Lankamuslim.org

One World One Ummah

Archive for October 2010

அக்குறணை நகரில் கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

leave a comment »

இணைப்பு 2

அக்குறணை நகரில் சட்ட விரோத கட்டிடங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட நிர்மாணங்களை உடைத்து அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது என்று எமது தெரிவிக்கின்றார் தற்போது இந்த நடவடிக்கை மீண்டும் மேற் கொள்ள நகரை அண்மித்துப் பாயும் ‘பிங்காஒயா’ என்று அழைக்கப்படும் ஆறு பெருக்கெடுப்பதே காரணம் எனவும் அது பெருக்கெடுப்பதற்கு சட்ட விரோத கட்டிடங்களே காரணம் என்றும் இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது

சுற்றாடத்துறை பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா எடுத்த முயற்சியின் பலனாக பொது மக்களுக்கு குறைந்த நஷ்டங்கள் உண்டாகும் விதத்தில் கட்டிடங்களை உடைப்பதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 31, 2010 at 6:59 pm

தமிழ் முஸ்லிம் உறவு பற்றி லண்டனில் கலந்துரையாடல்

leave a comment »

Sri Lanka Democracy Forum (SLDF) மற்றும் The Sri Lanka Islamic Forum‐UK (SLIF‐UK) ஆகிய லண்டனில் இயங்கும் அமைப்புகள் இணைந்து ‘வடமாகாண முஸ்லிம் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 20 ஆண்டுகளின் பின்னர் தமிழ் முஸ்லிம் உறவு’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதன் பிரதான பேச்சாளராக இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் தலைவர் ஹஜ்ஜுள் அக்கபர் மற்றும் பேச்சாளர்களாக ரிசா எஹிய, ராஜேஷ்குமார் ,ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் இந்த கலந்துரையாடல் நஜா முஹமட் தலைமையில் நடைபெற்றுள்ளது என்று எமது லண்டன் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் எனினும் வடமாகாண முஸ்லிகள் தொடர்பான இந்த நிகழ்வில் வடமாகான முஸ்லிம்கள் பிரதான எந்த பாத்திரத்தையும் வகிக்க வில்லை என்று விமர்சிக்க பட்டதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்

சமாதானம, புரிந்துணர்வு, பொருளாதார மேம்பாடு, அரசியல் தீர்வு ஆகியவற்றை முன்னெடுக்க சமூகங்களிடையே சிதைந்துபோன சமூக உறவுகளை கட்டியெழுப்பல் அவசியம். இலங்கையை இன்று எதிர்கொள்ளும் ஜனநாயகம, நீதி, சிறுபான்மை மக்களின் உரிமைகள் போன்ற அடிப்படை அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்ள இனங்களுக்கான உறவுகள் கட்டியெழுப்பப்படுவது அவசியம் என்ற எண்ணக் கருவை சுமந்ததாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது

Written by lankamuslim

October 31, 2010 at 12:23 pm

அவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்?

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்- பாகம் நான்கு

கிழக்கு மாகாணத்திலே தமிழர் இயக்கங்கள் முளைவிட்டு கிளைவிட்டு வளர்ந்த காலங்களில் அரசியல் செய்து கட்சி உருவாக்கிய அஸ்ரப் தான் உருவாக்கிய கட்சியை ஒரு இயக்கம் என்று குறிப்பிடவில்லை ,”இயக்கம்” என்ற சொல்லே அவருக்கு அலேர்ஜியாக (Allergy) இருந்தது. ஆனால் ஹக்கீமுக்கு தனது கட்சியை இயக்கம் என்று சொல்லி உணர்வு வலுச்சேர்ப்பதில் ஒரு அலாதி பிரியம் இருந்து வருகிறது. அடிக்கடி தாம் ஒரு இயக்கத்தின் தலைவர் என்று முஸ்லிம் காங்கிரசை குறிப்பிட்டுள்ளார். (இலங்கையில் தமிழர் இயக்கங்களை விடுவோம் மாறாக இயக்கத்தலைவர் என்ற வகையில் பாலஸ்தீன ஹமாஸ் அல்பாதா இயக்கம் ஞாபகத்துக்கு வந்தால் மன்னிக்கவும்)

“முஸ்லிம் சமுதாயத்தின் தன்மானத்திற்கு ஆப்பு வைத்த இந்த நபர்கள் இவ்வளவு காலமும் முஸ்லிம் சமுதாயத்துக்கு செய்ய முடியாது போனவற்றை தற்போது ஆட்டம் கண்டுள்ள அரசியல் சூழ் நிலையில் எவ்வாறு `சாதிக்க’ப் போகின்றார்கள்? Read the rest of this entry »

Written by lankamuslim

October 31, 2010 at 12:02 pm

சுற்றுல்லா பயணிகள் போர்வையில் தங்கியிருந்த 200 பேர் கைது

leave a comment »

சுற்றுல்லா பயணிகள் என்ற போர்வையில் விஸாபெற்று இலங்கைக்குள் பிரவேசித்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்து 200 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசேட அறிவுறுத்தலின் பேரில் விசேட குழுவொன்று நாடு முழுவதும் சோதனை மேற்கொண் டது.

இந்தியாவில் இருந்து வந்து வடக்கு கிழக்கில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 74 பேரையும் இந்த விசேட குழு கைது செய்துள்ளது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 31, 2010 at 10:26 am

கடத்தப்பட்டுள்ள ராசிக் தொடர்பாக புத்தளம் ஜம்இய்யதுல் உலமா

leave a comment »

புத்தளம் பெரிய பள்ளிவாசல் Grand Mosque மற்றும்  புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆகியவற்றுடன் இன்னும் பல அமைப்புகள் இணைந்து CTF என்ற நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான P.ராசிக் கடத்த பட்டுள்ளமை தொடர்பாக புத்தளம் வாழ் மக்களை அவரை மீட்டெடுக்க ஒன்றிணையுமாறு கோரும் துண்டுப் பிரசுரம் ஒன்று நேற்று புத்தளத்தில் விநியோகிக்க பட்டுள்ளது      அந்த   துண்டு பிரசுரம் இங்கு முழுமையாக இணைக்கப்படுகின்றது

கடத்தப்பட்டுள்ள சமூகநல ஆர்வலர் P.ராசிக் அவர்களை மீட்டெடுக்க ஒன்றிணைவோம்! -அன்புள்ள பொதுமக்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.
நாங்கள் முஸ்லிம்கள். சர்வ சக்தனான அல்லாஹ்வையும், அவனது இறுதித் தூதரையும், மறுமை நாளையும் ஆழமாக விசுவாசித்திருப்பவர்கள். இஸ்லாம் கற்றுத் தந்த விழுமியங்களை, பண்பாடுகளை, கலாச்சாரப் பாரம்பரியங்களை, மனிதநேய மாண்புகளை முடிந்த அளவு ஏற்று, விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 30, 2010 at 8:12 pm

நவம்பரில் வரவுசெலவுத் திட்டம் சிகரெட், சாராய விலை அதிகரிப்பு

leave a comment »

வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், பணப்பற்றாக்குறையை எதிர்நோக்கியிருக்கும் திறைசேரியின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் முயற்சியாக சிகரெட், மதுபானத்திற்கான வரிகளை அரசாங்கம் அதிகரித்திருக்கிறது. சிகரெட்டுக்கான வரி ஒரு ரூபாவாகவும் 100 சதவீத மதுசார செறிவுள்ள மதுபானங்கள் லீற்றர் 50 ரூபாவாலும் வியாழன் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் வடிசாராயத்தின் சில்லறை விற்பனை விலை போத்தல் 25 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சின் நிதிக்கொள்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் எஸ்.ஆர். ஆட்டிகலவை மேற்கோள்காட்டி லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் இதனைத் தெரிவித்திருக்கிறது. இந்த வரி அதிகரிப்பின் மூலம் இந்த வருடத்துக்கான மேலதிக வரி வருவாய் 400450 மில்லியன் ரூபாவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுவதாக ஆட்டிகல கூறியுள்ளார் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 30, 2010 at 1:42 pm

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பெயர் மாற்றுகின்றதாம் !

leave a comment »

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பெயர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என மாற்றப்படவுள்ளதாம் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள சகல இன மக்களையும் உள்வாங்கும் நோக்கிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என பெயர் மாற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்துள்ளார் .

இதன் பிரதான தளமாக வன்னியே உள்ளது எனினும் இடம் பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லிம்களின் வாக்கு வங்கியில் இந்த கட்சி தங்கியுள்ள நிலையில் இடம் பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லிம் களில் பெரும் பாலானவர்கள் புத்தளத்தை தமது நிரந்தரமான வாழ்விடமாக பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள படும் இந்த வேளையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை பலப்படுத்தும் நோக்குடன் இந்த பெயர் மாற்றத்தை செய்யவுள்ளது என்று எமது புத்தளம் செய்தியாளர் தெரிவிக்கின்றார் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 29, 2010 at 10:27 pm

ஜனாதிபதி மஹிந்த சீனா பயணம்

leave a comment »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சீனாவுக்கு இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஷங்காயில் நடைபெறவுள்ள 2010 ஆம் ஆண்டுக்கான எக்ஸ்போ கண்காட்சியில் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார். ஆயிரம் பார்வையாளர்கள் பங்குபற்றும் இக் கண்காட்சியில் உலக நாடுகளின் இருபது தலைவர்கள் இதில் பங்கு கொள்ளவுள்ளனர். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி சீனத் தலைவரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

Written by lankamuslim

October 29, 2010 at 9:55 pm

சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமையை பாதுகாக்கவே நீதிமன்றத்தை நாடினோம்

leave a comment »

விகிதாசார பிரதிநிதித்துவ அரசியல் முறையில் கைவைக்கும் உத்தேச உள்ளூராட்சி திருத்த சட்ட மூலமானது இரு பெரும் கட்சிகள் மாத்திரம் தங்களுக்கிடையில் ஆசனங்களைப் பகிர்ந்து கொள்ளவே வழிவகுப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது அதனைத் தடுத்து நிறுத்தி சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கிலேயே நீதிமன்றத்தை நாட வேண்டி ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

உத்தேச உள்ளுராட்சி திருத்த சட்ட மூலத்தை எதிர்த்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 29, 2010 at 9:43 pm

யாழ்ப்பாணத்தில் 20 வரையான இந்திய பிரஜைகள் கைது

leave a comment »

யாழ்.நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்த வியாபாரிகள் என்று தெரிவிக்கபடும் இருபது வரையான இந்திய பிரஜைகள் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் என்று தெரிவிக்க படும் நபர்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது நேற்று அதிகாலை 4.30மணிக்கு வெள்ளை வானில் சிவில் உடையில் வந்த குழுவினர் யாழ்.நகர் விடுதிகளில் தங்கியிருந்த 20 இற்கும் மேற்பட்ட இந்திய பிரச்சைகளை கடவுச் சீட்டுகளை பறிமுதல் செய்ததுடன் அவர்களையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

Written by lankamuslim

October 28, 2010 at 6:08 pm

கிழக்கு மாகாணத்தில் சீன உளவாளிகள் ஊடுரிவியுள்ளனர். ரிஎம்விபி

leave a comment »

கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் சீன நிறுவனங்களும் பங்கெடுத்துள்ளது. இவ்வாறன நிறுவனங்களின் ஊழியர்களாக உள்ள சீனப்பிரஜைகளில் சீனா வின் முக்கிய உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்தினுள் ஊடுருவி உள்ளமை தெரியவந்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் கைலேஸ்வரராஜா லக்பிம விற்கு தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்குரிய சீனப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்பான தகுந்த சாட்சியங்கள் தம்மிடமுள்ளதாக குறிப்பிட்டுள்ள கைலேஸ்வரராஜா , புலனாய்வாளர்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு தமது உறுப்பினர்களுக்கு பணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன

Written by lankamuslim

October 28, 2010 at 6:00 pm

இலங்கை பணியாளர்களுக்கு இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு !!

leave a comment »

“The Palestinians are very bad, they kill innocent people, including the Chinese,” said one worker on the bus. “The Israelis are fighting because they have to stop the terror,”

இலங்கை பணியாளர்களுக்கு இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இலங்கையர் குழு இன்று இஸ்ரேல் பயணமாவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி 300 இலங்கையர்கள் விவசாயத் துறை சார்ந்த தொழில்களுக்கு இஸ்ரேலுக்கு அனுப்பப்படுகின்றனர். இவர்களுக்கு வீஸா வழங்கும் வைபவம் நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்றுள்ளது .

6 மாதகால ஒப்பந்த அடிப்படையில் இலங்கையர் குழு அங்கு தொழில்பெற்றுச் செல்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கை பணியாளர்களுக்கு இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இஸ்ரேலில் தொழில் செய்வதற்கு ஏற்றவாறு இவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறியுள்ளார் ஆனால் இவர்களின் எந்த பகுதிகளின் வேலைக்கு அமர்த்தப் படுவர் மற்றும் இவர்களின் பாதுகாப்பு பற்றி எதுவும் வெளியாகவில்லை விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 28, 2010 at 12:06 pm

உள்ளூராட்சி சட்டமூலங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள்

leave a comment »

சிறுபான்மை அரசியல் மட்டங்களில் பெரிது விவாதிக்கப்படும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் விசேட திருத்தச் சட்ட மூலம் ஆகிய உத்தேச சட்டமூலங்களுக்கு எதிராக நேற்று உயர் நீதிமன்றத்தில் மூன்று மனுக் கள் தாக்கல் செய்யப்டுள்ளது இதில் உள்ளூர் அதிகார சபைகள் விசேட திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக காத்தான் குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் தாக்கல் செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன<!–more–>

இலங்கை தமிழரசு கட்சி இரண்டு மனுக்களையும் தாக்கல் செய்துள்ளது இதல் மேற்கண்ட சட்ட மூலங்களை வடமாகாண சபையின் அங்கீகாரம் இன்றி பாராளுமன்றம் நிறைவேற்றமுடியாது என்று தீர்ப்பு கோரும் மனுவும் உள்ளடங்கும் இந்த மனு மீதான தீர்ப்பு சாதகமாக கிடைக்கும் நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் விசேட திருத்தச் சட்ட மூலம் வடமாகாண சபையில் வாக்கெடுப்புக்கு விடப்படும் நிலை தவிர்க்க முடியாத சர்தாக மாறும் இது சிறுபான்மை நலன் பேன போதுமானதாக அமையும் என்றும் கருதப்படுகின்றது

காத்தான் குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் தாக்கல் செய்த மனுவில் குறித்த திருத்தச் சட்டமூலம் சிறிய கட்சிகள், சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு பதிப்புகளை ஏற்படுத்துவதாகவும், இது அரசியலமைப்பின் சில சரத்துகளுக்கு முரண்படுவதால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றே இது நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், எல்லை மீள்நிர்ணயக் குழுவினை அமைப்பது தொடர்பில் அமைச்சருக்கு கூடியளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமையும் இந்த சட்ட மூலத்தில் தெளிவில்லாத சர்துகள் இருப்பதும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது .

Written by lankamuslim

October 28, 2010 at 10:27 am

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் இருபது வருடங்கள் பூர்த்தி ??

leave a comment »

றிஸ்வி ஷரிப்

என்ற தலைப்புடன் ஒரு பத்திரிகை தலைப்பு செய்தி தீட்டியுள்ளது அதில் இன்று என்பது எந்தளவு பெருந்தும் ? என்பதுதான் கேள்வி   வடக்கிலிருந்து முஸ்லிம்கள் ஒரு தினத்தில் வெளியற்றப்  படவில்லை வடக்கிலுள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள முஸ்லிம்கள் மிகவும் திட்ட மிட்ட  முறையில் கட்டம் கட்டமாக வெளியற்றப் பட்டனர்.

உதாரணமாக  யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் மாவட்ட முஸ்லிம்கள் முழுவதுமாக ஒரு குறித்த தினத்தில் வெளியற்றப்  படவில்லை சாவகச்சேரி முஸ்லிம்கள் 1990 ஒக்டோபர் 16ம் திகதியும் யாழ்ப்பாண முஸ்லிம்கள்  1990 ஒக்டோபர் 30ம் திகதியும் வெளியற்றப் பட்டனர் என்பன மிகவும் தெளிவாக பதிவாகியுள்ளன அதேபோன்று மன்னார் மாவட்ட முஸ்லிம்களும் தலைமன்னார் ,மன்னார் , எருக்கலம்பிட்டி பிரதேச முஸ்லிம்கள் கட்டம் கட்டமாக வெளியேற்றபட்டனர் 1990 ஒக்டோபர் 23ஆம் திகதி மறிச்சுக்கட்டி முஸ்லிம்கள் வெளியேற்றத்துடன் தொடங்கப்பட்ட மன்னார் மாவட்ட முஸ்லிம் வெளியேற்றம்  ஒக்டோபர் 28ஆம் திகதி வரை கட்டம் கட்டமாக நீடித்தது அதேபோன்று  முல்லைத்தீவு, வவுனியா , கிளிநொச்சி  முஸ்லிம்கள் கட்டம் கட்டமாக  1990 ஒக்டோபர் மாதம் இறுதி அரைப்பகுதி முழுவதும் வெளியேற்றபட்டனர்

எனவே அந்த குறித்த பத்திரிகை ‘ வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் இருபது வருடங்கள் பூர்த்தி’ ?? என்று ஒரு நாளை மையமாக கொண்டு தலைப்பு தீட்டியது தவறாகும் வடமாகாணத்தின் முஸ்லிம் பலவந்த வெளியேற்றத்தை குறிக்கும் கருப்பு ஒக்டோபர் என்ற பிரயோகம் மிகவு பொருத்தமானதாகும் இந்த வகையில் லங்காமுஸ்லிம் -Lankamulim.org-  இணைத்தளம் பயன்படுத்தும் ‘கருப்பு ஒக்டோபர்’ என்ற பதம் மிகவும் பொருத்தமாது என்பது எனது நிலைப்பாடு

Written by lankamuslim

October 28, 2010 at 10:17 am

மஸ்ஜிதுகளுக்கு அண்மையிலுள்ள படை முகாம்கள் அகற்றப்படும்

leave a comment »

திருகோணமலை மாவட்டத்தில் பள்ளிவாசல்களுக்கு அண்மையில் இருக்கும் பாதுகாப்பு படையின ரின் முகாம்கள் விரைவில் வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று தெரிவித்தார். கடந்த 30 வருட காலமாக வடக்கு, கிழக் கில் நிலவிய பயங்கரவாதத்தை ஜனாதிபதியின் சிறந்த வழிகாட்ட லின் மூலமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் அமைதி நிலவுகிறது. அதனால்தான் நானும் இப்பிரதே சத்திற்கு வந்து உங்களது கஷ்டங்க ளையும் குறைகளையும் கேட்டறி கின்றேன் என்றும் பிரதமர் கூறினார். கிண்ணியா பெரியபள்ளி வாசலில் திருகோணமலை மாவ ட்ட உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்க ளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 27, 2010 at 9:48 am

குற்றமும் தண்டனையும் மனிதமும் !

leave a comment »

S.M.அப்துல்லாஹ்

ரிஸானாவும் ஒரு மனித உயிர் அதே போல் மரணித்த அல்லது கொல்லப்பட குழந்தையும் ஒரு உயிர் இங்கு யார் நீதியை எப்படி நிலைநாட்டுவது என்பதுதான் பிரச்சினை இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தில் வேண்டுமென்றே கொலை செய்த ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்றது. களவு செய்தவருக்கு கை வெட்டப்படுகின்றது. விபச்சாரத்தில் ஈடுபட்ட வர்களுக்கு ஒரு கூட்டம் பார்த்தி ருக்க கசையடி வழங்கப்படுகின்றது. இவற்றை அல்குர்ஆன் நேரடியாகவே குறிப்பிட்டுள்ளதை காணலாம்.

இஸ்லாமிய குற்றவியல் சட்டம் ஒருவரின் உயிரை போக்குவதற்கு தகுந்த செயலைச் செய்து கொலை செய்யும் நோக்கத்துடன் கொலை செய்தால் அதைக் கொலைக்குற்றம் என்று குறிப்பிடுகிறது கொலை செய்தால் கொலை காரர் கொல்லப்படமுடியும் அல்லது கொல்லப்பட்டவரின் இரத்த உறவினர் நினைத்தால் ஒரு தொகையை பெற்றுகொண்டு மன்னிக்க முடியும் என்று கூறுகின்றது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 26, 2010 at 9:32 pm

வடமாகாண முஸ்லிம்களும் 20வது கருப்பு ஒக்டோபரும்

with one comment

முஹம்மது சரீபு

1990 ஒக்டோபர்  மாதம் 18ம் திகதியிலிருந்து 30ம் திகதிக்கிடைப்பட்ட காலப்பகுதியில் வடமாகாணத்தின் முக்கிய மாவட்டங்களான யாழ்ப்பாணம் மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் வவுனியா பிரதேசத்தை சோர்ந்த அப்போதைய கணக்கின்படி 85000க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் பாசிஸ புலிகளால் வெளியேற்றப்பட்டனர். இது இலங்கை முஸ்லிம்களின் முதல் இடம்பெயர்வல்ல. இதற்கு முன்பும் 10ம் நூற்றாண்டில் கீரிமலை பகுதிக்குள் நுழைந்த துலுக்கர் மொழி பேசும் முஸ்லிம்கள் தீட்டை ஏற்படுத்தி விட்டார்கள் எனக்கூறப்பட்டு பொலநறுவையை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிசெய்த இந்நிய அரசன் ராஜசோளனின் பணிப்பின் பேரில் வெளியேற்றப்பட்டார்கள்.

13ம் நூற்றாண்டில் மாதகல் தொடக்கம் நவாலி வரை வாழ்ந்த முஸ்லிம்கள் இடம்பெயர்ந்தார்கள் அல்லது இறந்துவிட்டார்கள் என சொல்லப்படுகிறது. இதன் பிறகு 1470களில் கனகசு+ரிய சிங்கையாரியனால் ஜாவகர் வழிவந்த முஸ்லிம்கள் சாவகச்சேரி மிருசுவில் பளை போன்ற பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 26, 2010 at 9:19 am

ரிசானா நபீக்காவின் உயிரைக் காக்க வேண்டுகோள் !

with 4 comments

எஸ்.எம்.எம்.பஷீர்

என்ன தீர்ப்பு வருமோ , எமது பிள்ளை மீண்டும் எம்மிடம் வருவாளோ என்று பதைபதைப்புடன் காத்திருந்த ரிசானா நபீகாவின் பெற்றோர் உறவினர் இப்போது வெளியாகிருக்கும் ரியாத் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கண்டு அதிர்ச்சி யடைந்திருக்கிரார்கள். அந்த சிறுமி குடும்ப வறுமைக் கொடுமைகளை தனது இளமை பிராயத்தில் தாங்கிக் கொண்டு தனது குடும்ப நலனுக்காக அயல் நாட்டில் பனிப்பெண்ணாக பிழைக்கப்போய் இறுதியில் சிசுக் கொலைக்காக உயிரை இழக்கப் போகிறாளே என்ற கவலை காரணமாக அவரது விடுதலைக்காக குரல் கொடுத்த மனித உரிமை வாதிகள் மனித உரிமை நிறுவனங்கள் அதிலும் குறிப்பாக மேன் முறையீட்டுக்கான செலவினை க்ஹடெப் அல்ஷமரி ( Al-Shammary) எனும் சவூதியிலுள்ள சட்ட நிறுவனத்துக்கு வழ‌ங்கிய ஆசிய மனித உரிமை ஆணையகம் (Asian Human Right Commission) என்பன மிகுந்த ஏமாற்றத்தை அடைந்துள்ளன.

தான் பணியாற்றிய வீட்டு உரிமையாளரின் குழந்தையை ரிஷானா மே மாதம் 22ம் திகதி 2005ம் ஆண்டு கொலை செய்ததாக 16ம் திகதி ஜூன் மாதம் 2007 ஆம் ஆண்டில் டவாதமி (Dawadami High Court) உயர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது.அத் தீர்ப்புக் கெதிரான ரிசான நபீக்கின் மேன் முறையீட்டை ரியாத்தில் உள்ள உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன் டவடாமி மேல் நீதி மன்றினால் வழங்கப்பட்ட மரன தன்டனைத் தீர்ப்பினை உறுதி செய்துள்ளது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 26, 2010 at 8:37 am

காத்தான்குடி சம்மேளத்தின் செயலாளர் பொலிசார் ஒருவரினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்

leave a comment »

அபூ றப்தான்- காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் நழீமி பொலிசார் ஒருவரினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.இச்சம்பவம் இன்று (26.10.2010) பிற்பகல் இடம்பெற்றள்ளது. காத்தான்குடி 6ம் குறிச்சி ஹைறாத் நகரிலுள்ள பள்ளிவாயல் சம்மேளனத்திற்கு சொந்தமான காணியை சிலர் அத்துமீறி நில அளவை செய்வதற்கு முற்படுவதாக சம்மேளன செயலாளர் சபீல் நழீமிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து ஸ்த்தலத்துக்கு விரைந்த சபீல் நழீமி அங்கு நில அளவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிகாரிகள் மற்றும் அப்பகுதியின் கிராம உத்தியோகத்தர் ஆகியோரிடம் இக்காணியை நில அளவை செய்வதற்கு உங்களுக்கு யார் உத்தரவு பிறப்பித்தார்கள் என வினவி விசாரிக்க முற்பட்ட போது அங்கு அவ்வதிகாரிகளினால் அழைத்து வரப்பட்ட பொலிசார் ஒருவர் சம்மேளன செயலாளருடன் மிகவும் கடுமையாக பேசியுள்ளதுடன் அச்சுறுத்தியுமுள்ளார் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 26, 2010 at 8:31 am

ரிஸானாவுக்கு மரண தண்டனை வேண்டாம் ஜனாதிபதி மஹிந்த

leave a comment »

ரிஸானா நபீக்குக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவுதி மன்னரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளார். ஜனாதிபதியின் இந்த முடிவு குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.
ரிஸானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அவரது குடும்பத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை சவுதி உச்ச நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து இலங்கை ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.

Written by lankamuslim

October 25, 2010 at 11:41 pm

ரிஸானா நபீகின் மரண தண்டனை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது !!

leave a comment »

2005 ஆம் ஆண்டில் இலங்கை வீட்டுப்பணிப் பெண் ஒருவர் சவூதியில் சிசுவினை கொலை செய்தார் என்பதனை விசாரணையின் பின் ரியாத் உயர் நீதிமன்றம்   உறுதிசெய்துள்ளது என அறப் நியூஸ் தெரிவித்துள்ளது

ரிஸானா  நபீக் என அழைக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப்பணிப் பெண், தனது சவுதி எஜமானின்   4 மாத குழந்தையை கொலை செய்தார் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அப்துல்லா அல் ரொசாமி தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது. ரிஸானாவுற்கு வேலை வழங்குனரின் மனைவி அவரது குழந்தைக்கு பால் வழங்குமாறு குழந்தையை வழங்கியுள்ளார் இதன் பின்னரே அவர் குழந்தையை கொன்றுள்ளார் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 25, 2010 at 1:06 pm

முஸ்லிம்களின் கையை விட்டு போகும் புத்தளம் கற்பிட்டி:ஆப்தீன் யஹ்யா

leave a comment »

கற்பிட்டி பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்கள் காலக்கிரமத்தில் சிறுபான்மையாக மாறுவதற்க்கு அதிக வாய்புகள் காணப்படுவதாக வடமேல் மாகாண சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆப்தீன் யஹ்யா எச்சரிக்கை விடுத்தார்

கற்பிட்டி பிரதேசத்தை சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் அபிவிருத்தி செய்ய மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக சுற்றுலாத் துறைக்கென பல்லாயிக்கணக்கான ஏக்கர் நிலங்களை அரசு சுவீகரித்து வருவதன் மூலம் இது தத்துரூபமாக தென்படுவதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு சுவீகரிக்கப்படும் நிலங்களில் பெரும்பான்மை இன சிங்களவர்களை திட்டமிட்ட அடிபடையில் குடியமர்த்தவும் முனைப்புகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார் இந்த நிலை ஏற்பட்டால் கற்பிட்டி பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக அமைத்து விடுமோ என்ற அச்சம் குடிகொண்டிருபதாகவும் அவர் சுட்டிக்காட்டு கின்றார் இது தொடர்பாக எமது lankamuslim.org இணையத் தளத்துக்கு சற்று முன்னர் அவர் செவ்வி ஒன்றை வழங்கினார் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 25, 2010 at 11:27 am

சிறு பான்மை அரசியலுக்கு சாவு மணியடிக்கும் உள்ளுராட்சி தேர்தல் முறை சட்ட சீர்திருத்தம்

leave a comment »

அஷ்ஷெய்க் மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்-
முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் மஜ்லிஸ் அல்ஷுரா தலைவர்: ஆளும் கட்சி ,எதிர்க்கட்சி என்பவற்றிலுள்ள பாராளுமன்ற மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மை முஸ்லிம் தமிழ் கட்சிகள் ஏனைய சிறு கட்சிகளுடன் ஒருமித்து உள்ளுராட்சித் தேர்தல் முறை சீர்திருத்தச் சட்ட முலத்தை நிராகரிக்க வேண்டும். இரண்டு பேரினக் கட்சிகள் தவிர்ந்த சகல சிறுபான்மை கட்சிகள் ,சிறு கட்சிகள் சகலதையும் ஜனநாயக அரசியல் நிரோட்டத்திலிருந்து ஓரங்கட்ட எடுத்துக் கொள்ளப்படும் மிகவும் பாரதூரமான இந்த வரலாற்று சதி முயற்சி குறித்து சிறுபான்மையின புத்தி ஜீவிகள் விழிப்பாக இருக்க வேண்டும்.

அரசியல் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் சிறுபான்மையினரை இணைய்துக்கொள்ள வேண்டிய தருணத்தில் அதற்கு நேர் எதிராக இருக்கின்ற எச்ச சொச்ச அரசியல் பிரதிநிதித் துவங்களையும் பறித்து எடுக்கின்ற முயற்சிக்கு துணை போகின்ற சகல சிறுபான்மை அரசியல் வாதிகளும் மிகப் பெரிய வரலாற்றுத் துரோகத்தை தம் சார்ந்த சமூகங்களுக்கு இழைக்கின்றனர் என்பதனை மறந்து விடக்கூடாது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 25, 2010 at 9:46 am

யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் வைத்திய முகாம்

leave a comment »

சர்வதேச இஸ்லாமிய அழைப்பு சமூகம்  -World Islamic Call Society- என்ற அமைப்பு  யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் வைத்திய முகாம் ஒன்றை ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளது இந்த வைத்திய முகாம் கடந்த வெள்ளிக் கிழமை   மாலை நடைபெற்றுள்ளதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார் இதன் போது கண் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு   மருத்துவக் கண்னாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

லிபிய அரசால் உருவாக்கப்பட்ட சர்வதேச இஸ்லாமிய அழைப்பு சமூகம்  -World Islamic Call Society- என்ற இந்த அமைப்பின் இலங்கைக் கிளை வடமாகாணத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அங்கு இருக்கும் மஸ்ஜிதுகள் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்காக அண்மையில் வடமாகாணம் சென்று திரும்பினர் என்பது குறிபிடத்தக்கது

Written by lankamuslim

October 24, 2010 at 8:15 pm

நுரைச்சோலை அனல்மின் நிலைய தீவிபத்து – விசாரணைகள் ஆரம்பம்

leave a comment »

இன்று காலை நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து ஏதாவது நாசகார வேலையா என அறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. நுரைச்சோலை அனல்மின்சார நிலையத்திற்கு பொலிஸ் மா அதிபர் இன்று மாலை நேரில் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளதுடன், அதிகாரிகளுடன் விசாணையையும் செய்துள்ளதாகவும் தெரியவிக்கப்படுகின்றது இதன் நிர்மான பணிகளை  சீன நாட்டு நிறுவனமே மேற்கொண்டு வந்தது.

இந்த அனல் மின்நிலையம் அடுத்த மாதம் 17ம் திகதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ளதுடன், அனல் மின்நிலையத்தின் முதற்கட்ட நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையும் நிலையிலுள்ளது. எனினும் தி்ட்டமிட்டபடி அடுத்த மாதம் இம்மின்நிலையம் திறந்து வைக்கப்படும் என்றும், அடுத்த ஜனவரியில் இங்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு தேசிய மின்சாரத்துடன் இணைக்கப்படும் எனவும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

October 24, 2010 at 12:32 pm

சம்மாந்துறையில் உழவு இயந்திரம் குடைசாய்ந்து ஒருவர் வபாத்..!

leave a comment »

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரிவுக்குட்பட்ட பனையடிவட்டைக் கிராமத்தில் இழுவைப் பெட்டியுடன் உழவு இயந்திரம் குடை சாய்ந்ததில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே வபாத்தாகியுள்ளார், மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுப்பகல் 12.30அளவில் உழவு இயந்திரத்தை ஓட்டிவந்த மலையடிக் கிராமம் சேர்ந்த 18வயதான பாறூக் சிராஜ் என்ற இளைஞனே ஸ்தலத்தில் வபாத்தாகியுள்ளார். மணல் ஏற்றிவரும்போதே உழவு இயந்திரம் குடை சாய்ந்துள்ளது.

Written by lankamuslim

October 24, 2010 at 12:10 pm

விக்கிலீக் மீண்டும் 391,832 ஆவணங்களை வெளியிட்டுள்ளது

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்

ஈராக் மீது  அமெரிக்க ஆக்கிரமிப்பு போர் குறித்த 391,832    ஆவணங்களை  விக்கிலீக்ஸ் இணையதளம் நேற்று வெளிட்டுள்ளது இதில் 2004 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் வரையான காலத்தில் அமெரிக்கா உலகிற்கு மறைத்துள்ள ரகசியங்கள் கொண்டது எனினும் 2004ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாத சம்பவங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது    (except for the months of May 2004 and March 2009)

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது இரகசிய ஆவணங்களில் பிரகாரம் 2004 தொடக்கம் 2009 ஆண்டு வரையுள்ள 6 ஆண்டுகளில் ஈராக்கில் 109,032 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இவர்களின் 60 வீதமானவர்கள் பொது மக்கள் என்று விக்கிலீக் தெரிவித்துள்ளது விரிவாக பார்க்க

Written by lankamuslim

October 23, 2010 at 8:46 pm

Posted in ஈராக்

பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களின் தொகை வீழ்ச்சிகாரணம் அதன் கடினமான போக்கு

leave a comment »

பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களின் தொகை வீழ்ச்சியடைந்து வருவதற்குக் காரணம் அதன் கடினமான போக்காகும். பௌத்தம் உலகில் முதலிடத்திலிருந்து இன்று நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டதாகவும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்கா தெரிவித்துள்ளார்

உலகில் ஐந்தாவது மிகப்பெரிய சனத்தொகையுடைய நாடான இந்தோனேசியா ஒரு பௌத்த நாடு. ஆனால் அவர்களுடைய தொழில் மீன்பிடிப்பது. பௌத்த மதத்துக்கும் மீன்பிடித் தொழிலுக்கும் இடையே முரண்பாடுகள் காணப்படுவதனால் இன்று முழு இந்தோனேசியாவும் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்ட ஒரு நாடாகி விட்டது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 23, 2010 at 6:54 pm

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீதிமன்றம் செல்லுமா ?

leave a comment »

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலத்தின் கீழ் ஓர் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படுமானால் அது இருகட்சி முறைக்கு சாதகமானதாகவும் சிறுபான்மை கட்சிகளுக்கும் சிறுபான்மை இனங்களுக்கும் பாதகமாக அமைவதால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி திருத்தங்களை எதிர்த்து நீதிமன்றம் செல்வது பற்றி தமது கட்சி ஆராய்ந்து வருவதாக அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கின்றார்.

இது நடைமுறைக்கு வந்தால் வடக்கு கிழக்குக்கு வெளியில் இருகட்சி முறை பல பெரும் என்றும் சிறுபான்மை பிரதிநிதித்துவம் குறைவடையும் என்றும் தெரிவிக்கின்றார் அதேவேளை, பெரும்பான்மையின பிரதிநிதித்துவம் என்பது கேட்காமலேயே அதிகரிக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது இதன் காரணமாக சிறுபான்மையினராக மக்கள்ஒன்றில் பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைய வேண்டும் அல்லது தமது தேவைகளுக்காகப் பெரும்பான்மை இனத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று விமர்சிக்கப் படுவது குறிபிடத்தக்கது. உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மலேசியா சென்று திரும்பியதும் அரச தரப்பினருடன் மீட்டும் பேசவுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்

Written by lankamuslim

October 23, 2010 at 1:36 pm

பணிக்கனும் பணத்தாளூம் : ஒரு சுவையான தகவல்

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்

ஆயிரம் ரூபாய் நாணயத்தாளின் பின்னாலுள்ள ஆச்சரியகரமான விஷயம் என்ற தலைப்போடு ஒரு செய்தி பெப்ரவரி மாதம் இலங்கை தொடர்பான இணையத்தளமொன்றில்விரிவாக பார்க்க பிரசுரமாகியிருந்தது. ஆனால் அதற்கு முன்னரே ஏறாவூர் வரலாறு பற்றி எழுதப்பட்ட நூலொன்றில் (2005) இது பற்றி விரிவாகவே எழுதப்பட்டுள்ளது என்பதுடன் ஆங்கிலத்தில் வெளியான செய்திகுறிப்பும் அன்னூலில் வெளியான தமிழ் குறிப்பின் ஆங்கில மொழியாக்கமாகவே காணப்பட்டது. ஆங்கிலத்தில் வெளியான அக்குறிப்புரையை இங்கு மொழிபெயர்த்து உங்களின் வாசிப்புக்கு விட்டுவிட்டு அது பற்றிய சில செய்திகளையும் பார்ப்போம். Read the rest of this entry »

Written by lankamuslim

October 23, 2010 at 1:30 pm

மூதூர் தக்வா நகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ஒரு சிறுவன் வபாத்தாகியுள்ளார் பலர் காயம்

leave a comment »

இன்று காலை 9.45 மணி அளவில் மூதூர்  தக்வா நகர் பகுதியில் இடம்பெற்ற வெடிவிபத்தொன்றில் ஐந்து சிறுவர்கள் படுகாயமுற்ற நிலையில்  அதில் ஒரு சிறுவன் கடும் காயங்கள் காரணமாக  வபாதாகியுள்ளனர். ஏனைய வர்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிகின்றன.

மூதூர் தக்வா நகர் ஜெற்றி பகுதியில்  பொலிதீன் பேக்கில் மடிக்க பட்டிருந்த   பொருளொன்றை குறித்த  சிறுவர்கள் எடுத்து விளையாட முற்பட்ட போதே அது வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் 8 வயதான முஜாகிதீன் சர்பான் என்ற சிறுவன் வபாத்தனமை உறுதியாகியுள்ளது காயமடைந்தவர்கள், மூதூர் முதலாம் குறிச்சியை சேர்ந்தவர்களாவர்.  5 வயதான நஜீம் ஷா, 3 வயதான நஸீர்,  9 வயதான ராசிக் இம்ரான், 10 வயதான சல்மான் ஆகியோரே காயமடைந்தவர்களாவர் என்று அறிய முடிகின்றது

Written by lankamuslim

October 23, 2010 at 1:20 pm

வடக்கு முஸ்லிம்களின் நிலை தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் விளக்கம்

leave a comment »

இலங்கை வந்துள்ள பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பின் பிரித்தானிய தூதுக்குழுவினருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்திபொன்ரை மேற்கொண்டுள்ளது இந்த சந்திப்பின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் தற்போதைய நிலை தொடர்பாக தூதுக்குழுவினருக்கு விளக்கப்பட்டுள்ளது . இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஹசன் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் ஆகியோர் கலந்து கொண்துள்ளனர்

மேலும் இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாத இயக்கங்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்படும் பிரச்சாரங்க முற்றிலும் பொய்யானவை என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் ஸ்தாபனம் உருவாக்கப்பட்டதன் மூலம் முஸ்லிம்கள் ஆயுதம் தூக்க வேண்டிய நிலை இல்லாமல் செய்யப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்துள்ளனர் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பங்கு தொடர்பாக பிரித்தானிய தூதுக்குழுவிற்கு விளங்கப்படுத்தப்பட்ட போது மேற்கண்ட விடையங்கள் தெரிவிக்க பட்டுள்ளது .

Written by lankamuslim

October 22, 2010 at 9:55 pm

புத்தளத்தில் வடமாகாண முஸ்லிம்கள் கருப்பு ஒக்டோபரை நினைவு கூறுகின்றனர்

leave a comment »

வடமாகாண முஸ்லிம்கள் புலிகளினால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டதை நினைவு கூறுமுகமாக கருப்பு ஒக்டோபர் புத்தளத்தில் அமைதி பூர்வமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் யூத் போரம் – Sri lanka Muslim Youth Forum- என்ற அமைப்பினால் நினைவு கூறப்பட்டு வருகின்றது வடமாகாணத்தின் யாழப்பாணம் மன்னார் முல்லைத்தீவு வவுனியா கிழிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சும்மார் ஒரு இலட்சம் வரையான முஸ்லிம்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து புலிகளால் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விரட்டியடிக்கப்பட்டனர் இந்த ஆண்டு ஒக்டோபருடன் 20 ஆண்டுகள் பூர்தியடைந்துள்ளது.

இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டதை வடமாகாண முஸ்லிம்கள் ஆண்டு தோறும் நினைவுகூர்ந்து வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது இது தொடர்பாக எமது புத்தள செய்தியாளர் தெரிவித்துள்ள செய்தியில் புத்தளம் நகரம் மற்றும் புத்தள புறநகரப் பகுதிகளிலும் நூற்றுக் கணக்கான சுவரொட்டிகள் ‘கருப்பு ஒக்டோபரை ஒரு வரலாற்றுப் பதிவாக கொள்வோம்’ போன்ற  வாசகங்கள் கொண்டதாக எழுதப்பட்டுள்ளதாகவும், மேலும் அந்த அமைப்பு இது தொடர்பாக பல நிகழ்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார் படங்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

October 22, 2010 at 4:38 pm

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் பேச்சு !

leave a comment »

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

October 21, 2010 at 7:03 pm

சிதறிக் கிடக்கும் புலிகளை ஒன்றிணைக்க முயற்சி:பிரதமர்

leave a comment »

தலைமைத்துவமின்றி மறைந்து இருக்கும் புலனாய்வு மற்றும் ஆயுதப் பிரிவு புலி உறுப்பினர்களை பலப்படுத்த வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஒத்துழைப்புடன் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது என்று பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் எஸ். எம். எஸ். குறுந்தகவலினூடாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. புலிகளுக்கு சார்பாக வெப் தளங்களினூடாகவும் சிதறியுள்ள புலிகளை ஒன்றிணைக்க முயற்சி செய்யப்படுகிறது- நோர்வேயில் உள்ள நெடியவனும் அமெரிக்காவில் உள்ள வி. ருத்ரகுமாரனும் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 20, 2010 at 10:23 am

ஜனாதிபதி சீனா செல்கின்றார்

leave a comment »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 30 ஆம் திகதி சீனா செல்லவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிகின்றன சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச கண்காட்சி  ஒன்றில் கலந்து கொள்ள வதற் காகவே ஜனாதிபதி சீனா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த புதன் கிழமை பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள இந்திய சென்றமை குறிபிடத்தக்கது

Written by lankamuslim

October 20, 2010 at 9:59 am

சீனாவின் இராணுவ கட்டமைப்புகளை நாம் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்

leave a comment »

புதுடில்லி:இந்திய இராணுவத் தளபதி: இந்தியாவின் பாதுகாப்புக்கு பாகிஸ்தானும் சீனாவும் மிகப்பெரிய தொல்லையாக இருக்கின்றன என்று இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் கூறினார். இந்திய இராணுவம் பங்கும் பணியும் என்ற கருத்தரங்கை டில்லியில் சனிக்கிழமை தொடக்கி வைத்து வி.கே.சிங் பேசியதாவது;

இந்தியாவுக்கு இரண்டு பெரிய தொல்லைகள் இருக்கின்றன. பாகிஸ்தானில் ஆட்சி நடத்துவதில் பிரச்சினை இருக்கிறது. அங்குள்ள உள்நாட்டு நிலைவரம் நன்றாக இல்லை. ஆனால் தீவிரவாத அமைப்புகள் இப்போதும் கட்டுக்கோப்பாக இருக்கின்றன. இது நமக்கு கவலை அளிக்கிறது.
பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் சீனாவும் இந்தியாவுக்கு கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. அந்த நாட்டின் உடனான எல்லைகள் ஸ்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருந்தாலும் எல்லைப் பிரச்சினை நீடிக்கிறது. இந்தச் சவால்கள் எல்லாம் சமாளிக்கும் வகையில்  விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 20, 2010 at 9:49 am

2010 க்கான பாதுகாப்பு செலவுக்காக 21521 கோடியே 96 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா

leave a comment »

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் 2011ஆம் ஆண்டுக்கான மொத்த செலவினமாக 108, 096 கோடியே 77 இலட் சத்து 66 ஆயிரம் ரூபாவை மதிப்பிட்டுள்ளது. இதில் 21521 கோடியே 96 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை பாதுகாப்பு செலவினத்திற்கென ஒதுக்கியுள்ளது.

2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அரசாங்கத்தின் மொத்த செலவினம் 10,618 கோடியே 93 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாவினாலும் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினம் 1,300 கோடியே 21 இலட்சத்து 60 ஆயரம் ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று 2011ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பிரதமர் தி.மு. ஜயரத்ன அவைக்கு சமர்ப்பித்துள்ளார் .

Written by lankamuslim

October 20, 2010 at 9:40 am

உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

leave a comment »

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் விசேட திருத்தச் சட்ட மூலம்  என்பன மத்திய மாகண சபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டன. இந்த சட்ட மூலங்கள் தொடர்பான விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பின்றி சட்டமூலங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது  என்று ஆரம்பகட்ட செய்திகள் தெரிவிகின்றன பின்னர் வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் பொது மேலதிக 11 வாக்குகளினால் உள்ளுராட்சி திருத்தச்சட்ட மூலத்திற்கான அங்கீகாரம் கிழக்கு மாகாண சபையில் இன்றிரவு நிறைவேற்றப்பட்டது. திருத்தச்சட்ட மூலத்துக்கு ஆதரவாக 18 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஜக்கிய தேசியக் கட்சியின் எதிர்கட்சித்தலைவர் தயகமேகேயும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதே நேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான ஜவாத் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் இரா துரைரத்தினம் ஆகிய இருவரும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சபையிலிருந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறிச் சென்றார். வாக்கெடுப்பு இன்றிரவு 10.40 மணியளவில் இடம்பெற்றது.

Written by lankamuslim

October 19, 2010 at 5:18 pm

உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் கிழக்கின் அங்கீகாரம் பெறுமா ?

leave a comment »

தொகுப்பு: S.M.அப்துல்லாஹ்

உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் இன்று கிழக்கு மாகாணத்தின் வாக்கெடுப்புக்கு வருகின்றது அரசாங்க வர்த்தமானியில் வெளியான உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம்  அவசர அவசரமாக அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்று வர்த்தமானியில் வெளியாகியுள்ளது எனிலும் அமைச்சர்களுக்கும் கூட இதன் முழுமையான உள்ளடக்கம் தெரியாது

என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹகீம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆண்டு ஜனவரி அல்லது பெப்ரவரி மாதம் அளவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களை புதிய ஏற்பாடுகளின் கீழ் நடத்தவும் அரசு தீர்மானித்துள்ளது.

தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தில் சிறுபான்மை இனங்களுக்கும் நாட்டின் ஜனநாயகத்துக்கும் பாதகமான சில அம்சங்களும் சாதகமான சில அம்சங்களும் காணப் படுகின்றமை தெரியவந்துள்ளது என்றும் எனவே அரசாங்கம் உத்தேசித்துள்ளவாறு எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதம் அளவில் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 19, 2010 at 10:40 am

நான்கு தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட சிறிய வானொலி நிலையம் முற்றுகை

leave a comment »

கல்பிட்டி பொலிஸ் நிலைய எல்லைகுற்பட்ட பிரதேசத்தில் நான்கு தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட சிறிய வானொலி நிலையம் ஒன்றினை தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதியின்றி நடாத்தப்பட்டதாக கூறி நேற்று பிற்பகல் கல்பிட்டி பொலிசார் முற்றுகையிட்டுள்ளனர்.

சிகரம் எப்எம் எனும் பெயரில் கல்பிட்டி பிரதேசத்திற்கு மாத்திரம் ஒலிபரப்பை மேற்கொண்டு வந்த இந்த வானொலி நிலையம் கல்பிட்டி நகரின் கடை ஒன்றினுள் சேவை நடாத்தப்பட்டுள்ளது. எனிலும் இது பரிச்சாத்த நிலையில் இருந்தது என்றும் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதி பெற்று கொள்ளும் முயற்சிகள் நடைப்பெறும் வேளையில் இந்த முற்றுகை இடம்பெற்றுளதாக கல்பிட்டி தகவல்கள் தெரிவிகின்றன நாட்டின் பல பாகங்களில் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதியுடன் பல சிறிய வானொலி நிலையங்கள் இயங்கிவருகின்றமை குறிபிடத்தக்கது

Written by lankamuslim

October 19, 2010 at 9:27 am

கருப்பு ஒக்டோபர் நினைவாக எமது இணையத்தளத்தில் புதிய பக்கம்

leave a comment »

கருப்பு ஒக்டோபர் 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு நீண்ட அகதி வாழ்கை ஆரம்பித்த ஆண்டாகும். முஸ்லிம்களின் பாரம்பரிய தாயக பிரதேசங்களான வடகிழக்கிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டு பல பயங்கர படுகொலைகளை முஸ்லிம்களுக்கு எதிராக புலிகளால் செய்யப்பட்ட ஆண்டாகும். இந்த ஆண்டோடு 20 ஆண்டுகள் பறந்தோடிவிட்டன இந்த மாதத்துடன் 21 ஆம் ஆண்டு ஆரம்பித்து விட்டது.

வடமாகாணத்தின் யாழப்பாணம் மன்னார் முல்லைத்தீவு வவுனியா கிழிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சும்மார் ஒரு இலட்சம் வரையான முஸ்லிம்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்டார்கள். அவர்களின் அனைத்து அசையும் அசையாச் சொத்துகள் அனைத்தும் புலி பயங்கரவாதத்தால் கொள்ளையிடப்பட்டது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 18, 2010 at 6:44 pm

முஸ்லிம் சமூகத்தை அவமதிக்கும் சிங்களப் பாடல்

leave a comment »

சித்தி மனிலா என்ற பாடல் இராஜ் வீரரத்ன தயாரித்துள்ளார் இராஜ் பெசலா என்ற பிரபல சிங்களப் பாடகர் பாடி வெளிவந்துள்ளது இந்த பாடலின் காட்சிகள் முஸ்லிம்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை பெற்றுவருகின்றது இந்த பாடலின் சில காட்சிகள் மாதம் பிட்டி மஸ்ஜித் பகுதியில் தயாரிக்கப் பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது இந்த பாடல் காதலையும் பாதாள உலக தாதாக்களையும் மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது .

இந்திய தமிழ் நாட்டு சினிமா கூத்தாடிகளின் முஸ்லிம் விரோத படங்களின் பாணியில் தொப்பியும் ஜுப்பாவும் அணிந்த தாதாக்கள் இந்த பாடலில் வளம் வருகின்றனர் இதில் ஒருவர் புர்கா அணிந்த பெண்ணுடன் காதல் கொள்கின்றார் . இதில் புர்கா அணிந்த பெண் அவரின் நடத்தைகள் முஸ்லிமாக நடிக்கும் பெண்ணின் தந்தையாக கட்டப்படும் தகப்பனின் நடத்தைகள், தொப்பியும் ஜுப்பாவும் அணிந்த தாதாக்கள், மஸ்ஜிதில் காதல் காட்சி, அதான் ஒலியை பிரதிபலிக்கும் ஒரு ஒலி என்பன கடும் விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது இதில் அகில இலங்கை ஜம்மியதுள் உலமா இந்த விடையத்தை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது இந்த பாடலில் மொத்தமாக முஸ்லிம்  மற்றும் இஸ்லாமிய அடையாளங்கள் முற்றிலும் தவறாக அடையாளப்படுத்தப்  படுகின்றது

Written by lankamuslim

October 18, 2010 at 5:25 pm

முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் பௌத்தர்களின் பூர்விக, புராதன அடையாளங்கை அழிக்கின்றனர் ??

leave a comment »

கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் அறுகம்பே கடற்கரை பிரதேசத்தில் புத்தர் சிலை ஒன்ரைகொண்ட சிறியபெளத்த விகாரை ஒன்று புதிதாக கட்டப்பட்டுள்ளது இந்த கட்டிடம் சட்டவிரோதமாக நிர்மானிக்கப்படுள்ளதாக கூறி பொத்துவில் பிரதேச போலீஸ் மற்றும் அதிரடிப் படை உதவியுடன் புல் டோசர் கொண்டு கடந்த ஜூலை மாதம் 23 திகதி உடைக்கப்பட்டுள்ளது இதற்கு நீதிமன்ற அனுமதியும் பெற்றுக்கொள்ளப் படுள்ளதாக செய்திகள் தெரிவித்தன

இந்த சம்பவத்தை கிழக்கில் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயல் என்றும் இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்த பெளத்த விகாரையை பொலிசாரின் உதவியுடன் உடைத்ததாகவும் கிழக்கில் முஸ்லிம் தீவிரவாத சக்திகள் சிங்கள மக்களின் பூர்விக, புராதன நிலங்களை கைபற்றுவதாகவும், அவற்றை அழிப்பதாகவும் கிழக்கில் சிங்கள மக்கள் மத்திலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் பிரச்சாரங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 18, 2010 at 1:06 pm

மட்டகளப்பு பிரதேசத்தின் முஸ்லிம் காணிகள்

leave a comment »

ஏறாவூர் பற்றுப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குரிய 486 ஏக்கர் காணிகள் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கயிருப்பது தொடர்பாக 17 ஆம் திகதி மட்டகளப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட மகா நாட்டில் இறுதி முடிவு என்று அறிவிக்கபட்டது எனினும் அது பற்றி நேற்று செங்கலடி பிரதேச செயலகத்தில்  நடைபெற்ற இக்கூட்டத்தில் முதலமைச்சர் சந்திரகாந்தன் உரையாற்றுகையில், மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட காணிகள் காரணமாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் விவசாயிகள் சட்டரீதியான ஆவணங்களை முன்வைத்தால் அவர்களுக்கு மாற்று இடங்களில் விவசாயச் செய்கைக்கான காணி வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார்

கடந்த -11.10.2010-அன்று நடை பெற்ற மட்டகளப்பு மாவட்ட அபிவிருத்தி கமிட்டி கூட்டத்தில் முஸ்லிம்களுக்குரிய காணிகள் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கயிருப்பது குறித்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் விவசாயிகள் தமது சொந்த விவசாய நிலங்களில் விவசாயம் செய்யமுடியாமல் தடுக்கப்படுகின்றனர், விரட்டியடிக்கப்படுகின்றனர். முஸ்லிம்களின் விவசாயம் மற்றும் நிலங்கள் எரிக்கப்படுகின்றன இவைகள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டு எனவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் தெரிவித்திருந்தார் இதை தொடர்ந்து விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 18, 2010 at 10:13 am

2010 கருப்பு ஒக்டோபர் நினைவாக

with one comment

வடமாகாண முஸ்லிம்களில்  புலிகளினால் வெளியேற்றப்பட்டு    20 ஆண்டுகள் பூர்த்தி

முஸ்லிம் மீள் குடியேற்றம் ஓர் ஆய்வு: M. ஷாமில் முஹம்மட்

1990 இல் வட மாகாணத்தின் பூர்விக குடிகளில் ஒன்றான முஸ்லிம்கள் புலிப் பயங்கரவாதத்தால் வெளியேற்றபட்டனர் அவர்களின் அனைத்து அசையும் அசையாச் சொத்துகள் புலி பயங்கரவாதத்தால் கொள்ளையிடப்பட்டது கோடிகணக்கான சொத்துகளின் சொந்தகாரர்கள் சில மணித்தியால அவகாசத்தில் அணைத்தையும் இழந்த அகதிகளாக ஆக்கப்பட்டனர் அன்றில் இருந்து இன்றுவரை வடமாகாண முஸ்லிம்களில் அகதி வாழ்கை 20 ஆண்டுகள் பூர்த்தியான நிலையிலும் விடிவு இன்றி தொடர்கின்றது.

வடக்கில் இருந்து அன்று வட மாகான முஸ்லிம்கள் ஒரு இலட்சதுக்கும் அதிகமான மக்கள் பலவந்தாமாக வெளியேற்ற பட்டனர் இன்று அவர்களின் தொகை இரு மடங்குகளால் அதிகரித்துள்ளது ஒரு கும்பமாக வந்தவர்கள் இன்று மூன்று குடும்பங்களாக , நான்கு குடும்பங்களாக பெருகியுள்ளார்கள் 20 வருடங்களில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது ஆகவே மீள் குடியேற்றம் என்பது அவர்களின் இடங்களை அவர்களுக்கு பெற்று கொடுப் பதுடன் , அவர்களின் மஸ்ஜித்துகளையும், பாடசாலைகளையும் மீள கூரை போட்டு, சுவர்களுக்கு வர்ணம் பூசி கொடுப்பதுடன் முடிந்து விடாது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 17, 2010 at 12:13 pm

கடத்தப்பட்டவரை கண்டுபிடித்து தருமாறு புத்தளத்தில் ஆர்பாட்டம்

leave a comment »

கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி பொலன்னறுவையில் வைத்து கடத்தப்பட்ட புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் நம்பிக்கையாளரும் முன்னால் கிராம அதிகாரியுமான பட்டானி ராசிக்கை கண்டுபிடித்து தருமாறு கோரி கடந்த வெள்ளிகிழமை மதுரங்குளி சமீரகமவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது இவர் கடத்தப்பட்டு 9 மாதங்கள் கடந்துள்ளது .

பிரதேச முஸ்லிம்கள் ஒன்றிணைந்து ஜூம்ஆ தொழுகையின் பின்னர் மஸ்ஜிதுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டம் சுமார் 1 மணித்தியாலம் வரை இடம்பெற்றது. இதில் அப்துல்லாஹ் மௌலவி உரையாற்றினார் இவரின் விடுதலைக்காக உழைப்பது மார்க்க கடமை என்றும் அனால் இந்த சம்பவங்களை பயன்படுத்தி எவரும் பிரதேசவாதக் கருத்துகளை கூற முற்படகூடாது என்று தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 17, 2010 at 12:03 pm

42 குடும்பங்களை மண்முனைப் வடக்கு பிரதேச செயலாளர் வெளியேற்ற அறிவுறுத்தல்

leave a comment »

- அபூ றப்தான் -மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் மஞ்சந்தொடுவாய் தெற்கு கிராமத்தின் குவைத் சிட்டி வீட்டுத்திட்டத்திலுள்ள 42 வீடுகளில் வசிக்கும் முஸ்லிம்களை அவ்வீடுகள் அமைந்துள்ள காணி அரச காணி என்பதால் அவ்வீடுகளிலிருந்து வெளியேறுமாறு மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா கடிதமொன்றின் மூலம் வீட்டுரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

இக்கடிதங்கள் குறித்த வீட்டு உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் சிலரின் வீட்டுக்கதவுகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.இவ்வீட்டுத்திட்டக்காணி அரச காணி என தெரிவித்துள்ள பிரதேச செயலாளர் 1997ம் ஆண்டு 7ம் இலக்க அரச காணிகள் ஆட்சி மீளப்பெறல் சட்ட வெளியேற்றல் அறிவித்தலின் கீழ் இக்கடிதங்கள் இவ்வீட்டின் உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 17, 2010 at 12:02 pm

அவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்?

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர் -பகுதி மூன்று

நான் எனது கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் ஹசன் அலி முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலகி சென்று மஹிந்த அரசுடன் சேர்ந்து அமைச்சுப்பதவிகள் பெற்றவர்களின் தலையில் இருக்கின்ற கிரீடங்கள் முள்கிரீடமாக மாறும் ( ஏசுநாதர் ஞாபகத்துக்கு வந்தால் மன்னிக்கவும்) என்றும் அவர்கள் அமர்ந்திருக்கின்ற கதிரைகள் முகாரி ராகப் பாடலுக்கான ( செம்மாங்குடி சீனிவாச ஐயர் ஞாபகத்துக்கு வந்தால் மன்னிக்கவும்) ஒரு சங்கீதக் கதிரை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னர் தான் அரசுடன் முன்னர் இணைந்து வீர வசனம் பேசி வெளியேறினார்கள், பின்னரும் சென்ற தேர்தலில் அதைவிடவும் நீண்ட வீர வசனங்களை மூலைக்கு மூலை முஸ்லிம் கிராமங்களில் மேடையமைத்து முஸ்லிம்களின் அரசியல் அரைவேக்காட்டுத்தனத்தில் நாடாளுமன்ற கதிரைகளை கைப்பற்றி கொண்டவர்கள் மீண்டும் நேர் குத்துக்கரணம் அடித்து இப்போது அதே கதிரையில் புதிய ஜனாதிபதி ஆட்சியில் என்ன கிரீடங்களை அணிந்து கொண்டு மிக விரைவில் எந்த சங்கீதக் கதிரையில் எந்த ராகப் பின்னணியில் குந்தியிருக்க போகிறார்கள் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

October 17, 2010 at 12:02 pm

சிறைக் கைதிகளில் 16 முதல் 19 வீதம் முஸ்லிம் ??

leave a comment »

சிறைச்சாலைகளில் அதிகரித்துவரும் முஸ்லிம் சிறைக் கைதிகளின் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் மதத் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும். இது பற்றி தாம் ஏற்பாடுகளைச் செய்யப் போவதாக புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் முழு சனத்தொகை எட்டு வீதம் எனக் கூறப்படுகிறது. ஆனால் சிறைவாசம் அனுபவிக்கும் முஸ்லிம் கைதிகளின் விகிதமோ 16 முதல் 19 வீதம் வரையில் அதிகரித்து இருப்பது குறித்து முஸ்லிம் மதத் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் டியூ குணசேகர மேலும் தெரிவித்திருக்கிறார். -தகவல் தினகரன்

Written by lankamuslim

October 17, 2010 at 9:15 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,802 other followers