Lankamuslim.org

One World One Ummah

Archive for December 29th, 2010

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு மேலும் இரண்டு பிரதியமைச்சுகள் ?

with 3 comments

எதிர்வரும் ஜனவரி மாதம் மேலும் 8 பேர் பிரதியமைச்சர்கள் பதவியேற்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன இவர்களில் இரண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதியமைச்சர்களாகப் பதவியேற்பர் என்று தெரியவருகின்றது அந்த முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு பேர் யார் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் அரசுக்கு தெரிவிக்கவில்லை என்று தெரிவிக்கபடுகின்றது

எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி இந்த எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொள்வர் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

December 29, 2010 at 3:53 pm

இலங்கை பலஸ்தீனை சுதந்திர தனி நாடாக அங்கீகரிக்கும் ?

with one comment

இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களிடம் முஸ்லிம்கள் இழந்துள்ளன நிலம்

இலங்கை இஸ்ரேலையும் அங்கீகரிக்குமான ?: சுதந்திர பலஸ்தீனை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இன்றுவரை  அரசாங்கம் பாலஸ்தீனை கொள்கையளவிலேயே ஏற்றுக் கொண்டிருந்தது. இப்போது முழுமையான சுதந்திர நாடாக அங்கீகரிப்பதென அரசு முடிவு செய்துள்ளது.

பாலஸ்தீனுக்கான  இலங்கைத்தூதுவர் கலாநிதி திஸ்ஸ ஜயசிங்க இது தொடர்பாக கருத்துத்துரைகையில்  உலகின் பல நாடுகள் சுதந்திர பாலஸ்தீனை ஏற்றுக் கொண்டு அறிவித்திருக்கின்றன. இவ்வாறானதொரு நிலைமையில் மிக நீண்ட காலமாக பாலஸ்தீனுக்கு ஆதரவளித்து வரும் இலங்கையும் சுதந்திர பாலஸ்தீனை அங்கீகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

December 29, 2010 at 8:56 am

பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட பாதியரியார் மீது தாக்குதல்

leave a comment »

மன்னாரில் சிறுவர் இல்லமொன்றைச்சேர்ந்த சிறுமியர் சிலர் மீது பாலியல் குற்றம் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதிரியார் ஒருவர் மீது வவுனியா சிறைச்சாலைக் கைதிகள் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தெரிவிக்க படுகின்றது

பாலியல் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாதிரியாரை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்ற நீதவான் கே.ஜீவராணி உத்தரவிட்டார். அதன்பிரகாரம் வவுனியா சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வேளை அவரை ஏனைய கைதிகள் தாக்கியுள்ளனர் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

December 29, 2010 at 8:15 am

மலைநாட்டு முஸ்லிம்கள் மத்தியில் அதிகரிக்கும் சமுக சீர்கேடுகள் !!

with 4 comments

மலைநாட்டு முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவிலான சமுக சீர்கேடுகள் ஏற்பட்டுவருவதாக சமுகநலனில் அக்கறை கொண்ட ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் குறிப்பாக கண்டி, மாத்தளை புறநகர் பகுதிகளில் பல முஸ்லிம் பெண்கள் பெற்றோரின் விருப்புக்கு மாறன அந்நிய வாலிபர்களுடன் காதல் கொண்டுள்ளதாகவும் , இன்னும் பலர் அந்நிய யுவதிகளுடனும் வாலிபர்களுடன் பெற்றோரின் விருப்புக்கு மாறக வீட்டைவிட்டும் வெளியேறி சென்று திருமணம் முடிதுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

சில பாடசாலைகளில் மாணவிகள் சிலர் பாடசாலை வேளைகளில் பாடசாலையையும் பெற்றோரையும் ஏமாற்றிவிட்டு அந்நிய வாலிபர்களுடன் சுற்றித்திரிவதாகவும் தெரிவிக்கின்றனர் இந்த சம்பவங்கள் முஸ்லிம்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு, புத்தளம் போன்ற பிரதேசங்களில் ஒப்பீட்டளவில் இல்லை என்றும் இஸ்லாமிய அறிவு குறைந்த முஸ்லிம்கள் சிதறிவாழும் பகுதிகள் அவதனிக்கபடுவதாகவும் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

December 29, 2010 at 7:55 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,819 other followers