Lankamuslim.org

One World One Ummah

Archive for January 4th, 2011

பாராளுமன்றத்தில் உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம்

with one comment

உள்ளூராட்சி சபை தேர்தல் திருத்தச் சட்டமூம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா உள்ளூராட்சி சபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலம்  இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று  பிரதமர் தி. மு. ஜயரத்ன இரு தினங்களுக்கு முன்னர்   தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது

Written by lankamuslim

January 4, 2011 at 4:53 pm

மன்னார், புத்தளம் நோக்கி நல்லிணக்க ஆணைக்குழு

leave a comment »

கடந்த வருடம் மே மாதம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எதிர்வரும் 7ஆம் திகதி தொடக்கம் ,9ஆம் திகதி வரையான நாட்களில் புத்தளம் மற்றும் மன்னாருக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்ட செயலகத்திலும் 8ஆம் திகதி சனிக்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் நானாட்டான் மற்றும் சிலாவத்துறை மக்களுக்கான அமர்வு இடம்பெறவுள்ளது

8ஆம் சனிக்கிழமை திகதி மாலை மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்திலும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மடு உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்திலும் பொதுமக்களின் சாட்சியங்களை ஆணைக்குழு பதிவுசெய்யவுள்ளது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

January 4, 2011 at 9:26 am

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு மீண்டும் உறுப்பினர் பதவி !

leave a comment »

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், 19 ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரப்பூர்வமான நிரந்தரமில்லாத உறுப்பினராக இந்தியா, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது.

இந்தியாவின் இந்தப் பொறுப்பானது இரண்டு ஆண்டுகள்(2011-2012) வரை நீடிக்கும். இந்தப் பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவுடன் சேர்ந்து ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் நாடுகளும் பங்கேற்கின்றன. ஆங்கில எழுத்துகளின் அகர வரிசைப்படி ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நாடு பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பினை ஏற்றுச் செயல்படும் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

January 4, 2011 at 8:55 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,801 other followers