ஜனாதிபதி மஹிந்த துருக்கி ஜனாதிபதி அப்துல்லாஹ் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, துருக்கி ஜனாதிபதி அப்துல்லாஹ் குல் ஆகியோர் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது இலங்கையின் யுத்தத்துக்கு பின்னரான வீட்டு கட்டுமான பணிகளுக்கு துருக்கியின் உதவிகள் பெற்றுகொள்வது பற்றியும் கருத்துகள் பரிமாற்ற பட்டுள்ளது அதேவேளை, ஜமேக்கா பிரதமர் புரூஸ் கோல்டிங்கையும் ஜனாதிபதி நேற்றுச் சந்தித்துள்ளார்








