Lankamuslim.org

One World One Ummah

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கை

leave a comment »

காத்தான்குடி ஆரையம்பதி பிரதேசம் பற்றியது

அன்மைக் காலமாக ஆரையம்பதி பிரதேசத்தில் காத்தான்குடி முஸ்லிம் சமூகத்திற்கெதிராக பல்வேறு விஷமத்தனமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதையிட்டு  நாம் மிக வேதனையும், கவலையும் அடைகின்றோம்.

ஆரையம்பதிப் பிரதேசத்தில் அன்மையில் நடாத்தப்பட்ட காத்தான்குடி மக்களுக்கெதிரான அடையாள உண்னாவிரதம் மற்றும் சமீபத்தில் வெளிவந்த துண்டுப் பிரசுரங்கள் அனைத்துமே எம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காத்தான்குடி முஸ்லிம்களும் மன்முனைப்பற்று தமிழ் சகோதரர்களும்; ஒருவரை ஒருவர் புரிந்து  இன ஐக்கியத்துடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்துவரும் இன்றைய சூழ் நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் ஆரோக்கியமானதாக அமையாது என நாம் கருதுகின்றோம் விரிவாக பார்க்க

கடந்த கால போர்ச் சூழலில் தமிழ் சகோதரர்கள் அனுபவித்தது போன்று காத்தான்குடி முஸ்லிம்களும் மன்முனைப்பற்றுப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களும் பல்வேறு இழப்புக்களையும், துயர்களையும் சந்தித்தவர்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

காத்தான்குடிப் பள்ளிவாயல் படுகொலை, காத்தான்குடி  முஸ்லிம்கள் ஹஜ் இருந்து வரும்போது அம்பலாந்துறையில் வைத்துக் கடத்தப்பட்டமை, சிகரம், கீச்சான்பள்ளம், ஒல்லிக்குளம், மன்முனை, பாலமுனை, காங்கேயனோடை கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து மீளக் குடியமர்ந்தமை போன்ற பல்வேறு விடயங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

காத்தான்குடி முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்வேறு காணிகள் இன்னும் அடாத்தனமாக பிடிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டு வருவதையும் அவை அரச காணிகள் என்று அரச அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்படுவதை நாம் இங்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

இந்நிலையில் கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்து இன ஐக்கியம், நல்லுறவு, ஒற்றுமை என்பவற்றைக் கருத்திற் கொண்டு இரண்டு சமூகங்களும் வாழ்ந்து வரும் இன்றைய சூழ் நிலையில் காங்கேயனோடை வீட்டுத்திட்டத்தை காரணம் காட்டி தமிழ் முஸ்லிம் உறவுக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் மோசமான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகும்.

யுத்தத்தினாலும், சுனாமி அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள மன்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்காக நிர்மானிக்கப்படவுள்ள ஈரான் நாட்டின் உதவியிலான வீட்டுத்திட்டத்தை தடுத்து நிறுத்தி அதன் மூலம் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டாமென தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

யுத்தம் மற்றும் சுனாமி போன்;ற அனர்த்தங்களினால் வீடுகளை இழந்த மன்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள ஏழை மக்களுக்கு முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் இவ்வீட்டுத் திட்டத்தை அமைத்து அதே பிரதேசத்திலுள்ளவர்களுக்கு அவ்வீடுகளை வழங்குவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பங்கம் விளைவித்து, மன்முனைப்பற்று பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களின் மனங்களை புண்படுத்த வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

எனவே, எந்தப்பிரச்சினையாக இருந்தாலும் இரண்டு பிரதேசங்களிலும் இருக்கின்ற சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றாக கூடி கலந்தாலோசித்து அப்பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்பதை நாம் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

காத்தான்குடி முஸ்லிம்களுக்கு எதிரான தேவையற்ற பிரச்சாரங்களை முன்னெடுத்து பொது மக்களிடையே காணப்படும் சமூக நல்லுறவை சீர்குலைக்க வேண்டாமென தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

இவ்வண்ணம்

அல்-ஹாஜ். எஸ்.எச்.எம். இஸ்மாயில்
தலைவர்

அஷ்ஷெய்க். ஏ.எல்.எம். ஸபீல் (நளீமி)
செயலாளர்

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் காத்தான்குடி

தகவல் வழங்கியவர்கள் Kattankudi.info, எமது நிந்தவூர் செய்தியாளர் சஹீத் அஹமட்

Advertisement

Written by lankamuslim

September 2, 2010 at 12:11 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

Gravatar
WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 63 other followers