முஸ்லிம்களின் கையை விட்டு போகும் புத்தளம் கற்பிட்டி:ஆப்தீன் யஹ்யா
கற்பிட்டி பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்கள் காலக்கிரமத்தில் சிறுபான்மையாக மாறுவதற்க்கு அதிக வாய்புகள் காணப்படுவதாக வடமேல் மாகாண சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆப்தீன் யஹ்யா எச்சரிக்கை விடுத்தார்
கற்பிட்டி பிரதேசத்தை சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் அபிவிருத்தி செய்ய மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக சுற்றுலாத் துறைக்கென பல்லாயிக்கணக்கான ஏக்கர் நிலங்களை அரசு சுவீகரித்து வருவதன் மூலம் இது தத்துரூபமாக தென்படுவதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறு சுவீகரிக்கப்படும் நிலங்களில் பெரும்பான்மை இன சிங்களவர்களை திட்டமிட்ட அடிபடையில் குடியமர்த்தவும் முனைப்புகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார் இந்த நிலை ஏற்பட்டால் கற்பிட்டி பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக அமைத்து விடுமோ என்ற அச்சம் குடிகொண்டிருபதாகவும் அவர் சுட்டிக்காட்டு கின்றார் இது தொடர்பாக எமது lankamuslim.org இணையத் தளத்துக்கு சற்று முன்னர் அவர் செவ்வி ஒன்றை வழங்கினார் விரிவாக பார்க்க
இந்த பிரதேசத்தில் பூர்விகமாக வாழும் முஸ்லிம்களின் எதிர்கால சந்ததிக்கு ஓர் அங்குலம் நிலமாவது மிஞ்சுமா ? என்ற வினா எழுந்துள்ளதாகவும் , மறுபுறத்தில் சுற்றுலாத் துறை வளர்சிகாணும் பட்சத்தில் படுமோசமான கலாசார ஒழுக்க சீர்கேடுகள் தலைவிரித்தாட வாய்ப்புள்ளது என்றும் தெரித்தார்.
கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் 58 வீதம் முஸ்லிம்கள் ,29வீதம் சிங்களவர் 13 வீதம் தமிழர்கள் உள்ளனர் இதை சரியாக தொடர்ந்து பேண வேண்டயிருக்கின்றது அப்போதுதான் எதிர்காலத்தில் இடம் பெறப்போகும் தேர்தல் முறைமாற்றம் என்பன வற்றின் மூலம் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவத்தையும் அரசியல் உரிமைகளையும் உரிய முறையில் உத்தரவாதப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்
தற்போது இங்கு சுற்றுலாத் துறைக்கு சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சுவீகரிக்கப் பட்டுள்ளன மேலும் ,5000 அறைகள் கொண்ட ஹோட்டல்களும் நிர்மாணிக்க பட்டு வருகின்றன பெரும்பான்மை இன தொழிலதிபர்கள் இங்கு ஒரு ஏக்கர் நிலத்தை 25லட்சம் ரூபா கொடுத்து கொள்வனவு செய்து வருகின்றனர் கிழமைக்கு இரண்டு தடவைகள் வரும் சொப்பர்கள்- ஹெலிகொப்டர்கள் -இங்கு காணப்படும் காணிகளை விலைக்கு வாங்கும் வேலைகளை செய்து வருகின்றது இது தொடர்ந்தால் இங்குள்ள சிறுபான்மையான மக்களுக்கு எந்த காணியும் மிஞ்சாது என்றும் இந்த பிரதேச காணிகளை பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர் – அவரின் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது -ஒருவரின் உதவியுடன் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள படுவதாகவும் இது தவிர பாதுகாப்பு தேவைகள் எனும் ரீதியில் நிலங்கள் சுவீகரிக்கப்படுகின்றன என்றும் வடமேல் மாகாண சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆப்தீன் யஹ்யா தெரிவித்தார்.
மேலும்இது சம்பந்தமாக சிறுபான்மை மக்களை ஒன்று திரட்டி ஆர்பாட்டம் மற்றும் சத்தியாகிரகம் ஒன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்









