நிருபமா ராவ் ஜனாதிபதி சந்திப்பு
இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்றிரவு இலங்கை வந்தடைந்தார். நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்த சந்திப்பின்போது பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமாக தமிழக மீனவர்கள் இருவர் ஒரு மாதத்துக்குள் கொல்லப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டு விரிவாக பார்க்க
சென்னையில் அமைந்துள்ள மகாபோதி அமைப்பின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் இந்தியா இலங்கையில் நிர்மாணிக்கவுள்ள 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என்று வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.







