பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களின் தொகை வீழ்ச்சிகாரணம் அதன் கடினமான போக்கு
பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களின் தொகை வீழ்ச்சியடைந்து வருவதற்குக் காரணம் அதன் கடினமான போக்காகும். பௌத்தம் உலகில் முதலிடத்திலிருந்து இன்று நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டதாகவும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்கா தெரிவித்துள்ளார்
உலகில் ஐந்தாவது மிகப்பெரிய சனத்தொகையுடைய நாடான இந்தோனேசியா ஒரு பௌத்த நாடு. ஆனால் அவர்களுடைய தொழில் மீன்பிடிப்பது. பௌத்த மதத்துக்கும் மீன்பிடித் தொழிலுக்கும் இடையே முரண்பாடுகள் காணப்படுவதனால் இன்று முழு இந்தோனேசியாவும் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்ட ஒரு நாடாகி விட்டது விரிவாக பார்க்க
மாலைதீவும் அப்படியே மதம் மாறிய ஒரு நாடாகும். உலகிலுள்ள 190 கோடி மக்கள் கிறிஸ்தவர்களாவர். 120 கோடி பேர் முஸ்லிம்களும் 90 கோடிப் பேர் இந்துக்களுமாவர். ஆனாலும் பௌத்த மக்கள் 35 கோடியினரே உளர்” என்றும் அமைச்சர் கூறினார். கண்டி பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்







