, லிபியா ஆகிய நாடுகளின் இஸ்லாத்தின் எதிர்காலம் நவீன இயக்கங்களான இஹ்வானுல் முஸ்லிமீன், ஹிஸ்புத் தஹ்ரீர் ஆகியவற்றின் பங்களிப்புகள் போன்ற விடையங்களை கொண்டுள்ளது அந்த நேர்காணல் இங்கு பதிவு செய்யப்படுகின்றது எமது கேள்விகளுக்கு அவர் வழங்கியுள்ள பதிகள் நேற்று வரையும் இடம்பெற்றுள்ள அரசியல் கள நகர்வுகளை அடிப்படையாக கொண்டது என்பது குறிபிடத்தக்கது விரிவாக
கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் முதலை !
கடந்த சில நாட்களாக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் முதலைகளில் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக எமது lankamuslim.org கிழக்கு செய்தியாளர் தெரிவிக்கின்றார் நேற்று நிந்தவூர் வயல் பகுதி ஒன்றிலும் இரண்டு முதலைகள ஒன்றை ஒன்று மோதிய நிலையில் காணப்பட்டுள்ளது இது தொடர்பாக மக்கள் உசார் ஆவதற்குள் வயல் நீர்பகுதிக்குள் சென்று மறைந்துள்ளது.
அதேபோன்று அக்கரை பற்று பிரதேச வாவி பகுதியில் முதலைகளின் நடமாட்டம் இருப்பதாகவும் பொத்துவில் பகுதியிலும் இது அதிகமாக கானப்படுவதாகவும் நேற்று முன்தினம் இரவு வேலையில்குடிமனை பகுதிக்குள் நுழைந்த பெரிய முதலை ஒன்று ஊர் மக்களால் பிடிக்கப்பட்டு விலங்குகள் விரிவாக Read the rest of this entry »
லிபியாவில் மேற்கு எண்ணெய் மற்றும் ஆயுத மாபியாக்களின் ஊடாக களம் அமைக்கின்றதா ?
M.ஷாமில் முஹம்மட்
OurUmmah: லிபியாவில் தனது அதிகாரத்தை தக்கவைக்க போராடிக்கொண்டு இருக்கும் கடாபி லிபியாவின் கிழக்கு பிரதேசத்தை இழந்துள்ளதுடன் தலைநகரான திரிபோலியிலும் ஆர்பாட்டங்களை எதிர்கொண்டு வருகின்றார்
கிழக்கின் இராணுவ யுத்த டாங்கிகள் கனரக வாகனங்கள், ஆயுதங்கள் என்பன வற்றை ஆர்பாட்டகாரர்கள் கைபற்றியுள்ளதாக சர்வதேச செய்திகள் காட்டுகின்றன FoxNews போன்ற சில செய்திகளில் இஸ்லாமிய ஆயுததாரிகள் ஆயுதங்களுடன் முன்னேறி வருவதாகவும் அவர்கள் இராணுவத்தின் ஆயுத கிடங்குகள் என்பனவற்றை கைப்பற்றும் ஆபத்து இருப்தாகவும் கூறுகின்றது விரிவாக
லிபியாவில் உள்ள 344 இலங்கையர்கள் !
லிபியாவில் உள்ள 344 இலங்கை பணியாட்களை நாட்டுக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா கூறினார். இவர்கள் இன்று அல்லது நாளை விமானம் மூலம் இலங்கையை வந்தடைய உள்ளதாகவும் அவர் நேற்று தெரிவித்துள்ளார் .
லிபியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையையடுத்து பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை திருப்பி அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 37 பணியாட்கள் கிரீஸ் நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவர். லிபியா தூதரகத்தில் 200 பேர் தஞ்சமடைந்துள்ளனர் விரிவாக Read the rest of this entry »
வடமாகாணத்தில் உறங்கும் முஸ்லிம் வாக்காளர் தொகை அதிகரிக்கும் ஆபத்து !
M.ஷாமில் முஹம்மட்
வடமாகாண முஸ்லிம் வாக்களர்கள் தமது வாக்குரிமையை உரிய முறையில் பயன்படுத்துவார்களா ? என்பது கேள்வியாகியுள்ளது. காரணம் இந்த முறை உள்ளூராச்சி தேர்தல்களில் கொத்தணி வாக்கு சாவடிகள் ஏற்படுத்தப் படமாட்டாது என்று தெரிகின்றது. இதன்காரணமாக கடந்த தேர்தல்கள் போன்று இந்த முறை ஏனைய பிரதேசங்களில் வாழும் வடமாகாண மக்கள் 200 தொடக்கம் 400 கி மீ பிரயாணம் செய்து இயல்பாக வாக்குரிமையை பயன்படுத்துவார்களா ? என்பதும் தொடர்ந்தும் இவர்களின் ஒரு சாராரின் வாக்கு பலம் பயன்படுத்தபடாமல் போகும் ஆபத்தான நிலையும் தோன்றியுள்ளது
இன்றைய நிலையில் வடமாகாண முஸ்லிம்களின் வாக்கு வங்கி மூன்று பிரிவாக உடைந்துள்ளது என்பது பற்றி இந்த கட்டுரையில் ஆராய்வோம் வடமாகணத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு புலிகளினால் வெளியேற்றபட்ட முஸ்லிம்கள் Read the rest of this entry »
காத்தான்குடி ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கு முன்மாதிரியாய் அமையுமா ?
காத்தான்குடி நகரசபை தேர்தல் களத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, பொது ஜன ஐக்கிய முன்னணி, மற்றும் தொப்பி சின்னத்தில் களமிறங்கியுள்ள பொறியலாளர் அப்துர் ரஹ்மான் தலைமையிலான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஆகியன மத்தியில் போட்டி நிலவுகின்றது
இவற்றுள் கடுமையான வாத பிரதிவாதங்களில் அப்துர் ரஹ்மான் தலைமையிலான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துக்கும் பொது ஜன ஐக்கிய முன்னணி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா வழிகாட்டலில் செயல்படும் பொது ஜன ஐக்கிய முன்னணி (அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ) அணிக்கும் இடையில் கடும் போட்டிகள் இடம்பெற்று வருகின்றது இந்த போட்டித்தன்மை , விவாதம், கலந்துரையாடல், உண்மைக்கு கட்டுப்படல், இஸ்லாமிய அரசியல் முன்மாதிரிகளை பேணி நடத்தல் என்பனவற்றை கருத்தில் கொண்டு இடம்பெறும்போது அவை ஆரோக்கியமான நிலைகளை அடைய முடியும் என்று lankamuslim.org கருத்துரைகின்றது விரிவாக பார்க்க Read the rest of this entry »
வேட்பாளர்கள் ஜம்இய்யத்துல் உலமா சபை முன்னிலையில் சத்தியப் பிரமாணம்
அபூ றப்தான்- ஓட்டமாவடி பிரதேச சபை தேர்தலில் எவரும் தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுவதில்லையென கல்குடா ஜம்இய்யத்துல் உலமா சபை முன்னிலையில் வேட்பாளர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
ஓட்டமாவடி பிரதேச சபை தேர்தலில் தேர்தல் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் பொருட்டும், நீதயானதும் நேர்மையானதுமான தேர்தலை நடாத்தும் பொருட்டும் கல்குடா ஜம் இய்யத்துல் உலமா ஓட்டமாவடி பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை அழைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (20.02.2011) மாலை கூட்டமொன்றை நடாத்தியது விரிவாக பார்க்க Read the rest of this entry »
‘கடாபி தற்கொலை செய்துகொள்வார் அல்லது கொல்லப்படுவார்’
OurUmmah: லிபிய தேசிய தொலைக் காட்சியில் நேற்று மலை தோன்றிய கடாபி நாட்டின் கிளர்ச்சிக்கு எதிராக இறுதி வரை போராடுவேன் , லிபிய மண்ணில் வீரனாக மரணத்தை தழுவுவேன் நான் பதவி விலகுவதற்கு ஜனாதிபதியல்ல இந்த நாடு என்னுடையது இந்த நாட்டின் தலைவன் நான் நான் அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் எதிராக தொடர்ந்து போராடுவேன் நான் ஒரு புரட்சியாளன் நான் புரட்சி முகாமில் இருந்து வந்தவன் இறுதியில் வீரனாக மரணத்தை தழுவுவேன் மேற்குலகின் எந்த அழுத்ததுக்கும் அடிபணியமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்
நான் எனது படைகளுக்கு பலவந்தத்தை பயன்படுத்துமாறு இன்னும் கட்டளை பிரபிக்கவில்லை ஒரு குண்டை சுடுமாரும் ஏவவில்லை நான் கட்டளையி டும்போது அனைத்தும் பற்றி எரியும் , எனது ஆதரவாளர்கள் வீடுகளை விட்டு வெளியே வாருங்கள் வீதிகளை நிரப்புங்கள் ஆர்பாட்டகாரர்களை தாக்குங்கள் இன்று விரிவாக
67 உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஒத்திவைப்பு
ஏற்கனவே தேர்தல் திணைக்களம் 59 உள்ளூராட்சி சபை தேர்தல்களை ஒத்திவைத்திருந்தது. தற்போது மேலும் எட்டு உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை தேர்தல் திணைக்களம் ஒத்திவைத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்
திருகோணமலை நகரசபை, குளியாபிட்டி பிரதேச சபை, ருவன்வெல்ல பிரதேச சபை, கிரிபாவ பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை, திருக்கோயில் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, மெரிடைம்பற்று பிரதேச சபை என்பவற்றுக்கான தேர்தல்களையே தேர்தல் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது விரிவாக Read the rest of this entry »
தொல். திருமாவளவன் கைது
தமிழ் நாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் பார்வதி அம்மாளின் மரணச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக இன்று மீண்டும் இலங்கை வந்தால் அனுமதிக்கப்படுவார் என்று இலங்கை குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது என்று செய்திகள தெரிவிக்கின்றன.
அவர் திருப்பியனுப்பப்படும் போது அவர் ஒழுங்கான முறையில் தனது வருகையின் நோக்கத்தைத் தெரியப்படுத்தவில்லை. அதன் காரணமாகவே அவர் திருப்பியனுப்பப்பட்டார் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »
இரட்டை பிரஜா உரிமை நீக்கப்படுமா ?
இரு நாட்டுப் பிரஜா உரிமை வழங்கப்படுவதைப் பயன்படுத்திப் பலர் இலங்கைக்குத் துரோகம் செய்கிறார்கள். அதனால் இரு நாட்டுப் பிரஜா உரிமை வழங்குவதை நிறுத்தவேண்டியிருக்கிறது. இந்த விடயம் பற்றி ஆராய அமைச்சர்கள் கூட்டுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை கிடைத்ததும் வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று காலை ஊடகவியலாளர்களை ஜனாதிபதி சந்தித்து போசியுள்ளார் இதன்போது பல விடையங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள ஜனாதிபதி அங்கு ஒரு ஊடகவியலாளர்கள் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
தமிழ் கட்சிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் !
30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்து இன்று நாட்டில் பூரண அமைதி நிலவிவருகிறது இந்த நிலையில் வட பகுதி மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடனும் ஏனைய தமிழ்க் கட்சியினருடனும் நடாத்தப்படவிருக்கும் பேச்சுவார்த்தைகளின் போது முன்வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்துள்ளார் .
தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகச் சகல தமிழ்க் கட்சிகளுடனும் பேசுவோம். ஆயினும், துப்பாக்கிமுனையில் புலிகள் கேட்டதை இந்தக் கட்சிகளும் கேட்டால் அது அவற்றிற்குக் கிடைக்கவே கிடைக்காது. இப்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதிபடக் தெரிவித்துள்ளார் . நேற்று காலை ஊடகவியலாளர்களை ஜனாதிபதி சந்தித்துப் பேசினார். சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” விரிவாக Read the rest of this entry »
பங்களாதேஷின் இராணுவத் தளபதி நாளை இலங்கை வருகின்றார்
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அழைப்பிற்கமைய பங்களாதேஷ் இராணுவத் தளபதி ஜெனரல் அப்துல் முபீன் 5 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகிறார்.
பங்களாதேஷ் இராணுவத் தளபதி தனது இலங்கை விஜயத்தின் போது பிரதமர் டி.மு.ஜயரட்ன, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். பங்களாதேஷ் இராணுவத் தளபதியை வரவேற்கவென 24ம் திகதி இராணுவத் தலைமைகயத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கபடுகின்றது விரிவாக Read the rest of this entry »
காத்தான்குடி நகரசபை தேர்தல் கள சவால்கள் !
காத்தான்
குடி நகரசபை தேர்தல் களத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொது ஜன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேச்சை குழு குறிபிடத்தக்க சுயேச்சை குழுவாக தொப்பி சின்னத்தில் களமிறங்கியுள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஆகியன மத்தியில் கடுமையான போட்டி இடம்பெற்றுவருகின்றது இந்த கட்சிகளின் இடையில் சவால்கள் , சமாளிப்புகள், விவாத அழைப்புகள் , துண்டு பிரசுரங்கள, தொடர்மேடை மோதல்கள் என்று காத்தான்குடி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது
இந்த நிலையில் காத்தான்குடியில் செல்வாக்கு பெற்றுவரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரும் பொது ஜன ஐக்கிய முன்னணி அரசின் பிரதி அமைச்சருமான ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் கடும் மேடை மோதல் இடம்பெற்று வருகின்றது விரிவாக Read the rest of this entry »
புத்தளம் நகரசபை முஸ்லிம்களின் கையை விட்டு போகும் நிலை !
புத்தளம் நகரசபை தேர்தல் களத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொது ஜன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேச்சை குழு களத்தில் இறங்கியுள்ள இந்த முறை செல்வாக்குள்ள பல நபர்கள், கட்சிகள் மற்றும் சுயேச்சை குழு ஒன்றிலும் போட்டியிடுவதால் புத்தளம் நகர முஸ்லிம் மக்களின் வாக்குகள் அதிகம் பிரியும் வாய்ப்பு இருப்பதாக சுட்டிகாட்டப்படுகின்றது.
இந்த தேர்தலில் முனாள் பிரதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாயிஸ், மற்றும் முன்னாள் புத்தளம் நகரசபை தலைவர் நஸ்மி ஆகியோர் பொது ஜன ஐக்கிய முன்னணியின் சார்பில் போட்டியிடுகின்றனர் அதேபோன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் செல்வாக்கு மிக்க நபரான டி .எஸ் அமீன் தலைமையிலான அணி களத்தில் குதித்துள்ளது விரிவாக Read the rest of this entry »
அக்கரைப்பற்று தேர்தல் களம் சூடு பிடிக்கின்றது
உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்கள் நெருங்கிவரும் வேளையில் அக்கரைப்பற்று மாநகரசபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியவற்றுகிடையில் கடும் போட்டி நிகழ்கின்றது அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தேசிய காங்கிரஸும் நேரடியாக மோதுகின்றன.
இந்த நிலையில் பரஸ்பரம் கட்சி தாவல் இடம்பெறுவதாகவும் தெரியவருகின்றது அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தருமான யூ.எல். சுபைதீன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் நேற்று இணைந்துகொண்டார் விரிவாக Read the rest of this entry »
60 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் தாமதமாகும்
நாடு முழுவதும் உள்ள 60 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் அறிவித்தபடி மார்ச் 17ஆம் திகதி இடம்பெற மாட்டாது எனத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார். இதேவேளை, ஏற்கனவே கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 3 உள்ளூராட்சிச்சபைகள், மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த 2 உள்ளூராட்சிச்சபைகள் மற்றும் நுவரெலிய மாவட்டத்தைச் சேர்ந்த லிந்துலை தலவாக்கலை நகர சபைத் தேர்தலை நடத்த நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக் கள் தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப் பட்டமைக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன விரிவாக Read the rest of this entry »
‘எங்கள் மீனவர்களையும் விடுவியுங்கள்’
இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய வேண்டுமென கோரி் இலங்கையின் மேற்கே, சிலாபத்தில் மீனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது உறவுகள் விடுதலையடைந்து நாடு திரும்ப வேண்டுமென இறைவழிபாட்டில் ஈடுபட்ட மீனவர் குடும்பங்கள், இலங்கையில் இந்திய மீனவர்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டதைப் போலவே இலங்கை மீனவர்களும் விடுவிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டனர் விரிவாக Read the rest of this entry »
யாழ் மண்ணில் 20 வருடங்களில் பின்னர் முதல் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டது
யாழ்ப்பாண முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு புலிப் பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக நாட்டின் தொன்பகுதியில் வசித்து வரும் முஸ்லிம்களில் சுமார் 500 வரையான குடும்பங்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று மீள் குடியேறியுள்ளனர் இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மீள் குடியேறிய மக்களில் முஸ்லிம் குடும்ப தலைவர் ஒருவர் மரணித்துள்ளார்.
20 வருடங்களில் பின்னர் யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேச மையவாடியில் இவரின் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டுள்ளது இவரின் ஜனாஸாதான் 20 வருடங்களில் பின்னர் யாழ் மண்ணில் அடக்கம் செய்யப்பட்ட முதல் ஜனாஸா என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது என்று எமது lankamuslim.org யாழ் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர் யாழ்ப்பாணத்தில் பலசரக்கு வியாபர நிலையம் நடத்தி வந்த அக்பர் என்ற நபரே வபாத்தானவராகும்
மீண்டும் சு.ப. சிலை !
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸில் புலம்பெயர் தமிழர்களால் வைக்கப்பட்ட சிலை மீண்டும் பொது இடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இவரின் ஓராண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு கடந்த வருடம் நவம்பர் 01 ஆம் திகதி இச்சிலை La Courneuve நகரத்தில் வைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுகின்றது
இலங்கை அரசின் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அதிகாரிகளால் அங்கிருந்து அகற்றப்பட்டது என்று தெரிவிக்கபட்டது எனினும் அந்த சிலை சில திருத்த வேலைகளுக்காக தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது என்று அதை நிர்மாணித்தவர்கள் அன்று தெரிவித்திருந்தனர் விரிவாக Read the rest of this entry »
பேருவளை பிரதேசத்தில் தேர்தல் அடாவடித்தனங்கள்
பேருவளை பிரதேசத்தில் வெளி பிரதேசத்தில் இருந்து வரும் நபர்களால் வன்முறைகள் இடம்பெறுவதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது உள்ளுராச்சி தேர்தல் வன்முறைகள் சம்பவங்கள் பேருவளை பிரதேசத்தில் மூன்றாவது தடவையாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது இந்த வன்முறைகளில் இருவர் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர், அண்மைய வன்முறை சம்பவம் ஒன்றில் ஐ தே. க வேட்பாளர் அரபாத் என்பவர் ஐ. ம .சு. மு வேட்பாளர் மில்பர் வசீர் மற்றும் ஐ தே. க வேட்பாளர் ஹசீன் பாதிப் ஆகியோரின் ஆதரவாளர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது
போலீஸ் நடவடிகளை எடுக்காமை பேருவளை பிரதேசத்தையும் தேர்தல் சட்டங்கள் முறையாக அமுல்படுத்தப்படாத இடங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது என்று கபே அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது விரிவாக Read the rest of this entry »
கட்டார் அதிபர் ஷேய்க் ஹமாத் பின் கலிபா இலங்கை வருகின்றார்
கட்டார் அதிபர் ஷேய்க் ஹமாத் பின் கலிபா அல் தானி இலங்கை வரவுள்ளார் இவர் இலங்கை வெளிநாட்டு அமைச்சினால் இலங்கை வருமாறு அழைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கபடுகின்றது கட்டார் அதிபர் இந்த வருடம் மே மாதமளவில் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வருகின்றார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷா இலங்கை வெளிநாட்டு அமைச்சரின் ஊடாக விடுத்துள்ள அழைப்பை ஏற்று இலங்கை வரவுள்ளதுடன் இலங்கையுடனான பொருளாதார உறவு பற்றி வேச்சுவார்தையிலும் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. கட்டார் இயற்கை கேஸ் வாயுவை உற்பத்தி செய்வதில் முக்கிய ஒரு நாடாக விளங்குகின்றது என்பது குறிபிடத்தக்கது கடந்த கிழமை காட்டருக்கு விஜயம் செய்திருந்த இலங்கை வெளிநாட்டு அமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார விரிவாக Read the rest of this entry »
17 வருடங்களாக ஊதியம் இன்றி அடிமை வாழ்க்கை !!
1994ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்குப் பணிப்பெண்ணாகச் சென்று சுமார் 17 வருடங்களாக சவுதி அரேபியாவில் வேதனம் எதுவும் வழங்கப்டாமல் வீட்டுப் பணிப்பெண்ணாக அடைத்து வைக்கப்பட்டிருந்த குசுமா நந்தினி என்ற 56 வயதுடையப் இலங்கைப் பணிப்பெண் ஒருவரை சவுதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்று அறப் நியூஸ் தெரிவித்துள்ளது.
15 வருடங்கள் வீட்டினுல் பூட்டி வைத்திருந்து குசுமா நந்தினியிடம் வேலைப் பெறப்பட்டதுடன், பின்னர் குறித்த வீட்டு உரிமையாளர் அவருடைய உறவினர் வீட்டிற்குப் பணிப்பெண்ணாக இவரை அனுப்பியுள்ளார். சவுதி அரேபியாவில் இடம்பெற்றுவரும் பணிப்பெண் சித்திரவதைகளில் இது பாராதூரமான ஒன்றென சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது விரிவாக Read the rest of this entry »
பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது
பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் பயணித்த வாகன தொடரணி தம்புள்ளையில் விபத்துக்குள்ளாகியதாள் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் இன்று சனிக்கிழமை காலை தனது ஏறாவூர் பிரதேசத்திலிருந்து கொழும்பு பாராளுமன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது தம்புள்ளை பிரதான வீதியில் அவர் பயணித்த வாகனம் மற்றும் அவருக்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற மற்றுமொரு வாகனமும் ஒரு கார் மற்றும் பஸ் ஆகியனவற்றுடன் விபத்தில் சிக்கியுள்ளது.
இருப்பினும் வாகனங்கள பலத்த சேதமடைந்த போதிலும் தனக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென அதில் பயணித்த பொலிஸாருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்
கைதான 138 இந்திய மீனவர்களும் விடுதலை
வடமராட்சி, மாதகல் கடற்பகுதிகளில் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 136 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சிக் கடலில் சிறைபிடிக்கப்பட்ட 112 இந்திய மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டும் மாதகல் கடற்பரப்பில் சிறைபிடிக்கப்பட்ட 24 மீனவர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டும் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 112 பேரையும் விடுதலை செய்யுமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரனும் இதேபோல் மாதகல் கடற்பரப்பில் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட 24 மீனவர்களையும் விடுவிக்குமாறு மல்லாகம் நீதிவான் ஜே. கஜநிதிபாலனும் உத்தரவு பிறப்பித்தனர் விரிவாக Read the rest of this entry »
மீலாத் நிகழ்விலிருந்து முஸ்லிம் சமைய திணைக்கள அதிகாரிகள் வெளிநடப்பு
கொழும்பு தெவடகஹ பள்ளிவாசலில் மீலாது நிகழ்சி நடைபெற்றுள்ளது இதன்போது நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற முஸ்லிம் சமைய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உயர் அதிகாகளை தெவடகஹ பள்ளி நிர்வாகம் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் அதனையடுத்து குறித்த அதிகாரிகள் அங்கிருந்து வெளிநடப்புச் செய்ததாக தெரிவிக்கபடுகின்றது.
இது தொடர்பாக விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள தகவலில் முஸ்லிம் சமைய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை. எல் .எம். நவவி(நளீமி) தெரிவித்துள்ளதாவது திணைக்கள அதிகாரிகளுக்கு உரிய இடங்கள் வழங்கப்படாததை அடுத்தே தாம் அங்கிருந்து வெளிநடப்புச் செய்ததாக தெரிவித்துள்ளார் மேலும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் என்ற வகையில் எமக்கு அங்கு உரிய இடம் வழங்கப்படவில்லை முஸ்லிம் சமைய திணைக்களத்தின் சார்பில் உரை நிகழ்த்ததுவதற்கு நிகழ்ச்சி நிரலில் அனுமதி வழங்கப்படவில்லை எனனேதான் நாம் அங்கிருந்து வெளியேறினோம் என்று தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »
யாழ்பாணத்தில் யாழ் முஸ்லிம்களின் விசேட ஒன்று கூடல்
நேற்று முன்தினம் யாழ்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீலாத் நிகழ்வுகளில் பங்குகொள்ள புத்தளம் , கொழும்பு , நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வரும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர் இதன் போது யாழ் முஸ்லிம் பொது அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளிலும் கலந்து கொண்டுள்ளனர் நேற்று முன்தினம் 20 வருடங்களுக்கு முந்திய யாழ்ப்பாணத்தை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாக யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் முஸ்லிம்கள் தெரிவித்தனர் என்று எமது யாழ் lankamuslim.org செய்தியாளர் தெரிவிக்கின்றார்
நேற்று முன்தினம் யாழ் முஸ்லிம் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் பாரிய விருந்து உபசாரம் இடம்பெற்றதுடன் வீடுகளுக்கும் விசேட உணவு வினியோ கிக்கபட்டுள்ளதுடது இவற்றை சிறப்பிக்கும் முகமாக விசேட பயான் நிகழ்சிகளும் இடம்பெற்றுள்ளது விரிவாக Read the rest of this entry »
அலவி மெளலானா சிகிச்சை பெற்று வருகின்றார்
மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக தனியார் ஆஸ்பத்திரியொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார் ஆளுநர் அலவி மெளலானாவின் உடல் நிலை தற்போது தேறிவருகின்றது.
என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல தலைவர்கள் ஆளுநர் அலவி மெளலானாவை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர் அவர் சுகதேகியாகி நீண்டகாலம் இந்நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென பிரார்திக்குமார் அவரின் நண்பர்கள் வேண்டியுள்ளனர்
இந்திய மீனவர்கள் இன்று விடுவிக்கப் படவேண்டும்:கிருஸ்ணா
யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 138 இந்திய மீனவர்களையும் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா கண்டிப்பாகக் கூறியுள்ளாராம்
இந்த நடவடிக்கை குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலையை அமைச்சர் பீரிஸிடம் வெளியிட்டுள்ளதாகவும் இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் சட்டத்தை தமது கையில் எடுத்து கொண்டுள்ளது குறித்தும் அவரிடம் கூறியதாகவும் 136 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன அதேவேளை விரிவாக Read the rest of this entry »
தமிழக மீனவர்கள் யாழ் மீனவர்களால் சுற்றி வளைப்பு
யாழ்ப்பாணம் மாதகல் கடற் பரப்பில் வைத்து கோட்டை பட்டினத்தைச் சேர்ந்த 7 வள்ளங்களை யும் 26 மீனவர்களையும் இலங்கை யாழ் மீனவர்கள் நேற்று இரவு 7 மணியளவில் பிடித்து உள்ளனர் என்று தெரிவிக்கபடுகின்றது அதேவளை நேற்று முன்தினம் யாழ். மீனவர்களால் சுற்றிவளைத்து கரைக்கு அழைத்துவரப்பட்ட 112 தமிழக மீனவர்களும் நேற்று பருத்தித்துறை பொலிஸாரினால் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 28ம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடல் எல்லையினுள் நுழையும் இந்திய மீனவர்கள் தமது கடல் வளங்களை சூறையாடிச் செல்வதுடன் வடபகுதி மீனவர்கள் வலைகளையும் சேதமாக்கிச் விரிவாக Video Read the rest of this entry »
Facebook சமூக வலைத்தள வாலிபர்களுக்கு பாராட்டுகள் !
இன்று அல்லாஹ்வின் தூதரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சக்தி டிவி ஒளிபரப்பாக்க தீர்மானித்திருந்த ‘ பொக்கிஷம்’ என்ற தமிழ் திரைப்படம் முஸ்லிம் வாலிபர்கள் சமூக வலைத்தளம் Facebook மூலம் மேற்கொண்ட முயற்சியால் அந்த குறித்த திரைப்படத்தை சக்தி டிவி ஒலிபரப்புவதில்லை என்று நிறுத்தியுள்ளது என்பதை சமூக வலைத்தள தகவல்களின் ஊடாக அறிய முடிகின்றது
கடந்த சில மாதங்களாக Facebook சமூக வலைத்தளத்தில் ‘இஸ்லாமிய பெருநாள் தினங்களில் பெருநாளின் பெயரை பயன்படுத்தி திரைப்படம் போடப்படுவதை எதிர்போம்’ என்ற விடய பக்கத்துக்கு ஆதரவாக 3500 வரையான ஆதரவாளர்கள் இணைந்ததுடன் அது தொடர்பான கருத்து பரிமாற்றங்களையும் நடத்திவந்தனர் நேற்றும் இன்றும் முஸ்லிம் வாலிபர்கள் குறிப்பாக Facebook சமூக வலைத்தளம் பயன்படுத்தும் உறுப்பினர்கள் மேற்கொண்ட முயற்சியால் ‘பொக்கிஷம்’ என்ற தமிழ் திரைப்படம் ஒளிபரப்பாவது நிறுத்தப்பட்டது விரிவாக Read the rest of this entry »
பள்ளிகுடா பிரதேச முஸ்லிம்களின் காணிகளை மீளப் பெற நடவடிக்கை
யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு சொந்தமான கிளிநொச்சி மாவட்டம் பள்ளிகுடா பிரதேசத்தில் 750 ஏக்கர் தொடக்கம் 1000 ஏக்கர் வரையான காணிகளை மீள பெற்று கொள்வது தொடர்பாக அந்த பிரதேச காணிகளின் சொந்தகாரர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள் பெற்றுக்கொள்ள தேவையான நடவடிகைகளை மேற்கொள்ள தேவையான ஆலோசனைகளை வழங்கும் நோக்கியில் ஆலோசனை கூட்டம் ஒன்று நாளை 17ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 2.00 மணிக்கு புத்தளம் தில்லையடி மக்கள் பணிமனையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இந்த ஆலோசனை கூட்டம் யாழ் மாநகர சபை உறுப்பினர் மௌலவி சுபியான் தலைமையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர் , கிளிநொச்சி மாவட்டம் பள்ளிகுடா பிரதேசத்தில் 750 ஏக்கர் தொடக்கம் 1000 ஏக்கர் வரையான காணிகள் தற்போதும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகவும் விரிவாக Read the rest of this entry »
இலங்கை எகிப்தில் சுமுகமானதும் அமைதியானதுமான அதிகார மாற்றத்தை வரவேற்கின்றது
எகிப்து தொடர்பாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் எகிப்தில் சுமுகமானதும் அமைதியானதுமான அதிகார மாற்றத்தை இலங்கை வரவேற்பதாக தெரிவித்துள்ளது மேலும் அந்த அறிக்கையில் இலங்கையும் எகிப்தும் நெருங்கிய உறவை கொண்டுள்ளது அந்த வகையில் ஜனநாயக வரம்புகளை கொண்ட நிர்வாகத்துக்குள் அபிவிருத்தியும் , ஸ்திரத்தையும் எகிப்து மக்கள் பெற்றுக்கொள்ள இலங்கை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது என்று அந்த அறிக்கை குறிப்பிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையை கண்டித்து தமிழக ஆர்பாட்டம் பலர் கைது
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, சென்னையில் திராவிட முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தி.மு.கவினர் கைது செய்யப்பட்டனர் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாகை, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம், தமிழகத்தில் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறி நடந்திருப்பதற்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார் என்பதும் குறிபிடத்தக்கது
எழுத்தாளர் விடுதலையானார் !
30 நாட்கள் பயங்கரவாத தடுப்பு காவலில் வைக்கப்பட்டு சுமார் 10 மாதங்கள் நாட்டை விட்டும் வெளியேற முடியாது தொடர் வழக்குகளை எதிர்கொண்ட எழுத்தாளர் ஸாராஹ் மாலினி பெரேரா குற்றாட்டுகள் அனைத்தில் இருந்தும் விடிவிக்கபடுள்ளார் ஸாராஹ் மாலினி பெரேரா என்ற எழுத்தாளர் 30 நாட்டகள் பயங்கரவாத தடுப்பு காவலில் வைக்கப்பட்ட பின்னர் 19.5.2010 அன்று நீதிமன்றம் பினையில் செல்ல அனுமதியளித்தது.
எனிலும் இவரின் கடவு சீட்டு நீதி மன்றத்தால் பெற்று கொள்ளப்பட்டு வழங்கு பல தவணைகளாக கடந்த 10 மாதங்கள் நடைபெற்றநிலையில் கடந்த புதன் கிழமை அவர் மீது சுமத்தபட்ட அனைத்து குற்ற சாட்டுகளில் இருந்தும் விடிவிக்கப்பட்டார் இதை தொடர்ந்து நேற்று பஹ்ரைன் திரும்பியுள்ளார் இது தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்
உங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சிகரமான மீலாதுன் நபி வாழ்த்துக்கள்!: ஜனாதிபதி
உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுடன் இணைந்து எமது நாட்டு முஸ்லிம் மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் நான் மகிழ்ச்சியடை கிறேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீலாத்தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மேலும் அந்த செய்தியில்
நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாம் சமாதானம், நல்லிணக்கம் தொடர்பான நபியவர்களின் போதனைகளை அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அவை எமது சமூகத்தின் ஐக்கியத்திற்கும் சகவாழ்விற்கும் மிகப் பெரும் பலமாகவும் ஆசிர்வாதமாகவும் அமையும் விரிவாக Read the rest of this entry »
அனர்த்த நிவாரண நடவடிகைகள் தொடர்ந்து 6 மாதங்களுக்கு
நாட்டில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலையை தொடர்ந்து முகாம்களிலோ அல்லது உறவினர் வீடுகளிலோ இருப்பவர்களுக்கு 6 மாதங்களுக்கு உலர் உணவுகளை கிரமமாக வழங்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் அரச அதிகாரிகள், பிரதேச அரசியல்வாதிகள் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேநேரம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காப்புறுதி செய்யப்பட்ட பயிர் நிலங்களுக்கு நட்ட ஈடுகளும் காப்புறுதி செய்யாத பயிர் நிலங்களுக்கு உரிய வசதிகளும் வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது இயற்கை அனர்த்தத்தினால் 62 ஆயிரம் வீடுகள் சேதமதடைந்துள்ளதாக தற்போது தெரிவிக்கபடுகின்றது வெள்ள மற்றும் மண்சரிவு விரிவாக Read the rest of this entry »
வட மாகாண முஸ்லிம்கள் வாக்குரிமையை முறையாக பயன்படுத்த நடவடிக்கை தேவை
வேறு பிரதேசங்களில் உள்ள வடமாகாண மக்ககள் வாக்களிக்கும் வகையில் வாக்குச் சாவடிகளை குறித்த பகுதிகளில் அமைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையாளரிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் எம்.பி.யுமான ஹசன் அலி கோரியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
வட மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் வாக்காளர்கள் தமது வாக்களிக்கும் உரிமையை முறையாகப் பயன்படுத்துவதற்குரிய வழிவகைகளை இலகுவாக்கித் தரவேண்டியது தேர்தல் ஆணையாளரின் தலையாய கடமையாகும் விரிவாக Read the rest of this entry »
நீதி அமைச்சர் மன்னார், கிளிநொச்சிக்கு இரண்டு நாள் விஜயம்
மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூவ் ஹக்கீம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மக்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இவர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளை குறைந்தது ஒரு மாத காலத்துக்காவது வழங்க வேண்டும் என்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் சுமுகமான இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப குறைந்தது ஒரு மாத காலம் தேவை என்பதையும் ஜனாதிபதியிடம் விளக்கி கூறியமை பற்றியும் இந்த சந்தர்பத்தில் தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »
உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நியமனக்கடிதம்
வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் இருவரும் தூதுவர்கள் அறுவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்து, தமது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
மாலைதீவு மற்றும் ஐக்கிய இராஜ்யத்தின் உயர்ஸ்தானிகர்களும், செக்கோசுலோவாக்கிய, பரகுவே, லாவோய், பொஸ்னியா கேசகோவேனியா, கஸகஸ்தான், மற்றும் சுலோவாக்கியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுமே இன்று ஜனாதிபதியிடம் தம் நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன
முஷாரபுக்கு சர்வதேச பிடியாணை !!
பிரிட்டனில் வசித்து வரும் முன்னாள் பாகிஸ்தான் மேற்குலக சார்பு ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பை நாடு கடத்துமாறு கோருவதற்கு பாகிஸ்தான் எப்.ஐ.ஏ. – FIA Federal Law Enforcement Agency -தீர்மானித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் ஆஜராகுவதற்கு அந்நாட்டின் முன்னாள் இராணுவ ஆட்சியாளரான முஷாரப் மறுப்புத் தெரிவித்துள்ளார். எப்.ஐ.ஏ.- FIA முஷாரப் நீதிமன்றில் ஆஜராக முறுக்கும் பட்சத்தில் அவர் தேடப்படும் -wanted man – நபராக அறிவிக்கப்படுவார் என அறிவித்துள்ளது. தற்போது அந்நீதிமன்றினால் முஷாரப்பிற்கு உள்நாட்டு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முஷாரப்பின் நாடு கடத்தல் குறித்து பிரிட்டன் உள்நாட்டமைச்சருக்கு எழுதுவதற்கு தீர்மானித்துள்ளதாக எப்.ஐ.ஏ.யின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.பாகிஸ்தான் உள்நாட்டமைச்சர் ரெஹ்மான் மாலிக்கின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போதே முஷாரப்பை நாடு கடத்தக்கோரும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
பதுளை மாவட்டம் எங்குறுகம மருத்துவமனை நிலத்தில் புதைகின்றது நோயாளர்கள் வெளியேற்றம்
தொடராக பெய்த மழை காரணமாக பதுளை மோசமான மண்சரிவு அபாயத்தை கொண்டதுடன் தற்போதும் அந்த அபாயம் தொடர்ந்தும் ஏற்பட்டு வருகின்றது பதுளை எங்குறுகம மருத்துவமனை அமைந்திருக்கும் தரைப்பகுதி மருத்துவமனை கட்டடத்தின் அரைவாசியுடன் நிலத்தில் புதையுண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை இரண்டாம் கட்டையில் அமைந்துள்ள எங்குறுகம தோட்ட மருத்துவமனை மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்கள் நிலத்தில் புதைந்து போகத் தொடங்கியுள்ளன. இதனால் மருத்துவமனையில் இருந்தவர்கள் மற்றும் அதன் அயல் பிரதேசங்களில் வசித்தவர்கள் அங்கிருந்து க வெளியேற்றப்பட்டுள்ளனர்.கடந்த நான்கு தினங்களுக்கு முன்புதான் வேவஸ்ஸ பிரதேச மக்கள் சுமார் நூறுபேர் இங்குறுகம மருத்துவமனையில் தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்கள் வசித்துவந்த லயன் அறைகளின் சுவர்கள் வெடிப்புக்குள்ளாகியதன் காரணமாக அவர்கள் இடம்பெயர்ந்து மருத்துவமனையில் தங்கியிருந்தனர் என்பது குறிபிடத்தக்கது
மக்கள் கோரும் மாற்றம் எகிப்தில் தோன்ற மேற்குலகம் அனுமதிக்குமா ?
OurUmmah:எகிப்தை முபாரக் இராணுவ உயர் பீடத்திடம் நாட்டின் நிர்வாகதை வழங்கி இரண்டு நாட்களுக்கு முன்னர் பதவி விலகினார் இரண்டு தினங்களின் பின்னர் இராணுவ உயர் பீடம் எகிப்தின் பாராளுமன்றத்தை கலைத்துள்ளதாகவும் ,நாட்டின் அரசியல் யாப்பை செயலிழக்க செய்துள்ளதாகவும் வரும் ஆறு மாதங்களுக்கு அல்லது அடுத்த அரசாங்கம் அமைக்கப்படும் வரையும் நாட்டின் நிர்வாகத்தை கொண்டுநடத்துவதாகவும் இன்று அறிவித்துள்ளது
அதேவேளை இராணுவம் இந்த அறிவிப்பை வழங்க சற்று முன்னர் பதவி விலகிய ஜனாதிபதி முபாரக் அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்ட பிரதமர் அஹ்மத் ஷபிக் பதவி விலகிய ஜனாதிபதி முபாரக்கினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை தொடர்ந்து நாட்டில் இயங்கும் என்று தெரிவித்துள்ளார் இந்த இரண்டு அறிவிப்புகளும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டவையல்ல என்று தெரிவிக்கப்படுகின்றது விரிவாக
எகிப்து எழுதிய புதுக் கவிதை காவியமாகுமா ?
எஸ்.எம்.எம்.பஷீர்
“உங்களின் பழைய கவிதைகளை தள்ளி போடுங்கள் உங்கள் பழைய குறிப்பேடுகளை கிழித் தெறியுங்கள் இன்று எகிப்துக்காக அவளுக்கு தகுந்த கவிதைகளை எழுதுங்கள். “- எகிப்திய இளம் கவிஞன் ஹிஷாம் எல் கோஹ் (09/02/20111)
தஹிறார் சதுக்கத்தில் எவ்வித வன்முறையிலும் ஈடுபடாமல் கூடியிருந்து தமது முற்றுகை நேரத்தில் கவிதைகள் வாசித்து புதிய கவிதை எழுதுவதற்காக உழைக்கும் வர்க்கத்தினர் இளைஞர்கள் தேர்ச்சி பெற்ற தொழில் வல்லுனர்கள் என சகல மக்களினதும் வெகுஜன போராட்டம் பதினெட்டு நாளில் வீதிக்கு வந்ததால் பலன் தந்திருக்கிறது , சர்வாதிகார தனிமனித ஆட்சிக்கு முடிவு கண்டிருக்கிறது. ஆனால் இந்த போராட்டம் நீறு பூத்த நெருப்பாக நீண்டகாலம் கருக்கொண்ட போராட்டம் விரிவாக Read the rest of this entry »
எமது இணையத்தள குழுமத்தின் நிர்வாக அறிவித்தல்
எமது இணையதளத்தள ஈமெயில் முகவரிக்கு அனுப்பப்படும் ஆவணங்கள் அனுப்புபவரின் முழு பெயர் அவரின் கையடக்க தொலைபேசி இலக்கம் , ஆகிய அடிப்படையாக எமக்கு தேவையான விபரங்களை மட்டுமாவது அனுப்பப்படும் ஆவணத்துடன் அல்லது ஆக்கத்துடன் இணைக்கப் பட்டிருக்க வேண்டும் வெளிநாடுகளில் இருந்து அனுப்புபவர்கள் கண்டிப்பாக அவர்களின் இலங்கை தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது இலங்கை கடவுசீட்டு இலக்கம் அவற்றுடன் நிலையான தொலைபேசி இலக்கம் கண்டிப்பாக இணைக்கப் பட்டிருக்க வேண்டும்.
உங்களின் ஆவணங்கள் முஸ்லிம் சமூகத்தின், அல்லது பொது மனித சமூகத்தின் நலன்களை பேணும் வகையில் இருத்தல் வேண்டும் அரசியில் கட்சிகளின் ஆதரவுக்கான பிரச்சார ஆவணங்களாக முஸ்லிம் சமூகத்தின் பொது நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அல்லது எந்தவொரு சமுகத்தின் பொது நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவை இருந்தால் பதிவேற்றல் தவிர்க்கப்படும் விரிவாக Read the rest of this entry »







