Archive for October 20th, 2010
சிதறிக் கிடக்கும் புலிகளை ஒன்றிணைக்க முயற்சி:பிரதமர்
தலைமைத்துவமின்றி மறைந்து இருக்கும் புலனாய்வு மற்றும் ஆயுதப் பிரிவு புலி உறுப்பினர்களை பலப்படுத்த வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஒத்துழைப்புடன் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது என்று பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் எஸ். எம். எஸ். குறுந்தகவலினூடாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. புலிகளுக்கு சார்பாக வெப் தளங்களினூடாகவும் சிதறியுள்ள புலிகளை ஒன்றிணைக்க முயற்சி செய்யப்படுகிறது- நோர்வேயில் உள்ள நெடியவனும் அமெரிக்காவில் உள்ள வி. ருத்ரகுமாரனும் விரிவாக பார்க்க Read the rest of this entry »
ஜனாதிபதி சீனா செல்கின்றார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 30 ஆம் திகதி சீனா செல்லவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிகின்றன சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச கண்காட்சி ஒன்றில் கலந்து கொள்ள வதற் காகவே ஜனாதிபதி சீனா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த புதன் கிழமை பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள இந்திய சென்றமை குறிபிடத்தக்கது
சீனாவின் இராணுவ கட்டமைப்புகளை நாம் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்
புதுடில்லி:இந்திய இராணுவத் தளபதி: இந்தியாவின் பாதுகாப்புக்கு பாகிஸ்தானும் சீனாவும் மிகப்பெரிய தொல்லையாக இருக்கின்றன என்று இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் கூறினார். இந்திய இராணுவம் பங்கும் பணியும் என்ற கருத்தரங்கை டில்லியில் சனிக்கிழமை தொடக்கி வைத்து வி.கே.சிங் பேசியதாவது;
இந்தியாவுக்கு இரண்டு பெரிய தொல்லைகள் இருக்கின்றன. பாகிஸ்தானில் ஆட்சி நடத்துவதில் பிரச்சினை இருக்கிறது. அங்குள்ள உள்நாட்டு நிலைவரம் நன்றாக இல்லை. ஆனால் தீவிரவாத அமைப்புகள் இப்போதும் கட்டுக்கோப்பாக இருக்கின்றன. இது நமக்கு கவலை அளிக்கிறது.
பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் சீனாவும் இந்தியாவுக்கு கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. அந்த நாட்டின் உடனான எல்லைகள் ஸ்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருந்தாலும் எல்லைப் பிரச்சினை நீடிக்கிறது. இந்தச் சவால்கள் எல்லாம் சமாளிக்கும் வகையில் விரிவாக பார்க்க Read the rest of this entry »
2010 க்கான பாதுகாப்பு செலவுக்காக 21521 கோடியே 96 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் 2011ஆம் ஆண்டுக்கான மொத்த செலவினமாக 108, 096 கோடியே 77 இலட் சத்து 66 ஆயிரம் ரூபாவை மதிப்பிட்டுள்ளது. இதில் 21521 கோடியே 96 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை பாதுகாப்பு செலவினத்திற்கென ஒதுக்கியுள்ளது.
2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அரசாங்கத்தின் மொத்த செலவினம் 10,618 கோடியே 93 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாவினாலும் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினம் 1,300 கோடியே 21 இலட்சத்து 60 ஆயரம் ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று 2011ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பிரதமர் தி.மு. ஜயரத்ன அவைக்கு சமர்ப்பித்துள்ளார் .







