காத்தான்குடி ஆரையம்பதி எல்லைப்பகுதியில் தமிழ் கலாச்சார கோபுரம் ?
காத்தான்குடி ஆரையம்பதி பிரதேசங்களின் எல்லைப்பகுதியில் தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார கோபுரம் அமைப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இரண்டு மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளார் என்று தெரியவருகின்றது இந்த நிதி ஒதுக்கீடு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ப.பிரசாந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆரையம்பதிக்கு மேற்கே உள்ள காங்கேயனோடைக்கும் மாவிலங்கத்துறைக்கும் இடையிலுள்ள அரச காணியில் முஸ்லிம்களுக்கென ஒரு மாதிரிக் கிராமத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது தொடர்பில் சில குழுக்கள் இனவிரோத போக்கை கடைபிடித்து வருவது குறிபிடத்தக்கது விரிவாக பார்க்க
இரு தினங்களுக்கு முன்னர் காத்தான்குடி முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்வேறு காணிகள் இன்னும் அடாத்தனமாக பிடிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டு வருவதையும் அவை அரச காணிகள் என்று அரச அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்படுவதை நாம் இங்கு நினைவூட்ட விரும்புகின்றோம் என்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிபிடத்தக்கது.
ஆரையம்பதிகும் காத்தான்குடிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள எல்லைப்பிரச்சினைக்கு தீர்வாகவும் இன முரண்பாட்டை தோற்றுவிக்க முனைவோருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த அலங்கார கோபுரம் அமைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ப.பிரசாந்தன் தெரிவித்துள்ளார் எனிலும் இது தீர்வாகுமா என்பதில் முரண்பாடுகள் காணபடுகின்றது
இந்த எல்லைப்பிரச்சினை தொடர்பில் மண்முனைப்பற்று பிரதேச சபை தம்மிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த தூபி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ள மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன், இந்த வேலைத்திட்டம் மூன்று மாத காலத்துக்குள் நிறைவடையவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .









