ஆணைக்குழுவின் கால எல்லையில் மாற்றமில்லை ஆனாலும் ரவூப் ஹக்கீம் சாட்சியமளிப்பார் ?
2002ஆம் ஆண்டு முதல் 2009 ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவங்களை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வினால் நியமிக்கபட்ட . கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சாட்சியமளிப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது
முன்னர் குழுவின் விசாரணைக்காக விதிக்கப்பட்டுள்ள கால எல்லையினை கருத்திற் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியை வெளியிட்டதுடன் அதன் முன் சாட்சியமளிப் போவதில்லை என அறிவித்தது இந்த கால எல்லையை மேலும் விரிவாக்கி இலங்கை முஸ்லிம்களின் பாதிப்புகள் பதிவு செய்யப்படவேண்டும் என்றும் தெரிவித்ததுடன் விரிவாக பார்க்க இலங்கை முஸ்லிம்களின் அவலங்களை பதிவு செய்யவதற்கு ஜனாதிபதி தனியான ஆணைக் குழுவொன்றை அமைக்கவேண்டும் என்றும் கோரியது அரசு தரப்பிலிருந்து எந்த பதிலும் சாதகமாக கிடைத்ததாக தெரியவில்லை இருந்தபோதும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கபோவதாக அறிவித்துள்ளது
இந்த ஆணைக்குழு எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம்கள் என்றுமில்லாத அளவிற்கு நெருக்கடிகளை அனுபவித்தார்கள். உயிர்களையும், உடமைகளையும் இழந்து அகதி முகாம்களில் அடைக்கலம் தேடினார்கள் என்ற போதிலும் கற்றுக் கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழு விடயத்தில் முஸ்லிம் அரசியற் தலைமைகளும், அரசியற் கட்சிகளும், அமைப்புக்களும் மேலதிக கவனத்தைச் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டுள்ளது







