Archive for January 22nd, 2011
காஷ்மீர் மனித உரிமை நிலவரம்: ஐ.நா. வுக்கு கவலையாம் !!
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புப் படையினருக்கு பெருமளவு அதிகாரங்களை வழங்கும் சிறப்புச் சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என மனித உரிமைகளுக்கான ஐ.நா. மன்ற சிறப்புப் பிரதிநிதி மார்கரெட் செகாக்யா வலியுறுத்தியுள்ளார்.
ற்கெனவே பல முறை ஐ.நா. மனித உரிமைப் பிரிவினர் காஷ்மீரில் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முதல் முறையாக இந்திய அரசு தற்போது அவர்களது பயணத்துக்கு அனுமதியளித்திருந்தது விரிவாக Read the rest of this entry »
இந்திய உளவு பிரிவு இலங்கை விவகாரத்தில் மீண்டும் ?
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும், 1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி- ENDLF- ஸ்ரீ பெரும் பதூரில் அமைந்துள்ள அமரர் ராஜிவ் காந்தியின் நினைவு மண்டபத்திலிருந்து 2,500 கிலோமீற்றர் நெடும் பயணம் ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ளது .
இந்த ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி அமைப்பு இந்தியாவின் நலன் கருதி இலங்கை தமிழ் வாலிபர்களை கொண்டு இந்திய உளவு பிரிவான ‘ரோ’ வினால் உருவாகப்பட்டு, விரிவாக Video Read the rest of this entry »
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அரசியலிலும் களமிறங்குகின்றது !
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி எதிர்வரும் உள்ளூராச்சி சபைகளுக்கான தேர்தலில் முதல் முறையாக அரசியல் களம் இறங்க தீர்மானித்துள்ளது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 50ஆண்டு கால வரலாற்றில் இந்த தீர்மானம் ஒரு புதிய பாதையில் பயணிக்க தயாராகியுள்ளதை காட்டுவதாக அமைந்துள்ளது மட்டுமல்லாது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு இஸ்லாமிய இயக்கம் அரசியலில் குதிப்பது இதுதான் முதற்தடவையாகும்.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நகர சபைக்கான தேர்தல் களத்தில் சுயேச்சை குழுவாக குதிக்க முடிவு செய்துள்ளது இந்த தகவலை எனது lankamuslim.org தேசிய செய்தியாளர் உறுதிப் படுத்தியுள்ளார் திருகோணமலை மாவட்டம் இலங்கைக்கு மட்டுமின்றி சர்வதேசத்தின் விரிவாக Read the rest of this entry »
அபாயாவுக்கு தடை, இஸ்லாம் பாடம் போதிக்க ஆசிரியரும் இல்லை !!
கொழும்பிலுள்ள பெண்கள் அரச பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றலாகி சென்ற ஆசிரியர் அபாயா அணிந்து சென்றமையால் குறித்த அந்த பாடசாலையில் அந்த ஆசிரியறுக்கு நியமனம் வழங்கமுடியாது என்று பாடசாலையின் பெரும்பான்மை இன அதிபர் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கபடுகின்றது.
இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு 10 எல்லைக்குள் அமைந்திருக்கும் பெண்கள் பாடசாலையான பெஸிபத்தேரியன் என்ற பாடசாலையில் 1200 மாணவிகள் கற்று வருகின்றார்கள் இவர்களில் மருதானை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை சார்ந்த 600 முஸ்லிம் மாணவிகள் கற்பதாக தெரியவருகின்றது அந்த பெண்கள் அரசபாடசாலையில் தமிழ் , சிங்களம் ஆகிய மொழிகளில் விரிவாக Read the rest of this entry »







