கம்பளை வைத்தியசாலையில் இரு வருடங்களாக மூடிக்கிடக்கும் ஜனாஸா அறை
கம்பளை போதனா வைத்திய சாலையில் இரு வருடங்களுக்கு முன்னர் சுமார் 7 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான ஜனாஸா அறை – பிரேத அறை – இது வரையும் பயன்படுத்த படாது மூடி வைக்கப்பட்டுள்ளது கம்பளை டவுன் மஸ்ஜித் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் வர்த்தகர் ஒருவரின் உதவியுடன் இந்த ஜனாஸா அறைநிர்மாணிக்கப்பட்டுள்ளது விரிவாக பார்க்க
இது பற்றி தெரிவிக்க படுவதாவது இந்த ஜனாஸா அறையின் சாவி டவுன் மஸ்ஜித் நிர்வாகத்தினர் உரிய முறையில் இன்னும் வைத்திய சாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்காமையால் இதுவரையில் எந்த முஸ்லிம் ஜனாஸாகளும் வைக்க முடியாத நிலை இருப்பதாக தெரிவிக்க படுகின்றது இது பற்றி டவுன் மஸ்ஜித் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதேச முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்







