ஈராக் ஆக்கிரமிப்பு யுத்தம் முடிந்ததாம் இறுதியில் ஜனநாயகம் எப்படியோ வந்துவிட்டதாம் !
M.இனாஸ்
கடந்த 8 வருடமாக ஈராக்கில் நடைபெற்று வந்த போரை, முடிவுக்கு கொண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா நேற்று முன்தினம் அறிவித்துள்ளார் ,அதேவேளை ஜாக் ரைஸ் Jack Rice என்ற முன்னாள் CIA அதிகாரி ஈராக் யுத்தம் முடிந்து விட்டதாக கூறுவது வெறும் பொய்யென்றும் அமெரிக்க அரச நிர்வாகமும் பெண்டகன் இராணுவ நிர்வாகமும் மக்களை ஈராக் யுத்தம் முடிந்து விட்டதாக கூறி தவறாக வழிநடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்
ஒபாமா, அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற போது, 2010 ஆகஸ்ட் 31 ம் தேதிக்குள், சகல அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து வாபஸ் பெறப்படும் என அறிவித்தார். எனிலும் ஈராக்கிய மக்களிடம் அவர்களது பாதுகாப்பை ஒப்படைக்கும் வரை இருப்போம் என்று கூறிக்கொண்டு , சுமார் 50,000 அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் இன்னமும் நிலைகொண்டுள்ளன விரிவாக பார்க்க










