ரிஸானா நபீகின் மரண தண்டனை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது !!
2005 ஆம் ஆண்டில் இலங்கை வீட்டுப்பணிப் பெண் ஒருவர் சவூதியில் சிசுவினை கொலை செய்தார் என்பதனை விசாரணையின் பின் ரியாத் உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது என அறப் நியூஸ் தெரிவித்துள்ளது
ரிஸானா நபீக் என அழைக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப்பணிப் பெண், தனது சவுதி எஜமானின் 4 மாத குழந்தையை கொலை செய்தார் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அப்துல்லா அல் ரொசாமி தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது. ரிஸானாவுற்கு வேலை வழங்குனரின் மனைவி அவரது குழந்தைக்கு பால் வழங்குமாறு குழந்தையை வழங்கியுள்ளார் இதன் பின்னரே அவர் குழந்தையை கொன்றுள்ளார் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது விரிவாக பார்க்க
குழந்தையொன்றை கொலை செய்தாரென்ற குற்றச்சாட்டின் பேரில் 2005 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி ரிஸானா நபீக் சவூதி அரேபியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தவாத்மி மேல் நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரிஸானா நபீக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
இதன் பின்னர் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஹொங்கொங்கை தலைமையகமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிதி உதவியுடன் ரிஸானா நபீக் சார்பாக சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்திருந்தது.
இதன் பிரகாரமே ரிஸானா நபீக் மீதான தவாத்மி மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ரியாத்திலுள்ள உயர் நீதிச் சபையில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேன்முறையீடு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பப்பட்டது







