Archive for January 30th, 2011
டாக்டர் சாகிர் நாயிக் நாளை மட்டக்களப்புக்கும் விஜயம் செய்கின்றார்
இஸ்லாமிய அறிஞரான டாக்டர் . சாகிர் நாயிக் இலங்கை வந்துள்ளார். இதன்போது அகில இலங்கை ஜம்மியதுல் உலமா , மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுடன் கலந்துரையாடல்களையும் மேற் கொண்டுள்ளார் இவரின் விஜயம் தனிப்பட்ட விஜயமாக அமைத்துள்ளதா தெரியவருகின்றது இவர் நாளை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் அதன் போது காத்தான்குடிக்கும் செல்லவுள்ளார் இதன்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதுடன் அங்கு மஸ்ஜித் ஒன்றிலும் உரையாற்றவுள்ளார் என்று தெரியவருகின்றது விரிவாக Read the rest of this entry »
சிங்களத் தீவுக்கு பாரதி கட்டிய பாலமும் வ உ சிதம்பரம் அனுப்பிய கப்பலும் !
எஸ்.எம்.எம்.பஷீர்
“பொய்ம்மை தீர, மெய்ம்மை நேர வருத்த மழிய வறுமை யொழிய
வையம் முழுதும் வண்மை பொழிய (வேண்டுமடி) “ -சுப்ரமணிய பாரதி
எதிர்வரும் மாசி ( பெப்ருவரி) மாதக் கடைசியில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் மிடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என்பது உறுதியாக தெரியவந்துள்ளது. அதற்கான அறிவித்தல்கள் வெளிவரத் தொடங்கி உள்ளன.அதுவும் அந்த பயணிகளுக்கான கப்பல் சேவையில் ஈடுபடுத்தப்படும் கப்பலின் பெயரும் வ. உ .சி சிதம்பரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரபோராட்டத்தில் பிரித்தானியா அந்நிய ஆட்சியாளர்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் ஒன்றாக வ.உ.சி என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த வ. உ . சிதம்பரம்பிள்ளை பிரித்தானியா கப்பல்களுக்கெதிராக நடத்தி காண்பித்த சுதேசிய கப்பல் சேவையை குறிப்பிடலாம். பிரித்தானிய ஆட்சியாளர்களுக் கெதிராக கொழும்புக்கும் தூத்துக்குடிக்கு மிடையில் விரிவாக Read the rest of this entry »
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு டாக்டர் ஸாகிர் நாயிக் விஜயம்
செய்தி திருத்தும் பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் பஸ்லுல் ஜிப்ரி அவர்களின் அழைப்பின்- பேரில் உத்தியோகப் பற்றற்ற விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர் ஸாகிர் நாயிக் கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிட நாளை திங்கட் கிழமை (31-1-2011) அங்கு விஜயம் செய்யவுள்ளார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கோடு நாளைக் காலை கிழக்கு மாகாணம் நோக்கி ஹெலிகப்டரில் மேற்கொள்ளவிருக்கும் இவ்விஜயத்தில் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தொழிலதிபர் அல்ஹாஜ் பஸ்லுல் ஜிப்ரி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சார்பில் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம் ஆகியோரும் செல்லவிருக்கின்றனர் விரிவாக Read the rest of this entry »







