Archive for January 7th, 2011
விளக்கமறியலில் உள்ளவர்களுக்கு விடுதலை
பல மாத
ங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை பெறக்கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தீங்கு விளைவிக்கும் ஆயுதங்கள் திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், தீங்கு விளைவிக்கும் ஆயுதங்கள் திருத்தச் சட்டத்தின் கீழ் குற்றஞ் சுமத்தப்பட்டவர்கள் மாகாண ரீதியிலான மேல் நீதிமன்றங்களில் பிணை கோரக்கூடிய வகையில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன
மன்னாரில் முஸ்லிம் வாலிபர் உட்பட நான்கு பேர் கடத்தல்
மன்னாரில் நேற்று மாலை 5.00 மணியளவில் வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளினால் 4 பேர் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் கருசல் கிராமத்தை சேர்ந்த ஜகாரில் ஜஸீல் என்ற முஸ்லிம் நபரும் கடத்தப் பட்டுள்ளார் மற்ற மூவரும் தமிழர்களாகும் இவர்களில் பேசாலையைச் சேர்ந்த சாரதியான தர்மா, தோட்டவெளி பகுதியைச் சேர்ந்த சிகை அலங்காரம் செய்யும் கமல் மற்றும் பெரியகமத்தை சேர்ந்த தில்லை நாதன் ஆகியோர் தனித்தனியே கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
ஜகாரில் ஜஸீலை வெள்ளை நிற டொல்பின் வேனில் கடத்திச்செல்லும் போது அவரின் உறவினர்களும் நண்பர்களும் அவரை விடுவிக்க கடுமையாக முயன்றும் முடியாது போயுள்ளது ஜகாரில் ஜஸீலை கடத்தி வேனில் கொண்டு செல்லும் செய்தியை அறிந்து கொண்ட அவரின் தாயின் சகோதரியும் அவரின் விரிவாக Read the rest of this entry »
முஸ்லிம் மீள் குடியேற்றம் தொடர்பான பொய்யான தகவல்கள்
யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தொடர்பாக தெரிவித்துள்ள செய்தியில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது சொந்த பிரதேசங்களில் தற்போது மீள் குடியேறி வருவதாகவும் இதுவரை 650 வரையான குடும்பங்கள் தம்மை யாழ்ப்பாணத்தில் பதிவு செய்துள்ளதாகவும் இருப்பினும் சிலர் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறத் தவறினால் அவர்களின் யாழ்ப்பாண பதிவுகள் ஏற்றுகொள்ளப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளதாக பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவாதாகவும் அதில் எந்த வித உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண முஸ்லிம்கள் தாம் விரும்பும் எந்த நேரமும் யாழ்ப்பாணம் வரலாம் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எந்த பாகுபாடும் இன்றி தான் செய்து கொடுக்க தயாராகவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க Read the rest of this entry »
308 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல்: அரசாங்கம் அறிவிப்பு
308 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படுமென அரசாங்கம் நேற்று அறிவித்தது. இது தொடர்பாக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சினால் நேற்று நள்ளிரவு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டிலுள்ள 330 உள்ளூ ராட்சி மன்றங்களில் 308 மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.
பதவிக்காலம் குறைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல்களை நடத்தும் பொருட்டும், அதன் செயற்பாடுகளை கண்காணிக்கும் வகையிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களுக்கு அமைய விரிவாக பார்க்க Read the rest of this entry »







