Archive for December 5th, 2010
உலகத் தமிழர் பேரவையையும் நெடியவனின் அமைப்பையும் அழிக்கவேண்டும்: றோகான்
ஜனாதிபதி மகிந்தாவின் பிரித்தானியா பயணம் தோல்வியடைந்ததற்கு நேர்த்தியா தொலைதொடர்பு முறைகள் இல்லாமை காரணம் என தெரிவித்துள்ள பேராசிரியர் றோகான் குணரட்னா, உலகத் தமிழர் பேரவையை அழிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்தாவின் பிரித்தானியா பயணம் தோல்வியடைந்ததற்கு சரியான தொலைதொடர்பு வசதிகளைப் பேணாததே முக்கிய காரணம். மேலும் இலங்கை அரசு வெளிநாடுகளில் தனது பிரச்சாரங்களை முனைப்பாக மேற்கொள்ள வேண்டும்.
நாம் முதலில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை உலகத் தமிழர் பேரவையை அழிக்க வேண்டும். இரண்டாவதாக நெடியவனின் அமைப்பை அழிக்கவேண்டும். மூன்றாவதாக அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் சிறீலங்கா அரசு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். என்று தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது விரிவாக பார்க்க Read the rest of this entry »
பசியால வாகன விபத்தில் இருவர் வபாத்
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் பசியால வீதியின் மாவனல்ல சந்தியில் இருவர் வபாதத்கியுள்ளதாக தெரியவருகின்றது ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் வபாத்தான இருவரும் பசியாலையை சேர்ந்த ஒரு குடும்ப உறவினர்கள் என்று அறியமுடிகின்றது.
இந்த விபத்தில் காயமடைந்த ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டியில் இருந்தவர்களே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது முச்சக்கர வண்டி வீதியின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சமயம் கார் சாரதியின் தவறின் காரணமாகவே இந்த விபத்தது ஏற்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்
கட்டுகஸ்தோட்டையில் வீட்டின் மேல் மண்மேடு விழுந்துள்ளது ஒருவர் பெண் வபாத்
கண்டி கட்டுகஸ்தோட்டை இனிகலை என்ற பகுதியில் வீடு ஒன்றின் மீது மண் கலந்த கற்பாறை விழுந்ததனால் 72 வயதுப் பெண் ஒருவர் உயிரிந்துள்ளார். வபாத்தானவர் அப்துல் மஜீட் தாகிர் உம்மா என்ற வயோதிப பெண்
இன்று அதிகாலை 2.00 மணியளவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின்மீது மண் , கற்பாறை கொண்ட மண்மேடு விழுந்துள்ளது. இதன்போது அவர் வபாத்தாகியுள்ளார் விரிவாக Read the rest of this entry »
ஈரானில் தொடரும் அணுவாயுத விஞ்ஞானிகள் படுகொலை
M.ரிஸ்னி முஹம்மட்:கடந்த நவம்பர் 29 ஆம் திகதி காலையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ஈரானிய அணுசக்தித்துறை முக்கிய விஞ்ஞானி டாக்டர் மாஜித் ஸஹ்ரீரி படுகொலை செய்யப்பட்டார் மற்றொரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் மற்றுமொரு முக்கிய அணுவாயுத விஞ்ஞானியும் பல்கலை கழக முதுநிலை பேராசிரியருமான கலாநிதி பரிதூன் அப்பாஸி படுகாயமடைந்தார்.
அதேவளை கடந்த -12.01.2010- அன்று அணுவாயுத விஞ்ஞானியும் பல்கலை கழக முதுநிலை பேராசிரியருமான மசூத் முஹம்மதி குண்டு வெடிப்பொன்றில் படுகொலைசெய்யப்ட்டார் இந்த கொலைகளுக்கு அமெரிக்காதான் காரணம் என்று ஈரான் தெரிவித்திருந்தது என்பதும் குறிபிடத்தக்கது விரிவாக பார்க்க
முஸ்லிம் வர்த்தகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மட்டக்களப்பு மாநகர சபை கடைகள் குத்தகை
கௌரவ மாநகர முதல்வர்
மாநகர சபை
மட்டக்களப்பு
அம்மணி
மாநகர சபை கடைகள் குத்தகை
மட்டக்களப்பு மாநகர சபைக்குச் சொந்தமான கடைகளை குத்தகைக்கு வழங்கும் விடயத்தில் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக கடைகளை குத்தகையில் பெறுவதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் மட்டக்களப்பு மாநகர சபையின் எல்லைக்குல் வசிப்பவராகவும், அதனை உறுதிப்படுத்துவதற்கு பிரித்தெடுக்கப்பட்ட வாக்காளர் இடாப்பு, மற்றும் கிராம உத்தியோகத்தரின் வதிவிடச் சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்கள் இணைத்து குத்தகை விண்ணப்பம் செய்யப்பட வேண்டும் என குத்தகைக் கேள்வி அறிவித்தலில் குறிபிடப்பட்டுள்ளது விரிவாக பார்க்க Read the rest of this entry »








